ரகுவீர் ரகுநாதனின் ஏக வாரிசு… சிறுவயதில் முதலில் ஆடம்பரமும் அலட்சியமும் கூடவே கண்டிப்பும் இல்லாது வளர்ந்த மேல் தட்டுத் தரப்பினர்களில் இவனும் ஒருவன்…
பயத்தில் குனிந்து கும்பிட்டுப் பேசும் ஊர் மக்கள் முன்னால் நிமிர்ந்து ஒருத்தி கேள்வி கேட்க, அவள் பால் ஈர்க்கப்பட்டு அவளை வளைத்துப்பிடிக்க நினைத்தவன் பிடிவாதமாகப் பிடித்தும் விட்டான். அவன் ஆசையும் மோகமும் தீர்ந்ததும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டான்…
தந்தை பெரும் புள்ளியின் மகளை அவனுக்குப் பார்த்து வைத்திருப்பதாகக் கூறவே, உடனே பறந்து வந்துவிட்டான்…
இதோ மீண்டும் ஒரு புது மாப்பிள்ளை கோலத்தில் சந்தியாவின் அருகே அமர்ந்திருக்கிறான்… அவள் கழுத்திலும் தாலி கட்டப் போகிறான்… அதோ சரியான நேரத்தில் தடுத்துவிட்டார்களே நம் நாயகர்களும் நாயகிகளும்…
“ஒழுங்கு மரியாதையா எல்லாரும் வெளியே போயிடுங்க! என் பொண்ணு கல்யாணம் நடக்குதுன்னு பாக்குறேன், இல்ல இங்க நடக்கிறதே வேற??” எனச் சீறிக்கொண்டு வந்தார் திருச்சிற்றம்பலம்…
“யோவ் இருயா, நாங்க வந்த வேலை முடிஞ்சதும் நாங்களே கிளம்பிப் போயிடுவோம்… அதுக்குள்ள கிடந்து சலம்பி பிபி இழுத்து விட்டுக்காம போய் ஓரமா உட்காரு… மத்ததை நாங்க பார்த்துக்குறோம்…!!” என்ற வீரை முறைப்பதைத் தவிர வேறு வழி இல்லை; ஏனெனில் அவர்கள் ஊர் பெரியவர்களை அல்லவா உடன் அழைத்து வந்து இருக்கின்றனர்…
“இந்த பொண்ண ஏமாத்தி குழந்தையைத் தந்தது இவன்தான்… இப்போ இன்னொரு பொண்ண ஏமாத்தித் தாலி கட்டத் தயாராகிவிட்டான்…!!” என விஜயேந்திரன்…
குதித்துக் கொண்டு இறங்கினார் ரகுநாதன். “டேய், என்ன இங்க வந்து நாடகம் ஆடுறியா நீ…” என ஆரம்பித்தவர் விஜயனின் தீப் பார்வையில்… “எவனுக்கோ பிறந்தது எல்லாம் என் பிள்ளையைத் தகப்பனாக்கப் பார்க்கிறாயா… பெரிய மனுஷங்களா, அவன் தான் ஏதோ மனசுக்குள்ள வன்மத்தை வச்சுட்டு எப்படி எங்க மேல பழி போடுறான்னா, என்ன எதுன்னு விசாரிக்காமல் நீங்களும் வந்துடுவீங்களா…??”
