“என்னத்தையப் பேசச் சொல்ற? அதான் அன்னைக்கே அவ்வளவு பேசியாச்சே! இன்னும் என்ன வெட்டி நியாயம் பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கறது? அன்னைக்கே தீர்ப்பு சொல்ல வேண்டியது இவர் பேரன் தான். எங்களுக்குக் காலம் கொடுங்க, நான் உன்னை நிரூபிச்சுத் தள்ளி கிழிச்சிடுவேன்னு சொன்னானுங்க… இப்போ எங்கேயா அவன்…?” என கூட்டத்தில் முதல் ஆளாக வந்து நின்ற ரகுநாதன் கேட்க,
“அட, என்னத்த நிரூபிச்சு கிழிக்கப் போறானுங்க… அவனுங்க பக்கம் உண்மை இருந்தால் தானே நிரூபிக்க? எங்க பஞ்சாயத்துக்கு வந்தா உண்மை தெரிஞ்சி மானம் போயிடுமோன்னு பஞ்சாயத்துக்கே வராம பயந்து எங்க போய் பதுங்கிட்டானோ என்னவோ… இதுல தெரியல அவன் லட்சணமும் பெரிய குடும்பத்தோடு வளர்ப்பும்…?” என மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு பேசினார் திருச்சிற்றம்பலம்…
“அடிங்க, யாரைப் பார்த்து பயந்து பதுங்கிட்டானு சொன்ன…?” என வீர் வரிந்து கொண்டு வர…
“த்து தெறிக்க… யாரு கிட்ட கையை ஓங்கிட்டு வர…??” என திருச்சிற்றம்பலமும் சண்டையில் இறங்கக் களோபரம் வெடித்தது…
இருதரப்பையும் பிரிப்பதற்குப் போதும் போதும் என்றாகிவிட்டது…
“ஏப்பா சிற்றம்பலம், நீதான் செத்த அமைதியா போயேன். சின்ன பசங்க கிட்ட போய் சரிக்கு சரியா நிக்குற, என்ன இருந்தாலும் நீ பொண்ணு கொடுக்கப் போற சம்பந்தி வீடுப்பா, கொஞ்சம் யோசிச்சு பேசு…!!” என ஊர் பெரியவர் ஒருவர் கேட்க…
எது சம்பந்தமா எப்போ என் பொண்ணு நிச்சயதார்த்தத்தை பாதியிலே நிறுத்துட்டு போனாங்களோ, அப்பவே இந்த குடும்பத்துக்கும் எங்களுக்கும் உள்ள சம்மதம் முறிஞ்சி போச்சுயா… கல்யாணத்துக்கு முன்னாடியே வெளியில ஊர் மேயிறவனுங்களுக்கு எல்லாம் என் பொண்ணக் கொடுக்க எனக்கு என்ன பைத்தியமா…?? என் பொண்ணுக்கும் இந்தத் தா பக்கத்தில் நிற்கிறார் ரகுநாதன், அவர் பையனுக்கும் கல்யாணத்தை பேசி முடிச்சிட்டேன்… இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்… சொல்லி விடுறேன், வந்து கறி கஞ்சி குடிச்சிட்டு போங்க…” என்க…
“அது சரி, உன் பொண்ணு உன் விருப்பம், அதெல்லாம் இருக்கட்டும் பா. ஊர் பெரிய மனுஷன் ஒன்னு இருக்குல்ல, அதுக்காகவாது பார்த்து மரியாதையா பேசு…??” என மிரட்டல் வந்தது…
“இந்தப் பாசாங்கு எல்லாம் இங்க வேணாம்… பெரிய மனுஷங்கறது பேர்ல மட்டும் இருந்தா போதாது, செயலையும் இருக்கணும்… நிச்சயம் நின்னு போன என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுமோன்னு நொடிஞ்சு கிடந்தப்போ தோள் கொடுத்து தங்கமான பையனைக் கட்டி வைக்கப் போறார்; இதுலேயே தெரியுது இவர் மனசு எம்புட்டு தங்கம்னு… இதனால் நானும் உங்கள மாதிரியே போலியா பெருமையைத் தூக்கிப் பிடிச்சிட்டு இருந்தேன்… இப்பதானே தெரியுது கண்ணாடி கல்லுக்கும் வைரக்கலுக்கும் உள்ள வித்தியாசம்…!!” என அப்பட்டமாக ரத்தினவேல் பூபதி மீது வெறுப்பைக் கொட்டினார். திருச்சிற்றம்பலம்…
ரத்தினவேலுக்கு நன்றாகவே தெரிந்தது, சமயச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன்னை அவமானப்படுத்த வேண்டும் எனத் திருச்சிற்றம்பலம் பேசுவது. தன் பக்கமும் தவறு இருந்ததால் அமைதியாகவே இருந்தார்; ஆனால் அவருக்கு வருத்தம் அளித்த ஒன்னே ஒன்று, அது அவரின் இரண்டாவது பேரனின் திருமணம் மட்டுமே…
“ஏன்டா நல்லவனுனே, என்னடா உன் மாமனார் இப்படி சொல்லிவிட்டார்… உனக்கு வருத்தமா இல்லையா…?” என்று வீறு கொண்டு பேச முயன்றான்.
