யார் தடுத்தும் நிற்காமல் சென்ற முகிலை தான் பார்த்தபடி நின்றாள் ரஞ்சனா…
“என்ன இவள் இப்படி தலைதெறிக்க ஓடிப்போறா, பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க..?? என்னவோ நல்ல புத்தி வந்தா சரி..!!” என நினைத்துவிட்டு உள்ளே திரும்பியவளை கண்ணில் கல்மிஷத்துடன் எதிர்ப்பட்டான் வீர்…
“ஐயோ இவனா…??” “இவன் இருக்குற பக்கமே தலை வச்சி படுக்க கூடாதுனு நினைச்சேன்… கண்டுக்காம அப்படியே ஓடிப் போய்டு ரஞ்சு, சிக்கின சிக்கன் தந்துரி தான் ஓடிடு… ??” என ரஞ்சனா வீரை பார்க்காதது போல உள்ளே போக எத்தனிக்க…
அவளை உள்ளே போக விடாமல் குறுக்கே கையை நீட்டி தடுத்தான் வீர்…
“என்ன..??” என்பது போல் பார்த்தவளிடம்…
“என்னடி மறுபடியும் மாறுவேஷமா… இந்த முறையும் என்னை ஏமாத்த முடியாது…??” என கூறியவனை
“இவன் என்ன லூசா, என்ன உளறிக்கிட்டு இருக்கான்…!!” என்பது போல் பார்த்து வைத்தவள்…
“ஹலோ, என்னை பார்த்தா எப்படி தெரியுது? முன்னாடி வேஷம் போட்டதுக்கு ஒரு காரணம் இருந்துச்சு… இப்போ என்ன நான் வேஷம் போட்டேன்னு சொல்றியா..??” என கடுப்பினால்…
“என்ன வேஷம் போடல, நீ முன்னாடி குட்டியா இருந்தது, இப்போ எப்படி திடிர்னு இவ்வளவு பெருசா ஆச்சு….??” என வீர் இரட்டை அர்த்தத்தில் கேட்டது; முதலில் புரியாமல் நின்றவள்…
பின் அவன் கண்கள் போகும் இடத்தை பார்த்து, கைகளை குறுக்கே கட்டி மறைத்துக்கொண்டவள்…
“பொறுக்கி போடா…!!” என்று கன்னம் சிவந்து நகர போனவளை விடாது…
“ஒழுங்கா சொல்றியா இல்லை உன்னை பற்றி வீட்ல சொல்லவா…??” என மிரட்ட…
“என்ன மிரட்டுறியா…?? சொன்னா சொல்லிக்கோ, போடா…!!” என ரஞ்சு, உன் மிரட்டலுக்கு எல்லாம் மசியமாட்டேன் என்பது போல் நின்றாள்…
“அம்மாஆஆ…!!” என வீர் உள்ளே குரல் கொடுக்க… முதலில் எல்லாம் சும்மா என நினைத்தவள்…
வீரின் குரல் கேட்டு சகுந்தலா, சாமூண்டி மலர் எல்லாம் பயந்து விட்டால்…
“ஐயோ, இந்த அரை மெண்டல் உண்மையாவே சொல்லிடுவானோ…??” என பயந்தவள்…
“ப்ளீஸ் வீர், வேணாம் ப்ளீஸ்…!!?” என கெஞ்ச, அவன் “முடியாது போடி” என்று விட்டுத் தோரணையாக நிற்க…
“வீர்…” என ரஞ்சு அழைக்க முற்படும் போதே, பெரியவர்கள் அருகில் வந்து விட…
“என்ன விரேந்திரா… எதுக்குப்பா கூப்பிட்ட?” என சகுந்தலா கேட்க…
“சொல்லவா..?” என வாயாசைத்து ரஞ்சனாவிடம் கேட்க…
“வேணாம் ப்ளீஸ்..!” என அவள் கண்கள் இறைந்தன… அதை டில் (chill) விட்டவன்…
“அம்மா, இந்தா பொண்ணு…??” என இழுத்து ரஞ்சனாவின் இதயத்துடிப்பை எகிற விட்டவன்…