“யோவ், சும்மா அரட்டாதயா! அதை எல்லாம் தீர விசாரிச்சு தான் வந்திருக்காங்க… உன் புள்ள செஞ்ச லீலைகள் எல்லாம் தனியா படமா எடுத்து OTT-ல விட்டா நல்லா ஓடும்… அவ்ளோ இருக்கு…!!” – வீர்
“டேய், வாய மூடுடா… இங்க பாருங்க, எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பஞ்சாயத்துல பாத்துக்கலாம். இப்போதைக்கு எல்லாம் கிளம்புங்க…!!” – ரகுநாதன்…
“எங்க தாலி கட்ட சொல்லு பார்ப்போம்..? உன் பையன் ஏமாத்துன இந்த பொண்ணுக்கும் குழந்தைக்கு ஒரு வழி கிடைக்காம இங்கு ஒரு துரும்பு கூட ஆசையாது…??” – விஜயேந்திரன்
“இந்த **** கழுதைய என் பையன் தான் ஏமாத்தினானு என்னடா சாட்சி இருக்கு…??” அவர் மகன் செய்த திருட்டுத்தனத்தை முன்பே விசாரித்து, சாட்சி மொத்தத்தையும் முன்பே அழித்துவிட்டு இருந்தார். அந்த மிதப்பிலே இப்போது எதிரி கொண்டிருக்கிறார்.
“யோவ், கதையோட கிளைமாக்ஸ் வந்துடுச்சு! இன்னும் சாட்சி இல்லாம சம்பவம் பண்ணுவோம்னு நினைச்சியா…?? அதெல்லாம் எப்பவோ கண்டுபிடிச்சாச்சு…!!” – வீர்
“ஃப்இஇஇவ்” என விசில் அடிக்க, மகேந்திரன் சிலரை அழைத்து வந்து நிறுத்தினான்…
“இவர் யாருனு தெரியுதா…??” என தந்தை மகன் இருவரிடமும் காட்டி கேட்க, இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்..
“என்ன தெரியல ரகு… பாவம் மறந்து இருப்பா, நானே சொல்றேன்…??” என விஜயந்திரன் அவர்களை ஊருக்கு முன் அறிமுகப்படுத்தினார்…
“இவர் தான் நீ தென்றல் கழுத்துல தாலி கட்டின கோவிளின் பூசாரி… உங்க அப்பா கூட கார் ஏற்றுக் கொல்ல பார்த்தாரே அவரே தான்… விதி அவரை காப்பாற்றி என் கிட்ட சேர்த்து விட்ருச்சு… இப்போ உனக்கு ஆப்பு வச்சுருச்சு..!!”
“அப்புறம் இவர் யாருன்னு கேட்க மாட்டேன், நானே சொல்லிடறேன். இவர் தான் நகை ஆசாரி, அதாவது தென்றல் கழுத்துல நீ போட்ட எங்க பரம்பரை நகையை உனக்காக போலியாக செய்து கொடுத்தவர். உங்க அப்பா கொடுத்த கொடைச்சலில் பயந்து ஊரை விட்டு ஓடிட்டார்னு நினைச்சு நிம்மதியா இருந்தீங்களே, அவரையே தான்… மனுஷன் உங்களுக்கு பயந்து ஊரெல்லாம் போகல, வீட்டுக்குள்ளே தான் ஒளிஞ்சிருந்து இருக்காரு. ஆளக் கோழி அமுக்குற மாதிரி அமுக்கி கூட்டிட்டு வந்துட்டான்…!!” என மகேந்திரனுக்குப் பாராட்டைத் தெரிவித்துவிட்டு
“இதோ இவர் தான் தென்றல் வேலை பார்த்த பள்ளியோட தலைமை ஆசிரியர்… இவர் சொன்ன தேள் வரைப்படம் இந்த ஊர்லையே உன் கைல மட்டும் தான் இருக்கு…!!” என்ற விஜயேந்திரன் தாவிச் சென்று ரகுவீரின் முழுங்கை வர நீண்ட சட்டையைத் தூக்கி காட்டினான்…
“இவன் எப்படி கண்டுபிடிச்சான் என்று நினைக்கிறியா..? ரொம்ப யோசிக்காத, எல்லாம் நம்ம ஊர் போஸ்ட்வுமன் யது நந்தினியோட உபாயம் தான்… அது மட்டும் இல்ல, நீ மாற்றி வச்ச டிஎன்ஏ ரிப்போர்ட்டையும் அவள் தான் எடுத்து கொடுத்தாள்… என்ன வாய் தான் கொஞ்சம் ஜாஸ்தி, ஆனா ஆள் பக்காவா வேலை பார்த்து குடுத்துடுச்சு…?” என நந்தினிக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தான். (கிகி ஒரு விளம்பரம்)
“என்ன அதிர்ச்சியா இருக்கா? ஏன் உனக்கு மட்டும் தான் ரிப்போர்ட்டை மாத்தி வைக்க ஆள் இருக்குமா என்ன… நீ எங்க டிஎன்ஏ ரிப்போர்ட்டை தூக்குன அடுத்த நிமிஷம், நான் உன்னோட டிஎன்ஏ சாம்பிள உனக்கே தெரியாம எடுத்துட்டேன்… இதோ நீ தான் அந்த குழந்தைக்கு அப்பாங்கறதுக்கான உண்மையான ஆதாரம்… போதுமா இல்லை இன்னும் வேற சாட்சி வேணுமா…??” என வில்லனைப் பார்த்து நக்கல் பார்வையை வீசினான் விஜயேந்திரன்.
