மங்கள இசை முழங்க, புரோகிதர் தாலியை மணமகனின் கையில் கொடுக்க, அதை வாங்கி கட்டினர்… குறிஞ்சி கழுத்தில் மகேந்திரனும், தென்றல் கழுத்தில் ரகுவீரும்…
தங்கள் கண் முன் கண்ட காட்சியை நம்ப முடியாமல் அனைவரும் திகைத்து நின்றனர்… இப்போவாவது நம்புங்கய்யா, கிளைமாக்ஸ் வந்துருச்சு…
என்ன இது என்பது போல் மணமகள்கள் பார்த்தனரே ஒழிய, பெரிதாக எந்த அதிர்ச்சியும் அவர்களுக்கு ஏற்படவில்லை… மாறாக, இதை அப்போவே எதிர்பார்த்தேன் எனத் தான் அமர்ந்து இருந்தனர்…
அதே போல் மணமகன் பாத்திரத்தை ஏற்றிருந்தவர்களோ, ஹப்பா! வந்த வேலை முடிந்தது என அவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி கொண்டனர்…
உள்ளே நுழைந்த ரஞ்சனாவும் அவள் தந்தையும் காண நேர்ந்தது இதைத்தான்… அவளுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது…
இவனிடம் விளையாடி விட்டு, தந்தையிடம் சென்று முறையாக அனுமதி பெற்று சம்பந்தம் பேச, அவரையும் கையோடு கூட்டிக்கொண்டு வந்தவளுக்கு இந்த காட்சி பிபிஐயை ஏகத்துக்கும் கூட்டி விட…
“டேய்இஇஇஇஇ வீர்! செத்தடா என் கையில நீ… ஏன்டா தடியா லவ் சொல்லி கொஞ்ச நாள் கூட ஆகல, அதுக்குள்ள புது மாப்பிள்ளை ஆகத் தயாராகிட்டியா நீ…?” என ஆங்காரம் கொண்டு வீரை நோக்கிப் பாய…
“ஐயோ பத்ரகாளி வந்துட்டா! இவ கையில கிடைச்ச கொண்தே போற்றுவளே! உயிரே உயிரே, தப்பிச்சு எப்படியாவது ஓடிடு!” வீர் மண்டப்பத்தில் இருந்து தப்பி ஓட, தட்டிவிட்ட வெண் பட்டு வேட்டியை ஸ்டைலாக ஒரு காலால் தட்டித் தூக்கி மடித்துக் கொண்டு ஓடினான்…
“ஓடாதடா நாயே! நில்லு! உனக்கு வேற பொண்ணு கேக்குதா…?” என்றவள் கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து வீர் மீது வீச, முறையாக விளையாட்டுப் பயிற்சி பெற்ற அந்தப் பயிற்சியாளனோ அவள் குறியிலிருந்து லாவகமாகத் தப்பி ஓடினான்.
“அம்மாடி ரஞ்சு, நீ கையால அடிச்சா உனக்குத்தான் கை வலிக்கும். இந்தா, இத வச்சு நாலு என் கணக்குல சேர்த்துப் போடு… விடாத புடி…!!” என சாமுண்டீஸ்வரி தன் பங்குக்கு ஒரு பெரிய பிரம்பைத் தூக்கிப் போட, அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டவள் விடாமல் வீரேந்தரனைத் துரத்திச் சென்றாள்…
சுற்றி இருந்தவர்களோ, இவர்களைத் தடுக்காமல், போனவன் உயிரோடு வருவானா என்ற எதிர்பார்ப்போடு வேடிக்கை மட்டுமே பார்த்தனர்…
“அதுங்க ரெண்டு மண்டைய ஒடச்சிகிட்டு பொறுமையா வரட்டும்…” என்றான் விஜயேந்திரன்…
“அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சொல்ல வேண்டுமா…?” என மகேந்திரனையும் ரகுவீரையும் பார்த்து கேட்டதில், “பதில் சொல்லுங்கடா…?” என்கிற உள் பொருள் இருந்தது.
