எழிலாக விடியந்தது விஜயனக்கு அன்றைய நாள்; அவன் அழகு மனைவியின் கோல இடை தரிசனத்தால்… எது அழகு…?? மலை மகள் வளைவு அழகா இல்லை அவன் மனைவியின் நூலிடை அழகா… எதுவோ கவனமாக இல்லாவிடில் இரண்டுமே குழியில் தள்ளிவிடும் டபுள் மீனிங்..
பூனை முடிகள் சூழ்ந்த அவள் படர்ந்த வயிற்றில் கலாகாய் அளவில் தொப்புள் ஆணவனைச் சுண்டி இழுத்தது. “என் மென்மையை தீண்டிச் செல்லடா…!” என மீசை துடிக்கும் ஆசையில் நீண்ட கையை சிரமத்துடன் அடக்குவதற்கே பெரும் பாடு பட்டான் விஜயேந்திரன்… நிதம் நிதம் புது புது வழிகளில் அவனை இம்சை செய்யும் அழகு ராட்சசியிடம் இருந்து அவன் ஆண்மையை அடக்கி வைக்க வழி தெரியாமல் தலைதெறிக்க ஓடத் தொடங்கியிருந்தான்… இளமையும் அழகும் கூடி நிற்கும் மனைவியை காதல் அன்றித் தொட அவனுக்கு விருப்பம் இல்லை… அதற்கே அவன் படும் பாடு இந்திரனே இரக்கம் கொள்வான்…
அப்போ கடைசி வர விஜயேந்திரன் சன்னியாசிதானா? நீங்க கேக்குறது புரியுது… அப்பேர்ப்பட்ட விசுவாமித்திரரே மேனகா கிட்ட விழும்போது… நம்ம விஜயனை விட்டு வைப்போமா…??
பதினேழு முறை படையெடுத்த முகலாய பேரரசர் போல் விடாது தன் கணவன் மீது போர் தொடுத்தால் முகிலினி, அதுவும் காதல் போர்… அவள் வேண்டும் என்றே தானே விஜயேந்திரன் காண வேண்டி சேலையை முகிழ்த்தி வளைந்து நெளிந்து அவள் அழகை எடுப்பாகத் தூக்கி காட்டி அவனைத் துவம்சம் செய்யக் காத்திருக்கிறாள்…
அவனுக்கு அவளிடம் நம்பிக்கையுடன் கூடிய காதல் வேண்டும், இவளுக்கு அவனிடம் காதலின்றி எத்தனையோ திருமணங்கள் நடக்கின்றன; அவர்கள் எல்லாம் நம்பிக்கை காதல் வரும் வரையா காத்திருக்கிறார்கள்… வாழ ஆரம்பித்தால் எல்லாம் சரியாகிப் போகும் என்கிற எண்ணம்… இருவரையும் நாம் எந்த விதத்தில் குறை சொல்ல…??
