முகிலே!! உன் முகவரி என்ன-25

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 03/Aug/2026 ◷ 8 min read

முந்தைய நாள் இரவில் வீர் படுத்திய பாட்டில் ரஞ்சனாவிற்கு இரவு நேரக் கிலி வந்து பிடித்துக் கொள்கிறது…

தரித்த ஆண் வேடத்திற்கு ஏற்ப இலகுவான இரவு உடை அணிந்தவள்… “கொய்யால உன் கிட்ட இருந்து வாங்குனா தான கண்ட கருமத்தையும் காமிச்சு பாடு படுத்தவ…!!” என்று கையோடு கொண்டு வந்த தலையணை, போர்வை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, வீர் அறைக்கு போகலாமா வேணாமா எனத் தவித்து நின்றாள்…

குட்டி போட்ட பூனையாக அவன் அறை வாயிலில் நடை பயின்று கொண்டிருந்தவளைப் பின்னால் இருந்து அணைத்துத் தூக்கிய வீர், அவளை உள்ளே ஏந்திச் சென்றான்…

“விடு விடுங்க பாஸே, இப்போ எதுக்கு என்னை தூக்கிட்டு வந்திங்க…??” என அவனிடம் இருந்து விலகி காரமாக கேட்டாள் ரஞ்சனா…

“நீதானடா வெளியே நின்னுட்டு, உள்ள வரலாமா வேணாமான்னு பாண்டி விளையாடிட்டு இருந்த, அதான் அண்ணன் உள்ள தூக்கிட்டு வந்தேன்…!!” என கூறிவிட்டு அசால்ட்டாக அவள் முன்பு ஆடை மாற்றினான் வீர்…

திராவிட நிற மேனியில் அழகழகாக வரிசையாகப் படி கட்டுகள் திண்ணிய மார்பும் திரண்ட புஜங்களும் கன்னிப் பெண் மனதைக் கலங்கச் செய்தது… “ஐயோ டெம்ப்ட் பண்றானே…!!”

“அடியே ரஞ்சு, ஸ்டெடி ஸ்டெடி ஆளு, வில்லங்கம் புடிச்சவன் கௌவுந்தூடாத… இவன் பார்க்கப் பக்கவா இருந்தாலும் காஜி முத்தின கேஸ் ஏமாந்துடாத, ஸ்டெடி ஸ்டெடி…!!” எனத் தனக்குத் தானே சொல்லி கொண்டவள்…

அடுத்து அவன் ஏதேனும் ஏடாகூடமாகச் செய்யும் முன் பதுங்கி விடணும் என நினைத்தவள், அவ்வறையில் மற்றொரு ஜீவன் இருப்பதையே காட்டிக் கொள்ளாமல் போர்வையை விரித்து, தலையணையில் தலையை வைத்து, கம்பளியை இழுத்து முற்றுமாகப் போர்த்திக்கொண்டவளின் கணுக்கால் கூட வெளியே தெரியவில்லை… விடவில்லை அவ்வளவே

ஆழ்ந்த நித்திரையைப் பிடிக்க அவள் பைபாஸ் ரூட் எடுக்கும் போது யாரோ குறுக்கே வந்து குட்டி கரணம் போடுவதை உணர்ந்தவள், “ச்சீ பே…!” என உதறிவிட்டு மீண்டும் பைபாஸ் ரூட்டைப் பிடிக்க இம்முறை எவனோ லாரியை கொண்டு வந்து குறுக்கே விட, “அச் சே பே…!” என எட்டி உதைத்துவிட்டுத் திரும்பிக் குப்புறப் படுத்துக்கொண்டவள், இம்முறை மாற்று வழியாக மெட்ரோவைத் தேர்ந்தெடுக்க… விட்டேனே பார் என அங்கும் வந்து புல்டோசரை விட… அட எவண்டா அது என நாக்கை கடித்துக்கொண்டு எழுந்தவள், எதிரே நின்ற ஜந்துவைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்…