“இங்க பாரு, உனக்கு பயந்துட்ட எல்லாம் தாலி கட்டல… என் பொண்டாட்டி பிள்ளைக்கு இன்னொருத்தன் இன்ஷியல் கொடுப்பதை வேடிக்கை பார்த்துட்டு நிக்க நான் ஒன்னும் கையால் ஆகாதவன் இல்ல…?” என நெஞ்சை நிமிர்த்திச் சொன்னான் ரகுவீர்…
“நேத்து வரை இல்லைன்னு சொல்லிட்டு இருந்த, திடீர்னு இன்னைக்கு வந்து பொங்கி வழியுது பொண்டாட்டி புள்ளைங்க பாசம்…??” என விஜயேந்திரன் நக்கலாகக் கேட்டான்…
“என் பொண்டாட்டி பிள்ளைங்க மேல உள்ள பாசத்தை நான் எவனுக்கும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை…!!” என்றவனைத் தென்றல் திரும்பி முறைக்க…
“இல்ல, இனி யாருக்காகவும் என் பொண்டாட்டி பிள்ளையை நான் கைவிட மாட்டேன் என்று சொல்ல வந்தேன்…!!” என மாற்றிக் கொண்டவன், முழு சம்சாரியாக மாறி நின்றிருந்தான்…
“அது சரி, அப்போ உங்க ரெண்டு பேருக்குள்ள மட்டும் தான் நடந்தது, இன்னைக்கு ஊரையே கூட்டி தாலி கட்டி எல்லாருக்கும் தெரியப்படுத்திருக்க… நாளைக்கு இல்லன்னு மறுக்க முடியாது, பரவாயில்லையா…?” என விஜயேந்திரன் வேண்டும் என்றே வெறுப்பேற்றினான்…
“எல்லாமே தெரிஞ்சு என் சுய நினைவோடு தான் தாலி கட்டினேன்…!!” எனப் பல்லை கடித்துக் கொண்டு சொன்னான் ரகுவீர்…
அப்போ சரி… என்றவன் மகேந்திரன் பக்கம் பார்த்து,
“அவனுக்கு தான் அவன் பொண்டாட்டி புள்ளைங்க வேணும், அதான் தாலி கட்டினான். உனக்கு என்னடா ஆச்சு? நீ ஏன்டா இப்படி ஒரு காரியம் பண்ண… பாரு, உன்னால ஐயாவுக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு ஆகிப்போச்சுன்னு??” என இரக்கம் காட்டுவது போல் மகேந்திரனின் குற்ற உணர்வை துண்டும் படி பேசினான்…
மகேந்திரனுக்கு அது ஒரு புறம் வருத்தத்தைத் தந்தாலும், அவன் எடுத்த முடிவில் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை என்பதில் அவன் தெளிவாக இருந்தான்… நேராக ரத்தினவேல் பூபதியிடம் சென்று…
“ஐயா, என்னை தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க… நான் செஞ்ச செயல் இன்னைக்கு வேணா உங்களுக்கு தலைகுனிவை கொடுத்திருக்கலாம், ஆனா இன்னைக்கு மட்டும் நான் குறிஞ்சியை விட்டுக்கொடுத்தா, மீதி இருக்குற காலம் முழுக்க நான் நரகத்தை அனுபவிச்சிருப்பேன்… அவள் இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கை இல்லை… அவளை நான் மனபூர்வமாக காதலிக்கிறேன், அதை உங்க கிட்ட சொல்லறதுக்குள்ள என்னென்னவோ ஆகிப்போச்சு… உங்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தியதற்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க, ஆனா குறிஞ்சியை மட்டும் நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்…!!” என்றான் அவளை தன் கை வளைவில் இருத்தி கொண்டு முடிவாக…