“யாருமா புதுசா இருக்கு..?” என கேட்டான் எதுவுமே தெரியாதவன் போல…
“அதுவாடா, நம்ம தென்றல் இருக்குல, அவளோட சிநேகிதியாம். அவளைப் பார்த்துப் போக வந்து இருக்காடா… நான் தான் இங்க கொஞ்ச நாள் தங்கிட்டுப் போகச் சொன்னேன்…!!” சகுந்தலா பாவம், இவரைத்தான் எல்லாம் சுலபமாக ஏமாற்றி விடுகின்றனர்…
“அம்மாடி, இது என் மூணாவது பையன் வீரேந்திரன். நம்ம ஊர் பிள்ளைகளுக்கு ஸ்போர்ட்ஸ் கிளப்ல தான் ஏதோ…!!” என அவர் இழுக்க
“ஸ்போர்ட்ஸ் கிளப்…!!” என வீர் எடுத்து கொடுக்க
“ஆன் அதே தான், அதுல பிள்ளைகளை சேர்த்து மண் சார்ந்த விளையாட்டு பயிற்சி குடுத்துட்டு வாரான்… காமன்வெல்த் ஒலிம்பிக் போட்டி எல்லாம் தயார் பண்ணிட்டு இருக்கான்… நிறைய தடவை வெளிநாட்டுக்கெல்லாம் பிள்ளைகளை கூட்டிட்டு போய் தங்கம், வெள்ளி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கான்… நிறைய பிள்ளைங்க கத்துக்குது… இப்ப கூட ஏதோ ஜப்பான்-க்கு போய்ட்டு வந்தான்…!!” என் மகனைப் பற்றி பெருமையாகச் சொன்னார் சகுந்தலா…”
“ஓ அப்படியா ஆன்டி…!!” என்றவள் வீரை மெச்சுதலாகப் பார்க்க… அவன் பெரிதாகப் போஸ் கொடுத்தபடி நின்றான்…”
அவளுக்கு முறையாக முகமண் வாசித்து அனைவரிடமும் அறிமுகப்படுத்தி வைக்க… குறிஞ்சிக்குத் தான் அவளைப் பற்றி முன்பே தெரியுமே… முன் போல் ரகசியமாக அல்லாது வெளிப்படையாகவே அவளுடன் பழக… அத்தனை பேருக்கும் ஆச்சரியம், அதுக்குள்ள எப்படி ஒட்டிக்கொண்டார்கள் என்று…”
“ஆமா, உன் பேர் என்னன்னு சொன்ன?” என்று சாமுண்டி கேட்க…”
“ரஞ்சனா பாட்டி…!” என்று எதார்த்தமாக கூறிவிட்ட பின்பே யோசித்தாள். அச்சச்சோ! என்று நாக்கை கடித்துக்கொண்டு சாமுண்டியைப் பார்க்க…”
“ஓஓ” என்பதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை தான்… ஆனால்…
..
“ஆமா, உனக்கு தென்றலோட அண்ணன் ரஞ்சனை தெரியுமா…?? எங்க அவனை காலைல இருந்து காணலை…?” என கேட்டு வைத்து இளம் பெண்கள் இருவரையும் பதற வைத்தார்…”
“ஏன்டா வீர், உனக்கு தெரியுமா..? உன் கூட தான அந்த பையன் சுத்திட்டு இருந்தான், எங்கடா அவன்…?” என வீரை கேட்க…
“தெரியாது ஈஸு…!” என்று கூறிவிட்டு ரஞ்சனாவைப் பார்க்க…”
அவள் கலவரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து, “ஆனா காலையில ரஞ்சனாவ கூட்டிட்டு வரணும்னு சொன்னான்… அதுக்கப்புறம் தான் ஆள காணல. அவ கிட்டயே கேட்டுக்கோ…?” என்று அவளைக் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்தான்…
சாமுண்டி ரஞ்சனாவைப் சந்தேகமாகப் பார்க்க… “அ..அது பாட்டி, ரஞ்சன் ரஞ்சன் வந்து.. ?”