“டேய்…. ஆமாண்டா, நான் தான் அவளை ஏமாத்தினேன், அதுக்கு என்ன இப்போ… உன்னை பழிவாங்க தான் அவளை பயன்படுத்திக்கிட்டேன்… உங்க அப்பாவும் எங்க அப்பாவும் ராஜ குடும்பத்தோட வாரிசு தானடா… உங்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதையும் கிடைக்காமல் போனதுக்கான முக்கிய காரணமே நீங்க எல்லாம் தான்… உங்க ஊர் முன்னாடி அசிங்கப்படுத்த நிறைய முயற்சி பண்ணினோம், அது ஒன்னு கூட உருப்படியா நடக்கல… அதான் அன்னைக்கு பள்ளிக்கூட ஆண்டு விழாவில நீ இவள் பின்னாடி சுத்தினதை பார்த்தேன்… நீ ஆசைப்பட்டவ உனக்கு கிடைக்கக் கூடாதுன்னு அப்போவே முடிவு பண்ணி தான் இவளை கட்டம் கட்டி தூக்கினேன்… அவளை காதலிக்கிற மாதிரி நடிச்சேன்… நான் தப்பு பண்ணி உன்னை மாட்டி விடத்தான் நினைச்சேன்… ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல என்னால நடிக்க முடியல, அதனால விட்டுட்டு போயிட்டேன்… ??” என்றுதும் தென்றலுக்கும் விஜயேந்திரனுக்கும் அன்றைய நாள் நினைவு வந்தது…”
அந்த வருடம் நடந்த பள்ளி ஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் விஜயனைச் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்…
மேடையில் விழா நடந்துகொண்டிருக்க, பிள்ளைகளுக்கு விஜயேந்திரனின் கையால் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டன… தென்றல் வகுப்பின் மாணவர்களுக்குப் பரிசு கொடுக்க அழைக்கவும், அவர்களுடன் வந்த தென்றல் மேடையேற, தென்றலைப் பார்த்ததும் விஜயனின் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது…
முதலில் அதைத் தட்டிவிட்டவன்… பின்பு அவன் இதயம் வேகமாகத் துடிக்க, சற்றும் தாமதிக்காமல் தென்றலின் பின்னோடு சென்றான்.
