மற்ற இரு பெண்களுக்குத் தன் திட்டத்தை விவரமாக, பக்கத்துச் சுவருக்குக் கூட கேட்காத வகையில் விளக்கிச் சொன்னாள் முகில்…
“அவ்வளவுதான், இதை நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும்..!!” என முகில் கூறியதை இருவரும் ஏற்றுக்கொண்டாலும்…
மனதில் பட்டதை கேட்டுவிடும் நோக்கில்… “இங்க பாரு முகிலே, தெரிஞ்சோ தெரியாமலோ நீ மகேன் அத்தான் கல்யாணத்தை நிறுத்தி எனக்கு உதவி தான் செஞ்சி இருக்க. அந்த நன்றி கடனுக்காக தான் நீ கேட்டதை நான் கொண்டு வந்து தரேன்… ஆனால் இதுல எள்ளு அளவு கூட எனக்கு நம்பிக்கையோ விருப்போமோ இல்லை…!!” என்றதும் முகிலும் ரஞ்சனாவும் சோர்ந்து போயினர்…
“உடனே தலையைத் தொங்கப் போடாதீங்க பிள்ளைகளா… தீ சுடும் நான் சொல்றேன்… தீங்கிற வார்த்தை சுடாதுனு நீங்க சொல்றிங்க… பார்ப்போம்…!!” குறிஞ்சி
“முகிலு, நான் உனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன், நல்லா கேட்டுக்கோ… உனக்கு பெரிய அத்தானைப் பற்றி சரியா தெரியல. அவர் பார்த்தாலே பத்திக்கிற நெருப்பு… ஒழுகத்தில வானுயர்ந்தவர்… ஏகபத்தினி விரதத்துல அந்த ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்கே ஒரு படி மேலே தான்… எந்த ஜென்மத்து புண்ணியமோ வில்லாம வளையாம உனக்கு அவர் கிடைச்சிருக்கார்… பழி வாங்குறேன் அது இதுன்னு கையில் கிடைச்ச மாணிக்கக் கல்லை உரசிப் பார்க்காத, அம்புட்டு தான் சொல்வேன், அதுக்கு மேல உன் விருப்பம்… நான் கொடுத்த வாக்குப்படி உனக்கு நான் நிச்சயமா உதவி செய்வேன்…!!” என்ற குறிஞ்சியின் கடைசி வாக்கியத்தில் நிமிர்ந்து அமர்ந்தாள் முகில்…”
“சரி அப்போ மகேன் அத்தான் உன் பொறுப்பு… வீரை ரஞ்சு பார்த்துப்பா… உங்க பெரிய அத்தானை நான் பார்த்துக்குறேன்…!!” என ஏரியா வாரியா தொகுதி ஒதுக்கீடு நடக்க…”
“ஹே, வீர் தானா? சப்ப விஷயம், அவனையும் நானே பார்த்துக்கிறேன், அவன் கிட்ட இருந்து சுலபமா என்னால எடுக்க முடியும்…!!” என குறிஞ்சி சொல்ல…”
“ஏய், அப்போ உன் மகன் அத்தானை நான் பார்த்துக் கொண்டுமா…??” என ரஞ்சு வெடுக்கென்று கேட்க, மற்ற இரு பெண்களும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்க… அவள் அதை கண்டு கொள்ளவே இல்லை…
“அதுக்கில்லை, அவங்க அவங்களுக்குக் கொடுத்த வேலைய அவங்க அவங்கதானே பார்க்கணும்… அதுவும் இல்லாம உன் ஃபோக்கஸ் எல்லாம் மகன் அத்தான் மேலேயே இருந்தா தானே உங்களுக்குள்ள நெருங்கிப் பழக ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமேனு தான் சொன்னேன்…!!” என ரஞ்சனா கூறியதை குறிஞ்சி அப்படியே நம்பிவிட்டாள் என்பது அவள் முகத்திலிருந்தே தெரிந்துவிட்டது, முகிலுக்கு அப்படி இல்லையோ…??
