சுடர் விடும் சூரியன் சாளரம் வழியே சதிராட, மூடிய இமைகளுக்குள் கண்மணிகள் அசைய இமைகளைப் பிரிப்பதற்கே பெரும் பிரயાસமாக இருந்தது. ஆயினும் மெல்ல விழிகளை மலர்த்தினாள் முகலினி… “விடிஞ்சிடுச்சா…?” என கொட்டாவி விட்டபடி மணியைப் பார்த்தவளுக்குப் பக் என்றது; அது விடிந்து பல மணி நேரத்தைக் காட்டியது…
பதறி எழப் பார்த்தவளுக்கு உடல் ஒத்துழைக்க மறுத்தது…
“அம்ம்ம்ம்…” என மலங்க மலங்க விழித்தவளுக்கு எல்லாமே கனவு போல் தோன்ற ஆரம்பித்தது…
“எனில் நேற்று நடந்தது கனவா…?? கனவு என்று சொன்ன நீங்கள் கட்டையைத் தூக்கிட்டு வர மாட்டீங்கள்…”
அவள் தடித்த இதழும், கண்ணில் ஏற்படும் எரிச்சலும், உடலில் ஏற்பட்ட வலியும் பெண்மையில் எடுக்கும் காதலால் நேற்று நடந்தது யாவும் நிஜம் என்பது எள்ளளவும் ஐயமில்லை… நேற்று நடந்த எதற்கும் அவள் விஜயனை குற்றம் சொல்லப் போவதில்லை…
ஆனால் இதெல்லாம் வெறும் காதல் நாடகம் என்று அவன் அறியும் போது…?? ஆம், எல்லாமே நாடகம் தான். அவளுக்கு ஒன்று நடக்க வேண்டி அவள் சாதித்த காரியம் என்ன அத்தனை இலகுவா…?? ஒரு பெண் செய்யத் துணியும் காரியமா…?? என உள்ளூர எழுந்த குற்றஉணர்ச்சி அவளுக்கே மேலும் எரிச்சலை மூட்டியது…
அவளும் என்ன தான் செய்வாள்? அறைக்குள் வந்தாலே சர்வ ஜாக்கிரதையாக இருப்பவனிடம் இருந்து டி.என்.ஏ மாதிரியை அவள் எடுக்க முடியாமல் திணற, வேறு வழி இன்றி அவள் கையில் எடுத்த ஆயுதம் தான் காதல்… ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள்; காதல் என்பது இரண்டு பக்கமும் கூர் தீட்டிய ஆயுதம், அது எதிரில் இருப்பவரை மட்டும் அன்றி, எடுப்பவரையும் சேர்த்தே கொல்லும் ஆயுதம் என்று…
முகில் இருக்கும் மனநிலைக்கு அவளுக்கு காதல் திருமணம் என்பது சாத்தியமில்லை என்று பொழுது, நூற்றில் ஒரு வாய்ப்பாக அவளுக்கு இயல்பான ஒரு திருமண வாழ்வு அமைந்த பட்சத்தில், நேற்றைய இரவும் அதில் அடங்கும் தானே… அவள் யாரிடமோ தன்னை விற்று விடவில்லையே ; தாலி கட்டியவனுக்குத் தான் அவள் பெண்மையை முன் வந்து அளித்தால், அதுவும் அவனுக்கு மட்டுமே உரியது என்று எண்ணும் போது, முகில் மனதில் இருந்த பாரம் லேசானது போல் உணர்ந்தாள்…
“எண்ணித் துணிக கருமம்…!!” என்பது போல் அவள் துணிந்து இறங்கிவிட்டாள். இனி பின்வாங்குவது இழுக்கமாகும் என்னும் எண்ணம் தோன்றிய விரைவிலே அவள் எடுத்த முடிவு சரியாகத் தெரிந்தது. தன் முகத்தை அழுத்தித் தேய்த்துக் கொண்டு எழுந்தவள், கட்டிலுக்கு அடியில் தான் பதுக்கி வைத்ததைத் தேடினாள்… அந்தோ, பரிதாபம் அது மயமாகிப் போயிருந்தது…