“ஏங்க, உங்க பேர் என்ன…??” எனத் தயங்காமல் கேட்டான் ஒருவித எதிர்பார்ப்புடன்…
அவள் தென்றல் எனவும்…
இவனுக்கு காற்று இறங்கிய பலூனாக ஆகிப் போனது… இருந்தும் அவன் இதயம் ஏதோ அவனிடம் கூற அதைச் சட்டை செய்யாமல் விட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டான்…
அன்று நடந்த ஒரு நிகழ்வு அவனை இதுவரை கொண்டு வந்து விடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை… அவன் மீது கொண்ட பழி வெறியால் ஒரு பெண்ணின் வாழ்வு நாசமாகக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை…
கண்கள் சிவக்க கோபம் தலைக்கேற ரகுவீரின் சட்டையைப் பிடிக்க அவனும் சலையாமல் விஜயனின் சட்டையைப் பிடிக்க… என இருவரும் முட்டிக்கொண்டு நிற்க…
விஜயேந்திரன் தரப்பு ஆட்களும் ரகுவீர் தரப்பு ஆட்களும் மோதி நின்ற சமையம்…
“போதுஉஉஉம் நிறுத்துங்க…!!” என்ற தென்றலின் காட்டுக்கத்தலில் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகிப் போக…
மணமேடை ஏறிய தென்றல் விஜயன் பிடியில் நின்றிருந்த ரகுவீரரைத் தன் புறம் இழுத்தவள்… அவனை ஓங்கி அறைந்திருந்தாள்… அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரது திகைத்த முகங்களில் இருந்து தெரிந்தது…
“நீயும் ஒரு ஆம்பளையா…?? ஏதோ வயசு கோளாறில் காதலித்துத் தப்பு பண்ணிட்டு வந்து இருந்தா கூட நான் உன்னை மன்னித்து மறந்து ஏற்றுக்கொண்டிருப்பேன்டா… ஆனா நீ கேவலம் அவரப் பழிவாங்குறதுக்காக என்னை பயன்படுத்திட்டே சொன்ன பாரு… உன்னை விட கேவலமான பிறவியை நான் பார்த்ததே இல்லை… உன்னை காதலிச்சது நினைச்சா எனக்கு அவ்ளோ அருவெறுப்பா இருக்கு…??” என அதை முகத்தில் காட்டியவள் தொடர்ந்து
“ஏன்டா, உன்னோட பழிவெறிக்கு என்னோட கர்ப்பமும் காதலும் தான் கிடைச்சதா? ஆம்பளையா இருந்தா அருவாளை எடுத்துக்கிட்டு நேருக்கு நேர் போய் சண்டை போட்டு செத்திருக்க வேண்டியது தான? அதை விட்டுட்டு இப்படி ஒரு காரியம் செஞ்சிருக்கியே ஈனப்பிறவியாடா நீ! எப்போ என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சேன்னு சொன்னியோ, அப்பவே என் மனசுல இருந்து நீயும் என் காதலும் செத்துப் போயிட்டீங்க. நீ எப்படியாவது நாசமா போ! என் குழந்தை எங்கடா வச்சி இருக்க ? என் குழந்தையை மட்டும் என்கிட்ட கொடுத்துடு, அவனை எதுவும் பண்ணிடாதன்னு உன்னை கெஞ்சி கேட்கிறேன். அவன் என்னோட உயிரிலும் உணர்விலும் உருவான உயிரடா… அவனை எதுவும் பண்ணிடாத, அவன் இல்லாம என்னால வாழவே முடியாதுடா, தயவு செஞ்சு என் குழந்தையை என்கிட்ட கொடுத்துவிடு…!” அதுவரை ரகுவீரின் சட்டையை பிடித்து கேள்வி கேட்டிருந்தவள், குழந்தையை நினைத்து உடைந்து அழத் தொடங்கினாள்…
“உன்னை காதலிச்சது தவிர வேற என்னடா பாவம் நான் பண்ணல… இதுக்கு அன்னைக்கே என்னை சாக விட்டு இருந்திருந்தா கூட நிம்மதியா செத்து இருப்பேனேடா… இப்படி நாலு பேரு முன்னாடி கூனிக்குறுக வச்சு என்னை உயிரோட கொன்னுட்டியேடா… இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல, எனக்கு எதுவுமே வேணாம், என் குழந்தை மட்டும் போதும், தயவு செஞ்சு என் குழந்தையை என்கிட்ட கொடுத்துடு… நானும் என் குழந்தையும் உன்னை எந்த வகையிலும் தொந்தரவு பண்ண மாட்டோம்… குழந்தையைக் கொடு… இவ்வளவு கெஞ்சுறேன், உனக்கு என் மேல இரக்கமே வரலையா? கொடுடா பாவி, என் குழந்தையை கொடு…!!” எனத் தென்றல் ரகுவீர் சட்டையைப் பிடித்து உலுக்கியபடியே மடங்கி அமர்ந்து கதறினாள் மங்கை…
“அடச்சீ நிறுத்து! குழந்தையை எங்கேயோ தொலைச்சிட்டு இங்க வந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்க, ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிடு… இல்லை அழுது சீன் போடுவேன்னு சொன்னா… உன்னையும் உன் குழந்தையையும் தடம் தெரியாம அழைச்சிருவேன்…!!!” என ரகுநாதன் மிரட்ட…
“யோவ், என்ன சொல்ற நீ? அப்போ குழந்தையை நீ தான் கடத்தி வச்சிருக்க?” என ரகுவீர் கேட்டதிலே அவனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்தது…
“ஆமான்னு சொன்னா என்னடா பண்ணுவ?”
