முகிலே!! உன் முகவரி என்ன-17

முகிலிடம் பேசிவிட்டுத் தனியே வந்து கொண்டு இருந்தான் ரஞ்சன்… அவன் நடந்து வரும் வழியில் எண்ணெயைக் கொட்டி வைத்துவிட்டு, அவன் விழப் போவதைப் வேடிக்கை பார்க்க அருகில் உள்ள தூண் மறைவில் மறைந்து கொண்டது வானரப்படை…

“ஏய், என்னடி பண்ணி வச்சிருக்க? யாராவது வழுக்கி விழுந்தா என்ன ஆகுது…?” வீர்

“அவன் வழுக்கி விழத்தான்டா அங்க ஊத்தி வச்சிருக்கேன்… விழுந்தா குறைஞ்சது மூணு நாளைக்காவது எந்திரிக்க முடியாது… ஒழிஞ்சான் அந்த சப்பை… எப்படி நம்ம ஐடியா…?” என குறிஞ்சி மார்பைத் தட்டித் கொள்ள…

“இது எல்லாம் பழைய பிளாக் அண்ட் வைட் காலத்து ஐடியா, இதை யோசிச்சுட்டு தான் உனக்கு இந்த பெருமையா…? எனக்கு என்னமோ இந்த ஐடியா சொதப்பிக்குமோ தான் தோணுது…” வீர்

“ச்சே, உன் ஊத்த வாயை வைக்காத எரும… கம்முனு வேடிக்கை மட்டும் பாரு…!” என்றவள் ரஞ்சன் விழுந்து வாருவதை ஆர்வமாகப் பார்க்கக் காத்திருக்க…

அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட். திடீரென்று எங்கிருந்தோ வந்த மகேன், ரஞ்சனை முந்தி முன்னேறி வர…

“ஐயயோ… என்ன மகேன் அத்தான் வராரு! போச்சு போச்சு எல்லாம் போச்சு…!!” என்றவள் மகேனை காப்பாற்ற ஓட, அவளைத் தடுக்க முயற்சி செய்ய வீர் பின்னால் ஓட…

ஆர்வக்கோளாறில் ஓடி வந்தவள், சடன் பிரேக் போட்டு நிறுத்த முடியாமல் காலை எண்ணெயிலே வைத்துவிட, வழுக்கிச் சென்று மகேனைத் தாண்டி ரஞ்சன் மீதே விழுந்துவிட,

வழுக்கி கீழே விழப் போனவளின் இடையை இறுக்கிப் பிடித்து, தன்னோடு சேர்த்து அணைத்து நிறுத்தினான் ரஞ்சன். “ஹே ஸ்வீட்டி, பார்த்துடா…??” என்றவனை இமைக்காது பார்த்து நின்றாள் குறிஞ்சி…

“அடப்பாவி! இவனுக்கு நாம ஸ்கெட்ச் போட்டா, இவன் எல்லா இடத்துலையும் ஸ்கோர் பண்றானே! எனக்கு வயித்து எரிச்சலா வருதே…!!!” என வீர் கட்டிப் பிடித்து நிற்கும் ரஞ்சனைப் பார்த்து பொசுங்க…

அங்கு மகேனுக்கோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பற்களை நர நரவென்று கடித்தவன், விறுவிறுவெனச் சென்று குறிஞ்சியையும் ரஞ்சனையும் பிரித்து விட்டான்…

“நட்ட நடு வழியில என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்…??” என ரஞ்சனைப் பார்த்து கேட்க,

“ஐயோ அத்தான், அவர் மேல எந்தத் தப்பும் இல்லை! நான் தான் கால் வழுக்கி கீழ போனேன், இவர் என்னை காப்பாற்ற தான் பிடிச்சார்…!!!” என குறிஞ்சி குரல் கொடுக்க, அவள் கையைப் பிடித்துத் தன் பக்கம் நிறுத்திக்கொண்டவன்…

“பட்ட பகல்ல ஒரு வயசு பொண்ணை கட்டி புடிச்சிட்டு இருந்தா உங்க பட்டணத்துல என்ன சொல்லுவாங்கன்னு தெரியாது, ஆனா இந்த கிராமத்துல அது காட்டுத் தீயா பரவி கண்ணும் காதும் மூக்கும் வச்சி முக்காலமும் பேசுவாங்க…!!!” என மகேன்…

“அப்போ நடு ராத்திரில கட்டி புடிச்சா ஓகேவாடா நல்லுவனே…??” என்றபடி வந்த வீர், மகேன் கையில் இருந்து குறிஞ்சியை மீட்டுத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்…