காலை எழும்ந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை முகில் சமத்து மனைவியாக தன் மணாளனை ஒட்டி கொண்டே அலைவாள்; அவனுக்குத் தேவையானது அனைத்தையும் இவளே கவனிப்பாள், அதற்கெல்லாம் அவன் தடை விதிக்கவில்லை; அவன் தடை எல்லாம் இரவில் தடம் புரள வைக்கும் அவளோடான தனிமை தான்…
இன்றும் அப்படியே காலை அறையை விட்டுப் போன விஜயனை டைனிங் டேபிளில் வைத்து மடக்கிப் பிடித்து விட்டாள்… இழுத்துச் சொருகுனா சேலையில் அவனை முடிஞ்சி வைக்கும் எண்ணமோ…?? பளிங்கு இடை தெரிய அவள் அங்கம் விஜயேந்திரன் கைகளில் உரசிட பரிமாறியவளை… பத்து பேர் மத்தியில் வைத்து என்ன சொல்ல முடியும்… பல்லை கடிப்பதை தவிர அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்து தானே அவள் அவன் இளமையை வதைக்கிறாள்… அவள் ஒன்றை மறந்து விட்டாள், பற்றிக்கொள்ளும் வரை தான் காதல் பச்சைத் தண்ணீர் பற்றி கொண்டு எரியும் போது காட்டுத் தீயாக மாறி அவளையே இறையாகக் கேட்கும் என்பது… சிக்கினால் சேதாரம் நிச்சயம் உண்டு என்பதை அறியாமல் அவள்…
காலையிலே ரத்தினவேல் ராஜவேலுவையும் மருமகன் ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு பக்கத்து ஊரில் முக்கியமான பஞ்சாயத்துக்குக் கிளம்பிச் சென்று விட, உணவு மேஜையில் அவ்வீட்டின் இளையவர்கள் மட்டுமே இருந்தனர். விஜயனுக்கு முகில் பரிமாற… மகேனுக்கு வீர்க்கும் சகுந்தலா பரிமாறிட… ரஞ்சனுக்கோ குறிஞ்சியும் மயிலும் போட்டி போட்டுக்கொண்டு பரிமாறினர்…
சொல்லவும் வேண்டுமா….!! பொறாமைத் தீயில் பொசுங்கிப் போயிருந்தான் வீர்…
பாவி பய என்னமா வாழுறான்… சத்தியமா சொல்றேன் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா, நல்லாவே இருக்க மாட்ட. ஒன்னுக்கு ஒன்பது பொண்டாட்டி கட்டி, முதல் இரவுல உனக்கு பவர் கட் ஆகி உனக்கு பலமானத நடக்காமலே செத்து போவ. என் சாபம் உன்னை சும்மா விடாதுடா…!!” என உண்மையாகவே சாபமே விடத் தெரியாத நயண்டி கிட்ஸ் வீர் புளு புளுத்து கொண்டே சாப்பிட…
“என்ன இங்க நம்மள தாண்டி கருகின வாசனை பயங்கரமா வருது… அது யார்ரா அவன் கருக விடுறது…?” என அக்கம் பக்கம் வளைச்சு தேடிப் பார்க்க அருகில் இருந்த மகேந்திரனைப் பார்க்க, அவனும் குறிஞ்சியும் மயிலும் விழுந்து விழுந்து ரஞ்சனுக்கு விருந்து உபச்சாரம் செய்வதைத்தான் முறைத்துக்கொண்டு இருந்தான்… “ஓ இங்க தான் கருகுதா…?” என கண்டு கொண்டவன்
“ஏன்டா நல்லுவனே ஊருக்குள்ள ஒழுங்கா நீ மட்டும் தான் சுத்திட்டு இருந்த, உன்னையும் இந்த பையன் வயத்தெரிச்சல் கோஷ்டில சேர்த்து விடுறானா… ஹும் என்ன செய்ய அவனுக்கு அமையுது நமக்கு, ம்ஹும் அந்த கொடுமைய ஏன் கேக்குற, அவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கும் போல…!!” என வீர் பெருமிதம் கொண்டு இருந்த சமையம்…
“அவுச்…!!” என ரஞ்சன் கத்திவிட, அவன் பக்கம் கவனத்தை ஈர்க்கப் பார்த்தனர் சகோதரர்கள்… பார்த்த காட்சியில் சகோதரர்களுக்கு இரத்த அழுத்தம் கூடினதே ஒழிய குறைந்தபாடில்லை…
“ஏன்னா…??”