“எங்கே…?” எனப் பதட்டத்துடன் தேடி அலைந்தவளுக்குக் கண்ணீர் முட்டியது. அதற்கு ஈடாக அவள் இழந்தது விலைமதிக்க முடியாத தன் பெண்மையை அன்றோ… நாசி விடைக்க, கண்கள் கரித்து வரவும்… “இதையாத் தேடுறே?” என ஒரு குரல் வர, அத்திசையை நோக்கியவள் திடுக்கிட்டாள். காரணம், விஜயனின் கையில் இருந்த கண்ணாடி குப்பியைப் பார்த்தாள்; அதில் தான் அவள் டி.என்.ஏ (DNA) மாதிரியைச் சேர்த்து வைத்திருந்தாள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…
“ஐயோ, இவனிடம் எப்படி வந்தது…?” என்ற படபடப்பும், “கண்டுபிடித்து விட்டானே…!!” என்கிற பயமும், இனி “என்ன செய்வானோ…?” என்கிற அச்சம் கலந்த வெடவெடப்பும் அவள் முகத்தில் வந்து போக… அவளையே வைத்த கண் வாங்காமல் நின்று கொண்டிருந்த விஜயேந்திரன், அழுத்தமான அடிகள் வைத்து முகிலை நெருங்க, அவன் ஒவ்வொரு அடிக்கும் அவள் இதயம் துடிதுடித்தது; எந்நேரமும் அவளிடம் இருந்து எகிறி குதித்துவிடுவேன் என்பது போல் வேகமாக இயங்கியது…
“ஆக நேத்து போட்ட காதல் நாடகத்துக்கு இதுதான் காரணமா…? ம்ம், பலே பலே திட்டம் போட்டுத் திருடுற அளவுக்குப் பலே கில்லாடி தான் போல… ப்ஷ்! ஆனா பாரு, எல்லாம் சரியா பண்ணின நீ போட்ட திட்டத்துல ஏகப்பட்ட ஓட்டை இருக்கே, அதை கவனிக்கலையா, ம்ஹு…?” என விஜயேந்திரன் சாதாரணத் தோரணையில் சொன்னது கூட அவளுக்குத் அதட்டுவதாய் தெரிந்தது…
உள்ளுர பயம் இருந்த போதிலும் விஜயேந்திரன் சொன்னதை அவள் மூளை சிந்தித்தது… என்ன யோசித்தும் எங்கு தவறு இழைத்தாள் என்பது மட்டும் முகிலால் கண்டுபிடிக்க முடியவில்லை; அதைவிட அந்த சூழ்நிலையில் அவள் சிந்திக்கும் திறன் குறைந்து போனது என்பதே உண்மை…
“என்ன தெரியலையா, நான் வேணா சொல்லவா… ஒன்னா ரெண்டா எல்லாம் கூற ஒருநாள் போதுமா…?” என முகிலைச் சுற்றி வந்து வெறுப்பேத்த…
அவளோ கோபத்தைக்கூட காட்ட முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறாள்… குனிந்த தலை நிமிராமல் இருக்க…
“முதல் தப்பு என்னை பற்றித் தெரியாமல் திட்டம் போட்டது… என்னை என்ன நினைச்ச நீ? பொண்ணுனா வெறும் சதையை மட்டும் தேடும் மிருகம்னு நினைச்சியா…??” என்றவன் வார்த்தையில் தான் எத்தனை கோபம்… “இரண்டாவது, நான் உன்கிட்ட மயங்கிட்டேன்னு நினைச்சு நீ என்கிட்ட இருந்து டி.என்.ஏ மாதிரி எடுத்ததும் நானா எடுக்க விட்டது… மூன்றாவது, இதை எல்லாத்தையும் விடவும் பெரிய ஓட்டை, இத்தனை நாள் நீ கஷ்டப்பட்டு கட்டிக் காத்து வச்ச ரகசியத்தை உடைச்சுடுச்சு… என்ன என்னனு புரியலயா…?? என்னை கெடுத்து குழந்தையை குடுத்துட்டார் பூபதி ராஜா பேரன்னு நீ உருட்டுனியே, அந்த உருட்டு நேத்து நைட்டே நார் நாராவே கிழிஞ்சி போச்சு… அது எப்படிமா ஒரு குழந்தைக்கு தாய் கன்னியா இருக்க முடியும்…?? சுற்றுப்புறத்த ஒளிரச் செய்தபடி பிறந்த இயேசு நாதரின் தாய் மாரியா மாதாவுக்கு அப்புறம், அந்த அதிசயத்தை நீ தான் முகில் நிகழ்த்தி இருக்க…!!!” என்றதும் கன்றி சிவந்து விட்டது முகிலுக்கு…