அனல் கக்கும் பார்வையை வீர் மீது வீச… வீர் கப்சப் என்று வாயை மூடிக்கொண்டவன், “ஆஹா அம்பி அந்நியனா மாறிட்டான், முடிஞ்சி ஜோலி…!!” என எச்சில் விழுங்கிக்கொண்டான்…

அதே கோவத்துடன் ரஞ்சன் பக்கம் திரும்பி, “உனக்கு வாயால சொன்னாலே புரியும் என்று நினைக்கிறேன்…!!” என விரைப்பாகக் கூற,

“ப்ரோ ப்ரோ சில் ப்ரோ… நமக்குள்ள எதுக்கு வீண் பிரச்சனை… நம்ம குறிஞ்சி ப்ரோ…!!!” என்ற ரஞ்சனை மேலும் முறைத்துப்பார்த்த…

“சரி உங்க குறிஞ்சியாவே இருந்துட்டு போகட்டும் ப்ரோ… நான் காப்பாற்றலனா மூஞ்சி முகறைப் பேர்ந்து இருக்கும் ப்ரோ… ஒரு மேன் டு மேன் ஹெல்ப், அவ்ளோ தான் ப்ரோ, இதுக்கு போய் எதுக்கு இவ்ளோ கோபம்… நாம சமாதானமா போயிடுவோம் ப்ரோ… ரிலாக்ஸ், நானும் அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் தான் ப்ரோ… என்னை நம்புங்க…!!” என சமாதானப்படுத்த படிகையில் இறங்கினான் ரஞ்சன்…

அவன் கூறியதில் உண்மை இருந்தாலும் மகேந்திர பூபதிக்கு மனம் ஆறவில்லை. “அது எப்படி குறிஞ்சியை அவன் தொட்டுப் பிடிக்கலாம்…??”

“ப்ச், ஏய் யாருங்க அங்க…???” என குரல் கொடுக்க…

கிடுகிடுவென ஒரு வயதான ஆளும் வயதான பெண்ணும் ஓடி வந்தனர்…

“என்ன தம்பி, என்ன ஆச்சு…???” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கேட்டார் வீட்டு வேலைகளைச் செய்யும் சுப்பையா…

“என்ன வேலை பார்க்கிறீங்க நீங்க… இங்க பாருங்க கீழ எப்படி எண்ணெய் கொட்டி கிடக்குனு! யாராவது விழுந்து ஒன்னு கெடக் கதையா ஆகிடுச்சுன்னா நான் யார் பதில் சொல்றது…? இதெல்லாம் பார்த்துக்கத்தான் நீங்க இருக்கீங்க…?” என அவர்களை விரட்டினான்.

“ஐயோ தம்பி, நான் தான் காலையிலே சுத்தம் செஞ்சேன்… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பெரிய ஐயாவுக்கு கஞ்சி கொண்டு போனப்போ கூட இங்க எதுவும் இல்லை தம்பி. இப்போ தான் யாரோ தெரியாம கொட்டி இருப்பாங்க. இந்தா, இப்போ நான் சட்டுனு சுத்தம் பண்ணிப் புடுங்குறேன்…!!” என்றவர் எண்ணெயை வழித்து சுத்தம் செய்ய இறங்க… அவருடன் அவர் பேத்தியும் உதவிக்கு வர.

“ஆத்தா, மயிலு கூரு! கெட்ட பிள்ளையா இருக்கியே, வெறும் கையால என்ன செய்யப் போய்? அந்த ஊடு துடைக்க தேவையானதை எடுத்து வா…!!” எனச் சொன்னார்.

அந்த மயிலு எங்க அவர் சொன்னதைக் கேட்டுச்சு. அவள் பார்வை மொத்தமும் புதிதாக வந்த ரஞ்சன் மேலே அல்லவா இருந்தது… வெயிலில் உழைத்து கருத்த நிறமுடைய ஆண்களை மட்டும் கண்டவளுக்கு, இப்படி நல்ல தகதகவென்று தக்காளி கலரில் வந்து நிற்கும் அஞ்சிறை அடி பாலிவுட் பட ஹீரோவாக நிற்கும் ரஞ்சன் மேல் ஏதோ ஒன்று வந்து ஒட்டிவிட்டது… பார்வையாலே ஆணை வேட்டையடித்தால் மாது… பாவம் பருவ கோளாறு…

“சீக்கிரம் இதையெல்லாம் சுத்தம் செய்யுங்க…!!” என்று கட்டளையிட்டவன் அங்கிருந்து விடுவிப்பென வெளியே சென்றுவிட்டான்…