குறிஞ்சியும் மயிலும் போட்டி போட்டுக்கொண்டு உபசரித்ததில், மயிலு கையில் இருந்த சாம்பார் ரஞ்சன் சட்டையில் கொட்டிவிட,
“அச்சச்சோ…!! என்ன மயிலு, என்ன காரியம் பண்ணிட்டே??” என பதறிய குறிஞ்சி, ரஞ்சன் சட்டையில் கொட்டிய சாம்பரைத் தன் அல்லி கரம் கொண்டு துடைக்க…
“ஐயோ, ஏங்க பரவாயில்லை விடுங்க… நானே பார்த்துக்கிறேன்…!!” என நாகரிகமாக விலகிச் சென்றாலும், ரஞ்சனை முறைக்கத் தவறவில்லை சகோதரர்கள்…
“ஐயோ ஐயா, மன்னிச்சுடுங்க, மன்னிச்சுடுங்க! நான் தெரியாம என் கை தவறி கொட்டிடுச்சி…!!!” என மயிலு தன் பங்குக்கு ரஞ்சன் சட்டையில் கை வைக்க…
“அட பரவாயில்லை, விடுங்க. தெரிஞ்ச யாரிடம் கொட்டு வாங்கலா? நீங்களும் விடுங்க, வேலையைப் பாருங்க. நானே பார்த்துக்கிறேன்… ஆ, இதை எங்க வச்சி கிளீன் பண்ணலாம் ஆண்ட்டி…?” என சகுந்தலாவை கேட்க,
“ஐயோ, சட்டை எல்லாம் கரைந்து போய்விட்டது. புறத்தால நீ வாப்பா, நான் அலசித் தருகிறேன்…!!” என அவர் அழைக்க…
“அம்மா, நீங்க பரிமாறுங்க, ஐயாவுக்கு நான் வழித் துணைக்கு போறேன்…!!!” என்றவள், நாக்கை கடித்துக்கொண்டு “வழி காட்டுறேன்…!!” எனத் திருத்தம் செய்தபோது, ரஞ்சன் மேல் ஆசை மூளைத்த தோகை மயில்…
மாளிகையின் பின்புறத்தில் யாருமில்லாத இடத்திற்கு ரஞ்சனை அழைத்து வந்தவள்… அவனுக்குத் தண்ணீரை காண்பிக்க…
அவனும் தண்ணீரை பட்டுப் படாமல் எடுத்து சட்டை மீது உள்ள கரைகளைத் துடைத்துக் கொண்டிருந்த சமையல்காரன் அவனை நெருங்கி நின்றால் மயில்…
“ஐயா என்னை மன்னிச்சுடுங்க, தெரியாம கொட்டிட்டேன். சட்டையை கழட்டி கொடுங்க, நானே என் கையால் துவைச்சுத் தாரேன்…!!” என ரஞ்சனிடம் கை நீட்ட…
“அதுல என்னங்க இருக்கு, பரவால்ல விடுங்க. நானே துடைச்சுக்குவேன். எத்தனை தடவைதான் மன்னிப்பு கேப்பீங்க? நீங்க என்ன வேணும்னு எனக்கு கொட்டுனீங்க, தெரியாம பட்டது தானே, பரவால்ல விடுங்க, நான் ஒன்னும் தப்பா… ஏய்இஇஇஇஇ… என்ன பண்றீங்க…!!” என ரஞ்சனை மிக மிக அருகில் நெருங்கிய மயில்… அவன் சட்டை பட்டனில் கை வைத்து கழட்ட…
“ஹலோ ஏங்க, என்னங்க பண்றீங்க? இதெல்லாம் ரொம்ப தப்புங்க, விடுங்க என்னை….!!!” என இவன் அலறி பின் வாங்க…
“என்ன தப்பு? உங்க மேல கை வைக்கிற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு… அவங்க என் முதலாளி மகளா இருந்தாலும் உங்க மேல எப்படி கை வைக்கலாம்… அதான் சாம்பரை நானே வேணுமேனே கொட்டினேன்… கொடுங்க உங்க சட்டையை, நானே துவைச்சுத் தாரேன்…!!!” என உரிமையோடு கொஞ்சியபடி அவன் சட்டையில் கை வைக்க
“ஐயோ ஏங்க இப்படி பண்றீங்க? இதெல்லாம் ரொம்ப தப்புங்க. தனியாக இருக்குற ஆம்பள கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கறீங்க… எனக்கு பயமா இருக்கு…!!” என ரஞ்சன் தன் சட்டையை நெஞ்சோடு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தப்பி ஓட வழி பார்க்க…
