முகிலே!! உன் முகவரி என்ன-9

“எது சீப்பா…??” என்று பெரும் கூச்சலிட்டான் வீர்.

“இந்தச் சீப்பைத் திருடுவா அந்தப் புள்ளை இவ்வளவு தூரம் வந்துச்சு…?” என நூறாவது முறையாகக் கேட்டிருப்பான் வீர், தன் கண் முன்னால் இருக்கும் பொருளை நம்ப முடியாமல்…

“ஆமாடா லூசு, எத்தனை தடவை தான் கேட்ப? ச்சே! காது வலிக்குது…!!” என காதை குடைந்தான் மகேன்…

“இல்லடா, அப்படி என்ன இந்தச் சீப்புல இருக்குன்னே புரியலையே! ஒருவேளை அந்த காலத்துல ராஜாக்கள் எல்லாம் யூஸ் பண்ணுவாங்களே, அந்தச் சீப்பா இல்லை தங்கச் சீப்பா இருக்குமோ… வித்தா பல கோடி தேறுமா…??” எனத் தன் சகோதரன் கையில் இருந்த சீப்பை வாங்கிச் சோதித்துக் கொண்டு இருந்தான்…

“எது இந்த இத்துப்போன வேப்பங்குச்சிச் சீப்பு உனக்கு பல கோடியா…?” (ஒரு கோடியப்ப ஒரு கோடி)…

“அப்போ கோடி இல்லையாடா நல்லவனே…!!” எனப் பல கோடி தெரு கோடி ஆன வருத்தத்தில் கேட்டுக்கொண்டிருக்க…

“அடேய் வேணாம், என் வாயில ஏதாவது வந்துடப் போகுது! நானே எதுக்கு இந்தச் சீப்பத் திருட வந்தேன்னு தெரியாம குழம்பிப் போய் கடுப்புல இருக்கேன்…??”

“நான் மட்டும் என்ன புஷ்பா புருஷனையா தேடிட்டு இருந்தேன்… நானும் சீப்பு மேட்டர் தாண்டி யோசிச்சுட்டு இருக்கேன்…!!” என வீர் தலையைத் தட்டி யோசித்ததில், அதில் இருந்த களிமண் சிதறிப் போனது…

சாணக்கியருக்கே டஃப் கொடுக்கும்படியாகச் சிந்தித்து நின்ற சகோதரர்களைச் சிறு புன்னகையுடன் பார்த்தான் விஜயேந்திரன்…

“மகேன், வீரை விடு, உனக்கே கூடவா ஏன் அவள் சீப்பு எடுக்க வந்தான்னு புரியல…??”

“இல்லடா பெரியவனே…?” என அப்போதும் விளங்காமலே பார்த்துக் கொண்டிருந்தான் மகேன்…

“ஒரு மனுஷனோட முடி, நகம், எச்சில் இதை வச்சு அவனோட பரம்பரையே கண்டுபிடிச்சிடலாம்… அதாவது அவன் யாரோட புள்ளைங்கிறது முதல் அவன் புள்ளை யாருங்குறது வரை ஒரு டி.என்.ஏ டெஸ்ட் மூலம் கண்டுபிடிச்சிடலாம்… இப்போவாது புரியுதா மகேன்…?” என அவனைப் பார்க்க…

ஏதோ விளங்குவது போல் இருந்தது மகேனுக்கு… ஆனால் ஆர்னோல்ட் ஐயாசாமிக்கோ அப்பவும் விளங்கவில்லை…

“அது சரிடா பெரியவனே, இதுக்கும் அந்தப் புள்ளச் சீப்பைத் திருடுனதுக்கும் என்ன சம்பந்தம்…?” என வாய்விட்டு கேட்டு வைக்க…

“டேய்…!!!” என விஜயேந்திரன் பல்லை கடிக்க…

“ஏண்டா அனகொண்ட மண்டையா, வெறும் பச்ச முட்டைய ஒடச்சு குடிச்சு உடம்பை வளர்த்தா மட்டும் போதாது, கொஞ்சமாச்சும் அறிவையும் வளர்த்துக்கணும்… அந்தச் சீப்புல என்ன இருக்கும்? தலை முடியா…??”