ரத்தினவேல் பதில் ஏதும் சொல்லாமல் மகேந்திரனைப் பார்த்து சிரித்தான்… அப்பொழுதுதான் அவன் மற்ற அனைவரது முகத்தையுமே பார்த்தான்; அதில் எள்ளளவும் கோபமோ வருத்தமோ இல்லை, மாறாக கேலியும் புன்னகையும் சந்தோஷமும் மட்டுமே இருந்தது… முதலில் திகைத்தவன் பின் புரிந்து கொண்டான்…
“அடப்பாவிங்களா, அப்ப ஸ்கெட்ச் மொத்தமும் எங்களுக்கு தானா…??” என மகேந்திரன் வாய் விட்டு கேட்கவும்…
கலகலவென சிரிப்புச் சத்தத்தால் அந்த இடம் நிறைந்தது…
“ஹா ஹா ஹா, ஒரு வழியா உனக்கு புரிஞ்சிடுச்சா… மூணு நாளா தேவதாஸா சுத்திட்டு இருந்தியா, அதான் உனக்கு சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல… அவ்வளவு லவ்வாடா குறிஞ்சி மேல…!!” என விஜயன் கிண்டல் அடிக்க, மகேந்திரன் வழிந்தான்…
“எல்லாம் சரிடா, வீரை எப்படி இதுக்கு ஒத்துக்க வச்ச…?” என எல்லார் மனதிலும் இருந்த கேள்வியைக் கேட்டான் மகேந்திரன்…
“ஹாஹா, அவனுக்கு தியாகி பட்டம் மேல அவ்ளோ வெறி, அதான் நானே அந்த கதாபாத்திரத்தை பண்றேன்னு வம்பாக வந்து மாட்டிகிட்டான்… போனவன் உசுரோட இருக்கானா இல்லையான்னு தெரியலையே…??” என விஜயேந்திரன் கூற…
“அச்சச்சோ, உங்களுக்கு ரஞ்சியோட கோபத்தைப் பத்தி தெரியாது, பாவம் அவர் வாங்க வீரை போய் காப்பாற்றலாம்….!!” என முகிலினி அழைக்க…
அவளைத் தடுத்து நிறுத்தியவன்… “இரு இரு, உனக்கு வீரைப் பற்றித் தெரியல, எவ்வளவு பெரிய கோவக்காரியா இருந்தாலும் அவன் கிட்ட அது எடுபடாது… இரு, அவங்களே முட்டி மோதி வந்து சேரட்டும், இடையில போய் நாம கரடியா நிக்க வேணாம்…!!” என மறுத்து பேச, வாய்ப்பில்லாததால் அமைதியானாள் முகில்.
அப்புறம் சம்பாதிச்ச பொண்ண நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க… என ரஞ்சனாவின் தாய் தந்தையை முறையாக பெரியவர்களுக்கு அறிமுகப்படுத்தும் படலம் நடந்தேறுகிறது…
இங்கே வீரைத் துரத்திச் சென்று ரஞ்சனாவோ
“என்னது தியாகமா…?? பெரிய தியாகச் செம்மலடா நீ… எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட லவ் சொல்லிட்டு இன்னொரு பொண்ணு பக்கத்துல போய் உட்காருவ? உன்னை விட மாட்டேன்டா…??” என அவனை அடித்தபடி துரத்தியவள், வீரோடு சேர்ந்து தரையில் இரண்டும் விழுந்து அடி பிடி போட…
வீர் கீழே இருக்க, ரஞ்சனா அவன் மேல் இருக்க சண்டை போடும் சுவாரஸ்யத்தில், அவள் அதை கவனிக்காமல் விட்டுவிட வசதியாகப் போய்விட்டது அவனுக்கு… ஒரு கட்டத்திற்கு மேல் அவரிடம் அடி தாங்க முடியாமலோ அல்லது அவஸ்தை தாங்க முடியாமலோ…
“அடியே ராட்சசி, அது வெறும் ட்ராமா தாண்டி… நீ தான என் மேல காதல் இல்லைனு சொன்ன, இப்போ வந்து இந்த அடி அடிக்குறது வலிக்குது…??”
