உதிக்கும் சூர்யன் எப்படி எளியோர், வலியோர், தீயோர், நல்லோர் எனப் பேதமின்றி அனைத்து உயிர்களுக்கும் அருளோளியை வாரி வழங்குகிறதோ, அதே போல் தான் ரத்தினவேல் பூபதியும் தமக்கு இன்னல் விளைவித்த தென்றலுக்கும் கூட நன்மை பயக்கும் படி நடந்து கொண்டார்…
தீர்ப்பு வரும்வரை இலஞ்சி கிராமத்திலே தங்க முடிவு செய்து வாடகைக்கு வீடு பார்க்க, ஆனால் பாவம் ரத்தினவேல் பூபதி மீதுள்ள மரியாதையினால் அவளுக்கு வீடு கொடுக்க யாரும் முன் வரவில்லை… இதை கவனித்த ரத்தினவேல் பூபதி, தென்றலையும் அவள் சகோதரனையும் தன்னோடு தங்கும் படி அவர் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்…
அவரது இந்த முடிவு பலபேர் மனதை நோகடிக்கும் என்று தெரிந்தே தான் அழைத்து வந்தார்…
“நில்லுங்க ஐயா…?” பேரன்கள் இருவரும் அவரை வாசல் படியில் வைத்தே மடக்கிட…
“எதுக்காக இவளை…?” என்ற வீரை ரத்தினவேல் ஒரு பார்வை பார்க்க… “இவங்களை இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க…?” என மாற்றிிக் கொண்டதிலே தெரிந்தது ரத்தினவேலின் வளர்ப்பு…
“இவங்களை இங்க தங்க சொல்லி நான்தான் அழைச்சிட்டு வந்தேன், அதுக்கு என்ன இப்போ…? “ரத்தினவேல் பூபதி…”
“என்ன விளையாடுறீங்களா ஐயா… இவங்களால ஏற்கனவே நம்ம குடும்ப மானம் போச்சு, இதுல இவங்கள வேற இங்க கூட்டிட்டு வந்து நிக்குறீங்க. முதல்ல யாரைக் கேட்டு இவங்கள கூட்டிட்டு வந்தீங்க…?” என வீர் ஆத்திரத்தில் குதிக்க…
“யாரப்பா கேட்டு நான் கூட்டிட்டு வரணும்? இது என் வீடு, நீங்க எல்லாம் என் மக்கள், என் வார்த்தை மீறாமட்டிங்க என்கிற நம்பிக்கையில கூட்டிட்டு வந்துட்டேன்… ஆனா இப்படி நிக்க வச்சி கேள்வி கேப்பீங்கன்னு தெரியாம போச்சு, மன்னிச்சுக்கோங்க பா…!” என ரத்தினவேல் பூபதி ராஜா மன்னிப்பு கேட்கவும் அவரது குடும்பமே கலங்கிப் போய்விட்டது… வீர்க்கு கூட தான் பேசியது அதிகப்படியோ என்கிற குற்ற உணர்வு தாக்கியது…
“என்னங்க ஐயா, நீங்க போய் மன்னிப்பு கேட்டு எங்கள சங்கடப்படுத்தாதீங்க… வீர் அந்த நோக்கத்தில் பேசல… வீர் மட்டுமல்ல, நாங்க யாருமே உங்கள அவமானப்படுத்த கனவுலையும் நினைக்க மாட்டோம்… அவன் சொன்னது நீங்க கூட்டிட்டு வந்த ஆளுங்களை மட்டும் தான்…!” என மகேன் நிலைமையை விவரிக்க…
“அது என்னப்பா, என்னைய சொன்னா என்ன…? நான் கூட்டிட்டு வந்தவங்கள சொன்னா என்ன, எல்லாமே ஒன்னு தான…?” என உடும்புப் பிடியாக ரத்தினவேல் நிற்க,
“ஏனுங்க ஐயா, புரிஞ்சிக்க மாட்டிங்கிறீங்க, நீங்களும் இவங்களும் ஒன்றா… இவங்களால நம்ம குடும்பத்துக்கு கெட்ட பேர் மட்டுமில்ல, இவங்களால நம்ம வீட்டு ஆளுங்க மனசு ஏற்கனவே காயப்பட்டு இருக்கு… அப்படி இருந்தும் இவங்களை இங்க தங்க வைக்க நினைக்குறது வெந்த புண்ணுல உப்பைத் தடவுறதை போல் ஆகாதா…?” என்ற மகேந்திரனுக்குப் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாரே என்ற ஆதங்கம்…
“உங்கள சரியா புரிஞ்சுக்காம தான் பா போயிட்டேன்… உங்க மேல அதீத நம்பிக்கை வச்சுட்டேன் பாருங்க… அதான் இப்படி கொண்டு வந்து நிறுத்துட்டீங்க… சரி அதை விடுங்க, இப்போ இவங்கள இங்க தங்க வைக்கிறதா வாக்கு கொடுத்துட்டேன்… வாக்கு சுத்தம் நாக்கு சுத்தம், வாழ்ந்த பரம்பரை சேர்ந்தவன் நான்… இப்போ என்ன பண்ணட்டும்…?” என கேட்டு விட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர், தன் சகதர்மினியிடம் பார்வை நிலைப்பெற்றது; அது சில நொடிகள் தொடர்ந்தது…