“ப்ச் போடா, அந்த ஆள் பண்ண அலப்பறைக்குத் துண்டை காணோம், துணியைக் காணோம், ஓடி இருப்பேன்! நல்லவேளை எப்படியோ தப்பிச்சேன், இப்பதான் நிம்மதியே வந்து இருக்கு…!” என பெருமூச்சு விட்டான். மகேன், மருமவனே, மருமவனே என அவர் செய்த அலப்பறை அவனைப் பேச வைத்தது…
அப்போ உனக்கு அந்த சந்தியா பிடிக்கலையா…??
பிடித்தம் பிடிக்கவில்லை என்று எல்லாம் இல்லை டா… ஐயா பார்த்து வச்ச பொண்ணு, அதனால கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன், அவ்வளவுதான். மத்தபடி எதுவும் இல்லை, அதுக்காக அந்த பொண்ணை எந்தக் குறையும் சொல்ல முடியாது… அது பெரிய பாவம், விடு… அவர் அப்பா பண்ண தப்புக்கு பொண்ணு என்ன பண்ணும்…?? என நாகரீகமாக ஒதுங்கிக் கொண்டான் மகேன்…
யோவ், உங்ககிட்ட என்னயா பேச்சு? இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க, உங்க பெரிய பேரன் வருவானா மாட்டானா…?? என ரகுநாதன், விஜயேந்திரன் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் துடித்தார்…
“ஐயா, உங்க பெரிய பேரன் வந்தாச்சு…!!” எனக் கூட்டத்தில் குரல் கொடுக்க அப்படியே அடங்கிப் போனார் ரகுநாதன்… அவர் முகத்தில் ஏமாற்றம் வந்து கவ்விக் கொண்டது, விஜயனைப் பஞ்சாயத்திற்கு வராமல் தடுக்க ஆட்களை அவர் அனுப்பியிருந்தது தான். அப்படி இருக்க, முழுதாக விஜயன் வந்து முன்னால் நின்றால் ஏமாற்றமாக இருக்காதா…??
“அதான் வந்தாச்சுல்ல, ஆரம்பிக்க வேண்டியது தானே…!!!” எனத் திருச்சிற்றம்பலம் குரல், ஏமாற்றத்தை அப்பட்டமாகக் காட்டியது…
“என்னப்பா விஜயேந்திரா, என்ன சொல்லப் போற? இந்த புள்ள உங்க மேல வச்சு குற்றச்சாட்டை பொய்யினு நிரூபிக்க ரெண்டு நாள் அவகாசம் கேட்டே கொடுத்தேன்… இப்போ அந்த அவகாசமும் முடிஞ்சு போச்சு… உங்க மேல தப்பு இல்லன்னு நிரூபிக்க ஏதாவது ஆதாரம் ஏதாவது கொண்டு வந்து இருக்கியா…?” என ரத்தினவேல் கேட்க…
விஜயேந்திரன் எந்தப் பதிலையும் பேசாமல் அமைதியாகக் கையை கட்டிக் கொண்டு நின்றான்… அவன் பார்வை முழுவதும் தலை குனிந்தபடி நின்ற தென்றலின் மீதே இருந்தது…
தென்றல் விஜயேந்திரனின் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் தான் தலை குனிந்து நின்றதே ஆன போதும், விடாமல் தொடரும் அவன் பார்வை அவளுக்குப் பெரும் அவஸ்தையைத் தந்தது…
“அவன் அமைதியா இருக்கறப்போவே தெரியலயா அவன் கிட்ட ஒன்னுமில்லன்னு…!!” இப்போது ஏகத்தாளமாக ஒலித்தது திருச்சிற்றம்பலத்தின் குரல்…
“ஏன் மா தென்றல், இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு, நீ எத சொன்னாலும் நாங்க செய்யத் தயாராக இருக்கோம்… உன்னை ஏமாத்தினது மூணு பேரில் யாருமா…?” என ரத்தினவேல் கேட்ட கேள்விக்குத் தென்றலிடம் பதில் இல்லை… இன்னொரு வாய்ப்பு கேட்கவே அவள் சித்தம் கொண்டாள், ஆனால் அங்கு நடந்ததோ…
“வாய திறந்து அவள் எப்படிச் சொல்லுவா? வசதிக்காக வந்தவள் ஒருத்தனோட நிறுத்தி இருப்பாளா… இதுவும் எவனுக்குப் பிறந்ததோ… இங்க கொண்டு வந்து நாடகம் ஆடுற நீங்களும் நம்பி கிட்டு…!!” என வார்த்தைகளில் விஷத்தைக் கக்கினார் திருச்சிற்றம்பலம்… அவரின் அருமை மகள் வாழ்வு கெட்டுப் போக முக்கிய காரணமாக இருந்த தென்றல் மீது அவருக்கு அத்தனை க்ரோதம்…