விடுவாளா மயிலு… “ஷு! என்கிட்ட உங்களுக்கு என்ன வெக்கம்… நாம கட்டிக்கப் போறவங்க தானே, நமக்குள்ள இதெல்லாம் சகஜம். குடுங்க…!!” என உரிமையுடன் அத்துமீறினால்… விருப்பமில்லாத பெண்ணைத் தொடுவது மட்டுமல்ல, விருப்பமில்லாத ஆணைத் தொடுவதும் கூட பாலியல் அத்துமீறல் தான்… இங்கு ஆணுக்கும் கற்பு உண்டு…
“எது கல்யாணமா ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் நீங்க நினைக்கிற மாதிரியான ஆள் இல்லைங்க, என்னை விட்டுருங்க…!!!” என ரஞ்சன் கெஞ்ச, கெஞ்சிக் கொண்டே அவன் இருபுறமும் கையை வைத்து மடக்கிப் பிடித்தவள், அவன் மீது அங்கம் அழுத்திச் சாய…
சாமர்த்தியமாகத் தன் உடல் அவள் மீது இடிக்காமல் ஒதுங்கிக்கொண்டவன், பயந்து நடுங்கிக் கொண்டே, “ஏங்க இங்க யாராவது இருக்கீங்களா? என்னை தயவுசெஞ்சு இவங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க! இந்த அநியாயம் எல்லாம் இந்த ரைட்டர் கிட்ட தான் நடக்கும். யாரும் என்னை போல இந்த ரைட்டர நம்பி கதையில கமிட் ஆகிடாதீங்க, ஆம்பளைக்கு பாதுகாப்பே இல்லை…!!” என ரஞ்சன் அலற…
“ச்சே போங்க அத்தான், ஆசையா வந்தா இப்படி பயந்து சாகுறீங்களே… ஆனா அது தான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு…!!” என மயிலு கிறக்கமாக சொல்லி கொண்டே ரஞ்சன் மேல் கை வைக்க…
“அம்மா தாயே, தயவுசெய்து தள்ளி நின்னு பேசு, யாராவது நம்மள பார்…
த்தா தப்பா நினைப்பாங்க…!!” என ரஞ்சன் அவள் கையைத் தட்டிவிட…
“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க, அப்படியே கேட்டாலும் என்ன? நான் உங்களை காதலிக்கிறேன், நீங்க என்னை காதலிக்கிறிங்க சொல்லுங்க…!!” என மயிலு சகஜமாக கூற, திகில் பிடித்தது ரஞ்சனுக்கு.
“எது காதலா அம்மா தாயே? நீ ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்க… நான் சொல்றத கொஞ்சம் கேளுமா… நமக்குள்ள செட் ஆகாது, விபரீதமாக முடிஞ்சுடும், ஆள விட்ரு…!!” என ரஞ்சன் மயிலுக்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருக்கும் பொழுது, அங்கு வந்து சேர்ந்தான் வீர்…
“என்ன போன பயபுள்ளை இன்னும் காணவில்லை…??” என ரஞ்சனைத் தேடி வந்தான் வீர்…
இங்கு அவனும் மயிலுக்கும் கட்டிக் கொண்டு நிற்பதைப் பார்த்து…
“ஓ, ஒரே நாள்ல அவ்வளவு தூரம் வந்துருச்சா… நல்லாவே இருக்க மாட்டீங்க, நாசமா போங்கடா… என் சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது, நான் போறேன்…!!” என நகர…
“ஐயோ பாஸு, நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல, என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க… காப்பாத்துங்க பாஸே…!!” என ரஞ்சன் கெஞ்ச…
“ஷு! நமக்கு நடுவுல அவரை ஏன் கூப்பிடுறீங்க? காதலிக்கிறவங்க மத்தியில கரடி மாதிரி அவர் எதுக்கு….??” என மயில்…