குறிஞ்சி தலை மறைந்ததும் ரஞ்சனாவைப் பிடித்துக்கொண்டாள் முகில்…
“என்னடி உன் பேச்சு, பார்வை எல்லாம் இப்போ கனவுல மிதக்குற மாதிரியே இருக்கு? என்ன அந்த வீர்கிட்ட மயங்கிட்டியோ…?” என முகிலினி கிடுக்குப்பிடியாகக் கேட்டாள்…
“ச்சே, அப்படி எல்லாம் இல்லடி… அது ஒரு அரை மெண்டலு, அவனை போய் நான் எப்படி லவ்… ம்ஹும், அதெல்லாம் இல்லடி… ஆனா அப்படியே இருந்தாலும் என்ன தப்பு? ஏன் உனக்கு ஓரங்கத்தியா நான் இங்க வந்துடுவேனோன்னு பயமா முகிலு…?” என ஆழம் பார்த்தாள் ரஞ்சனா…
“லூசாடி நீ, நான் எதுக்கு சொல்றேன் புரியலயா உனக்கு… இன்னும் தென்றல் நிலைமைக்கு யார் காரணம் தெரியல… வீணா உன் மனசுல ஆசை வளர்த்து, பின்னாடி ஏதாவது பிரச்சனைனா உன்னால தாங்கிக்க முடியுமா ரஞ்சு? நினைவு தெரிஞ்சதுல இருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸா இருக்கோம்… உன்னை அப்படி ஒரு நிலைமைல மாட்டிவிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு… அவ்ளோதான், நீ என்னை புரிஞ்சு வச்சிருக்க… போடி…!” என்று விட்டு முகிலினி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்…
முகில் கூறியதில் இருந்த உண்மை ரஞ்சனாவைச் சுட்டது… என்ன மாதிரியான வார்த்தையை விட்டு அவள் நட்பை சந்தேகக் குழியில் தள்ளிவிட்டாள்…
“முகில் சாரி சாரிடி வர வர என் புத்தி ஏன் இப்படி யோசிக்குதுன்னே தெரியல.. எல்லாம் லூசு காத்து எனக்கு அடிச்சிடுச்சு போல… சாரி விடு ப்ளீஸ் புஜுக் புஜுக்கு…!!” என எப்போதும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டால் ரஞ்சு முகிலைச் சமாதானம் செய்யப் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தையைப் பயன்படுத்த, அதற்கு கை மேல் பலன் கிடைத்தது…
முகில் சமாதானம் அடைந்த பின் ரஞ்சின் மனதில் நீண்ட காலமாக நெருடிய கேள்வியைக் கேட்க இதைத் தவிர வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என நினைத்தாளோ என்னவோ, கேட்டுவிட்டாள்…
“முகில் நான் கேட்குறேன் தப்பா நினைக்காத ஒ… ஒருவேளை விஜயனே தப்பு பண்ணி இருந்தா நீ என்ன பண்ணுவ…?” ரஞ்சனா…
கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்தவள் “விதிப்படி நடக்கட்டும்…!!” என்பதோடு முடித்துக் கொண்டாள்…
இத்தனை நாள் முகிலோடு பழகி இதை வைத்து அவளைப் பற்றி கொஞ்சமாவது அறிந்தவள் ஆயின்… நிச்சயம் முகிலினி மற்றொரு வாழ்வைத் தேடிச் செல்லப் போவதில்லை… அதுவே வந்தாலும் ஏற்கப் போவதுமில்லை என்பது ஐயமறுக்க முடியாத விடயம்…