“ம்ஹும் முடியாது நாயே, நான் ஓகே சொல்லலனா… என் பின்னாடி சுத்தி ஓகே சொல்ல வச்சி இருக்கணும், அதை விட்டுட்டு வேற பொண்ணை தேடி போவியா… எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா…?” என கேட்டவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து, வீர் இரண்டாகத் தெரிந்தான்…
உருகி விட்ட வீர், எட்டி அவள் கண்களைத் துடைக்க…
“ப்ச் தொடாத பன்னி… பிறந்ததிலிருந்து நான் இதுவரைக்கும் அழுததே இல்ல, என்ன முதல் முதலா அழ வச்சிட்ட, இல்ல உன்னை சும்மா விட மாட்டேன்டா…??” என்றவள், அவனை அடித்து அடித்துத் தாமரை கரங்கள் வலிக்க, அடியிலிருந்து கடிப்பதற்குத் தாவினால்… வீர் மேல் விழுந்து கடிக்க…
“ஐயோ வெறி பிடிச்சவளே விடுடி! கடி நாயே, வலிக்குது…!!” என்று…
“முடியாது பன்னி, நல்லா வாங்கு…!!!” என்றவள் அவன் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தாள்…
“அடியே வெள்ளை பன்னி, கடி தழும்போட நிச்சயதார்த்த போட்டோவில் நிக்க வைக்காதடி…?” என அவன்…
“யாருக்கு நிச்சயதார்த்தம், உனக்கா…?” என விழி விரித்து கேட்க,
“ம்ம்ம், நமக்கு…!!” என்றான் பார்வையை அவள் மீது மேய விட்டு…
“நிஜமாவா…?? இந்த அப்பா என்கிட்ட கூட சொல்லலையே! ஏய்இஇஇஇஇ, அப்போ முன்னாடியே அப்பா கிட்ட பேசிட்டிங்களா…?” என ஆச்சரியமாக கேட்க,
“ஆமாண்டி டால்டா டப்பா…!!” என்றவன்…
விஜயேந்திரன் ரத்தினவேலிடம் பேசி, அவர் ரஞ்சனாவின் தகப்பனிடம் முறையாக பெண் கேட்டார். அவரும் சம்மதித்து இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யவே வந்தார். ஆனால், இது அனைத்தும் ரஞ்சனாவிற்கு தெரியாமல் பார்த்து கொண்டது வீர் கேட்டுக் கொண்டதன் பெயரில் தான்…
“எப்படி? நான் தான் உன்ன லவ் பண்ணலான்னு சொன்ன அப்புறமும் இப்படி ஒரு ஏற்பாடு செஞ்ச…?” என விழி விரித்து ஆச்சரியத்துடன் கேட்க,
“ம்ம்ம், உன் வாய் தான் பொய் சொல்லுச்சு, ஆனா உன் கண்ணு உன்னை போட்டு குடுத்துடுச்சுடி… அது உன்னை மாதிரி இல்லை, என் மேல உள்ள காதலை அப்பட்டமா காட்டிடுச்சு…!!” என்றான் அவள் கண்களையே பார்த்தபடி…
அதில் ரஞ்சனா வெட்கம் கொண்டாள்… அவள் கீழே இருந்த நேரம், அவளை எளிதாக கீழே தள்ளி மேலே வந்தவன், ரஞ்சனாவை அடித்துச் சாப்பிடும் பார்வையைச் செலுத்த… அந்தப் பார்வையே அவள் அடிவயிற்றில் சுரீர் உணர்வை ஏற்படுத்தியது…
“வீர் ப்ளீஸ் வேணாம்டா… எல்லாம் நம்மள தேடுவாங்க, வா போகலாம்…?” என நழுவப் பார்த்தவளை… பிடித்து இழுத்தவன்,
“இவ்வளவு நேரம் மேல விழுந்து கடிச்சியே, அதுக்குப் பழி வாங்க வேண்டாம், இது என் முறை வாங்குடி..!!” என்றவன் வார்த்தைக்கு எதிர்மறையாக நடந்து கொண்டான்…
அவன் பாறை போன்ற வேகத்தை அவள் கொடி தேகத்தோடு அழுத்தி, அவள் மிரண்ட பார்வையில் கள்ளைப் பருகியபடியே, அவள் சிவப்புச் செரி இதழை கவ்விச் சுவைக்க…
தேன் சிந்தும் இதழில் அவன் வேட்கையை மொத்தமும் காட்டி அழுத்தத்தைக் கூட்ட… இவள் அவன் பாரத்தைத் தாளாது மூச்சு முட்டி, முகம் பிதுங்கி அவனைத் தள்ளி விட…
“ஏன்டி…?” கடுப்பாகினான் மோகத்தில் முத்தமிடும் வேளையில் தடையிடும் காரிகையிடம்…
