திருமண ஜோடிகள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் போது கிடைத்த சமையலில்…
“எதுக்கு எனக்கு முத்தம் கொடுத்த…?” என உக்கிரமாகத் தென்றல்…
“நான் எங்க முத்தம் கொடுத்தேன்? உன் மூஞ்சி தான் என் உதட்டு மேல பட்டுச்சு…!!” என அவள் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு, ரசித்தான் அவன் காதல் பெண்ணின் அழகை…
அவள் முகத்தை வெட்டிக் கொண்டு செல்ல… அதில் வருத்தம் தான், ஆனால் அவன் செய்து வைத்த வேலைக்கு இன்னும் பல மடங்கு அனுபவிக்க வைக்க வேண்டி உள்ளதே… என நினைத்தவன் எதையும் எதிர்கொள்ளத் தயாரானான்…
மற்ற ஜோடிகள் பணிந்து வணங்கிப் போக, இவர்கள் முறை வந்ததும் யாருக்கு வந்த விருந்தோ என ரகுவீர் ஒதுங்கி நிற்க…
தென்றல் அவனைப் பார்த்து கண்களை உருட்ட…
“கண்ணை வச்சே காரியம் சாதிக்க எங்க இருந்து தான் கத்துகிட்டளோ…?? நான்லாம் இந்த கதைக்கு வில்லன்டி, என்னையே இப்படி ஆட்டிப் படைக்குறாளே என் ராட்சசி ம்ஹும் என் தேவதை…!!” என புலம்பியபடியே அவளோடு சேர்ந்து ஆசி பெற பணிந்தவனைத் தூக்கி விட்டார் ரத்தினவேல் பூபதி…
“நாங்க எப்பவும் உன்னை வேற ஆளா பார்த்ததே கிடையாதுப்பா… உங்க அப்பா தான் எங்க மேல பழியை வளர்த்துக்கிட்டு வஞ்சத்தோட சுத்துறான்… அவன் செய்ற வேலை தப்புன்னு சொல்லிட்டேனாம், அதனால நான் அவனுக்கு விரோதி ஆகிட்டேன்… அவ மேல வருத்தம் இருக்கு தான், ஆனா அதுக்காக நான் அவனை இதுவரை வெறுத்து ஒதுக்கினது இல்லை… அவன் இல்லாம உன் கல்யாணத்த நடத்துனது எனக்கு வருத்தமா இருக்கு… ஆனா அவன் புரிஞ்சுக்கணும் இல்லையா… பார்ப்போம் காலம் மாறும், அவன் மனசும் மாறும்…!!” என ரகுவிற்கு ஆறுதலாகக் கூறினார் ரத்தினவேல் பூபதி…
அதில் காலத்தை பின்னோக்கி இயக்கியவன்
“எப்படிப்பா என் பிள்ளையை கொல்ல உங்களுக்கு மனசு வந்தது…??” என கேட்டவனுக்கு இரத்த பாசம் இடித்தது…
“என்னடா சும்மா சும்மா உன் பிள்ளைன்னு குதிக்கிற… அது உனக்கு மட்டும் தான் பொறந்ததுன்னு உனக்கு என்னடா நிச்சயம்…??” என்றவரை…
அடிக்க கையை ஓங்கி விட்டான்… “ச்ச்சை! உன்னை எல்லாம் அப்பான்னு சொல்றதுக்கு எனக்கு அருவெறுப்பா இருக்கு…!!” ஓங்கிய கையை தன் தொடையில் குத்திக்கொண்டவனுக்கு மனம் ஆறவில்லை…
“என்னடா, கண்ட சிறுக்கிக்காகப் பெத்தவனே கை ஓங்குறியா… என்னடா அருவெறுப்பா இருக்கு… உன் பேருக்குப் பின்னாடி போட்டுக்கொள்ள இந்த அப்பன் பேரு வேணும், பகுமானமாச் செலவு பண்றதுக்கு இந்த அப்பன் சொத்து வேணும்… நீ செய்யற தப்பு எல்லாம் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள இந்த அப்பன் செல்வாக்கு வேணும், இப்படி எல்லாத்துக்கும் உனக்கு உன் அப்பன் வேணும், ஆனா இப்போ மட்டும் உனக்கு கசக்குதா…!!” ரகுநாதன் திருந்துவதற்கே எண்ணம் இல்லை…
