உண்மை அறிந்த பின் மற்றவர்களை விடவும் பெரிதாக ஏமாந்தது சகுந்தலா தான்… அதை அவர் மறையாமல் காட்டிவிட்டார்…
“உங்க எல்லாரையும் நான் நம்பினதுக்கு எனக்கு கிறுக்கச்சிப் பட்டம் கட்டி விட்டுட்டீங்க… இனி எல்லாம் நீங்க உங்க விருப்பப்படியே செய்யுங்கள். நான் தான் என் பிள்ளை குட்டிங்க நல்லா இருக்கணும், அது இதுனு கேனச்சி மாதிரி சுத்திட்டு இருந்தேன்… போங்கப்பா, போய் உங்க வேலைய பாருங்க…!” என்றவருக்கு உண்மையான அன்பு வைத்த இடத்திலிருந்து வரும் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…
முகில் விக்கித்து போய் நிற்க… யாரும் அவருக்குச் சமாதானம் கூற முயலவில்லை… அவர்கள் செய்த தவறு என்று உணர்ந்ததால் அமைதியாக நின்றனர்…
ஆனால் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது போல் இரவு முழுவதும் முகிலையும் அவளது செயலையும் நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு, அவளது செய்கையில் இருந்த நியாயம் புரிந்ததும் கோபம் அனைத்தும் மென் பனியின் மேல் விழுந்த சூரிய வெளிச்சம் போல் கரைந்து போனது…
நடந்த விடயத்தைக் கேள்விப்பட்ட தென்றல் முதல் வேலையாகச் சென்று சகுந்தலாவிடம் மன்னிப்பு கேட்டாள்…
“தயவு செஞ்சு எனக்காக முகில மன்னிச்சுக்கோங்க அம்மா… அவ அம்மா இல்லாமல் பிள்ளை என்ன செய்கிறோம் என்று தெரியாமல் என் மேல உள்ள பாசத்துல உங்க கிட்ட பொய் சொல்லிட்டா, அதுக்காக கெட்ட பொண்ணுன்னு வெறுத்து ஒதுக்கிடாதீங்கமா…!!” எனத் தாய் ஸ்தானத்தில் இருந்து தங்கைக்காக மன்னிப்பு வேண்டினால்…
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லமா, என் மருமகளைப் பற்றி எனக்குத் தெரியும்… என்கிட்ட உண்மைய சொல்லிருக்கலாம் என்கிற மன வருத்தத்தைத் தவிர வேற ஒண்ணுமில்ல… இதுல என் மருமகள வெறுத்து ஒதுக்குறதுக்கு என்ன இருக்கு? அவ அக்கா மேல இருக்கிற பாசத்துல தான் அப்படி செஞ்சா, அதுக்கு நான் பெருமை தான் படணும்…!!” என்றவரைப் பார்த்து ஒரு பக்கம் நிம்மதியாகவும், மறுபக்கம் சரி பொறாமையும் எட்டிப் பார்த்தது தென்றலுக்கு; தனக்கு இப்படி ஒரு மாமியார் அமையவில்லையே என்று… நானே கொண்டது தானே… என கழிவிரக்கம் தோன்றியது…
தன் வாழ்வை நினைத்துப் பார்த்த மாத்திரத்திலே தென்றலின் முகம் கசங்கியது… இதயமற்றவர்களிடமிருந்து உண்மையான அன்பை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம்… என நொந்து கொண்டவள்… “வேணாம் மனமே, பழையதை நினைத்து ரணமாக்கிக் கொள்ளாதே” எனத் தனக்குத்தானே சமாதானம் கூறியவள்…
“ரொம்ப நன்றிங்க, இப்போதான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு… அப்புறம் நானும் பிள்ளையும் இன்னைக்கே புறப்படுறோம் மா…!!” என்றாள் தென்றல்…
அதுவரை அங்கு பார்வையாளராக நின்று கொண்டு இருந்தான் முகில்… “அக்கா, என்ன சொல்ற? எங்க போகப் போற நீ? அதுவும் இப்போதான் நீ ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து இருக்க, இந்த உடம்ப வச்சுக்கிட்டு குழந்தையைத் தூக்கிக்கிட்டு எங்க போவ…?” எனப் படபடப்புடன்…