அதில் தான் எத்தனை எத்தனை தீட்சண்யம்… இத்தனை கால அவர்களின் மனம் ஒத்த அந்நியோனியமான மணவாழ்வு கேள்விக்குறி ஆகி விட்டதா…?? என வேதனையோட பார்க்க…
அடுத்த நொடி சாமுண்டீஸ்வரி வாயில் இருந்து உதித்தன இவ்வார்த்தைகள்…
“சகுந்தலா, ஆலத்தை கரைச்சு எடுத்துட்டு வா….!” என மருமகளுக்கு கட்டளையிட, மாமியார் சொல் தட்டாத மருமகளோ எதிர் பேச்சின்றி அவர் சொன்னதை செய்தார்; கடைமை தவறாத மருமகள்…
ஆரத்தி எடுத்து வலது கால் வச்சி உள்ள வாம்மா என சாமுண்டி அழைக்க, அந்த மாளிகைக்குள் அடி எடுத்து வைத்தால் தென்றல்…
“ஆத்தா, என்ன செஞ்சிட்டு இருக்க? நீ இவ்ளோ நேரம் தாமதம் குதிச்சது எல்லாம் மறந்து போச்சா என்ன…? இந்த குடும்ப மானம் முக்கியம்னு குதிச்சது நீதானே, இப்போ நீயே இவங்களுக்கு ஆரத்தி எடுத்துட்டு இருக்க… இதெல்லாம் என்ன…?” என குதித்தான் வீர் @ வீரேந்திரன்…
“வீர், என்ன பழக்கம் இது? பெரியவங்கள எதிர்த்து பேசுறது இப்படியா? உன்னை வளர்த்தது… எப்போ அந்த குழந்தை பெயரளவில் பூபதி ராஜா வீட்டு வாரிசுன்னு வந்துடுச்சோ, அப்போவே அதுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்… அது உண்மையா இருந்தாலும் சரி… இல்லாவிட்டாலும் சரி…!!” என சகுந்தலா கூறியதைக் கேட்டு மெச்சுதலாகப் பார்த்தார் பெரியவர்…
“என் புருஷன் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்… நிச்சயம் அவர் செயலில் ஒரு நியாயம் இருக்கும். உன்னை விட, ஏன் என்னை விட இந்த குடும்பத்தை அதிகமா நேசிக்கிறவர், நிச்சயம் நமக்குக் கெடுதல் நினைக்க மாட்டார்…?” எனத் தன் பேரனை வார்த்தையால் அடக்கினார்…
“சகுந்தலா, இவங்க தங்க அறையைக் காட்டுமா…!!” என கூறிவிட்டு, கணவரின் கண்களை நேராகப் பார்த்து “போதுமா…” என்பது போல் பார்த்தாள்… அவர் கண்களை மூடி திறந்து ஆமோதித்தார்…
கீழே நடந்து கூத்து அனைத்தையும் மேலே நின்று பார்த்துக்கொண்டிருந்த விஜயனுக்கு உடல் எல்லாம் உலைகலம் என கொதித்தது…
“என் வீட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டியா கேடி தாண்டி நீ… பார்க்குறேன்டா எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறேன்னு, உன்னை ஒருவழி பண்ணாம விட மாட்டேன்… இந்த விஜயேந்திர பூபதி இருக்குற வரை உன்னால என் குடும்பத்தை ஒன்னும் பண்ண முடியாது… உண்மை கண்டுப்பிடிச்சி உன்னை இந்த ஊரை விட்டு ஓட ஓட விரட்டுறேன்…!!!” என மனதில் சூல் உரைத்துக்கொண்டான்…
அன்றைய பொழுது எப்படி கோலாகலமாகத் தொடங்கியது, அதற்கு நேர் மாறாக முடிந்தது… எப்படி இருக்க வேண்டிய நாள், இப்படி ஒரு சூறாவளி சுழன்று அடித்து போட்டது போல் மாறிவிட்டது என பூபதி வீட்டார் மருகி கொண்டு நின்றனர்…
“வர வர எந்தப் புழுவில் எந்தப் பாம்பு இருக்குன்னே நம்ப முடியல…??” என அங்கலாய்த்தார் அவ்வீட்டின் மருமகன் ராஜேந்திரன்…
“யாரைச் சொல்றீங்க…?” என கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டே கேட்டார் மலர்விழி…
“வேற யாரெல்லாம் நம்ம மாப்பிள்ளையங்களா தான்…!!” என்றவர் வெற்றிலைக்குக் கை நீட்ட…
அவர் கைகளுக்குக் கொடுக்காமல் திரும்ப எடுத்துக்கொண்டவர்…