“பெரிய மனுஷனாயிட்டயா நீ? பச்சக் குழந்தையை போய் சைக்கு ஒழுங்கு மரியாதையா கொண்டு வந்து கொடுத்துடு, இல்ல நடக்கிறதே வேற!” என ரகுவீர் தகப்பனை மிரட்டினான்.
“என்னடா மகனே, பெத்த பாசமா…? அது போனா என்ன, ஊர்ல பொண்ணுங்களுக்கா பஞ்சம்? அதெல்லாம் எப்பவோ கதையை முடிக்க சொல்லியாச்சு, அது விதி, அவ்வளவுதான். விட்டுட்டு போவியா?” என பிள்ளையிடமே சாக்கடையாகப் பேசினான் பெற்றவன்…
“என் குழந்தை என்னடா செஞ்சது…!!” ரகுவீர் தன் தகப்பனை அடிக்கப் பாய, அதற்குள்
“யோவ் பெருசு! எங்க முன்னாடியே இப்படி பேசுறியே, உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லையா? ஏன்யா இவ்ளோ ஏற்பாடு பண்ண, நாங்க குழந்தையை காப்பாத்த மாட்டோமா?” என விஜயேந்திரன்…
“எனக்கு நல்லா தெரியும், இந்த கல்யாணம் உனக்கு எவ்வளவு முக்கியம்னு. கண்டிப்பா இந்த கல்யாணம் முடியற வரைக்கும் நீ குழந்தையை ஒன்னும் பண்ண மாட்ட. நான் நெனச்சேன், நீ நடத்திட்ட; நீ இந்த பக்கம் வந்ததும் குழந்தையை நான் அந்த பக்கம் காப்பாத்திட்டேன்!” என்றவன் வாசல் புறம் பார்த்தான்…
விஜயனின் ஆட்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தனர்… முகில் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு தென்றலிடம் சென்றான்…
தென்றலின் நெஞ்சு உலர்ந்து விட்டது; கைகள் நடுங்கியபடி குழந்தைக்காக நீட்ட… குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் அவசர அவசரமாகக் குழந்தையைப் பரிசோதித்து, அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதவள், சில நிமிடங்களிலேயே தன்னைத் தற்காத்துக் கொண்டு நிமிர்ந்தாள்…
அப்போதுதான் ரகுவீர் குழந்தையைப் பார்க்க முற்படுவதைக் கண்டாள்… பொங்கி வந்த சினத்துடன்…
“இந்தக் குழந்தை உனக்கும் எனக்கும் பிறந்த காதல் சின்னம் என இதுவரைக்கும் என்ன நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா அது உன்னோட பழிவெறிக்கு பிறந்தது அவனுக்குத் தெரியாது; உன்னோட பாவத்தின் நிழல் கூட என் பிள்ளை மேல படக்கூடாது… அப்படி மீறிப் பட்டா அன்றைக்கே நானும் என் பிள்ளையும் எரிஞ்சு சாம்பலாக்கிடுவோம்…!!” என சபதம் இட்டவள், யாரையும் எதிர்பாராது அங்கிருந்து செல்ல முற்பட்டவளை சகுந்தலா ஆறுதலாக அணைத்துத் தன்னோடு அழைத்துச் சென்று விட்டார்…
“முடிஞ்சுதா? நீங்க வந்த வேலை முடிஞ்சுதா? சந்தோஷமா இப்ப… எல்லாம் கிளம்பிப் போங்க… இனிமேலாவது என் பொண்ணோட கல்யாணம் நிம்மதியா நடக்க விடுங்க… ??” என்றார் திருச்சிற்றம்பலம்…
“நீங்க போய் மாலை போட்டுக்கிட்டு உட்காருங்கள் மாப்பிள்ளை…!” என ரகுவீரைப் பிடித்து அமர வைக்க முயல…