இரு பெண்களின் வாழ்க்கை ஒரு கயிற்றில் அந்தரத்தில் ஊஞ்சலாடுகிறது… இதில் யாருக்கு பலன் கிடைத்தாலும் மற்றவர் வாழ்வு வீணாகுமே என்கிற கவலை அவளை ஆட்கொண்டது… “இறைவா, எந்தவித பதற்றமும் இன்றி இருவர் வாழ்வையும் மலரச் செய்…!!” என வேண்டிக்கொண்டாள்… ஆனால் அவள் வேண்டுதல் கடவுளைச் சென்றடையும் முன்னே விதி குறுக்கே விழுந்து விளையாடத் தொடங்கிவிட்டதா…?? எங்க ஓடுற விதி மேல பழியைப் போட்டு நீ தப்பிச்சிடலாம்னு நினைக்காத… அதான்.. ஹிஹி…
ஏதேதோ நினைவுகளில் முகில் உழன்று கொண்டு இருந்த அவளிடம் வந்தாள் சகுந்தலா…
“தென்றல் கண்ணு, இங்க தான் இருக்கியா? உனக்கு எதுவும் முக்கியமான வேலை இல்லையே கண்ணு…?” எனப் பரிவாகக் கேட்க…
“இல்லை அத்தை, குழந்தை கூட இப்போ தான் தூங்கினான். சொல்லுங்க அத்தை, என்ன விசேஷம்…?” முகில் சுரத்தே இல்லாமல் கேட்க…
“அதுகில்ல கண்ணு சுத்துபட்டு கிராமம் பூரா நம்ம சொக்காரங்க தான்… எத்தனையோ பேர் எத்தனையோ தரம் நம் பெரியவனுக்கு பொண்ணு கொடுக்க முன் வந்தாலும், பெரியவன் விடாபிடியா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு நின்னுட்டான்… அவன் பிடிவாதத்தால தான் நல்லவனுக்கு பேசி முடிச்சது… எங்க இவன் ஒண்டி கட்டையா நின்னுடுவனோனு விசனம் அறிச்சிக்கிட்டே இருந்தது… நானும் வேண்டாத தெய்வமில்ல, போகாத கோவிலும் இல்லை… ஆனால் பாரு, தெய்வமசமா மஹாலட்சுமி போல உன்னையும் என் பேரனையும் கொண்டு வந்து நிறுத்த தான் அத்தனை வேதனை தெரியவும் எல்லாம் கஷ்டமும் பனி போல மறைஞ்சு போச்சு கண்ணு… அதான் நம்ம குலதெய்வக் கோயிலில உனக்கு, பெரிய தம்பிக்கு, என் பேரன் மூணு பேருக்கு பூஜைய போட்டு, நேத்திக்கடன் செலுத்திட்டு, அப்படியே பொங்கல் வச்சுட்டு வரணும் இருக்கேன் கண்ணு. இந்த மாசத்துல உனக்குத் தோது படுற நாளா பார்த்து சொல்லு…!!’ என அவளுக்காக அவர் பார்த்து பார்த்துச் செய்யும் போது முகிலுக்கு
“இவரை ஏமாற்றுகிறோமே…???” என்கிற குற்ற உணர்வால் முகம் சிவந்தது…
“சரிங்க அத்தை…!!” என அவருக்குப் பதில் கூறி அனுப்பியவளுக்குப் பெருத்த யோசனை…
எத்தனை அன்பான பெண்மணி! அவர்கள் மட்டுமா? சாமுண்டி கூட தான் அவர் விரைப்பாக பேசினாலும் அடுத்தவர் முன் இதுவரை அவளை விட்டுக்கொடுத்ததே இல்லையே… ஏன் அன்று கூட இவர்களின் தூரத்து உறவினர் விஜயனின் மணமகளை காண வந்தவர், கை குழந்தையோடு வந்து நின்ற முகிலை பார்த்து ஏதோ சொல்லிவிட அவரை பிளிறு பிளிறு என்று பிடித்து விட்டாரே சாமுண்டி… இப்படி அழகான அன்பான குணவதியிடம் என் பேரன் மயங்கி கிடப்பதில் என்ன தப்பு? அவள் புருஷனை அவள் முந்தானையில் முடித்துவிச்சிக்கிட்டா உனக்கு என்ன கொடுக்குது… ஆமா, உன் புருஷன் அந்த கரகாட்டகாரி வீட்டு பக்கம் ஒதுங்குவதைக் கேள்விப்பட்டேன், பார்த்துப் பத்திரமாய் இரு… சொல்ல வந்துட்டா பெருசா…!! இவளைத் தாங்கித் தானே பேசினார்…
