முகிலே!! உன் முகவரி என்ன-2

புயலாக நுழைந்தவள் கருத்தை கவர்ந்தாள்… பெரிய பிரமாண்டமும் இல்லாது, அதே சமயம் சமையல் பூபதி குடும்பத்தின் கம்பீரத்தையும் அந்தஸ்தையும் எடுத்துரைக்கும் வண்ணம் மிளிர்ந்தது அந்த மாளிகை… ரசனைக்கு சற்றும் குறைவில்லாத அந்த மாளிகையை வெறித்து பார்த்து நின்று கொண்டிருந்தனர்… அதே போல் புதிதாய் வந்தவர்களையும் பணி ஆட்கள் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆனால் யாரும் முன் வந்து கேட்கவில்லை. காரணம், பட்டணத்தில் பார்ப்பவனை எல்லாம் சந்தேகிக்கத் தோன்றும், பட்டிக்காட்டில் பரதேசியையும் பண்போடு பார்க்கத் தோன்றும்… அடிச்சு விடு காசா பணமா ஈஇ…

புதியவளின் அந்த வெறித்த பார்வை எவ்வளவு நேரம் நீடித்து இருக்குமோ, எல்லாம் குழந்தை அழும் வரை தான்…

அழும் குழந்தையை கண் கலங்கக் கண்டவள்…

“அழாத கண்ணா, இனி நாம் அழப் போவதில்லை… இங்கிருப்பவர்களை அழ வைத்துத்தான் பார்க்கப் போகிறோம்…” என்றவளின் முகத்தில் தான் எத்தனை வன்மம்…

அழகான காகித மலர் ஒன்று கசக்கி எறியப்பட்டதைப் போன்று இருந்தது…

ஆழமான உள்மூச்சு ஒன்றை எடுத்துவிட்டவள், “எல்லாம் உனக்காகத்தான்; நமக்கு நடந்த அநீதிக்கு இங்கிருப்பவர்கள் அத்தனை பேரும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சொல்ல வைப்பேன்…!” என மனதில் சூல் உரைத்துக் கொண்டுவள். குழந்தைக்குச் சொல்லும் சமாதானத்தின் இலட்சணம் என்னவோ…??

அழுந்தபடி பதிந்த செவ்வரளி கால்களால் பூமிக்கு நோகும் என்று என்னவோ, ஆனால் புதியவளின் வஞ்சத்தின் அளவையும் வேகத்தையும் எடுத்துச் சொன்னது…

நேராகச் சென்றவர்களைத் தடுத்த முதன்மைப் பணியாளிடம் அதே அழுத்தத்துடன் பெரியவரைப் பற்றி கேட்க, அதற்கு அவர் சொன்ன பதிலில் ஸ்தம்பித்துப்போயினர் அவர்கள் இருவரும்…

அவர்களின் திகைத்த தோற்றத்தைக் கண்டு அவர் இவர்களிடம் எதிர் கேள்வித் தொடங்க, அதற்கு அவர்கள் அளித்த பதிலில் அவரே அதிர்ந்து போனார்…

இப்படி பப்ளிக் எக்ஸாம்க்கு அவுட் ஆஃப் சிலபஸ்ல இருந்து கேள்வி கேட்ட மாதிரி முழிச்சிட்டு நிக்குறாங்களே, அப்படி என்ன கேள்வி கேட்டு… என்ன பதில் வந்திருக்கும்…?? எங்க என்னாவாஆஆ இருக்கும் நீங்களே சொல்லுங்க பார்ப்போம்…

அப்போ நீ சொல்ல மாட்டாதான்… ஈஈஈ… அதேதான்டா…

வண்ண மலர்களும், தென்னை ஓலை கீற்றுகளும், குலம் வாழ வைக்கும் குலை வாழை மர அலங்காரமும், இன்று அந்த வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று சொல்லியது…

மங்கள இசை காதுகளைத் துளைக்க, சந்தனமும் ஜவ்வாதும் மனதைப் பரப்ப, காரைக்குடி சமையல் வாசனை ஊர் மக்களைத் தம் பக்கம் இழுக்க, கடைக்கோடி வரை விரவிப் பறந்து சுற்றார் பந்து மித்ரர்களையும் கட்டி இழுத்து வந்தன…

வாயில் விரல் வைத்து யார் வீட்டு விஷேசம் என்று கேட்டவர்களுக்குப் பதில், ஊரில் பெரும் செல்வந்தரும், தற்போது அரசியலில் இறங்கி தென்காசி மாவட்ட முக்கிய புள்ளியாகத் திகழும் திருசிற்றம்பலத்தார்… அவரின் ஒரே தவ புதல்வியான சந்தியாவின் நிச்சயதார்த்த விழா இது… ஆம், விழாவே தான்…

