பகல் முழுவதும் தன்னைத் திடமாகவும்த் திருமிராகவும் காட்டி கொள்ளும் மனிதர்களைக் கூட, தனிமையில் இதயத்தின் அடியில் இருக்கும் வலிகளையும் வலி மிகுந்த நினைவுகளையும் வெளிக்கொண்டு வந்து, இரக்கமே இல்லாமல் வாட்டி வதைக்கும் இரவின் ராட்சசப் பிடியிலிருந்து தப்ப முடியாது. தவிக்கும் பலரில் ஒருவனாக ஆனான் மகேந்திரன்…
தூரத்தில் பால் ஒளியைச் சிந்திக் கொண்டிருந்த நிலாவை வெறித்துப் பார்த்து நின்றவனுக்கு அருகே ஒரு நிழல்; அது வீரேந்திரனுடையது…
“சின்ன வயதிலிருந்தே அவளைப் பிடிக்கும், அதற்குப் பெயர் சொல்லத் தெரியவில்லை…! இன்னைக்கு அவ அழறதுக்கு நீதான் காரணம். அவளுக்காகத்தான் உன்கிட்ட சண்டை போட வந்தேன்… ஆனால் ஆம்பளையா இருந்து பார்க்கும் போது உன் மேல எனக்கு இரக்கமும் பரிதாபமும் தான் வருது…
அவ என் கூட சுத்திட்டு இருந்தாலும் கண் முழுக்க உன்மேல தான் இருக்கும்… நீ வெளிநாட்டுக்கு போனப்போ அம்மா அப்பா கூட இவ்வளவு வருத்தம் பட்டு இருப்பாங்களான்னு எனக்குத் தெரியாது… ஆனால் அவள் நிதமும் உன் நினைப்பால் வெந்து செத்துக்கிட்டு இருந்தாள்… பெரிய புடிங்கியாட்டம் சொல்லிட்டுப் போயிட்ட காத்திருக்கிற காதல் தான் உண்மையானதுனு… நீ திரும்பித் தனியா வருவியா இல்ல வேற எவளையாவது காதலிச்சேன்னு கூட்டிட்டு வருவியா… அப்படியே தனியா வந்தாலும் அவ காதுல ஏத்துப்பியா மாட்டியான்னு அவ எத்தனை நாள் தூக்கத்தைத் தொலைச்சுத் துடிச்சிருப்பா…
லவ்வர்ஸா இருந்தா அட்லீஸ்ட் போன் கால், வீடியோ கால் ஆவது பண்ணிப் பார்த்துப் பேசி ஆறுதலாவது அடையலாம்… ஆனா அந்தப் பைத்தியக்காரி நீ சொன்னன்னு அவ காதலைச் சொல்லாம உன் நினைவோடும் உன் நிழலோடும் நாட்களைக் கடத்தினாள்…!!”
“உன்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாள், ஆனா சொல்லாம என்னால இருக்க முடியல… அதைச் சொன்னால் அவதாரம் உன் மேல எவ்வளவு காதல் வச்சிருக்காங்கன்னு உன்னால புரிஞ்சுக்க முடியுமா? பாரு, உனக்கு நிச்சயதார்த்தம் என்று தெரிஞ்சதும் உனக்காகத் தற்கொலை முயற்சி பண்ண அந்த முட்டாள்…!!” என்றதும் மகேந்திரன் அதிர்ச்சியாக வீரேந்திரனைப் பார்க்க…
“ஆனா நல்ல வேளையா நான் அவளைக் காப்பாத்திட்டேன்… அப்போ கூட அந்த முட்டாள் கிட்ட சொன்னேன், உன்னைக் கடத்திக்கொண்டு வந்துதான் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்… சத்தியம் பண்ணி கொடுத்த அப்புறம்தான் தற்கொலை முயற்சியைக் கைவிட்டாள்…!!” என்றதும் மகேந்திரனின் இதழில் சிறு புன்னகை சாயல்…
“ஆனா உனக்கும் எனக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கு, அது என்ன தெரியுமா? உன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த அன்னைக்கே சந்தியா கிட்ட பேசிட்டான்… அதனாலதான் சந்தியா இன்னைக்கு உன்னை விட்டுக் கொடுத்து இருக்கா… அவ்ளோ தைரியம் இருக்கிறவ முன்னாடியே வீட்ல அவ காதல் பத்தி சொல்லியிருந்தாங்கன்னா, கண்டிப்பா குறிஞ்சிக்கே உன்னை கட்டி வச்சிருப்பாங்க, அது உனக்குமே தெரியும்…!!”