அதற்குள் மாலையை கழட்டி எறிந்த சந்தியா… “போதும் நிறுத்துங்க பா! யாருக்கு யாருப்பா மாப்ள? உங்க கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணை ஏமாத்தி குழந்தை கொடுத்திருக்கான், அதுவும் பழிவெறிக்காகப் பண்ணேன்னு அவன் வாயாலேயே சொல்றான்… அவனுக்குப் போய் உங்க பொண்ணக் கட்டி வைக்கப் பாக்குறீங்களே… இதெல்லாம் ஒரு நல்ல தகப்பன் செய்ற வேலையா? இனி இந்த கல்யாணம் நடக்காதுபா…!!” என சாட்டை அடியாகக் கேள்வியைக் கேட்டவள் மணமேடையை விட்டு இறங்கப் போக…
தென்றலின் நெஞ்சு உலர்ந்து விட்டது; கைகள் நடுங்கியபடி குழந்தைக்காக நீட்டினாள்… குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் அவசர அவசரமாகக் குழந்தையைப் பரிசோதித்து, அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதவள், சில நிமிடங்களிலேயே தன்னைத் தற்கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்…
அப்போதுதான் ரகுவீர் குழந்தையைப் பார்க்க முற்படுவதைக் கண்டாள்… பொங்கி வந்த சினத்துடன்…
“இந்தக் குழந்தை உனக்கும் எனக்கும் பிறந்த காதல் சின்னம் என இதுவரைக்கும் என்ன நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா அது உன்னோட பழிவெறிக்கு பிறந்தது அவனுக்குத் தெரியாது. உன்னோட பாவத்தின் நிழல் கூட என் பிள்ளை மேல படக்கூடாது… அப்படி மீறிப் பட்டா அன்றைக்கே நானும் என் பிள்ளையும் எரிஞ்சு சாம்பலாக்கிடுவோம்…!!” என சபதம் இட்டவள், யாரையும் எதிர்பாராது அங்கிருந்து செல்ல முற்பட்டவளை சகுந்தலா ஆறுதலாக அணைத்துத் தன்னோடு அழைத்துச் சென்று விட்டார்…
“முடிஞ்சுதா? நீங்க வந்த வேலை முடிஞ்சுதா? சந்தோஷமா இப்ப… எல்லாம் கிளம்பிப் போங்க… இனிமேலாவது என் பொண்ணோட கல்யாணம் நிம்மதியா நடக்க விடுங்க… ??” என்றார் திருச்சிற்றம்பலம்…
“நீங்க போய் மாலை போட்டுக்கிட்டு உட்காருங்கள் மாப்பிள்ளை…!” என ரகுவீரைப் பிடித்து அமர வைக்க முயன்றார்…
அதற்குள் மாலையை கழட்டி எறிந்த சந்தியா… “போதும் நிறுத்துங்க பா! யாருக்கு யாருப்பா மாப்ள? உங்க கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணை ஏமாத்தி குழந்தை கொடுத்திருக்கான், அதுவும் பழிவெறிக்காகப் பண்ணேன்னு அவன் வாயாலேயே சொல்றான்… அவனுக்குப் போய் உங்க பொண்ணக் கட்டி வைக்கப் பாக்குறீங்களே… இதெல்லாம் ஒரு நல்ல தகப்பன் செய்ற வேலையா? இனி இந்த கல்யாணம் நடக்காதுபா…!!” என சாட்டை அடியாகக் கேள்வியைக் கேட்டவள் மணமேடையை விட்டு இறங்கப் போக…