திருமணமாகி எட்டு வருடங்கள் தவம் இருந்து கிடைத்த பெண் பிள்ளை அவள் வரவு, படுத்துக் கிடந்த சிற்றம்பள்ளத்தின் தொழிலை எழுப்பிக் குதிரை வேகத்தில் ஓட வைத்தது. இன்னும் சில ஆண்டுகளில் முன்னணி தொழில் அதிபராகத் திகழ்ந்தார்; விட்டுப் போன சொந்தங்கள் யாவும் நெருங்கி வந்தன… இதோ தொழில் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக அரசியலில் அடியெடுத்து வைத்தாயிற்று…

அதிர்ஷ்டத்தை வாரிக் கொடுக்கும் மகள் மூலம் இன்று அவரது வாழ்நாள் ஆசையும் நிறைவேறப் போகிறது… ஊரிலே பெருந்தலைக்கட்டுடன் சம்மந்தி ஆகப் போகிறார்… இனி புதுப்பணக்காரன் என்னும் பெயர் மறைந்து பெரிய வீட்டுச் சம்பந்தி எனப் பெயர் வரும்; அதுவே அவருக்கு அரசியலில் செல்வாக்கை உயர்த்தித் தரும்… அதனால்தான் மனிதனின் முகத்தில் பத்தாயிரம் மெகா வாட்ஸ் பல்பு பளிச்சுனு எரியுது…

தன் செல்வமகள் நிச்சயதார்த்தத்தை எத்தனை கோலாகலமாக நடத்தி வருகிறாரோ, அதைவிடப் பன்மடங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துவிட்டார்; அவ்வளவு ஏன், திருமணம் முடிந்து பெண்ணும் மாப்பிளையும் சுவிட்சிற்கு ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகள் வரை செய்து முடித்துவிட்டார்… அவ்வளவு வெறி மாமனார்க்கு…] , ,

எனில்…??

ஆம், நீங்கள் நினைப்பது சரியே! அங்கு நடக்க இருப்பது வளரும் அரசியல்வாதியும் தொழிலதிபருமான திருச்சிற்றம்பலத்தின் மகளுக்கும், ரத்தினவேல் பூபதி ராஜாவின் ஏக பேரனுமான நிச்சயதார்த்த விழாவே தான்…

சொந்தங்கள் கூடி, பந்தங்கள் வாழ்த்திட, இரு வீட்டார் முன்னிலையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தாம்புலம் மாற்றிப் பெரியவர்கள் நிச்சயம் முடிக்க…

இலசுகளுக்கு ஏற்றபடி மணமக்கள் இருவரும் மாலை மாற்றி மோதிரம் அணியப் போகும் சமயத்தில் சரியாகக் கட்டையை நீட்டினாள் அவள்…

புயல் போல் உள்ளே நுழைந்தவள்… வழக்கமான ஹீரோயின் டயலாக் பேச அதுக்கு நம்ம ஆளுங்க கட்டையக் கொடுக்க ஒரே கலவரமா போச்சு போங்க…

என்ன…?? அது என்ன வழக்கமான டயலாக்னா கேக்குறீங்க, இந்தா சொல்றேன்…

“இந்தக் குழந்தைக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிட்டு நிச்சயதார்த்தத்தை நடத்திடுங்க”னு அம்மணி சொல்ல…

“யார்மா நீ நல்லது நடக்குற வீட்ல வந்து அமங்களமா தகராறு பண்ணிட்டு இருக்க, வெளில போமானு…!!’ பட்டுனு பெருசு ஒன்னு சொல்ல…

கோடைத் தீயாக அவரைப் பார்த்து முறைத்து வைத்தாள் (பார்த்துமா, பெருசு பட்டுனு போய்டப் போகுது…)

“நான் எதுக்கு போகணும்? ஒரு பொண்ணை ஏமாற்றி பிள்ளையை கொடுத்துட்டு, அது பத்தி சின்ன உறுத்தல் கூட இல்லாம இங்க இன்னொரு பொண்ணுடன் நிச்சயம் பண்ணுவீங்க… அத பார்த்துட்டு நான் சும்மா போகவா? இவ்வளவு தூரம் வந்தேன்…?” இவளும் பதில் கொடுக்க…

அவள் சொன்ன செய்தியில் பல நெஞ்சங்கள் அதிர்ந்து போயின… உண்மை, பொய், யோசனை ஆகியவற்றைத் தாண்டி உச்சகட்ட அதிர்ச்சியை அடைந்து இருந்தனர்…