அட, நல்லா உத்துப் பாருமா, அது நம்ம வீர் தான்…

பழைய காலத்து வில்லன் பாணியில் உடை அணிந்து, அதான் பாஸ் உள்ளே போட்டு வைத்திருக்கும் முண்டா, பனியன் வெளியே தெரியும்படி ஒரு சல்லைடைத் துணியில் சட்டை கழுத்தில் துணி முடிச்சு, அதேபோல் கையில், முகத்தில் மீசை என வில்லனுக்கே உரிய யூனிஃபார்ம இருந்தது. அதே உடையைத் தான் வீர் அணிந்து இருந்தான்… கூடவே போதாத குறையாக இரண்டு கையிலும் சாராயப் பாட்டிலும், முகத்தில் கோணல் சிரிப்பும் ஆக நின்று இருந்தான் வீர்…

“என்னடா பண்ணப் போற…?” என எச்சில் கூட்டி விழுங்கினால் மாது

“ஹிஹி, சின்னதா ஒரு ரேப்…?” என வாயெல்லாம் பல்லாகக் கூறியவனே, பார்த்துப் பதறினால்…

“ஏய் டேய், நான் ஒரு ஆம்பளடா…?” என கிட்டத்தட்ட அலறியே விட்டாள்… எங்கே இவன் கண்டுபிடித்து விட்டானோ…? என்கிற பயம்.

“இதுல என்ன இருக்கு? இப்போ அதெல்லாம் சட்டப்படி ஆகிடுச்சே…!” என வீர் கோணலாகச் சிரித்தபடி அருகில் வர…

பதறிய ரஞ்சு தன் நெஞ்சின் குறுக்கே கைகளை வைத்து அணைத்தபடி… “சட்டமே இருந்தாலும் விருப்பமில்லாமல் யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது… என்கிட்ட வந்த உன்னை கொன்றுடுவேடா…?” என ஏகத்துக்கும் கத்தினாள் ரஞ்சனா… “இன்னைக்கு மர்டர் உறுதி…!” என எண்ணிக் கொண்டாள்…

அவள் முகத்தின் அருகே வந்தவனின் மூச்சுக்காற்றும் ரஞ்சனாவின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது… முத்தமிடும் இடைவேளையில் இதழ்கள் இரண்டும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க…

“ஹாஹா, பயந்தட்டியா பொடியா? நான் சும்மா சொன்னேன்… ஹாஹாஹா! பாரு எப்படி பயந்துட்ட? அதுவும் நல்லதுக்குத்தான். இனி உனக்குத் தூக்கம் வராது பாரு, இனிக்கு நைட் முழுக்க எனக்கு கம்பெனி கொடு!” என சரக்கு பாட்டிலை வைத்துக்கொண்டு அழைக்க…

சற்று தெளிந்தவள் “அட கொலைகார பாவி! கொஞ்ச நேரத்துல மரண பயத்தைக் காட்டிட்டான் கடங்காரன்…!” என புலம்பியவள், அப்போதுதான் வீர் சொன்ன கடைசி வரி ஞாபகம் வர… “ஐயோ சாமி, இன்னைக்கு என்ன எழவு கொட்ட இருக்கான்னு தெரியலையே…?” என்றவளுக்கு மீண்டும் கிலி பிடித்துக் கொண்டது…

சரக்கு பாட்டிலை திறந்து இரண்டு பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றியபடியே, “பொடியா இதுக்கு முன்னாடி நாட்டு சரக்கு குடிச்சு இருக்கியா…?” என்றான்…

“எது சரக்கா? நான் டீ டோட்டலர் பாஸ்… எனக்கு இந்த சிகரெட், தம்மு, சரக்கு வடையெல்லாம் பிடிக்காது, கூடவே ஆகாது…!” என முகத்தை சுளித்துக் கொண்டான் ரஞ்சன்…

“இப்படி அப்ராணியா இருந்து வாழ்க்கையே வீணாக்கிட்டயே டா… இரு, உனக்கு எல்லாத்தையும் கத்து தந்து உன்னை அஃக்மார்க் ஆம்பளயா மாத்தி விடுறேன்…!” என வீர் சூளுரைத்தான்.