“யோவ், மனுஷனா நீ? எல்லாம் பெத்த புள்ள வாழ்க்கையை அழிக்கத் துடிக்கிற… ச்சே! உன்கிட்ட எல்லாம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பல… நான் வரேன்…!!” என கிளம்பியவனை…
“டேய், இப்ப முடிவா என்னதான் சொல்ற…?” என ரகுநாதன் கேட்க…
“இனி எல்லாம் என் பொண்டாட்டி பிள்ளைங்க என்று எப்போவோ முடிவு பண்ணிட்டேன்…!!” என்றான் முடிவாக ரகுவீர்…
“அப்ப என் முடிவையும் கேட்டுட்டுப் போ, இந்த சொத்துல இருந்து உனக்கு ஒரு நையா பைசா கூட வந்து சேராது… காசு இல்லாம ரோட்டுல போய் பிச்சை எடுத்துத்தான் சாகப் போற…!!” என என் மகனை மிரட்டி பணிய வைக்கப் பார்த்தார்…
‘அப்படியா? ரொம்ப சந்தோஷம்! எனக்கு ரோசம் இருக்கு, எனக்கு ஒன்னும் உன் சொத்து தேவை இல்லை, அப்படி எல்லாம் சொல்லிட்டுப் போவேன், நினைக்காத… இது ஒன்னும் நீ சேர்த்து வச்ச சொத்து இல்ல, இது பரம்பரை சொத்து; சட்டப்படியும் நியாயப்படியும் எனக்குத்தான் உரிமை இருக்கு… நான் போய் என் பொண்டாட்டி புள்ளையக் கூட்டிட்டு வர்றதுக்குள்ள மரியாதையா இடத்தை காலி பண்ணிட்டுப் போயிடு, இல்லன்னா அப்பனைக் கூடப் பார்க்க மாட்டேன்… என்னோட சுய ரூபத்தைப் பார்க்க வேண்டிய வரும், ஜாக்கிரதை…!!” என ரகுநாதனையே எச்சரித்துவிட்டுத்தான் கிளம்பி வந்தான்…
அவன் கேட்டது அவர் கால் பங்கு என்றால் தானே கேட்டது, முக்கால் பங்கு அல்லவா… அதை நினைத்து வருந்தினான்… பெருமூச்சு ஒன்றை விட்டவன், சிந்திய பாலுக்கு வருந்தி பயனில்லை என்பதை உணர்ந்து, அவன் மனைவி மகனோடு இருக்கும் காலத்தை சந்தோஷமாக கழிக்க எண்ணினான்…
“நீ நினைச்சா போதுமா ராசா…? உன் பொண்டாட்டி நினைக்க வேணாமா…?”
முறையான சடங்குகள் அனைத்தும் முடிந்த பின் ரகுவீர் தென்றலை தன்னோடு அழைக்க… அவள் வரவில்லை என பிடிவாதமாக கூறிவிட்டாள்…
அவன் கையால் தாலியை வாங்கிக் கொண்டு அவனோடு செல்ல மறுத்தவளை அனைவரும் வினோதமாகப் பார்த்து வைத்தனர்…
“நீங்க தானே சொன்னீங்க, என் குழந்தையோட எதிர்காலத்துக்கு அவனோட அடையாளம் அவனுக்கு வேணும்னு, அதான் ஊரை கூட்டி கல்யாணம் பண்ணியாச்சு இல்ல… குழந்தைக்கு அப்பா யாருனு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு இல்ல… அதுவே போதும், என்னால இந்த கொலைகாரன் கூட எல்லாம் போய் வாழ முடியாது…!!”