“எங்க வந்தான்..?” என வீரை இடைஞ்சல் கொடுக்க…
“ரஞ்சன் வரல, அவர் என்னை இங்க கூட்டி வந்து விட்டுட்டு வேலை இருக்குனு போயிட்டார் பாட்டி…!!” என வீரை முறைத்து கொண்டே கூறிட…
“அப்படி என்ன வேலை? நேத்து வரைக்கும் என் கூட தான சுத்திட்டு இருந்தான், அப்படி வேலை இருக்குறது பத்தி ஒன்னும் என்கிட்ட சொல்லவே இல்லையே…!!” என்றான்…
“ஏன்டா இப்படி சும்மா இருடா சொம்பு வாயா..?” என மனதுக்குள்ளாகவே திட்டினாள் ரஞ்சனா…
“ஏதோ அவசர வேலை இருக்குன்னு போயிட்டாரு பாட்டி, விஜயேந்திரன் சார் தான் அனுப்பி வச்சாரு. வேணுனா அவர் கிட்டையே கேட்டு பாருங்க…?” என யாரை இழுத்தால் குறுக்கு கேள்வி வராது என கூடவே இருந்து அறிந்தவளுக்குத் தெரியாதா…??
“அப்படியா சரி..!!” என சாமுண்டி அத்தோடு முடித்துக் கொள்ள, அவள் அடுத்து வீரை பார்க்க, அவனோ பலே என மெச்சும் விதமாகத்தான் பார்த்து வைத்தான்..
சாப்பிட்டு விட்டு கை கழுவும் தருணத்தில் வீரைத் தனியாக எதிர்கொண்டாள் ரஞ்சனா…
“இங்க பார் வீர், நீ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க. எதுக்கு இப்படி சீப்பா பிஹேவ் பண்ற…?” என பொங்கிவிட்டாள்…
“அடிங்க அவ்ளோதான்…?” என ரஞ்சனாவை அடிக்க கையை ஓங்கியே விட்டான்…
“இங்க பாரு, நான் காமெடி பீசா தெரியுறேனா? எவ்வளவு ஏமாற்றினாலும் அமைதியா இருப்பான்னு நினைச்சியா? நான் எப்பவும் விளையாட்டு போல இருக்க மாட்டேன்… எனக்கு எல்லாத்தையும் விட என் குடும்பம் தான் எப்பவுமே முதன்மை, முக்கியமும் கூட… அவங்கள ஏமாத்திட்டு நீ உள்ள வருவன்னு நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா? ஏதோ விஜயனுக்காக உன்னை சும்மா விடுறேன்… இல்லை, நடக்குற கதையே வேற தான்…!” என எச்சரித்து விட்டு நகர்ந்தான்…
வீரின் இந்த கோப முகத்தைப் பார்த்து அரண்டு போனாள் ரஞ்சனா. நிச்சயமாக அவனிடம் இத்தகைய கோபத்தை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை… அவன் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பாசம் அவளை பிரமிக்க வைத்தாலும், அவர்களில் இருந்து தன்னை பிரித்துப் பார்ப்பது இதயத்தின் ஒரு மூலையில் சொல்ல முடியாத ஒரு வலியை எழுப்ப, அதை அவளால் தடுக்க முடியவில்லை…
அதன் பின் வந்த பொழுதில், வீர் ரஞ்சனாவின் கண்களில் படவே இல்லை. அப்படியே அவனை ஓரிரு முறை கண்டாலும், தனி ஒரு ஆளுமையுடன் சுற்றி வரும் வீர் புதியவனாக அவள் கண்களுக்குத் தெரிந்தான்…
அவன் பார்க்காத நேரம் இவள் அவனையே ஆபிரில் போட்ட ஆப்பிள் போன் போல் பார்த்து வைத்திருப்பாள்… அவன் பார்த்துவிட்டானே என்று பயந்து என்ன என்று கேட்க… சட்டென சிவந்தவள், ‘ஒன்னும் இல்லை’ என்று சொல்லிவிட்டு ஓடி மறைந்தாள்…