“பயப்படாத முகில், முன்ன மாதிரி நான் எந்தத் தப்பான முடிவுக்குப் போக மாட்டேன்… அப்போ எனக்கு வாழ்க்கை மேல ஒரு பெரிய பயம் இருந்துச்சு… சாவைப் பார்த்துட்டு வந்ததாலயே என்னவோ இப்ப எனக்கு அந்த பயம் என்பதே சுத்தமா இல்லை… அதுவும் இல்லாம என் கையில படிப்பு இருக்கு, என்னையும் பிள்ளையையும் அது காப்பாற்றும்…!!” என்றாள் திடமாக…
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீ இங்கயே என் கூடவே இரு… சங்கடமா இருந்தா செய்யற வேலையை இங்கே என் கூட இருந்தே செய், உன்னை யாரும் தடுக்க மாட்டாங்க…!!” முகிலினி…
“அதெல்லாம் வாதத்துக்குச் சரியா இருந்தாலும் வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராது, நாங்க கிளம்புறதுதான் சரி…!!” தென்றலும் விடாப்பிடியாக இருந்தால்,
“ஏன்மா தென்றல் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? பச்சப் பிள்ளை வச்சுட்டு நீ எங்க போவ? உனக்கு இங்கே என்னமா குறை? என்கிட்ட சொல்லு, முகில் மட்டும் இல்ல, நீ எனக்கு ஒரு பொண்ணு தான்…!!”
“அச்சச்சோ, உங்க கவனிப்புல குறை இருக்குன்னு சொல்றான்னா அவன் கண்ணு இருந்தும் குருடன் தான் அம்மா… நான் இங்க இருந்து போறதுதான் எனக்கு எல்லா வகையிலும் நல்லது, தயவு செஞ்சு என்னைத் தடுக்காதீங்க…!!”
என யார் தடுத்தும் நிற்காமல் பிடிவாதமாக கிளம்பியவள், அனைவரிடமும் முறையாக விடைபெற்றுச் செல்லும் சமயம் முகிலிடம் வந்தவள்…
அவளை கட்டிப்பிடித்து அழுதுவிட்டு, அவள் கையில் ஒரு சிறு துணி முடிச்சை கொடுத்தாள்… அதில் ஒரு ஜோடி வைரத் தோடும் ஒரு வைர மூக்குத்தியும் இருந்தது…
“அக்கா…??”
“இது நம்ம அம்மாவோடது, முகில் உனக்கு கொடுக்கிறதுக்காக பத்திரமா வச்சிருந்தேன்… இது என்கிட்ட இருக்கிறத விட உன் கிட்ட இருக்கிறது தான் பெருமை, மறுப்பு சொல்லாம வச்சிக்கோ, நான் வரேன்…!!” என மீண்டும் தங்கையை அணைத்துவிட்டு விடைபெற…
“ஏன்மா, குழந்தையை உன்கூட கூட்டிட்டு போய் தான் ஆகணுமா… அவன் மேல பாசம் வச்சுட்டு பிரியறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… கேட்க கூடாதது தான், ஆனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, அவனை கொஞ்சம் நாள் இங்க விட்டுட்டு போக கூடாதா…??” என தவிப்புடன் கேட்டார். சகுந்தலா, பூபதி குடும்பத்தின் வாரிசு என முதன்முதலாக வந்தது அவன் தானே…
“அதுகில்லமா, எனக்கு என்று இந்த பூமியில் இருக்கிற இரண்டே உறவு இவனும் முகிலும் மட்டும்தான்… அதுல ஒன்னை உங்க கிட்ட தான் விட்டுட்டு போறேன்…!!!” என முகிலைச் சொன்னவள்… “இவன் முகத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு வாழனும் என்கிற எண்ணமே வந்திருக்கு… உங்களுக்கு பேரந்தானே வேணும், உங்க மருமக கிட்ட சொல்லி நிறைய பெத்து தர சொல்லங்க…??” என சிரித்தவள்…