“அம்மா தாயே! எனக்கு உன் மேல காதல் இல்லை, ஒரு மண்ணும் இல்லை, தயவு செஞ்சு தள்ளி நில்லு… வீர்ர்ர்ர் என்னை காப்பாற்றுங்க….!!” என கத்த…
வேகமாக வந்த வீர், ரஞ்சனுக்கும் மயிலுக்கும் இடையில் புகுந்து… “ஏய், இங்க என்ன பண்ற… உன்னை உள்ள கூப்பிடுறாங்க, உள்ள போ…!” என விரட்ட…
“ம்க்கும்…!” என காதல் தடைபட்ட கடுப்பில் முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே சென்று மறைந்தாள்…
“நல்ல வேலை பாஸே, என்ன அவங்க கிட்ட இருந்து காப்பாத்துனீங்க…!!” என வீரின் கையை பிடித்து நன்றி உறைத்தான் ரஞ்சன்…
ரஞ்சனின் கையையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்தவன்… அவன் கழுத்து வளைவை கக்கத்தின் வழியாக தன்னோடு அணைத்துக்கொண்டவன், அவன் தலையை கலைத்து விட்டு…
“இதுக்கே இப்படி பயந்துட்டியாடா பொடியா… நான் கூட உன்னை என்னென்ன எல்லாமோ நினைச்சுட்டனே… நீ என்னடானா ஒரு பொண்ணுக்கே இப்படி பயந்து நடுங்கற…!!” என வீர்
“ஐய போங்க பாஸே, அந்த பொண்ணு கிட்ட வந்ததுமே எனக்கு வேர்த்து கொட்டிடுச்சு…!!” என்று வீர் பிடியிலிருந்து வெளி வந்தபோது… உண்மையிலேயே ரஞ்சன் மயிலின் செயலால் அதிர்ந்து தான் போய் இருந்தான்…
“அப்போ உன்னை தனியா விட்டா சேதாரம் உனக்கு தான் போலையே… சரிவா, பெரிய மனசு பண்ணி இனி நானே உனக்கு பாதுகாப்பு தாரேன்….!” என மீண்டும் ரஞ்சன் கழுத்தை இழுத்து பிடித்து கொண்டே நடந்து சென்றான்…
“பாஸே பாஸே, கழுத்து பாஸே பார்த்து….!!” என கத்தினாலும் வீர் உடன் பணிந்து சென்றான்…
விஜயேந்திரனின் திருமணம் முடிந்ததை அடுத்து, அவர்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்து சென்று கொண்டிருக்க… ரஞ்சனிடம் வந்தாள் சகுந்தலா…
“தம்பி வீட்டுக்கு சொந்தக்காரங்க எல்லாம் வராங்க, ஒரு ரெண்டு நாளைக்கு நீ வீர் கூட தங்கிக்கோப்பா…!!!” எனச் சொன்னாள்…
ரஞ்சன் தயக்கத்துடன் அவரைப் பார்க்க… “ஒன்னும் பிரச்சனை இல்ல தம்பி, சின்னவன் அறை பெருசா தான் இருக்கும்… வேற வழியிலிரன்னு தான் தம்பி உன்கிட்ட கேக்குறேன்… கொஞ்சம் புரிஞ்சிக்கோ பா…!!” என கெஞ்சியவரை எப்படி மறுத்துப் பேசுவது எனத் தெரியாமல் ரஞ்சன் முழிக்க… அங்கு வந்து சேர்ந்த வீர் என்னை ஏது என கேட்க… அவனிடம் சகுந்தலா விஷயத்தைச் கூற…
“அவ்ளோதானா! ஐ வாடா பொடியா, இனி நாம ரெண்டு பேரும் ஒண்ணா தங்கலாம்… ஜாலியா இருக்கும், வா போலாம் வா போலாம்!!” என ரஞ்சன் கழுத்தில் கையை போட்டு இழுத்துச் சென்றான் வீர்…
அன்று இரவு முழுவதும் வீர் படுத்திய பாட்டில், மறுநாளே முகிலிடம் வந்து நின்றான் ரஞ்சன்…
இவர்கள் இருவரும் தனியே பேசுவதைப் பார்த்த குறிஞ்சி, அவர்கள் பேசுவதை நின்று கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்…
அப்படி என்ன நடந்து இருக்கும் எங்க, நீங்கள் சொல்லுங்க பார்ப்போம்…?? சரி, ஏன் கோபம் தெரியலனா அடுத்து எப்படில தெரிஞ்சுப்போம்…