“என்ன கொலைகாரனா…?” என அனைவரும் அதிர்த்து கேட்க,
“ஒரு உயிரை கொன்றவன் மட்டும் தான் கொலைகாரன் என்று இல்ல, துடிக்க துடிக்க ஒரு மனச கொல்றவனும் கொலைகாரன் தான்…!!” என்றவள் பிடிவாதமாக இருந்து கொண்டாள்… அதற்கு மேல் அவளிடம் சமாதானம் பேச முடியுமா அவர்களால்? அவளின் நிலையை உணர்ந்தவர்கள் அன்றோ அமைதியாகிப் போனார்கள்… தென்றலை சமாதானம் செய்யும் பொறுப்பு ரகுவீரிடம் தானாகச் சென்றது…
“இங்க பாரு, நான் தப்பு பண்ணவன் தான் இல்லைன்னு சொல்லல… என் தப்புக்கு மன்னிப்பே கிடையாது, ஒத்துக்குறேன்… அன்னைக்கு என்ன சொன்ன தீயிலே வெந்து சாகட்டும்னு விட்டு இருக்கனுமா…? அந்த வார்த்தை என்ன உயிரோடு கொன்னுச்சுனு சொன்னா நம்புவியா நீ…? ஆமா, நான் தான் சொன்னேன் விஜயனை பழிவாங்க தான் உன்னை காதலிச்சேன்னு… அது அப்போ என் மனசு எனக்கே புரியாத நேரத்துல, நானே தெளிவா இல்லாத அப்போ… ஆனா நிதானமா யோசிக்கிறப்போ, உன்னை முதல் முதலில் பார்த்தபோது என் மனசுக்குள்ள வந்துட்ட… உன்னை என் பரம்பரை விரோதி விஜயன் கூட பார்த்ததுமே உன்னை விட்டு கொடுக்க கூடாதுனு நினைச்சேன்… கோபம், பொறாமை எல்லாம் சேர்த்து அதுக்கு பேர் பழின்னு என்னை சமாதானம் செஞ்சுகிட்ட மூட்டாள் நான்…
“சத்தியமா சொல்றேன், உன் கழுத்துல தாலி கட்டும்போது என் மனசுல உன்னைத் தவிர வேற எதுவும் இல்லை… குழந்தை உருவானதும் உன்கிட்ட உண்மையை மறைக்க விரும்பல… சத்தியமா நான் அந்த நேரத்துல குழந்தை எதிர்பார்க்கல…” என்றவனைத் தென்றல் முறைக்க…
“தலை குனிந்தான் ஒரு நிமிடம் தான், மறுநிமிடமே… குழந்தை விஷயத்தை எப்படி கையாளறதுன்னு தெரியாம குழப்பமான மனநிலையில் இருந்த போது தான் எங்கப்பா என்னை ஃபாரின்க்கு அனுப்பி வச்சாரு… நானும் என்ன பத்தின உண்மை உனக்குத் தெரிய வந்தால் நீயே நிச்சயமா என்னை விலகிப் போயிடுவேன்னு தான் கிளம்பிட்டேன்…!!”
“ஆனா நீ வேற மாதிரி முடிவு எடுப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை… இந்தியா வர வரைக்கும் நீ தற்கொலை பண்ணிக்கிட்ட விஷயம் எனக்குத் தெரியாம பார்த்துக்கிட்டாங்க… அவங்கள சொல்லி மட்டும் குற்றம் இல்லை, நானும் உன்னைப்பற்றித் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணல… அதுக்கும் கூட ஒரு காரணம் இருக்கு.. எங்க நீ என்னை மறந்து வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து இருந்தா, அதைத் தாங்குற சக்தி என் மனசுக்கு இல்லை…” என்றவனைத் தென்றல் பார்வையால் எரிக்க…
“அப்பவே என் மனசு உன் கிட்ட தான் இருந்து இருக்கு, அதைப்பரிஞ்சுக்காத முட்டாளா இருந்து இருக்கேன்…?? கைக்கு கிடைச்ச சொர்க்கத்தைத் தவறவிட்ட மூடன் நான், இப்போ புரியுது…!!” என வேதனையாகக் கூறியவனின் முகத்தில் துளியும் பொய்யில்லை…