பிடிவாதமாகவே கிளம்பிச் சென்றாள்… அப்போது வெளியே சென்று கொண்டிருந்த விஜயேந்திரன் அவர்கள், எதிராக வந்தவளையும் தென்றலையும் குழந்தையையும் கேள்வியாகப் பார்க்க…
“எவ்வளவு எடுத்துச் சொல்லியும் பிடிவாதமா நான் ஊருக்குப் போறேன்னு கிளம்பிடுச்சு பா…!!” எனத் தாங்கலாகவே கூறினார் சகுந்தலா…
அவன் எதுவும் பேசாமல் குழந்தைக்குக் கையை நீட்ட, குழந்தையும் அவன் முகத்தைப் பார்த்துப் பொக்கை வாய் திறக்கச் சிரித்தபடி அவனிடம் தாவ, குழந்தையை விஜயனிடம் கொடுத்தாள்…
“அவன் பிள்ளையை கொஞ்சம் விட்டுத் தருவான்” என்று எதிர்பார்த்துத் தென்றல் நிற்க… குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்…
அதிர்ந்த தென்றல் அவன் பின்னோடு சென்று குழந்தையைக் கேட்க…
“இருக்கட்டும், எங்க போறீங்க…??” – விஜயேந்திரன்
“தெரியாது…!!” – தென்றல்…
“ஆனால் இனி இங்க இருக்கவும் முடியாதே…??!” எனத் தவிப்புடன் கூறினாள்…
“வெளியே போய் என்ன செய்யப் போறீங்க…??”
“வீடு தேடணும்… வேலை தேடணும்… இவனை நல்லபடியா வளர்க்கணும்…!!” என்பதே லட்சியம் போல் கூறினாள்…
“அப்போ உங்களுக்கு…?? எவனோ ஒருத்தன் ஏமாத்திட்டான்னு மீதி இருக்கிற வாழ்க்கையை நீங்களே அழிச்சிக்கப் போறீங்களா…??” – விஜயேந்திரன்
“எனக்கு என் குழந்தை மட்டும் போதும், வாழ்க்கை முழுமைக்கும் இனி அவனே…!!”
என்றவளின் கண்ணில் கண்ணீர்… ஆதரவாக மகன் தலையைத் கோதினாள்…
“போதாதே, அவனுக்கு அம்மாவோட அன்பு மட்டும் போதாது, அப்பாவோட அரவணைப்பும் தேவைப்படுது, அதை உங்களால் கொடுக்க முடியுமா…??”
“முடியும் என்னால…!!” எனத் தொடங்கியவளை இடையிட்டான் விஜயேந்திரன்…
“தனி ஒரு பெண்ணாக நின்று குழந்தை வளர்ப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல… நிச்சயம் உங்களுக்கும் அவனுக்கும் ஒரு துணை வேண்டும்… சொல்லுங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்…?” விஜயேந்திரன்…
“புரியல…??” தென்றல்
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன்…!!” விஜயேந்திரன்
“வேணாமே, ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்…!!” தென்றல்…
“வர்றவன் உங்க காயத்துக்கு மருந்தா கூட அமையலாம் இல்லயா =…?” வாதத்தை முன்னெடுத்தான் விஜயேந்திரன்…
“குழந்தையுடன் இருக்கிற பெண்ணை ஏத்துக்கிற அளவுக்கு இந்தச் சமுதாயத்தில் அவ்வளவு பெரிய மனுஷன் கிடையாது…!” விதண்டாவாதம் செய்தாள் தென்றல்…
“அப்படிப் பெரிய மனசோட ஒருத்தன் வந்து உங்க முன்னாடி வந்து நின்னா, அவன ஏத்துப்பீங்களா…?” விஜயேந்திரன்
“முடியாது…!” முடிவாகவே…
“அப்ப குழந்தையை உங்க கூட அனுப்ப முடியாது…!!!” விஜயனும் தெளிவாகவே
“ஏன் இந்த தேவை இல்லாத வேலை
“தேவை இருக்கிறதுனால தான் கேக்குறேன்… நீங்க எனக்கு ஒரு வாக்கு கொடுத்தீங்க, குழந்தையை காப்பாத்தி தந்தா நான் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று, இப்போ அந்த வாக்க நீங்களே தவறுதீங்க…!!”