“அதைத்தான் அந்த லூசு ஏன் பண்ணலன்னு நான் போய் கேட்டதுக்கு… கட்டாயப்படுத்தி வருவதில்லை, காத்திருந்து பெறுவதுதான் காதல்ன்னு உளறிட்டுப் போயிட்டா… உன்னை காதலிச்சு உன்னை மாதிரியே லூசா ஆகிட்டா…!!” என்றதும் மகேந்திரன் அவனை முறைக்க… அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன் போல்
“இதெல்லாம் ஏன் தெரியுமா? நான் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ எந்த மாதிரியான காதலை இழந்து இருக்கேன்னு உனக்கு புரிய வைக்கத்தான்… இந்த மாதிரி ஒரு அன்பை இழந்ததுக்கு கடைசி வரைக்கும் அவளை நினைச்சுக்கிட்டே சாவு போ…!!” என தன் சொந்த சகோதரனை சபித்து விட்டுச் சென்றான் வீர்…
வீரேந்திரன் சொல்லிவிட்டுச் சென்றதே நினைத்துக் கொண்டிருந்த மகேந்திரனுக்கு, காலையில் குறிஞ்சி அவனிடம் பேசியது நினைவுக்கு வந்தது…
“எப்படி அத்தான்? எப்படி உங்களுக்கு என்னைக் கை விட மனசு வந்தது… எப்படி என்னை வச்சிக்கிட்டே அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்க… உங்க மனசுல நான் இல்லவே இல்லையே அத்தான்…??” என ஏங்கி அழுதவளைக் கண்டு துடித்துப் போனான்…
“உங்களையே சுத்தி சுத்தி வந்தேனே, உங்க நினைப்போடு உயிர் சுமந்தேனே, என் காதல் தெரியலையா அத்தான் உங்களுக்கு… என்மேல சின்ன இரக்கம் கூட வரலையா அத்தான் உங்களுக்கு… என்னை உயிரோடு கொன்னுட்டியே அத்தான்…??” குறிஞ்சி
“அழாத குறிஞ்சி, அது அப்படி இல்லம்மா… உன்னை எனக்குப் பிடிக்கும்டா… உன்னை இன்னொருத்தன் கூட இணைச்சுப் பார்த்ததையே என்னால தாங்க முடியல… நான் செஞ்ச ஒரே தப்பு எனக்கு உன் மேல இருந்த காதலைச் சொல்லாதது மட்டும் தான்… அது கூட நம்ம வீட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக அதை மனசுக்குள்ளே போட்டுப் புதைச்சுக்கிட்டேனே தவிர, நானும் நடைபிணமா தான் இருந்தேன்… ஆனால் நம்மள ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போலாமா…?? அதனால நம்ம ஐயாவுக்குத் தானே அவமானம்…!! அவர்க்கு ஒரு அவமானம் என்றால் அது நமக்கானது இல்லையா…???” அதனால் தன் மனசை இரும்பாக்கிட்டு… என முடிக்கும் முன்…
ஓஓ, ஐயாவுக்காக தியாகம் செய்ய துணிஞ்சீங்களா…? ஏன் அத்தான், ஐயாவுக்கு கிடைக்கப் போற அவமானம் மட்டும் தான் உங்களுக்குப் பெருசா தெரிஞ்சதா…? என்னோட வலியும் வேதனையும் உங்களுக்குத் தெரியல இல்ல…? ஐயா கிட்டயும் அந்தப் பொண்ணு கிட்டயும் ஒரு வார்த்தை எடுத்துச் சொல்லி இருந்தா புரிஞ்சுட்டு விலகிப் போயிருப்பாங்க, ஆனால் அப்படிச் செய்ய உங்களுக்கு ஒரு தடவை கூடத் தோணல இல்லவே இல்ல… உங்களுக்கு என் மேல உண்மையாவே அன்பு இருந்தா, நம்ம காதலுக்காக இதுவரை சிறு துரும்பையாவது அசத்தி இருப்பீங்களா அத்தான்…? உங்க கௌரவத்துக்காக என் காதலைப் பலி கொடுத்துட்டீங்களே அத்தான்…?