“ஏலேய் என்னயா அந்தப் பிள்ளையை பேச விட்டுப் பார்த்துட்டு இருக்கீங்க? நம்ம ஐயாவைப்பற்றி நமக்குத் தெரியாதா… இது ஏதோ பணப் பறிக்க வந்த கூட்டமா இருக்கும், அடிச்சு விரட்டி விட்டுட்டு ஆகறதப் பாருங்க…!!” என கூட்டத்தில் கிடா மீசை கூறியதைக் கேட்டு வெங்குண்டது கூட்டம்…

போர்க்களத்தில் எதிர் வரும் யானைக் கூட்டம் போல் ஒன்று திரண்டு ஒரு சிறு பெண்ணை எதிர்க்க கிளம்பியது அந்த மதயானைக் கூட்டம்…

அவர்களைக் கண்டு வலிய திடமான ஆண் மகனுமே சற்று அசரக்கூடும்;

ஆனால் அவளோ அவர்களைத் துச்சமாக நினைத்து வெண் பட்டுக்கரத்தால் அசால்ட்டாக தடுத்து நிறுத்தியவள், பார்வையை மட்டும் உயர்த்தி கூட்டத்தில் துழாவ விட்டவள்.

திடகாத்திரமான உடல் கட்டும், அதே நேரத்தில் முகத்தில் மூப்பம், தலையில் உள்ள வெள்ளை நரைகள் நாங்கள் இப்போதே அறிமுகமானவர்கள் என்பது போல், உச்சியை மட்டும் நிரப்பி அடியைத் தொடாமல் அந்த கூட்டத்திலே தனித்துத் தெரிந்தார் ரத்தினவேல் பூபதி…

அவரிடம்..

“பூபதி குடும்பத்துக்கு வாக்கு சுத்தம், நாக்கு சுத்தம்… நீங்க நியாயமான், நீதிமான்; நம்பி வந்தவங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்…

நேர்மை மறு உருவம் அது இதுனு உங்களைப்பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க…

ஆனா !!! இங்க எல்லாமே வேற மாதிரில இருக்கு…?!

நீதி கேட்டு வந்த பெண்ணை இந்த ஊரே சேர்ந்து விரட்டி அடிக்குது, அதைச் சும்மாவே வேடிக்கை பார்த்து நிக்குறது தான் உங்க நியாயமும்..?? நேர்மையுமா…???”

எனத் தீர்க்கமாக அவர் கண்களை வெட்டாது பார்த்து கேட்டவள்…

“இங்க இருக்கிறவங்க எல்லாம் மனுஷங்க, கொஞ்சமாச்சும் நியாயத்துக்கும் கட்டுப்பட்டவங்க என நம்பி தான் இந்த ஊருக்கு வந்தேன்…

ஆனால்

இங்க இருக்கவங்க எல்லாம் மனசாட்சியே இல்லாத காட்டு மிருகங்கள்னு தாமதமாகத்தான் புரிஞ்சிக்கிட்டேன்… இப்போ சொல்றேன்,

இந்த ஊர்ல கிடைக்காத நியாயத்தை எங்க எப்படிப் போய் வாங்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என அங்கிருந்தவர்களைப் பார்த்துச் சவால் விட்டவள், அவர்களைப் பார்த்துத் துச்சமெனப் பார்வை வீசிவிட்டு ஆவேசத்துடன் திரும்பிச் செல்லப் போனவளைத் தடுத்து நிறுத்தியது அந்த கணீர் குரல்…

“நில்லுமா! நியாயம் கிடைக்கும் என்று எப்ப இந்த ஊரை நம்பி நீ வந்துட்டியோ… அப்போவே உனக்கு பாதி நியாயம் கிடைச்ச மாதிரி தான்…

ஆனா நீ நியாயம் கேட்டு வந்து முறையும் இடமும் சரியானது இல்லை… இந்த ஊருக்குன்னு சில விதிமுறை இருக்கு, இங்க எல்லாமே பஞ்சாயத்து மூலமா தான் நடக்கும்… அங்க வந்து நீ தப்பு செஞ்சவாங்க, மேல பிராது குடுக்கலாம்…!!” என அதிகாரம் மிகுந்த குரலில் பிசிறுதட்டாமல் கூறினார் ரத்தினவேல் பூபதி…

இப்படியாகத் தடபுடலாம் ஏற்பாடு செய்யப்பட்ட நிச்சயதார்த்தம் தடாளடியா பஞ்சாயத்தில் தொடர்கிறது… (விளையாட்டுச் செய்திகள் இத்துடன் முடிவடைகிறது)

பஞ்சாயத்து என்றாலே யது அபிரென்ஸ் இல்லாமல் எப்படி என்ன மக்காஸ் பஞ்சாயத்துக்கு நான் ரெடி..?? நீங்க ரெடியா… ??

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top