அவ்வளவுதான், இனி அவ்வளவேதான், எல்லாம் முடிந்துவிட்டது. யாருக்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டாளோ, அவர்களின் எதிர்காலம் இனி கேள்விக்குறியாகிப் போனது. அவள் உள்ளம் தென்றலுக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தோல்வி அடைந்துவிட்டதை எண்ணி முகிலுக்குக் குமுறிக்கொண்டு வந்தது… தன் உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாமல், காலைத் தரையில் அழுந்தி ஊன்றி, கையை முட்டியில் இறுகி, உதட்டை கடித்து அடக்க முற்பட்டாலும் அவள் கண்களில் நீர் சொரிந்தது; கன்னத்தில் தவழ்ந்து அவளைப் பலவீனமடையச் செய்தது…
பளிங்கு போல் உணர்ச்சியைப் பிரதிபலிக்கும் அவள் முகத்தைப் பார்த்த விஜயனுக்கு அவள் பால் இரக்கம் சுரந்தது…
“என்னை நம்பி இருந்தா இந்த வேதனைக்கு அவசியமே இருந்திருக்காதே கண்ணு… என்ன அம்மா அப்படித் தான உன்னை கூப்பிடுவாங்க, அதை நான் இனி கடன் வாங்கிக்கிறேன்…!!” என்றவன் மேலே தொடர்ந்தான்…
இத்தனை தில்லுமுல்லு வேலை செஞ்சு கஷ்டப்படுறதுக்கு பதிலா… என்னை காதலிச்சு இருந்திருந்தா, இந்த உலகத்தையே உன் காலடியில வைக்கலனாலும், என் உள்ளத்தையே உன் காலடியில வச்சிருப்பேன்…!! (உலகம் பொதுப் சொத்துல அதான்)
என்ன கண்ணை உருட்டி உருட்டி காட்டுற உன்கிட்ட இருக்குறதுல அது ரெண்டுதான்டி பெருசு… சாஅ இருக்கு…!! என்று அவன் கூறிய தோணியில், தன்னை மீறியும் சிவப்பு கண்ட அந்நிலா முகத்தில் அது நாண சிவப்பா அல்லது கோவ சிவப்பா என்பது அவள் தான் அறிய வேண்டும்…
அதையும் அவன் தப்பு அர்த்தம் புரிந்து கொண்டு… “இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல கண்ணு, அத்தானின் பொறுப்பில் அத்தனையும் விட்டு நீ அத்தானை மட்டும் பார்த்துக்கோ… அத்தான் உனக்காக எல்லாத்தையும் பார்த்துக்குறேன்…!” என முகிலை அணைக்கப் போக…
“எனக்கு யாரோட உதவியும் தேவையில்லை… ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோங்க, உங்கள நான் எப்பவுமே காதலிக்கப் போறதில்லை, அது இந்த ஜென்மம் முழுக்க நடக்காத ஒரு காரியம், வீணா கனவு கண்டு ஏமாறாதீங்க…!!” என்றாள் ரோஷத்துடன்…
“அது என்ன கண்ணு, அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத போது ஜென்மம் முழுவதுக்கும் நீ சொல்ல முடியும்… எனக்கு என்னவோ நீ சொல்ற வேகத்தைப் பார்த்தா சீக்கிரம் என்னை காதலிக்க ஆரம்பிச்சுடுவ போல இருக்கே…?” என வார்த்தையால் சீண்டினான்…