“உன்னையும் குழந்தையையும் எப்போ அந்த மண்டபத்துல வச்சு பார்த்தேனோ, அப்போதான் நெற்றிப் பொட்டுல அறைஞ்ச மாதிரி ஒரு விஷயம் புரிஞ்சுகிட்டேன், நீங்க இல்லாம நான் இல்லைன்னு…!!” எனத் தென்றலின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன்…
“நானும் சராசரி மனுஷன் தானே, தப்பு செய்ய அதைவிட வேற காரணம் வேணுமா? பொறுப்பில்லாத அப்பா… அன்பு காட்டத் தாய் இல்லாத பிள்ளை… கழுத்து வரைக்கும் காசு கணக்கு கேட்க ஆள் இல்ல… தானா சேர்ந்த தப்பான கூட்டம்… நான் கெட்டுப் போக இவங்கள மட்டும் காரணம் சொல்ல மாட்டேன், ஆண் என்கிற என் ஆணவமும் அதற்குத் தீனி போட்டது… இதெல்லாம் நான் மாட்டிக்கிட்டதால பேசல, என் மனசுல இருந்து பேசுறேன்… எனக்கு அன்னையைப் போல அன்போடு அரவணைக்கவும், தந்தையைப் போல ஆதரிக்கவும், தோழியைப் போல் தட்டித் தரவும், என்னை உயிர்ப்போட வைக்கவும் உன் காதல் எனக்கு வேணும் தென்றல் மொத்தத்துல… எனக்கு எல்லாமுமா நீ வேணும் தென்றல்…!!” என யாசகம் போல் கை நீட்டி கேட்டவனை கண்டு அனைவருக்குமே இரக்கம் சுரந்தது…
“அம்மாடி, தென்றல் தம்பி தான் அவ்ளோ சொல்றான் இல்ல… அவனை மன்னித்து மறந்து ஏத்துக்கக் கூடாதா? தப்ப உணர்ந்து திருந்தி வந்தவர்கள் நல்லவங்களுக்கு ஒரு படி மேலன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்கமா…!!” என சகுந்தலா எடுத்துச் சொல்ல…
“எதமா மறக்கச் சொல்றீங்க? இனிக்க இனிக்க காதலிச்சிட்டு வலிக்க வலிக்க அழ வச்சிட்டு போனதையா… இல்லப் பழி என்கிற பெயரில் துடிக்க துடிக்க என் மனசக் கொன்னதையா… முடியலமா என் காயம் பெருசு, அது ஆறும் மட்டும் அவரை குத்தி கிழிச்சிட்டே இருப்பேன்… இரண்டு பேருக்கும் அது வலி தான் கொடுக்கும், அதுக்கு நான் இப்படியே இருந்துக்குறேன்…!!” எனத் தென்றல், “என் இயல்பையே மாற்றி விட்டாயே பாவி” என்பது போல் ரகுவீரை பார்த்தாள்… அவள் பட்ட ரணம் பெரியது, அன்றோ அவ்வளவு எளிதில் மறையக் கூடியதா அது…??
எத்தனை பேர் எத்தனை விதமான சமாதானம் கூறியும் தென்றல் பிடிவாதமாக இருக்க… அவளிடம் அமைதி மார்க்கம் வேலைக்காகாது என்று குரலை உயர்த்தினான்…
” நானே எல்லாம் மறந்து மாறி மறுபடி வந்து இருக்கேன்… என்னை திரும்பவும் வில்லன் ஆக்காத தென்றல்… thangaமாட்ட… நீ என் கூட வர வந்தே ஆகணும் உனக்கு வேற வழி இல்ல… என் கூடவே இருந்து நீ தின்றாலும் கொன்றாலும் சரியே… ஆனா உன்னை இனி விட போறதில்ல…உன் கை கால் கட்டி என் கூட தூக்கிட்டு போகுற மாதிரி வச்சிக்காத… மரியாதையா கிளம்பு…!!என மிரட்டியவனின் வார்த்தைகளில் மிரண்டு தான் போனால் தென்றல்…
உதவிக்கு பூபதி குடும்பத்தை பார்த்தவளுக்கு ஏமாற்றமே கிடைக்க…ரகுவீரோ நான் சொன்னதை செய்வேன் என்னும் உறுதியுடன் நிற்க… வேறு வழி இல்லாமல் நிர்கதியான தன் நிலையை நினைத்து நொந்து கொண்டே ரகுவோடு செல்ல தயாரானால் தென்றல்…அவனை வதைப்பதற்கு என்றே அவனோடு சென்றாள்…
ரகுவீர் குடும்பம் கிளம்பும் சமையம் ரகுவீரிடம் வந்த விஜயன்…