“எது முடியா…??” என வீர்

“ஆமண்டா தடியா…!!” (டைமிங்கில் ரைமிங்)

“அது போதாதா? நமக்கும் அந்த குழந்தைக்கும் என்ன உறவுனு தெரிஞ்சுக்க… அதுக்குத்தான் சீப்பை எடுக்க வந்து இருக்கா… அதை வச்சு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கலாமே…!!” என மகேன் புளி போட்டு விளக்கு விளக்கு…

“என்னடா சொல்ற? அப்படினா அந்த குழந்தைக்கு உண்மையாவே அப்பா இந்த வீட்டு ஆள் தானா…??” என வீர்

“அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு…” என மகேன்…

“சந்தேகமே வேணாம், அவள் இந்த அளவுக்கு உறுதியா இருக்கும் போது ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அந்த குழந்தை இந்த வீட்டோட வாரிசுதான்னு… ஒழுங்கா எதையும் மறைக்காம உண்மை சொல்லிடுங்க, அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது…?” என விஜயேந்திரன் தமையர்களைப் பார்த்துச் சந்தேகிக்க…

“எங்களையே சந்தேகப்படுகிறாயா பெரியவனே… நாங்க உன் கூடப் பிறந்தவங்கடா…?” மகேன்

“அதனால தான் விட்டு வச்சிருக்கேன்… வேற எவனாவது இருந்தா நான் விசாரிக்கும் முறையே வேறயா இருக்கும்… நாளைக்கு ஒரு நாள் தான் கெடு, நீங்களா உண்மையச் சொல்லலன்னா அப்புறம் நானா சொல்ல வைப்பேன்…!!” என எச்சரித்துச் சென்ற விஜயனைச் செய்வதறியாது திகைத்துப் பார்த்து நின்றனர்…

“ஏன்டா நல்லவனே, நம்மள மட்டும் இந்த உலகம் நம்பாம சந்தேகமாவே பாக்குதே ஏன்…?” என வீர் அப்பாவியாகக் கேட்டு வைக்க…

“நம்மளன்னு என்னைக்கூடச் சேர்க்காத… என் சந்தேகம் எல்லாம் உன் மேல தான்… சந்தேகம் கூட இல்லை, நீ தான் அந்த குழந்தையோட அப்பான்னு நான் நிச்சயம் சொல்வேன்…!!” என மகேன் உறுதியாகச் சொல்ல…

“அட நாசமத்துப் போறவனே… நானே எனக்கு ஒரு கிளி மாதிரி இல்லனாலும் கருவாடு மாதிரியாவது ஒரு பொண்ணு கிடைக்காதானு ஏங்கிட்டு இருக்கேன்… இதுல நீ வேற அந்த புள்ளையப் பார்த்தா மயில் மாதிரி இருக்குன்னு சொன்னா, அந்தப் புள்ளை என்னைய லவ் பண்ணிச்சுன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு? அதைவிட அந்தப் பிள்ளை மாதிரி பொண்ணு கிடைச்சு விட்டுப் போக நான் என்ன டொமட்டோவா… போடா…?” என வீர் அலுத்துக்கொள்ள…

“அதுவும் சரிதான், உன்னை லவ் பண்றதும் அந்தப் பிள்ளை ரயில் தண்டவாளத்துல தலையை விடுறதும் ஒன்னுதான்…!” மகேன் என காலை வாரினான்…

“அடிங் ஃபாரின்ல படிச்சிட்டு வந்தே பகுமானமா… ஆமா, நீ ஏன் அந்த பிள்ளைக்கு அப்பாவா இருக்க கூடாது? நானும் சந்தேகம் எல்லாம் படல, அந்த குழந்தை லைட்டா உன் ஜாடைல இருந்துச்சு, கான்பார்ம் பண்ணிட்டேன்…!” என வீர்…

“போடா காட்டுப் பன்னி! ஒரு பொண்ண லவ் பண்ணா அதைச் சொல்ற அளவுக்கு எனக்குத் தைரியம் இருக்கு… அதோட என்ன நம்பி வந்தவள ஏமாத்துற அளவுக்கு நான் ஒன்னும் மனசாட்சி இல்லாத மிருகம் இல்லை…!” மகேன்…

“ஓ, அப்போ நீயும் இல்லை, நானும் இல்லை. அப்போ கண்டிப்பா பெரியவனா தான் இருப்பான், ஏன்னா அவன் நடவடிக்கை தான் மர்மமாவே இருக்கு…!” என வீர் அவன் சந்தேகத்தை உடைக்க…

“ப்ச், சும்மா கண்டதையும் உளறாதே, அவன் கண்டிப்பா அப்படி பண்ணி இருக்க மாட்டான்…!” மகேந்திரன்

“ஏன் மாட்டான்? எதை வச்சு சொல்ற? நிச்சயம் அவன் தான்னு என் உள்மனசு சொல்லுது…!” என வீர் ஏட்டிக்கு போட்டியாகப் பேச…

“இருக்காது, இருக்காதுன்னு சொல்றேன்ல விஜயேந்திரா, இன்னொரு பொண்ணுக்கு மனசாலக் கூட துரோகம் பண்ண மாட்டான்…!” என அடித்துக் கூறினான் மகேன்…

“இன்னொரு பொண்ணா? அப்படினா அவனுக்கு ஏற்கனவே வேற ஒரு பொண்ணு கூட லவ்வா…? அந்தப் பொண்ணு எங்க…? இவனை ஏமாத்திடுச்சா…? ஓ, அதனால தான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டுத் திரியுறானா…?” என அவனே கேள்வி, அவனே பதில்…

“அதப்பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது… அவனுக்கு ஒரு பொண்ணு பிடிச்சிருந்தது, அவ்வளவு தான் தெரியும். அந்த பொண்ணு யாரு, என்னாச்சுன்னு எதுவும் தெரியாது… ஆனால் விஜயனின் நடவடிக்கை வச்சு அந்த பொண்ணு கிடைக்கலன்னு மட்டும் யூகித்தேன்…??” என்றான் மகேன்.