“இங்க பாருங்க, என் மருமகன்களை மாதிரி பிள்ளை கிடைக்க பத்து ஜென்மத் தாவா இருந்திருக்கணும்… என் மருமவனுங்க பத்திரமாத் தங்கம், அவனுங்க நிச்சயம் இப்படிச் செஞ்சிருக்க மாட்டானுங்க, நான் அடிச்சுச் சொல்லுவேன்… அட, அப்படியே அவனுங்க செஞ்சாலும் தான், ஊர்ல இருக்கிற ஆம்பள பசங்க எல்லாம் எப்படி எப்படியோ திரியுதுங்க, அப்படியா இருக்கானுங்க? என் மருமகனுங்க யார் என்ன சொன்னாலும் சரி, நான் எப்பவுமே என் மருமவனுங்க பக்கம் தான் நிப்பேன்…!!” என்றவர் வார்த்தைகளில் தெரிந்தது அவர்கள் மீது உள்ள அதீத அன்பு…
“அப்புறம் நீங்க எப்படியோ…?” என புவனம் சுருக்கி கண்களை உருட்டி மிரட்டும் தொணியில் கேட்க…
“அம்மா தாயே! என் மனைவி எவ்வழியோ, இந்த மாமனும் அவ்வழியே…!” என மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு கொஞ்சும் தொரணையில் கெஞ்ச… அதன் பிறகே கையில் இருக்கும் வெற்றிலை Tambul-ஐ (தம்புலத்தை) கொடுத்தார்…
இங்கு இப்படி இருக்க, மேலே இளம் பூபதிளைப் பெற்றவர்க்கோ ஆழ்கடலின் ஆழம் எனத் துன்பத்தில் ஆழ்ந்து போனார்… தன் துயரத்தை ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு, கணவன் துயரைப்போக்கப் பெரும் பாடுபட்டுக்கொண்டு இருந்தார் சகுந்தலா…
“எதுக்குங்க இவ்ளோ விசனம் படுறீங்க? நம்ம புள்ளைங்க அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டாங்க… ஏன்னா அவனுங்க பெரியவர் வளர்ப்பு… எப்படிங்க தப்பா போகும்? உங்களுக்கு புள்ளைங்க மேல நம்பிக்கை இல்லையா…?”
“நம்ம பிள்ளைங்க மேல நம்பிக்கை இருக்கு, ஆனால் பாரு அவனுங்க வயசு சந்தேகப்பட வைக்குது… என்னமோ எங்கய்யா வளர்ப்பு, சோறு போகாது என்ற நம்பிக்கையில் தான் இருக்கேன். இல்லன்னா ஊருக்கு முன்னாடி இத்தனை நாள் பரம்பரையா சேர்த்து வச்ச கெளரவம் போன போதே என் மூச்சு நின்னு போயிருக்கும்…!” என ஆயாசமாக இருந்தது.
“ஐயையோ! அப்படி எல்லாம் சொல்லாதீங்க, எனக்கு இதயமே நின்னுடும் போல இருக்கு… நீங்க இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுங்க, நம்புங்க! நம்ம பிள்ளைகளை நம்புங்க…!!” என கதறினார் சகுந்தலா…
“இப்போ நம்ம கையில எதுவுமே இல்லை சகுந்தலா, நாளைக்கே நமக்கு ஏதாவது பாதகமா நடந்துருமோன்னு பயமா இருக்கு… அவனுங்க கிட்ட சொல்லு… திருத்திக்க முடியாத தப்பு என்று எதுவுமே இல்லை… தப்பை சரி செய்ய இன்னும் நேரம் இருக்கு… எங்கயாவதோ மானம், இந்த வீட்டோட கெளரவம் எல்லாமே உன் மகன்களின் கையில தான் இருக்கு…!!” என்றவர் சோர்வாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு, நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு இருந்தார்…
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என வாழும் மனிதருக்கு, இன்று அவரின் மகன்களாலேயே அவரது தந்தைக்கு ஒரு களங்கம் வந்து விட்டதே என்கிற வேதனை வெகுவாக வாட்டியது…
“இதோ நான் சொல்றேன்ங்க, நான் சொன்னா நிச்சயம் கேப்பானுங்க, நான் சொல்றேனுங்க…!” அந்த நேரத்தில் மகன்களைக் காண எழுந்து ஓடினார் சகுந்தலா; கணவனுக்குக்கும் மகன்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார்…
பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம் மாட்டிக்கொண்டு பரிதவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் சொல்வார் யார்…?