“யார் பாஸ் ஆம்பள…?? தம்மு குடி கூ*** இருக்கிறவன் தான் ஆம்பளையா…?? இதையெல்லாம் அறவே வெறுத்து குடும்பத்துக்காக மட்டுமே வாழ்ற ஆண்கள் எல்லாம் ஆம்பளை இல்லையா… நீங்களாவே இதெல்லாம் செஞ்சா தான் ஆம்பளைனு ஒரு வரையறை வச்சிக்கிட்டு கூத்தடிக்கிறீங்க… அது போதாதுனு ஒழுக்கமா இருக்குறவனையும் இதெல்லாம் இல்லனா நீ ஒரு ஆம்பளையே இல்லைன்னு அவனையும் இந்த சாக்கடையில் இழுத்து விட்டு ஐக்கியமாகிடுறீங்க… உங்கள மாதிரி ஆட்களால் எத்தனை குடும்பம் சீரழிது தெரியுமா…?” என ரஞ்சனா பொங்கி எழ…

“டேய் டேய் இன்னும் சரக்கே அடிக்கல டா, அதுக்குள்ள சொற்பொழிவு இந்த ஆத்து ஆத்துர இப்போ என்ன தாண்டா நீ சொல்ல வர…?” என வீர் முழிக்க…

“குடிக்கிறவன் *** இருக்கிறவன் எல்லாம் மட்டும் ஆம்பள இல்லை, கொள்கை கோட்பாடு உள்ளவனும் ஆம்பள தான்… இத சொல்ல வந்தேன், போதுமா…?” என ரஞ்சன்

“நீ சொல்றது புரிஞ்சிக்கிறதுக்கே ஒரு பாட்டில் தேவை படும் போலையே…??” என்றவனை முறைத்தாள் ரஞ்சனா…

“சரி விடு, நீயே உன் கொள்கையையும் கோட்பாட்டையும் பிடித்துக்கொண்டு அழு… எனக்கு சரக்கு இல்லையென்றால் தூக்கம் வராது…” வீர்.

“ஏன் அப்படி? இதற்கு ஏதாவது காரணம் இருக்கா…?” ரஞ்சனா யோசனையாகக் கேட்டாள்.

“ஒண்ணா, ரெண்டா, நூறு, ஆயிரம் இருக்கு, என்னத்த நான் சொல்லுவேன்…!” என் வீர் ஒரே கப்பில் சரக்கு அடித்துக் கொண்டு, உதட்டைத் துடைத்துக் கொண்டு, கலங்கியபடி சொல்ல,

“சொன்னால் தீராத பாரம் என்று ஒன்றும் கிடையாது… சொல்லுங்கள் பாஸ், நான் கேட்கிறேன்…!” ரஞ்சனா வெகு அக்கறையாகக் கேட்க,

“நான் என்னன்னு சொல்லுவேன்? எருமை மாடு வயசாகுது, இன்னும் ஒரு கேர்ள் ஃபிரண்ட் கூட அடிக்கக் கூட ஒரு கிரஷ் இல்லையே…?” என மூக்கை உறிஞ்சியபடி சொன்னவனைப் பார்த்து அதிர்ந்தாள் ரஞ்சனா…

அவளோ இவனுக்கு ஏதாவது சோகம், அதாவது காதல் தோல்வி போன்ற ஏதாவது இருக்கும் என எண்ணி இருந்தவளுக்கு, வீர் சொன்ன காரணம் அதிர்ச்சி அளிக்கத் தானே செய்யும்…

“நாயே, நீ எல்லாம் ஒரு ஆளுன்னு நீ சொல்ற கதையை சீரியஸா உட்கார்ந்து கேட்டேன் பாரு, என்னை செருப்பால அடிக்கணும்… இல்லை உன்னை என் கூட கோர்த்து விட்டா பாரு, அவள அடிக்கணும்…!” (ஐயோ ரைட்டர் பாவம்)

“ரைட்டர தானா நல்லா அடி, மத்த ரெண்டு ஹீரோவுக்கு பிட்டு சீன் வச்சிட்டு எனக்கு மட்டும் காமெடியிலேயே காலம் தள்ளுது…!” என வீர் புகார் வாசிக்க… (தம்பி நீ அதுக்கு சரிப்பட்டு வரலடா… அதுக்கு நான் என்ன செய்யணும்?)