“ஓ, அவ்வளவு நடந்து இருக்கா…?? கூடவே இருக்குற எனக்குத் தெரியல, கடல் தாண்டி இருக்குற உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு??” என வீர் பொறாமை கொள்ள…

“கூடவே இருக்குறது முக்கியம் இல்லடா, எங்க இருந்தாலும் சுத்தி இருக்கிறவங்க மேல ஒரு கண்ணு இருக்கணும்…??” மகேந்திரன்.

“ஓகே, இனி மூணு கண்ணு போட்டுப் பார்க்குறேன்… ஆனா எனக்கு ஒரு சந்தேகம்…?” வீர்.

“இன்னும் என்னடா…??” மகேன் சலித்துக்கொண்டான்… இவனுக்கு பதில் சொல்லிச் சொல்லியே கண்ணு கட்டுதே.

“ஒருவேளை இந்த பொண்ணு தான் நம்ம விஜயேந்திரன் காதலிச்ச பொண்ணா இருக்குமோ??” வீர் (எய்யா ராசா, எப்படிப்பா இப்படி!)

“ப்ச், லூசு மாதிரி பேசாதடா, அப்படியா இருந்தா விஜயேந்திரன் அந்தப் பொண்ண ஏன் இவ்வளவு தூரம் வர விட்டு வைக்கப் போறான்… இல்லை இப்படி அந்தப் பொண்ணை விரட்டப் போறான்??” மகேன் பாயிண்டாகப் பேச.

“ம்ம், அதுவும் இருக்குல… அப்போ யார் தாண்டா அந்த குழந்தைக்கு அப்பா…??” வீர்.

“இப்படியே விடிய விடிய கதை கேட்டு விடிஞ்சு கேட்டா, அனுஷ்கா சர்மாவும் அனுஷ்கா செட்டியும் அக்கா தங்கச்சின்னு சொல்லுவாங்க போல… டேய் லூசு, அந்தக் குழந்தைக்கு அப்பா யாருன்னு அந்தப் பொண்ணு தான் சொல்லணும்… ஆனா இவர் தான் என்னை கெடுத்தார்னு நேரடியா சொல்லாம, ஏன் அந்தப் பொண்ணு நம்ம மூணு பேரையும் வம்புல இழுத்து விடணும்னு தான் எனக்குப் புரியல…??” என மகேன் தெளிவாக யோசிக்க…

“ஆமாடா, எனக்கே சஸ்பென்ஸ் தாங்கல! பேசாம நான் போய் அந்தப் பொண்ணு கிட்டயே கேட்டு வரவா…?” என வாய் பிளந்து நின்றான் வீர்… (அவ்வளவு ஆர்வம்!)

“போடி போ போய் கேளு… ‘வாங்க ராசா, உங்ககிட்ட உண்மை சொல்லத்தான் காத்துட்டு இருக்கேன்’னு சொல்லுவாங்கனு நினைச்சியா? போனா மொத்தப் பழியையும் உன் மேல போட்டு சோழிய முடிச்சு விட்ருவாங்கடி…!!” என மகேன்…

“ஆமால่ะ, இப்போ என்னடா பண்றது…?” வீர்…

“தெரியல… அந்தப் பொண்ணு எந்த அளவுக்கு உண்மை சொல்லுதுன்னே தெரியல… ஆனா அந்தப் பெண் பொய்யில்ல, நிச்சயம் அவங்ககிட்ட ஏதோ ரகசியம் இருக்கு…!” என மகேன்…

“அது என்ன பெர்முடா ரகசியமோ? போ, நம்ம தலை தப்பிச்சா போதும்னு இருக்கு… இன்னும் ஒரு நாள் தான் இருக்கு, என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல…!” வீர் புலம்பல்.

“எது நடந்தாலும் விஜயேந்திரன் பார்த்துப்பான்… அவன் கூட இருந்தாலே போதும்” என மகேன் திட்டவட்டமாக கூறிவிட்டான்…

மூடிய ரகசியம் எதுவாயினும் காலம் பதில் சொல்லும், அதுவரை காத்திருக்கத்தான் வேண்டுமோ…? இல்லையென்றால் நீ சீக்கிரமே சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாய், அதான ஈஈஈ அதே தான்!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top