“அது ஒரு காலமும் நடக்காது…!!” வெட்டினால் முகில் அட வார்த்தையற்றவள் பா…
“நடக்கும், நான் நடத்தி காட்டுவேன். இதோ கோபமாகப் பார்க்கிற கண்ணால என்னை காதல் ததும்பப் பார்க்க வைப்பேன்… என்னை பார்த்தாலே சுழிக்குற இந்த உதட்டால ஆசையா அத்தான், மாமான்னு கூப்பிட வைப்பேன்….!!” என்றபடி முகிலின் இதழை இழுத்துச் சுண்டி விட்டான்… “உன் பாரத்தை எல்லாம் என் நெஞ்சில் இறக்கி வைத்து என் ஆயுசுக்கும் உன்னைச் சுமப்பேன்…!!” என்றவன் முகிலை இழுத்து நெஞ்சோடு அணைக்க… அவள் இதயம் அவளுக்கு எதிராகச் செயல்படுவதை நினைத்து அதிர்ந்தவள் விஜயனைத் தள்ளிவிட்டு வேகமாக வெளியே செல்லப் பார்க்க…”
“ஒய் போறது தான் போற… அப்படியே மாமனுக்கு உன் கையாள நல்ல வெடக் கோழியா பிடிச்சு பிச்சுப் போட்டு குழம்பு வச்சுடு, ஆட்டு காலைச் சுட்டு சூப் வச்சிடு, ஈரலையும் மூளையையும் தனித்தனியா பொரிச்சு வச்சிடு, நண்டு ரசம் வச்சிடு, காடை முட்டை அவிச்சு வச்சிடு…!!” என விஜயேந்திரன் அடுக்கு அடுக்காக அசைவ விருந்து பட்டியலிட…”
அப்புறம் பாம்புசூம்ப, பல்லி கடையல் எல்லாம் பண்ணி வைக்கவா….??
எனது துடுக்காகக் கேட்டுவிட்டு நாவைக் கடிக்க…
“என்னடி நக்கலா? நேத்து நைட் நீ ரொம்ப சுமாராதான் செஞ்ச… செய்யத் தெரியாமல் செஞ்சு விட்டு எடக்கூடாமா முறுக்கிக்கிட்டு நிக்குது பார்! இன்னைக்கு ஒரு புடி புடிச்சிட்டு வந்து நைட்க்கு காட்டுறேன், அப்போ தெரியும் ஐயாவோட செயல் திறன் என்னனு…!!”
என விஜயேந்திரன் மீசை முறுக்கிச் சொன்னதினால் முகிலுக்குக் கிலி பிடித்தது.
“ஆ, ஒன்னும் செய்யாமல் நேத்து செஞ்சதுக்கே குறுக்குக் கிடந்து இந்த வலி வலிக்குது. இதுல சூடேத்தி மூடேத்தி வந்து செஞ்சா நான் காலி… நைட் வந்தா தானா முகிலு தப்பிச்சு எப்படியாவது ஓடிடுவான், சிக்கினா சேதாரம் அதிகம்…!!”
என அவள் மனதில் அலறிக்கொண்டே வெளியே ஓட, அவளைப் பின் தொடர்ந்தது விஜயனின் வெடி சிரிப்புச் சத்தம்…
தப்பித்தோம் பிழைத்தோம் என புறத்தலைக்கு ஓடிய முகில், அங்கு ரஞ்சனாவும் குறிஞ்சியும் தூண் பக்கத்தில் கன்னத்தில் கை வைத்து ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்து இருந்ததைக் கண்டான்… அவர்கள் நடுவில் வந்து அமர்ந்த முகிலும் அவர்களைப் போல் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொண்டு, ஜோதியில் ஐக்கியம் ஆகினால்…
அப்படி கன்னத்தில் கை வைக்கும் அளவுக்கு எந்தக் கப்பல் மூழ்கியது என்று அடுத்த எபிசோடில் பார்ப்போம்…