நீங்க இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி சந்தோஷமா வாழறதை பார்க்க நான் உயிரோட இருப்பேன்னு நினைச்சீங்களா…? அப்படி நான் செத்துப் போயிருந்தா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க…? எங்க அப்பா அம்மாவுக்கு நீங்க என்ன சமாதானம் சொல்றீங்க, எனக்கு என்ன நியாயம் பண்ணுவீங்க…?” என்ற வார்த்தையில் அனல் பறந்தது.
“ஐயோ குறிஞ்சி, தயவு செஞ்சி அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லாதே, என்னால தாங்க முடியல… அப்படி மட்டும் நடந்தா என்னையே என்னால மன்னிக்க முடியாது…??” என வாய்விட்டு கதறினான் மகேந்திரன்…
“என்னத்தான் இதுக்கே நீங்க இப்படி கதறீங்க… நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல…??”
“போதுமா போதும், வார்த்தையால என்ன வதைக்காதே, தயவு செஞ்சு எல்லாத்தையும் மறந்திரு…??”
“மறந்துட்டு…?? மறந்துட்டு என்ன செய்யச் சொல்றீங்க அத்தான்…??”
“எல்லாத்தையும் மறந்துட்டு உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்களா? போதும் அத்தான், எனக்கு எதுவுமே வேணாம், எதுவுமே ஏன் நீங்களூமே… எனக்கு உங்க மேல உள்ள காதலைச் சுமந்து அதுக்காகப் போராடி இங்கு வலி கூடிப் போச்சு அத்தான்…?” என இதயத்தைச் சுட்டிக்காட்டியவள்… “காதலுக்காக ரெண்டு பேரும் போராடினால் தான் அத்தான் வெற்றி கிடைக்கும்… நீங்க சொன்னது சரிதான், ஒரு பக்கம் மட்டும் காதல் இருந்தா போதாது… உங்களுக்குக் காதல் வரப்போவதில்லை, இனி வந்தாலும் அதைப்பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை…!!”
“நெஞ்ச முழுக்க உங்களையே சுமந்து உங்களுக்காகவே வாழ்ந்த எனக்குக் கிடைச்சது எல்லாமே உதாசினமும் ஏமாற்றமும் மட்டும்தான். போதும், நானும் இந்த குடும்பத்துல தானே பிறந்தேன், எனக்கும் கொஞ்சம் சுயமரியாதை இருக்கு அத்தான்… தேடும்போது கிடைக்காத எதுவுமே தேவைப்படாதபோது கிடைச்சு எந்தப் பயனும் இல்லை… அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் அத்தான்… இனி நீங்க உங்க வழியில் போங்க, நான் என் வழியில் போறேன்… கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் இனி முட்டாள்தனமா காத்துட்டு இருக்கப் போறது இல்லை… இனி எது வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள முடிவு பண்ணிட்டேன்… நான் வரேன்… ம்ஹும், இனி வர மாட்டேன் அத்தான்…!!” என மடமடவென மனதில் உள்ளதைச் சொன்னவள் கடகடவென இறங்கிச் சென்று விட்டாள்…
அவள் சொன்னது போல் அவன் காதலுக்காகப் போராடி இருக்கணுமோ என காலம் கடந்த பின் யோசித்தான்; காரிகை அவன் கையை விட்டு நழுவிச் சென்றது கூடத் தெரியாமல்…
இங்கு வீரேந்திரனோ ரஞ்சனா எப்பொழுது தனியாக மாட்டாள் எனக் காத்துக்கொண்டிருந்தவனுக்கு, அவளே ஒரு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தாள்… அப்படி அவர்கள் இருவரும் தனியாகச் சந்தித்த வேளையில்,
“ஹேய் ஜீங்ஹ்டி சொல்லு, உனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் இந்த ஆர்னோல்ட் பார்த்துக்கொள்ளுவான்…!!” என வீர் தன் வீரப் பராக்கிரம புஜங்களைக் காட்டிப் பெருமை அடித்துக்கொள்ள,
“எனக்கு என்னடா கஷ்டம்? எனக்கு இருக்குற பெரிய குஷ்டமே நீதான்…!!” என இவள் உண்மையை மறைக்காமல் சொல்லிவிட்டு அவனைப் பார்க்க,
“அடியே, இந்த வாய் தான வேணாம் என்கிறது… சொல்லு, உங்க அப்பா ஒரு குடிகாரர், அம்மா ஒரு நோயாளி, உடன் பிறப்பு ஒரு ஊதாரி; அதனால்தான் நீ முகிலினி கூட ஒட்டிகிட்டாய்…!!” என இந்த நாய் எந்தப் பழைய படத்தை பார்த்துவிட்டு வந்து பிட்டு ஓட்டிட்டு இருக்கிறதுன்னே தெரியலையே!