“ரொம்ப முக்கியம் போடா, நான் தூங்கப் போறேன்…!” எனத் தப்ப நினைத்தவளையும் விடாது தன் கைக்குள் இழுத்துப் பிடித்தவன்…

“அதெல்லாம் போகக்கூடாது… இதுவரை என் சோகக் கதையைக் கேட்டு எத்தனையோ பேர் தெறித்து ஓடிப் போயிருக்காங்க… நீ ஒருத்தன் தான் நின்ன… நின்னாலும் என்னன்னு கேட்டே… அதனாலே எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு… நீ என்ன பண்ற விடிய விடிய எனக்கு ஊட்டி கொடுத்து நான் புலம்புறதை எல்லாம் காது கொடுத்துக் கேட்கிற…!!’வீர்

“அட நாசமத்துக்குப் போறவனே, இது என்ன மாதிரி கொடுமைடா! நரகத்தில் கூட இந்த மாதிரி தண்டனை கிடையாது… தெரியாம உன்கிட்ட சிக்கிக்கொண்டே என்னை காப்பாத்த யாருமே இல்லையா…?” என புலம்புவதை விட்டால் வேறு

வழி இருக்கப் போவதில்லை, இருந்தாலும் வீர் விடப் போவதில்லை…

மூச்சு முட்டக் குடித்த வீர் ரஞ்சனாவின் மடியில் ஜம்பமாகப் படுத்துக்கொண்டு…

“ஹிஹி டேய் பொடியா… பொடியா… தூங்கிட்டியாடாஆஆ…??”

“இல்லை சொல்லி தொலை…??” வந்த தூக்கத்தைத்தான் கழுதை கத்தியை விரட்டி விட்டதே…

“ம் ஹும் ஹிஹி எனக்குஉஉஉ…!!” விக்கல் வேறு இடையே

“ம்ம் உனக்கு… ஹாவ்வ்…!!” என கொட்டாவி விட்டாள்…

“எனக்கு உன்ன ரொம்பப் புடிச்சிருக்குடா… அதுவும் எப்படி உன் மடியில படுத்துட்டு இருக்குறது ரொம்ப ரொம்பப் பிடிச்சி இருக்குடா பொடியா! அப்படியே மெது மெதுனு பஞ்சு மூட்டக் கணக்கா இருக்கு…??”

“இருக்கும் இருக்கும் எடுப்பட்ட நாயே, நடுராத்திரித் தூக்கத்தைக் கெடுத்துட்டு… நாய்க்கு நக்கல பாரு…?” என உள்ளே பெருமினாள்

“பொடியா நீ மட்டும் பையனா இல்லாம பொண்ணா இருந்திருந்தாச்சு…!!” என முகத்தை அவள் மடியில் புதைத்துக்கொண்டு சொகுசாக உரசினான் வளரந்த தடியன்.

“இருந்து இருந்தா…???” என கேட்டவளுக்குத் தூக்கம் தூரம் போய் ஆர்வம் அருகில் வந்தது; அவன் என்ன பதில் சொல்லக்கூடும் என்பதை எதிர்பார்த்து…

“ம்ம்ம் உன்னைத் தூக்கிட்டுப் போய் நானே தாலி கட்டி கூட்டி வந்து, இத்தனை வருஷ பசிக்கு உன்னை வச்சு வச்சு ரசிச்சு ருசிச்சு அப்படியே முழுங்கிடுவேன். ஒவ்வொரு ராத்திரியும் உன்னை வச்சு புதுசு புதுசா ட்ரை பண்ணி, அதுலயும் அந்த ஸ்டைல்ல உன்னை…??” என பச்சை, மஞ்சள், சிவப்பு என எல்லாவற்றிலும் கலந்து கட்டி கூற…