“யோவ் திருச்சிற்றம்பலம்! என்னயா கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்துறியா? இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உனக்கு இருக்குதுயா! உன் பொண்ணு இல்லன்னா என் பையனுக்கு வேற பொண்ணே கிடைக்காதா? நீ வாடா மகனே… உனக்கு வேற பெரிய இடத்துல இருந்து பொண்ணு பாத்து கட்டி வைக்கிறேன்… யோவ் சிற்றம்பலம்! இருந்தாலும் உன் பொண்ணுக்கு இல்ல திமிராகாதுயா! நீ வேணா பாரு, உன் பொண்ணுக்கு கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகாமல் முதிர்கண்ணியாக இருந்தாதான் சாகப் போறா…!!” என கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாது சபித்து விட்டுச் சென்றார்…
சந்தியாவின் கையில் முகம் புதைத்துத் தொய்ந்து அமர்ந்து இருந்தவர் அருகே சென்ற மகேந்திரன்…
“நீங்க ஒன்னும் தப்பா நினைக்கலைனா உங்க பொண்ணு கழுத்துல நான் தாலி கட்டுறேன்…!!” என்றவனை நிமிர்ந்து பார்த்தவரின் முகத்தில் நம்ப முடியாத அதிசயத்தின் சாயல்…
“நிஜம் சார், எங்களால தானே இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு? இதைச் சரி செய்யற பொறுப்பும் எங்களுக்கு இருக்கு. நீங்க சம்மதிச்சா உங்க பெண்ணின் கழுத்துல இப்பவே நான் தாலி கட்டுறேன்..!!” என்றவனின் கையை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டவர்…
“தம்பி என்ன மன்னிச்சிடுங்க தம்பி! பெரிய குடும்பம் பெரிய குடும்பம் தான், நீங்க நிரூபிச்சிட்டீங்க… உங்களை புரிஞ்சுக்காம நான் உங்களை பத்தி தப்பா பேசி உங்க வீட்டு ஆளை கொல்லப் பார்த்தேனே.. நான் மனுஷனே கிடையாது தம்பி, என்ன மன்னிச்சிடுங்க தம்பி…!!” என்றதும் மகேந்திரன் விஜயேந்திரனைப் பார்க்க…
அவன் ஆம் என்று தலை அசைத்து உறுதிப்படுத்தினான். அன்று ஆற்றங்கரையில் முகிலைச் கொல்ல முயன்றது திருச்சிற்றம்பலத்தின் ஆட்கள் தான்; தன் மகள் வாழ்வை அழித்ததற்காக முகிலைப்பழிவாங்கவே அவர் அப்படிச் செய்தார்… விஷயம் அறிந்தபோது விஜயேந்திரன் கோபத்துடன் திருச்சிற்றம்பலத்தை அழிக்கத் துணிந்த சமயம் தடுத்து நிறுத்தினாள் முகில்…
“என்னால தானே அவர் பொண்ணோட நிச்சயம் நின்னு போனது… அவருக்கும் அந்த பொண்ணுக்கும் எவ்வளவு பெரிய கஷ்டம்… தப்பா சரியோ அவர் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏத்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு… எனக்காக தயவு செய்து இந்த விஷயத்தை பெருசுபடுத்தாதீங்க…!!” என முகில் வேண்டிக் கொண்டதன் பெயரிலே விஜயேந்திரன் திருச்சிற்றம்பலத்தை எச்சரித்ததோடு நிறுத்திக் கொண்டான்…
“மன்னிக்க வேண்டியவர்களை மறந்து விட்ட போது தண்டிக்க நான் யாரு…!” என நறுவிசாக நழுவிக்கொண்டான் மகேந்திரன்…
“அப்போ தம்பி என் பொண்ணு வாழ்க்கை…!!” என பயமும் ஆவலும் கலந்தபடி கேட்டார்…