“ஏன்டா இப்படி எல்லாம்? யாருடா உனக்குச் சொன்னது? ஹீரோயினுக்கு உதவி பண்ண ஒரு ஃப்ரெண்ட் வந்தா, நீங்களா ஒரு கற்பனை பண்ணிக்கிறீங்களா? எனக்கு நீ சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை… நான் நல்லாத்தான் இருக்கேன்…!!” என கோபம் காட்டிப் பேசினால்,
“இல்லையா? அப்புறம் எப்படி ஒரு பொம்பளப் பிள்ளையை இத்தனை நாள் வெளில தங்க விட்டாங்க…?” என அந்த அரவேக்காட்டு மண்டிய எட்டிய அரும்பெரும் சந்தேகத்தைக் கேட்டு வைத்தான்…
“ஏய், ஒருவேளை வீட்ல ஏதும் பொய் சொல்லிட்டு வந்துட்டியா…?” என அவனே பதிலாகக் கேட்டான்.
“அடேய் டாபர்மேன் மண்டையா… இங்க ஆம்பள வேஷம் போட்டு வந்தது தவிர என் வாழ்க்கையில நான் இதுவரைக்கும் பொய்யே சொன்னது கிடையாது… அந்தப் பொய் கூட முகிலோட நல்லதுக்காகத்தான் சொன்னது… மத்தபடி எங்க அப்பா கிட்ட நான் எந்தப் பொய்யும் சொன்னதில்லை. எங்கப்பா கிட்ட சொல்லி முறையா அனுமதி வாங்கித்தான் இங்க முகில் கூட வந்தேன்…!!” என ரஞ்சனா
“இது என்னடி புதுசா இருக்கு? அது யாருடி உங்க அப்பான் இப்படி பெத்த பொண்ணை ஊர் மேய விட்ட மகா புண்ணியவான்…!!” என்றவனுக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி தான்…
“அந்த புண்ணியவான் எங்க அப்பா தென்காசி எஸ்.பி. மிஸ்டர் சக்திவேல் ஐ.பி.எஸ்…!!” என்பதை கேட்டதும் தெறித்து ஓடினான் வீர்…
போன வேகத்திலே திரும்பி வந்தவன்… “இங்க பாரு ஜிங்கிடி, எனக்கு ஒரு விஷயத்தை தெளிவா சொல்லு… நீ சொல்றதப் பொருத்தம்தான் ரிஸ்க் எடுக்கிறதும் ரஸ்க் சாப்பிடுறதும் இருக்கு…??”
“என்னடா உளற…?”