மாலை மங்கும் வேளையில், கரிய இருள் மேகம் வானை கவ்விக்கொண்டிருக்க, குறிஞ்சியுடன் தனியே நடந்து வந்த ரஞ்சனாவிற்கு சற்று பயம் இருந்தாலும், உடன் ஆள் இருக்கும் தைரியத்தில் மேலே வராண்டாவில் அவர்களைப் பற்றி பேசியே படியே நடந்து வந்தாள்…
திடீரென அவர்கள் முன் எதிர்பார்த்த மகேந்திரனைப் பார்த்து ரஞ்சனா பயந்து பம்மிவிட, அவளைக் கண்களாலே முறைத்தபடி முன்னேறிச் சென்றுவிட, குறிஞ்சியோ அவனைப் பின் தொடர்ந்து செல்லவில்லை…
“என்ன இவ தனியா விட்டுட்டு போய்ட்டா, ஐயோ பயமா வேற இருக்கே, இடி எல்லாம் இடிக்குதே…?” என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, விண்ணாமல் விழுங்காமல் ஒரு பேரிடி சற்று அருகே வந்து விழ, ரஞ்சனா பயந்து கண்ணையும் காதையும் மூடிப் பதுங்கும் சமயம், யாரோ அவளை இழுத்து அணைப்பது போல் உணர்ந்தவள் கண்ணைத் திறக்க, அச்சமயம் மின்சாரம் தடைபட்ட இருள் சூழ்ந்து கண்ணைக் குருடாக்கியது.
“ஆ ஆ யாரு…?” என காற்றில் கையை அலைய விட்டவளுக்கு எதுவும் கிடைக்காமல் போக,
“அச்சோ ஏதோ காத்து, கருப்பு தான் என்னை பிடிச்சி இருக்கு போலயே அம்மா..!!” என வாய் விட்டுச் சொன்னபடியே அதன் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள் தானே…
முரட்டுப்படியாகப் பிடித்திருந்த உருவம் பட்டென்று குனிந்து ரஞ்சனாவின் இதழில் முத்தமிட்டது… முதலில் பட்டும் படாமலும், பின்பு பிரிந்த இதழ்கள் ஒன்றோடு ஒன்று அச்சில் வார்த்தது போல் பின் முரட்டு உதடுக்கிடையில் சிக்கிக் கொண்டது. அவள் மெல்லிதழ் மென்று தின்றுவிடும் வேகம் அதிகரிக்க, திடீர் முத்தத்தில் மூச்சு எடுக்க மறந்தவள்… ரிதமும் லயமும் தப்பி சுவாசிக்கப் போராடினாள்…
வன் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன் இதழ்களைப் பிரித்தவள், தன்னை முத்தமிட்ட கள்வன் யார் என்று பார்க்க முற்பட, இருட்டு கூட அவனுக்கே சதாகமாகிவிட… முகம் தெரியவில்லை…
ஆனால் அவள் உணர்வுகள் அடித்துச் சொன்னது, அவளை ஆட்கொண்டிருப்பது வீரின் கரங்கள் தான் என்று… அவள் அவ்வாறு யோசிக்கையிலே அவளை மீண்டும் முத்தமிட்டான்… இம்முறை ஆழமாகவும் அழுத்தமாகவும் உயிரையே உருக்கி எடுத்துவிடும் நோக்கில் ஒரு இதழ் யுத்தம் நடந்தேறியது…
அவள் எண்ணங்களுக்கு ஏற்ப அவளை முத்தமிடும் அந்த கள்வன் யார் என மின்னலே தன் ஒளிக்கீற்றைக் காட்டித் தந்தது…
“இது என்ன இப்படி ஒரு மூச்சு கூட விட முடியாதபடி முரட்டு அணைப்பு…?? எதற்கு இந்தத் திருட்டு முத்தம்…?? என்ன உரிமையில்…?? காலையில் அவ்வளவு பேசினாயே…??” என காலையில் நடந்ததை நினைத்து கோபத்தில் வீரை பிடிவாதமாகத் தள்ளிவிடவும், மின்சாரம் வந்து விளக்குகள் ஒளிரவும் சரியாக இருந்தது…
“வீர்…?!” என ரஞ்சனா கையை ஓங்கியபடி பார்க்க, அங்கு எதிரில் யாருமே இல்லை; ஏன், அந்த இடம் முழுவதுமே ஆள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை..