“இன்னும் உன் மேல உள்ள காதலின் எச்சம் சொச்சம் அவள் மனசுல இருப்பதனால தன் உன் தாலி அவள் கழுத்துல இன்னும் இருக்கு… அதைக் காப்பாற்றுகிறதும் வளப்படுத்துகிறதும் உன் கையில தான் இருக்கு… அவளுக்கு ஒன்னுனா வர நாங்க எல்லாரும் இருக்கோம் என்பதையும் நியாபகம் வச்சிக்கோ…??! என எச்சரித்து விட்டே வழி அனுப்பி வைத்தான்…
பால் மழையில் நனைந்த நிலவை ரசிக்கவே வானம் இருளை சூடி கொண்டதோ… புதுமண ஜோடிகளை இல்லறத்தில் தள்ளிவிட்டு தள்ளிட்டனர்…
ஆளை அசத்தும் மலர் அலங்காரமும் ஆணை அசத்தும் மங்கை அலங்காரமும் மனதைக் கிரங்கடிக்க நின்றிருந்தான் மகேந்திரன்…
வெட்கம் மேலோங்க அன்ன நடையிட்டு வந்தவளின் வேகத்தைக் கண்டு வெறுப்பானவன், பறந்து சென்று தன் கைகளில் தூக்கிக்கொண்டான். கட்டிலுக்கும் கதவுக்கும் இருந்த அந்த அறை அடி கூடத் தூரமாகத் தெரியப் பொறுக்க முடியவில்லை அவனால்…
ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லையாம்…
ஆசையின் வேகத்திலும் குறிஞ்சியை அவன் மென்மையாகத்தான் கட்டிலில் கிடத்தினான்…
காதல் பெண் அவன் கைகிடையில் இருக்கையில் பொறுமை காக்க அவன் என்ன ஆசை துறந்தவனா? சாதாரண மனிதன் தானே… ஆசையும் மோகமும் போட்டி போட குறிஞ்சி மேல் பாய்ந்து விட்டான்…
கட்டுப்படுத்த முடியாத வேட்கைக்குத் தடைபோட்ட ஆடையை அறக்கப் பறக்கத் துகிலுரித்துத் தூரே எறிந்தவன், தன்னையும் துறந்து உற்றவள் முன் உரிமையுடன் நிற்க, சீ என கண்ணை மூடியவளைக் கைகளை விலக்கி…
“என்னடி பார்க்காதவ மாதிரி பண்ற…?” என வார்த்தையினால் சிவக்க வைத்தவனின் செயலைக் கைகளும் இதழும் எடுத்துக்கொள்ள… மூடி வைத்த மோகம் எல்லாம் மொட்டவிழ்க்க, கைக்குள் அடங்காத இழுப்பு மீனை இழுத்து குழைய வைத்தவன், இறங்கி வேட்டையாடிட ஸ்ஸ்ஸ்ஹா என உச்ச ஸ்திதியில் உணர்வுக்குவியலாய் பெண் கிறங்க…
ஊற்றெடுத்த ஓடையில் ஆண் வெள்ளி நீரைப் பருகித் தாகம் தணிக்க, ஹாஆஆவ்வ்வ் என அவள் துடிக்கத் துடிக்க இரக்கம் இன்றி எற்றும் இறைத்தவன், அடங்காத குறைவை மீனை நண்டின் வலைக்குள் செலுத்தி ஆழம் கண்டவன், மோட்சம் எட்டும் வரை முட்டி முகிழ்ந்தவன், அசதியில் அயர்ந்த அவள் மடியில் இளைப்பாற…
மகேந்திரனின் இந்த ஆசை வேட்கையைக் கண்டு குறிஞ்சி ஆச்சரியம் கொள்ள… அவள் பார்வை உணர்ந்து
“என்னடி” என்றவனிடம்…
“அத்தான் நீயா இது இப்படி…?? நீ காதல் சொன்ன ஆக்கத்துக்கு எங்க முதலிரவுலையும் உனக்கும் சேர்த்து நான் தான் கத்து தரணுமோ என்றல்ல நினைச்சேன்…?? பரவால்ல பின்றியே” என அவனுக்குப் பாராட்டுப் பத்திரம் வசிக்க…
“அடிங்க போன போகுதுனு சின்ன பொண்ணுனு விட்டா என்னையே கிண்டல் பண்றியா இருடி உன்னை…??” என்றவன் குரலுக்கு நேர் மாறாகக் கைகள் குறிஞ்சியை அள்ளிக் கொண்டது. “இந்த வாய் தானே பேசினது” என்றவன் அவனுக்கே உரிய வகையில் தண்டனையைத் தந்தான். விடியும் வரை அவளுக்கு ஓய்வென்பதையே தராமல் கருமியாக நின்று பெண்ணின் இடையில் கடைந்தெடுத்தான் கனவு காதலன்…