பேசியவரின் நெஞ்சில் தோள் செருப்பு காலோடு எட்டி மிதித்து இருந்தான் விஜயேந்திரன்… “நாயே எங்க வந்து யாரைப் பத்தி பேசுற…!” என்ற வன் குத்தில் திணறலையும், மூக்கு பொலபொலென ரத்தம் வடித்திருந்த நிலையையும் பொருட்படுத்தாமல் அவரைப் போட்டுப் புரட்டி எடுத்தான் விஜயேந்திரன்… அவனைத் தொடர்ந்த அவன் சகோதரர்களும் களத்தில் இறங்க மீண்டும் ஒரு சந்தக்கடையானது…
தீயிட்ட புழுவாகத் துடித்த பேதை மகள், அவரின் அபாண்டச் சொற்களைத் தாங்காது காதுகளைப் பொத்திக்கொண்டு கண்ணீர் வடித்தாள் தென்றல்… ஆற்றவோ தேற்றவோ அவளுக்கு ஒரு நாதியும் இல்லை…
விஜயேந்திரனிடம் இருந்து திருச்சிற்றம்பலத்தைக் காப்பாற்றுவதற்குள் ரத்தினவேலுக்கு ஜீவன் வற்றிவிடும் போல் ஆகிவிட்டது… அத்தனை உடும்புப் பிடியாகச் சிற்றம்பலத்தின் கழுத்தைப் பிடித்திருந்தான் விஜயேந்திரன்… முகம் நீலமாக மாறி, கண்கள் தெறிக்க மூச்சுக்காக அவர் ஏங்கும் பொழுது, போனால் போகுது என விட்டான் விஜயேந்திரன்…
கீழே விழுந்த திருச்சிற்றம்பலத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு ரகுநாதன்
“யோவ், என்னையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க… தப்பு செஞ்சா தட்டி கேக்குறவங்களை அடிக்க வர்றான், பார்த்துட்டு அமைதியா நிக்குறிங்க… இப்போ தெரியுதா உங்க பெரியவீட்டு லட்சணம்… அவங்க என்ன தப்பு செஞ்சாலும் யாரும் தட்டி கேக்க மாட்டீங்க, அப்படித்தானே…! ஆனால் நான் சும்மா விடமாட்டேன்…!!” எனப் பொதுமக்களைப் பார்த்து கத்திக் கொண்டு இருந்தவர்; அப்போதுதான் அவர் எதிரிலிருந்த மக்களின் முகத்தைப் பார்க்க ஒருவருக்கும் ஈ ஆடவில்லை…
என்னவென்று திரும்பிப் பார்க்க விஜயேந்திரன் மின்னலின் கழுத்தில் தாலி கட்டி வைத்திருந்தான்… அதை கண்டவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது…
தென்றல் கழுத்தில் மூன்று முடிச்சையும் தானே போட்டு முடித்தவன், அவளைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டு…
“இவள் இப்போ என் பொஞ்சாதி… இனி இவளைப் பற்றித் தப்பா ஒரு வார்த்தை வந்துச்சு, அவனுங்க தலை தரையில தான் கிடக்கும்… தில்லு இருந்தா இப்போ பேசுங்கடா…?” என கர்ஜித்தவன், தென்றலை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்…
இதற்காகவே காத்திருந்தது போல் சகுந்தலா இருவருக்கும் ஆலம் சுத்தி, “வலது கால் எடுத்து வச்சு உள்ளவாமா தென்றல்…!!” என அழைக்க…
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் திக்பிரமை பிடித்திருந்த பெண்ணவளோ, கல்லென உறைந்து நிற்க…
“வாமா தென்றல்…!!!” “தென்றல்…!!” என அவளை சுயநினைவுக்குத் தூண்டப் பார்க்க, அவளோ பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே தன் மார்பில் மின்னிய தங்கத்தால் ஆன தாலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க…
“நீங்க போங்கம்மா, நான் கூட்டிட்டு வரேன்…!” என்ற விஜயேந்திரன், குனிந்து நின்ற பெண்ணைப் பார்த்து… “முகில்… முகிலினி…!” என பலமாக அழைக்க…
“ஹான்….!” என ஆடவனைத் திடுகிட்டு என்று பார்க்க… “வா முகில், உள்ளே போகலாம்…!” என அழைக்க…
மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள் போல் அவன் பின்னாலே உள்ளே சென்றாள். தென்றலின் முகவரிக்குள்ளே வந்த முகிலினம்.
தொலைத்த முகவரியைத் தேடி வந்தவளுக்கு அவனே முகவரியாகிப் போனது என்ன விந்தையோ…??