சுற்றிச் சுற்றிப் பார்த்தவள் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் தேடியவளுக்கு யாருமே கிடைக்காமல் போக…
“பிரம்மையா…??” எனத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டவள், கை தானாக அவள் இதழைத் தொட, அங்கு இருந்த எச்சில் மனம் சொல்லியது இல்லை என்று, ஆனால் ஆனால் எனச் ச்சே எனத் தன் இயலாமையை நினைத்துத் தன்னைத் தானே வெறுத்துக் கொண்டவள், கைகளை உதறிக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைவாக நகர்ந்தாள்… அவள் சென்று மறைவதை மாடியின் படிக்கல்களில் இருந்து மறைவாக நின்று பார்த்து வீரின் இதழில் மந்தகாசப் புன்னகை…
இரவு உணவு வேளை வரும் வரை குழப்பத்திலே உழன்று கொண்டிருந்தவள், எதிரே வீர் வர…
“வீர் நீ.. ??” என வாய் எடுத்தவள், பின்பு நிதானித்தவள், “இவன்கிட்ட கேட்கப் போய் இல்லைனு சொல்லிட்டா அது கூட பரவால்ல, இவன் வேற ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்க முடியாது, வேண்டாம்..?” எனச் சுதாரித்தவள் அவனைக் கடந்து போக எத்தனித்தாள்…
ரஞ்சனாவின் கரங்களைச் சுண்டி இழுத்த வீர், அவள் கழுத்தில் கையைப்போட்டு அணைத்துக்கொண்டவன்…
“எங்க போற? எனக்குத் தூக்கம் வருது, வா நாம தூங்கப் போகலாம்…?” என்று கூப்பிடவும்
ரஞ்சனாவிற்குப் பக்கென்று இருந்தது…
“என்ன இத்தனை நாள் என் கூடத் தான தூங்கின? அப்புறம் என்ன, வா தூங்கலாம்…!” என விக்கிரம் இல்லாமல் அவளை வெறுப்புடன் கேட்க…
ரஞ்சனா பதில் ஏதும் சொல்லாமல் வீரை முறைத்துக் கொண்டே நிற்கவும்…
“ஸ்ஸ் ஓ, நீ பொண்ணுல, சாரி நான் மறந்துட்டேன்…!” என அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவன் போல் நடிக்க…
“போடா பொறுக்கி…!!” என வீரை பிடித்துத் தள்ளிவிட்டு விறுவிறுவெனச் சென்று மறைந்தாள் ரஞ்சனா… ரஞ்சனா கோவித்துக் கொண்டு செல்வதைப் பார்த்து வெடித்துச் சிரித்தான் வீர்…
இங்கு குறிஞ்சியோ மகேந்திரனிடம் தன் மனத்தைப் புரிய வைக்கப் பெரும் பாடுபட்டுக்கொண்டிருந்தாள்…
அவள் நெருங்கி நெருங்கி வர அவன் விலகி விலகிச் செல்வது இவளுக்குப் புரியவில்லை… அவன் எவ்வளவு உதாசீனப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் அவள் மனம் அவனை விரும்புவதை மட்டும் அவனிடம் சொல்லிவிட வேண்டும் எனத் துடித்தாள்…
சொல்லாத காதல் மடிந்த கதைகள் எத்தனையோ உண்டு… அதுபோல் நூற்றில் ஒன்றாக அவள் காதல் முடிவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… அவள் காதல் சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிடத் துடித்தாள், அதன் பலனைப் பற்றி அவளுக்கு அக்கறை இல்லை…
மகேந்திரன், அத்தான் நில்லுங்க…
“ப்ச்! இப்போ உனக்கு என்ன வேணும்? எதுக்கு என்னை நொய்யி நொய்யின்னு தொந்தரவு பண்ணிட்டு இருக்க?” என எரிச்சலை காட்டினான்.