“கொடுத்த வாக்கு கொடுத்தது தாங்க, நீங்க எப்ப சொன்னாலும் நான் தாலி கட்ட ரெடி…!!” என மகேந்திரன் தெளிவாகச் சொன்னான்…
“அப்பா கடவுளே, என் பொண்ணு வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டிடுப்பா! அம்மாடி சந்தியா, போய் மணமேடையில் உட்காருமா…!!” என பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் கூற…
“அவசரப்படாதீங்கப்பா, இப்படி அவசரப்பட்டு அவசரப்பட்டு தான் நம்மள இங்க வரைக்கும் கொண்டு வந்து விட்டு இருக்கு… இப்போ இந்த கல்யாணம் நடக்கணுமா வேணாமான்னு நான் தான் முடிவு பண்ணனும்…!!” என சந்தியா உறுதியாகக் கூற…
“என்னம்மா சொல்ற, முன்னவன் மாதிரி இல்லடா இவர், எல்லா வகையிலும் நல்லவர்டா, உன் வாழ்க்கைக்கு பொருத்தமானவரும் கூட… தம்பி, அது சின்ன புள்ள, ஏதோ தெரியாம பேசுது, நீங்க எதுவும் பெருசா எடுத்துக்காதீங்க…!!” எப்படியாவது பிள்ளைக்கு திருமணம் செய்தாக வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர் பேச…
“வாழப் போறது நான் பா… இங்க நான் தான் முடிவு பண்ணனும் எனக்குப் பொருத்தமானவர் யார் என்று… நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா, நான் அவர் கிட்ட பேசிக்குறேன்!” என்றவள்.
“மிஸ்டர் மகேந்திரன்… நீங்க தியாகம் செய்ற அளவுக்கு என்னோட மதிப்பு ஒன்னும் குறைஞ்சு போயிடல…!” என்றவள், சற்று நீதானித்து கண்ணில் உயிர் வலியுடன் நின்று இருந்த குறிஞ்சியை ஒரு பார்வை பார்த்து விட்டு… “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல இப்போவும் அப்போவும்… அதுக்காக நான் வாழ்க்கை முழுக்க கல்யாணமே பண்ணிக்காம இருக்கப் போறதும் இல்லை. எனக்கானவர் இனிமேல்தான் பிறக்கப் போறார்… அப்படி எனக்கானவர் பார்க்கும் போது… நிச்சயம் அவரை எதுக்காகவும் யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்…!!” என நிமிர்வாகக் கூறியவளை மெச்சுதலுடன் பார்த்தது ஒரு ஜோடி கண்கள்… அது பாம்பேயில் இருந்து இங்கு வந்து இந்தியாவின் முக்கிய தொழில் அதிபரான நிதின் சாம்ராட்டின் கண்கள்… நிழல் உலகில் வாழும் அவனது வாழ்க்கையில் சந்தியா ராகம் பாடுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்…
அப்பா, ஒருவழியா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு, இனிமே கல்யாணம் தானே…???
ஆமா ஆமா, கல்யாணம்..?? கல்யாணமே தான்…!!
ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல… வீருக்கும் தென்றலுக்கும், குறிஞ்சிக்கும் அவளுக்குப் பார்த்த வேறு மாப்பிளைக்கும்…
என்ன பரமா (ரைட்டர்), இது உனக்கே நியாயமா…???
கதையை கடைசி வரை சுவாரசியமா (கலவரமா) கொண்டு போகணும்னா எதுவுமே தப்பு இல்லை… வரட்டா புஜ்ஜிஸ்…