சரியான இடத்தில் விஜயத்தின் தென்றலைத் தொடவும் விக்கிப் போய் நின்றால்…
தன் நிலையை புரிந்து கொள்ளாமல் வதைக்கிறார்கள் என்று எண்ணி… “முதல்ல அப்படி ஒரு மாப்பிள்ளை கிடைச்சா தானே கல்யாணத்தை பத்தி யோசிக்க…??” என அவனை மடக்கி விட்டதாக எண்ணிப் பேசினால்…
“மாப்பிள்ளை எப்பவோ தயார்…!!” என்றவன் அவள் முன் கொண்டு வந்து நின்றவனைப் பார்த்து அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள் தென்றல்… அது சாட்சாத் நம் வீரேந்திரனே தான்…
குறிஞ்சிக்கு வெளியில் இருந்து நல்ல வரன் வந்திருப்பதாகக் கூற…
அவளோ பெரியவர்கள் விருப்பம் தான் தன் விருப்பம் என்று கூறி விட்டு ஒதுங்கிக்கொள்ள… அவளது திருமண வேலைகள் தடபுடலாக நடந்தன; அவளோ யாருக்கோ வந்து விருந்தெனச் சுற்றி வந்தாள்…
குறிஞ்சிக்கு கல்யாணம், சீர் வரிசை பட்டு, துணி, நகை எனப் பேசப் பேச மகேந்திரன் மனம் ரணமாகத் துடித்தது… இந்த வலியைத் தானே அவளும் அனுபவித்து இருப்பாள் என்று நினைக்கையில் தன் வலியை மென்று விழுங்கினான்…
தென்றல் மற்றும் குறிஞ்சியின் திருமண ஏற்பாடுகள் படுச்ஜோராக நடந்தன… அதை கண்ட மகேந்திரனின் உள்ளம் இரத்தக் கண்ணீர் வடித்தது… நாளை அவளுக்குத் திருமணம் நடந்து இன்னொருவன் கையில் குறிஞ்சியை காண அவனால் முடியுமா என்கிற நினைப்பே அருவெறுப்பைத் தந்தது…
இரவுகள் முழுவதும் தூக்கமின்றி அவள் நினைவுகளில் துடிக்க வைக்க… நடையோ நடன்னு நடந்து அந்த சந்திரா மண்டலம் வர போய் வந்து யோசிச்சு எடுத்த முடிவு தான், குறிஞ்சியை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பது…
இப்பொழுதும் மேடை வரை வந்து திருமணம் நின்றால் மட்டும் அவர்களின் மானம் போகாதா என்பதை மகேந்திரன் இப்போது சிந்திக்கவே இல்லை… அவன் எண்ணம் முழுக்க குறிஞ்சி ஆட்சி மட்டுமே… இதை முன்னாடியே யோசித்து இருக்கலாம்… ஹும்! விதி யாரை விட்டது? தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாகிவிட்டது மகேந்திரனுடையது…
பூபதி இல்லமே மலர் அலங்காரத்தில் மிதப்பாக நின்றது… வாழை மர அலங்காரம், மாவிலைத் தோரணம் என மங்கள அலங்காரத்தில் சர்வ செருக்குடன் மிளிர்ந்தது அந்த மாளிகை…
உற்றார் உறவினர் ஊராரால் நிரம்பி வழிந்தது… வருவோர் போவோர் அனைவர்க்கும் சௌஜன்யமாக விருந்து நடைபெற்று கொண்டு இருந்தது…
ஒரே போல் இரு மேடை அமைத்து அதில் மணமகள்களும் மணமகன்களும் அமர வைத்து முறையான சடங்குகள் நடந்தேறின; மங்கள நாணல்களை மணமகள் கழுத்தில் கட்டினர் அவர்தம் இணைகள்…
தந்தையோடு வந்த ரஞ்சனாவிற்கு வீரின் இந்த செயல் பேரதிர்ச்சியைத் தந்து, அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்…
காலத்தே செய்யாத பயிர் மட்டுமல்ல, காலத்தே சொல்லாத காதலும் வீண் தான்…