“ஆமாண்டி, உள்ளதை கேட்டா உளறல் மாதிரிதான் இருக்கும்.. அதை விடு, நீ என்ன லவ் பண்றியா இல்லையான்னு தெரியாம உங்க அப்பன் கிட்ட வீணா அடி வாங்க கூடாது இல்ல… டெல் டெல், உனக்கு என்மேல லவ்வாங்கியா இல்லையா… சீக்கிரம் டெல்…!!” இதைவிட கேவலமாக யாரும் காதலைச் சொல்லி இருக்க முடியாது, வீர் அப்படிப்பட்ட பீஸ்…
“வாடி மாப்ள வா, என்னை எப்படி எல்லாம் வச்சு செஞ்சியோ, அது என் முறை, வச்சு செய்றேன் பாரு…” என மனசுக்குள்ளே திட்டம் போட்டவள்…
“லவ்வா…? உன் மேலயா…? எனக்கா…? எதை வச்சு அப்படி நீ முடிவு பண்ணிக்கிட்ட…?” என ஒன்றுமே தெரியாதவள் போல் கேட்டாள்…
“அடிங்க, இன்னா விளையாடுறியா? என்னை லவ் பண்ணாதவ எதுக்குடி என் கூட ஒரே ரூம்ல ஒண்ணா தூங்கின…? நான் அவ்ளோ இம்சை பண்ணியும் என்னை பொறுத்துகிட்ட…? லவ் பண்ணாதவ எதுக்குடி அன்னைக்கு நான் கொடுத்த முத்தத்தை வக்கணையா வாங்கிகிட்ட நின்ன…?” என எகிறினான் வீர்…
“சீ, பொறுக்கி! எப்படி பேசுறான் பாரு, எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு நாய் நம்ம கிட்ட அவ்ளோ சீன் போடுறான். இருடா டேய், உன்னை ஒரு வழி பண்ணி, ரஞ்சு ரஞ்சுனு என் பின்னாடி சுத்த வைக்கலன்னா நான் சக்திவேல் மகள் இல்லடா!” என மனசுக்குள் சூளுரைத்தாள்…! அவன் எருமைக்கே ஏரோஹோஸ்டர்ஸை காட்டினவன் என்பதை அறியாது, இவள் ஒரு திட்டம் போட்டாள்…
“ஓ, நீ அதை அப்படி எடுத்துக்கிட்டியா…? இங்க பாரு, என்ன பொறுத்தவரைக்கும் எடுத்துக்கிட்ட வேலையை ‘What ever you do ,do well?’… அவ்வளவுதான்! அன்னைக்கு நீ கொடுத்தது பேர்லாம் ஒரு முத்தமா…? அதெல்லாம் இந்த காலத்துல ‘Just like that’, அவ்வளவுதான்! இதுக்கு போய் ஓவரா ஃபில் பண்ணிக்கிட்டு… ஹாஹாஹா…” என ஏதோ நகைச்சுவை போல் காட்டி சிரித்தாள்…
“ஏய், நிஜமா தான் சொல்றியா…?” என கேட்டவனுக்கு முகமே இல்லை…
“நல்லாவே வேணுடா உனக்கு, உள்ளூர கருவி கொண்டவள்…!”
“இதுல போய் யாராவது பொய் சொல்வாங்களா? நிஜமா எனக்கு உன் மேல லவ்வே இல்லடா…!” என்றவள், வீர முகத்தைப் பார்க்க சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது… அதை அவனுக்குத் தெரியாமல் மறைத்தவள்.
“டேய், லவ் இல்லன்னு சொன்னதுக்கு நீ பாட்டுக்கு தண்ணி நாயா தேவதாஸ் மாதிரி திரியாத, சரியா? அப்புறம் தற்கொலை பண்ணிக்கிற ஐடியா இருந்தா அதை எல்லாம் விட்ரு… உனக்கு நானே ஒரு நல்ல பெண்ணா பார்த்துத் தரேன், சரியா?” என வீரை நன்றாக வெறுப்பேற்றினாள்…
“எது தற்கொலையா? அவ்வளவு சீன் எல்லாம் உனக்கு இல்லை. ஏதோ பார்க்க வெள்ளை எலி மாதிரி இருக்கே, போனா போகுதுனு உனக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு நினைச்சேன்… நீ இல்லாட்டி எனக்கு வேற பொண்ணு, ஐயாவோட பெர்ஃபார்மன்ஸ்க்கு ஆயிரம் பொண்ணுங்க வருவாங்கடி, வேணுனா கதை படிக்கிறவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ… என்ன சொன்ன? தண்ணி அடிச்சிட்டு சுத்துவேன்னா… போடி போடி போண்டா மணி, நான் நெனச்ச நாளைக்கு வேற பொண்ணு கல்யாணம் பண்ணுவேன்… வரட்ட ஜிங்கிடி…!” ரஞ்சனாவை இழுத்துச் சுற்றி விட்டு அவளைத் தாண்டிச் சென்றவனைப் பார்த்துச் சிரித்தபடி சென்றவளுக்குத் தெரியவில்லை…
அவன் உண்மையைத்தான் கூறிவிட்டுச் சென்றான் என்று…
அவள் விளையாட்டு அவளுக்கு வினையாகும் என்று அறிந்திருந்தால் ரஞ்சனா வீரை விட்டுச் சென்று இருக்கவே மாட்டாள்…
லாத வேலை…!!”