அங்கிருந்தவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் அவரிடம் அன்பு செலுத்தத் தான் செய்கிறார்கள். ஆனால் அந்த அன்புக்கு எல்லாம் இவள் தகுதியானவளா…? என்று தான் முகிலுக்குப் பயமே… அவர்களைப் பொறுத்தவரை முறை தவறிப் பிள்ளையோடு வந்து நின்றவளை, குளம் கோத்திரம் என்பது எதுவும் கூடக் கேட்காமல் அவளை இவ்வீட்டின் மருமகளாக ஏற்றுக்கொண்டு விட்டாரே… “அது மட்டுமா? என் குணநலன் பற்றி ஒன்றுமே தெரியாமல் அவள் கையில் அவ்வீட்டின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமாயின் அவர்களுக்குத் தான் எத்தனை பெரிய மனது இருக்க வேண்டும்… இப்படிப்பட்டவர்கள் நிழலில் நின்றாளே, அவர்களின் குணம் நமக்குள் ஒட்டிக்கொள்ளாதா? அப்படி இருக்க அவர்கள் வளர்த்த பேரன்கள் எப்படிப் பாதை மாறக் கூடும்… ஒருவேளை அப்படி இல்லாவிடில்…? இல்லாவிடில்…? என்ன நான்…!!! நானா…? இந்த மாதிரி சிந்திப்பது…? யார் இவர்கள்? இப்போது அறிமுகமானவர்கள்…! ஆனால் தென்றல், அவள் உடன் பிறந்து வளர்த்தவள் அன்றோ? அவளின் வார்த்தை பொய் என்று நான் நினைப்பதா…? ஐயோ, என்ன மாதிரி கொடுமை இது! என் மனம் எனக்கே சதி செய்கிறதே என அரற்றினால்… அவள் மனதோடு அவளே போராட வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டால் முகிலினி… இதில் எங்கிருந்து பழிவாங்குவது?
“இல்லை, நிச்சயம் இந்த நிலை தொடர்ந்தால் அவள் மனம் மாறுவதற்கு நூறு சதவீதம் உறுதி… என் மனம் உறுதி குலையும் முன் நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும்…!!” என்றவள் நாடிச் சென்றது விஜயனைத்தான்… எதையும் நினையாமல் அவள் எடுத்த அவதாரத்தில் விஜயேந்திரன் நிலை குலைந்து தான் போனான்… அப்படி என்ன அவதாரம் என்று கேட்கிறீர்களா…??
அவ்வ்வ்வ்… அதை எப்படி நான் என் வாயால் சொல்ல, நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்…
கார் கூந்தல் காற்றில் அலைப்பாய, உச்சி வகுட்டில் நிறைந்த குங்கும மை, விழியில் விசிறியாகப் படிந்த இமைகளும், நிலவொளியில் மின்னும் ஒற்றை வைர மூக்குத்தியும்… சிவப்பு தீட்டிய குவிந்த சதைப்பற்றுள்ள ப்ளம் பழ உதடுகளும்… முத்து நகை கோர்த்த சங்கு கழுத்தும்; அதற்கு கீழே அப்பப்பா! அழகு குவியலைக் கண்டு மயங்கித்தான் போனான் ஆணவன்…
ஆனைக்கும் அடி சறுக்குமாம்! அவளின் ஊதாநிற ஆர்கானசா புடவையில் எழிலாகத் தெரியும் இடைச் சரிவு… அப்பப்பா! அந்த பிரம்மன் படைத்த அபாயகரமான பள்ளத்தாக்கு அவை… மீசையுள்ள ஆண் மகனை முழுமையாக முழுங்கிவிடும் மோகனப் பார்வை என மோகினி அவதாரத்தில் அவன் மனைவி முகிலினி…
காதல் மோகினி கண்ணசைவில்
மோகம் பண்பாட
காமன் சதிராட
நீளதோ காதல் களியாட்டங்கள்…
முக்கியமான நேரத்துல கட்டையா போடுறதே இந்த கைப்புள்ளைக்கு வேலையா போச்சு… எடுறா அருவாள… அப்படி தான… விடு ஜூட்…ஹிஹி