பிளஷ்ஷே இல்லாமல் சிவந்து போனாள் காரிகை…

அவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்க சகியாமல், “ஐயோ சாமி போதும், நான் தான் ஆம்பளையாச்சே, அப்புறம் என்ன அந்தப் பேச்சு வேண்டி கிடக்கு…!!” என அவனை அடக்கும் சாக்கிட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்…

“ப்ச், அதுனால என்ன? பரவலா எனக்குத் துணை நீ…!! உனக்குத் துணை நான்…!! நாம ரெண்டு பேரும் காலத்துக்கு சேர்ந்து இப்படியே இருந்தா எப்படி இருக்கும்…??” என வீரம் காட்டி…

“ரொம்ப கேவலமா இருக்கும் அடேய், விடுடா எனக்கு இதெல்லாம் எதுவுமே வேணாம்… தூங்க விடுடா பன்னி…!!” என அவனைத் தள்ள முயன்றவளின் இடையைக் கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் குடித்துவிட்டுத் தூங்க விடாமல் அவளை அவ்வளவு இம்சை செய்தான்…

பாவம் ரஞ்சனாவின் காது அவன் உளறலைத் தாங்காது; தற்கொலை செய்து கொள்ளும் ஏதோ ஒரு பிரிய மனசு பண்ணி தப்பித்து விட்டது…

நடந்தவற்றை கூறிவிட்டு இந்தத் தோழிகளின் முகத்தைப் பார்க்க…

அவர்கள் இருவரும் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு… கொளக் எனச் சிரித்து வைத்தனர்…

சிரித்து ஓய்ந்தபின் குறிஞ்சி ரஞ்சனாவிடம்…

“ரஞ்சனா, நீ சொன்னது சிரிப்பாக இருந்தாலும், அந்த நேரத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும்… எனக்குத் தெரிந்தவரை வீர் இப்படிப்பட்டவன் கிடையாது… எனக்கு என்னமோ அவனுக்கு உன் மேல் சந்தேகம் வந்திருக்குமோ என்று தோன்றுகிறது, அதனால்தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறானோ என்று சந்தேகமாக இருக்கிறது… நீ எதுக்கும் அவன் கிட்ட ஜாக்கிரதையாக இரு…!!” என்று எச்சரித்தாள்.

“ஹாஹா, அந்த முட்டாள் பீசாவா… என்னை கண்டுபிடிக்கப் போறது… இருந்தாலும் நீ சொன்னதுக்காக இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறேன்…!!” என உறுதி கொடுத்தாள் ரஞ்சனா…

“அது சரி, எங்க ரெண்டு பேருக்கும் கதை கேட்டவள்… உன் சங்கதி என்ன என்று சொல்லாமல் நழுவிவிடலாம் என்று பார்த்தியா? ஒழுங்காகச் சொல்லு முகிலு…!!” என குறிஞ்சி கேட்க, “ஆமாம் சொல்லு முகில், நீ போன காரியம் சக்சஸா…??” என ரஞ்சனாவும் நடந்ததை கூறும்படி ஊக்குவித்தாள்.

“எப்படி சொல்வது…!!” எனத் தயங்கியவாறு ரஞ்சனாவைப் பார்க்க…

“ஏன் பிள்ளை அமைதியாக இருக்கிறாய்? ஒருவேள நான் இருக்கிறேன் என்று கூச்சப்படுகிறாயோ? சரி, நான் போகிறேன், நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளுங்கள்…??” என குறிஞ்சி அவள் தயக்கத்தைக் கண்டு எழுந்து…