போகும் மகேனை வசீகரமாகப் பார்த்து நின்ற குறிஞ்சிக்கு… “அடடா, இப்படி ஒரு வழி இருக்குனு இத்தனை நாள் தெரியாம போச்சே… இந்த மைதா மாவால நமக்கு ஏகப்பட்ட நன்மை இருக்கும் போலையே… விடாத குறிஞ்சி, பிடிச்சுக்கோ…!” என நினைத்தபடி அவள் கழுத்தில் இருந்த டாலர் செயினை எடுத்து கடித்த வண்ணம் நின்றவள் புது மாதிரியாகத் தெரிந்தாள்…

“மயிலே…?” என சுப்பையா மீண்டும் உரக்க அழைக்க, ரஞ்சனைச் சைட் அடிப்பதில் ஏற்பட்ட எரிச்சலில் “இந்தா போறேன்…!!” என எரிந்து விழுந்துவிட்டுத் திரும்பியவள், வேண்டும் என்றே ரஞ்சன் மீது பெண் அங்கம் இடிக்கச் செல்ல…

“ஹே பியூட்டி, பார்த்து அடி படப் போகுது…!” என ரஞ்சன் தன் நெஞ்சை நீவிக்கொண்டே அவளுக்குப் பரிவு காட்ட…

“சீஈஈஈ போங்க நீங்க ரொம்ப மோசம்…!” என வெட்கச் சிரிப்பை உதிர்த்துவிட்டு ஓடி மறைந்தாள் பாவை…

“சில்லி கேர்ள்….!!” என ஓடும் பெண்ணவளைப் பார்த்து ரசிப்புடன் கூறிவிட்டுத் திரும்பியவனை, எதிர் கொண்டான் வீர்; முகத்தை மனிதக் குரங்கு போல் வைத்துக் கொண்டு, மூக்கு விடைக்கக் நின்று இருந்தான் , கேட்டால் காண்டு என்பான்…

டேய் எப்படிடா…? நானும் எயிட் பேக் வச்சி ஆறு வருஷமா போராடிட்டு இருக்கேன், எனக்கு ஒரு பொண்ணு கூட செட் ஆக மாட்டிங்குது, கிரகம் ஒரு கிழவி கூட திரும்பி பார்க்க மாட்டிங்குது… ஆனா சோலை கொள்ளிப் பொம்மை மாதிரி இருக்குற உனக்கு தானா வந்து மாட்டுது… என்னடா நடக்குது இங்க… இந்த உலகத்துல ஓர வஞ்சனை புடிச்ச ரைட்டர் கதைப்படி மூணாவது ஹீரோ நீதான். உனக்கு எயிட் பேக் எல்லாம் வச்சி நிறைய பில்டப் கொடுக்குறேன், சொன்னதை நம்பி வந்ததுக்கு என்னை செருப்பாலே அடிக்கணும்… (சாரி பாஸ், என்கிட்ட செருப்பு இல்லை, அதுக்கு பதில் ஷூ இருக்கு, வேணுமா…? (அடிங்.. வீர்))… என வீர் அழாத குறையாகக் குறைப்பட…

ஹாஹா என்ன ப்ரோ, ஸ்டொமக் பர்னிங்கா தீஞ்ச வாசனை ரீடர்ஸ் வரைக்கும் வருதாமே… பாஸே, சொல்லித் தெரிவது அல்ல மன்மத கலை… பொண்ணும் சரி மண்ணும் சரி, அதெல்லாம் தன்னால அமையனும்… அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும் பாஸே… அப்புறம் நீங்க என்ன பண்ணுங்க, இந்த தீனியை குறைச்சிட்டு கல்யாணத்துல சாம்பார் வாலியை தூக்குற மாதிரி நடக்கிறத விட்டுட்டு சாதாரணமா நடந்து பழகுங்க… அப்பாவது வத்தலும் தொத்தலமாவது ஏதாவது மாட்டும்… வரேன் பாஸ்…!! என வீரை கலாய்த்து விட்டு அகன்றவன் என்ன நினைத்தானோ என்று நின்று திரும்பி

அப்புறம் நான் சொன்னதை மறக்காதீங்க பாஸே…!!! என கத்திக் கொண்டே சென்றவனை… “இருடா டேய், என்னையெல்லாம் கலாய்க்கிற கையில மாட்டு, உன்ன வகையா வச்சு செய்யுறேன்…!!” என சூளுரைத்துச் சென்றான் வீர்…

ஹிஹி, எப்பவும் ஒரே மாதிரி பழிவாங்கி போர் அடிக்குது. இந்தத் தடவை புது மாதிரியா ட்ரை பண்ணப் போறேன். மனசைத் திடப்படுத்திக்கிட்டு தயாரா இருங்க, வாரேன்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top