“வீர் ப்ளீஸ்டா, நம்ம நிச்சயதார்த்த போட்டோல உதடு வீங்கி நிக்க எனக்குப் பிடிக்கல…?” எனச் சினுங்கலாகச் சொன்னவளிடம்… அவன் கண்கள் கதை பேச, அவள் சொக்கி நிற்கும் வேளையில்…
“டேய், உங்க சண்டையை முடிச்சிட்டீங்கனா நல்ல நேரம் முடிவதற்குள் வந்து சேருங்கடா… இத விட்டா அடுத்த வருஷம் தாண்டா உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமான முகூர்த்தமாம்…??” என விஜயேந்திரனின் குரல் மட்டும் கேட்க…
“ஏதே அடுத்த வருஷமா…?” படக்கென்று எழுந்து கொண்ட வீர், “கதையோட கடைசி எபி வரை நம்மள மிங்கில் ஆக விடக்கூடாதுன்னே சதி செய்வாங்க போல, சீக்கிரம் வாடி இல்லனா எண்டு கார்டு போட்டு கதையை முடிச்சிடப் போறாங்க…?” என்றவன் ரஞ்சனாவிற்கு கையை கொடுத்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே வந்தவர்களை அனைவரும் ஆர்வமாகப் பார்க்க, இவனுக்கு கன்னத்திலும் இவளுக்கு இதழிலும் காயத்தோடு வர… அனைவரும் “அடேயப்பா, ரெண்டு பேருக்குமே ரொம்ப அடிபட்டு இருக்கு, செம சண்டை போல” என நினைத்திருக்க, இந்த ரெண்டு கள்ள பிசுகளைப் பற்றி அறிந்தவருக்கு மட்டுமே அங்கு வேறு சண்டை நடந்து இருக்கிறது என்பது தெரியவும் இளையவர்கள் சிரிக்க… இளையவர்கள் விஷயம் என பெரியவர்கள் ஒதுங்கிக் கொள்ள…
இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயம் செய்ய முடிவு செய்யப்பட்டு, உயிரின் கையிலும் ரஞ்சனாவின் கையிலும் மோதிரம் கொடுத்து மாற்றிக்கொள்ளச் சொல்ல, முதலில் ரஞ்சனா வீட்டின் கையில் மோதிரம் மாட்டி விட… அடுத்து வீர் மோதிரம் மாட்டுவான் என்று அனைவரும் எதிர்பார்த்து நிற்க…
அவனோ தன் சட்டைப் பையில் இருந்து தாலியை எடுத்து, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரஞ்சனாவின் கழுத்தில் கட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான்…
“டேய்ய்ய்… என்னடா இது…?” என அனைவரும் அதிர்ந்து பார்க்க…
“பின்ன நீங்க எல்லாம் மட்டும் ஜோடி ஜோடியா சுத்துவீங்க… நான் மட்டும் நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் வெயிட் பண்ணனுமா போடா… அதான் நானா ஒரு ஸ்கெட்ச் போட்டு தாலி கட்டிட்டேன்…!” என்றான் அசால்டாக…
“அது சம்பந்தி பையனுக்குப் பொண்ணு மேல ரொம்ப பிரியம், அதுதான் அவசரப்பட்டுட்டா நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க…?” என ரத்தினவேல் பூபதி சங்கடமாகச் சமாளிக்க…
“ஹா ஹா, அதுல என்ன சம்பந்தி இருக்கு… எனக்கு மாப்பிளையோட அதிரடி பிடிச்சி தான் இருக்கு, என் பொண்ணுக்கு ஏத்த மாப்பிளை இவர் தான்…!!” என மெச்சிப் போற்ற மாமனார் கிடைத்துவிட வேறு தடை என்ன? வீர்க்கு தன் மனைவியை கையில் ஏந்திப் கொள்ள அவனைப் பார்த்து மகேந்திரன் குறிஞ்சியை நின்றவாக்கில் தூக்கிப் கொள்ள… விஜயேந்திரன் நெஞ்சில் முகில் சுகமாகத் தஞ்சம் கொள்ள, அவர்களைப் பார்த்த ரகுவீர் தென்றல் கன்னத்தில் முத்தமிட, அவர்களின் அழகான தருணங்களை புகைப்படக் கருவி தன்னுள் சிறைப்பிடித்துக் கொண்டது…
நன்றி…
வணக்கம்…