“ஹே, இரு! குறிஞ்சி, அப்படி எல்லாம் இல்லை. நான் சொல்றத நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியாம தான் கொஞ்சம் தயங்கினேன், தவிர உன்னையும் ரஞ்சனாவையும் நான் வேற வேறயா பார்க்கல…!!” என கெஞ்சினால்…

“எதுவா இருந்தாலும் பரவால்ல, சொல்லு புள்ள! நாங்க உன்னை தப்பாவே நினைக்க மாட்டோம்…!!” என ரஞ்சனாவையும் பார்த்து, “அப்படி தான புள்ள, உனக்கும்” என பங்குக்கு அவளையும் அழைத்தாள்…

ரஞ்சனா, “ஆமாம்…!” என,

தயக்கத்துடன் நேற்று இரவு நடந்ததைக் கூறிவிட்டு இருவரையும் பார்க்க… அவர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிக்கிக் கொண்டது போன்று அமர்ந்திருந்தனர்…

மற்ற இருவருக்கும் விஜயேந்திரன் சொன்னது போல், முகில் அனைத்தையும் அவன் பொறுப்பில் ஏற்றிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே என்று தான் தோன்றியது…

ஆனால் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

ஆசிரமத்தில் வளர்ந்த முகிலுக்கு உலகம் அத்தனை மோசமானதாக இல்லாமல் போயிருந்தாலும், அத்தனை உத்தமமாகவும் இருந்திருக்கவில்லை…

அவள் பார்த்து வளர்ந்த வரையில் தானாக கெட்டது கால்வாசி என்றால், மாற்றுப் பால் இனத்தால் கெட்டது முக்கால்வாசி… அந்த அழுக்கில் விழுந்து சேறை வாரி இறைத்துக் கொள்ள விருப்பம் இல்லாதவள்… தனக்குத்தானே ஒரு அக்னி வேலியை அமைத்து அதற்குள்ளாகவே தன்னைத் தற்காத்துக் கொண்டவளும் கூட…

சாதாரணமாக இருந்தால் கூட விஜயனை ஏற்று இருப்பாளோ என்னமோ… தன்னுடன் பிறந்தவளுக்கு அநீதி இழைத்தவர்கள் என்ற பெயரில் அறிமுகமானவர்களை அவள் இதயம் நம்ப மறுத்தது… இதற்கெல்லாம் அவளை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை…

நம்பிக்கை வேண்டும் என ஒதுங்கி இருந்த விஜயனுக்கும் இதில் சம பங்கு உண்டு… கண்ட நாள் முதல் கடிந்து கொண்டவனைப் பார்த்தால் எந்தப் பெண்ணிற்குத்தான் காதல் வரும்… திடீரென்று காதல் வர வேண்டும் என்றால் அதற்காக அவனும் தான் என்ன செய்தான்… ஒருவர் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமாயின், தன்னை மறந்த நிலையிலும் அவர் நமக்குத் தீங்கிழைக்க மாட்டார் என்ற எண்ணம் வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவர்களுடைய குண நலன்கள் ஆவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்… இதில் எதுவுமே இல்லாமல் காதலும் நம்பிக்கையும் வேண்டுமென்றால் அவளும் தான் என்ன செய்வாள்…??

ஆயினும் விஜயேந்திரன் மேல் படரும் தனது எண்ணத்தையும் அடக்கிக் கொண்டு, தன் சகோதரிக்குக் கொடுத்த வாக்கையும் காப்பாற்ற வேண்டி அவள் மனம் நிலை கொள்ளாது தவிக்கிறது…

அதை விஜயின் கண்டு கொள்வானா…?? அவள் அலைபாயும் இதயத்திற்கு அடைக்கலம் கொடுப்பானா…?? என்று பொறுத்திருந்து நான் பார்க்க வேண்டும்…

பின்பு வேறு வழி இல்லை, அடுத்த எபி நீ போடுற வரைக்கும் அதுதானே எங்கள் நிலைமை…

ஹிஹி அதே தான் பா…!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile Un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-25

Yadhu nandhini
Completed Novel
41

Chapters

10

Views

1

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top