“நான் ஏன் உங்க பின்னாடியே தொடர்ந்து வரேன்னு உங்களுக்கு தெரியாதா அத்தான்…?” என்று குறிஞ்சி நேரடியாகவே கேட்டாள்.
“தெரியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ…?” மகேன் இறங்கி வருவதாக இல்லை.
“எங்க என் கண்ண பார்த்து சொல்லுங்க அத்தான்…?” என குறிஞ்சி மகேந்திரனின் கண்ணை நேராக பார்த்து கேட்டாள்.
குறிஞ்சியின் காதல் ததும்பும் கண்களை நேராக பார்த்து, மறுத்து பேச முடியவில்லை மகேந்திரனால்… உண்மை என்னவென்றால், அவன் அறிந்து கொண்ட காரணத்தினாலேயே அவளை விட்டு விலகி முயல்கிறான், அவ்வளவே… முடியுமா அவனால்? அதை யோசிக்கவே இல்லை அவன்…
அவள் கண்களை விட்டு பார்வையை பிரித்து எடுத்தவன், வேறு புறம் திரும்பி நின்று… “தெரியாது…!” என்ற அவனது குரலில் கரகரப்பு இருந்தது…
“புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம் அத்தான், புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கு என்ன சொல்லி எப்படி புரிய வைக்க எனக்கு தெரியல… ஆனால் ஒன்னு அத்தான், நான் உங்கள நல்லா புரிஞ்சிகிட்டேன்… நீங்களாவே ஒருநாள் என்னை தேடி வருவீங்க, இல்லை என்றாலும் என் காதல் உங்களை வரவைக்கும்… ஆனா என்னோட பயமே, நீங்கள் வரும் போது என் காதலும் நானும் இருப்போமாங்கிறது தான்…?? ஏன்னு தெரியல, உங்க கிட்ட இருந்து யாரோ எதுவோ என்னவோ பிரிக்கிற மாதிரி மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத பயத்தை கொடுக்குது…!!” என கண் கலங்கிய வண்ணம் சொன்ன குறிஞ்சியின் குரல் பயத்தில் நடுங்கியது…”
அவளை அணைத்து ஆறுதல் தர துடித்த கரங்களை அடக்கியவன், மனதை இரும்பாக்கி கொண்டு மௌனமாகவே நின்றான்… இந்த நேரத்தில் அவன் கூறும் எந்த வார்த்தையும் குறிஞ்சிக்கு தேவையற்ற நம்பிக்கையைத் தந்துவிடக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருந்தான் மகேந்திரன்…
குறிஞ்சியின் கண்களில் உடைப்பெடுத்து அழுகை பெருகுவதைக் காண சகியாமல் மரம் போல் நின்றான்… அந்த கல் நெஞ்சக்காரன்…
அதற்கு மேல் அங்கு என்ன நடந்திருக்குமோ…?? “குறிஞ்சி…” என மலர் அழைக்கும் சத்தத்தில், கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக கீழே இறங்கிச் சென்றாள்…
குறிஞ்சி சென்ற பின் வெளியே கொட்டித் தீர்த்த பருவமழையைப் பார்த்து நின்ற மகேந்திரனின் கண்ணில் ஒரு துளி மின்னி மிளிர்ந்தது; அவன் ஆழ்மனத்தின் எண்ணத்தை அவன் அன்றி வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாதே…
எத்தனை முறை
நீ உதசீனம்
செய்தாலும்
உனக்காகத் துடிக்கும்
இந்த இதயம்
மட்டும் ஏனோ
நிற்பதில்லை
இது காதலின்
வரமா…??
சாபமா…??

