முகிலே!! உன் முகவரி என்ன-24

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 02/Aug/2026 ◷ 8 min read

குத்தக்காலிட்ட வண்ணம் மூன்று பேரும் இஸ்ரோ நிலவுக்கு விட்ட ராக்கெட்டில் ஆயா வடை சுடுவது எல்லாம் இங்கிருந்தே பார்த்தால் தெரியுமாம் என அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க… (எல்லாம் லைக்ஸ் அண்ட் வியூஸ் படுத்தும் பாடு) எவ்வளவு நேரம் நீடித்ததோ, முதலில் மௌனம் கலைத்தது முகில்தான்…

“ஏய், என்ன ரெண்டு பேரும் எந்தக் கப்பலை கௌக்க இப்படி கன்னத்தில கை வச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்கீங்க…?” “போன காரியம் என்ன ஆச்சு…?” என முகில் கேட்க…

இரண்டும் பரமாத்மா குரு-சீடர்கள் போல் முழித்து நின்றனர். அப்போ குதிரை முட்டை கதை தான…? அதுவும் சாதா முட்டை அல்ல, ஸ்பெஷல் சாதா கூமுட்டை…

“முதல்ல நீ சொல்லு…!!” என குறிஞ்சி ரஞ்சனாவிடம் சொல்ல, “அவளோ நீயே சொல்லு…!!” என குறிஞ்சியிடம் சொல்ல… இருவரும் ஒரே போல் மாறி மாறி சொல்லி நேரத்தைக் கடத்த, அதில் கடுப்பான முகில்…

“இப்போ ரெண்டு பேரும் சொல்லப் போறீங்களா இல்லையா…?” என கத்த இருவரும் ஒருவர் முகத்தைப் பார்த்து ஒருவர் குனிந்து கொள்ள, இருவரது கன்னங்களும் நாணத்தால் சிவந்து போயின…

“ஏய், என்ன ரெண்டு பேரும் முழிக்குற முழியே சரியில்லையே? வீரேந்தர் பத்தி நமக்கு ஓரளவு தெரியும், அதனால ரஞ்சனா சிவக்குறதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். ஆனா மகேந்திரன் அத்தான் ரொம்ப சாதுன்னு கேள்விப்பட்டேனே… ஏய், எதையும் மறைக்காம உண்மையச் சொல்லு குறிஞ்சி…?” என முகிலினி கிடுக்குப்பிடியாகக் கேட்க..

காலையில் நடந்த சம்பவத்தை நினைத்து குப்பென்று சிவந்தாள் குறிஞ்சி…

முகில் வேண்டி கொண்டதற்கு இணங்க, மகேந்திரனிடம் இருந்து டி.என்.ஏ மாதிரி எடுக்க அவன் அறைக்குச் சென்றாள் குறிஞ்சி…

அவன் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆற்றங்கரைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளான் என்பதை நன்கு அறிந்தவள், அவன் வெளியே சென்ற நேரத்தைப் பார்த்து அவன் அறைக்குள் அடக்கமாக நுழைந்தாள்…

லேசர் கண் வைத்துத் தேடினால் கூட ஒரு தூசித் துரும்பு கூடக் கிடைக்காது என்பது போல் அறையைத் துடைத்து அத்தனையும் சுத்தமாக வைத்து இருந்தான் மகேந்திரன்… அவ்வளவு விவரம்…

அவன் அறையில் தேடுகிறேன் என அத்தனையும் கலைத்துப்போட்டவள், குப்பைத் தொட்டியைக் கூட விடாமல் தேடிப் பார்க்க… எல்லாமே சுத்தமாக இருந்தது… “அத்தான் சுத்தம்னு தெரியும், ஆனா அதுக்கு இப்படியா மனுஷன் துடைச்சு வச்சிருப்பார்? எங்கையோ இடிக்குதே… ஆ இருக்கட்டும், என் கிட்ட சிக்காமலா போய்டுவார், பார்த்துக்கறேன்…!” என்றவள் தலையில் கை வைத்து யோசித்தபடி அவ்வறைக்குள் வளைய வந்தவள்… சிந்தையில் மின்னல் வெட்ட கண்கள் பளிச்சுட குளியலறை நோக்கிச் சென்றாள்…

அங்கும் ஏமாற்றமே; குளியல் அறை கூட சுத்தமாகத் துடைத்து வைக்கப்படாமல் இருந்தது… அவள் நேராகச் சென்று மகேந்திரனின் பல் குச்சியை எடுத்தாள்… “இந்தா சிக்கிடுச்சுல மகேந்திரன் அத்தான்! நீங்க எம்புட்டு உஷாரா இருந்தாலும் இந்த குறிஞ்சி கிட்ட இருந்து எதுவும் தப்ப முடியாது…!” என அவன் பயன்படுத்திய பல் குச்சியில் இருந்த இரத்தக் கரையைப் பார்த்து மெச்சிக் கொண்டவள்… அதை பத்திரப்படுத்திக் கொண்டு வெளியே செல்லப் போனவள், சமையல் சரியாக மகேந்திரன் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது…

“அச்சச்சோ மாட்டுன செத்தேன்…?” என்றவள் மீண்டும் குளியல் அறைக்குள்ளே சென்றாள். கதவு இடுக்கு வழியாக வெளியே பார்த்தபோது, அங்கு மகேந்திரனோ கலைத்துப்போட்ட பொருட்களைத் தான் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான்… “ஆள் இல்லாத நேரத்துல திருட்டுப் பூனை என் அறைக்குள்ள தான் அலைந்து இருக்கும் போலையே! பாவம், அதுக்கு ஒரு இரையும் கிடைச்சு இருக்காது, ஏமாந்து போயிருக்கும்…!” என நக்கலாக நினைத்துக் கொண்டவன்…

தன் வேலைக்கு நேரமாவதை உணர்ந்து ஆடைகளைக் கலைத்து குளிக்கத் தயாரானான் மகேந்திர பூபதி…

மகேந்திர பூபதி குரூப்ஸ் ஆப் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் கம்பெனியை நிர்வாகித்து வருகிறான்… வெளிநாட்டில் தொழில் சார்ந்த படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வந்தவன், வெளிநாடுகளில் இந்தியாவில் விளையும் வேளாண் பொருட்களுக்கு உள்ள மதிப்பை உணர்ந்து, தன் சொந்த மில்லில் உருவாகும் பருத்தி ஆடைகள் மற்றும் விவசாய நிலத்தில் கிடைக்கப்பெறும் வேளாண் பொருட்கள் அனைத்தையும் மற்றும் இதர பொருட்களையும் தரம் பார்த்து ஏற்றுமதியும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் திறம்பட நடத்தி வருகிறான்…

தொழில் ரீதியாகப் பன்முகத் தன்மை கொண்ட மனிதர்களோடு பழகுபவன்… எதிரில் இருப்பவனின் முகத்தை வைத்தே அவரின் குண நலன்களைப் பிரித்து அறிபவன்; அவன் முகத்தில் எதையும் பிறரால் அறிந்திடவே முடியாது, அத்தனை சாதுரியமாகத் தன் மனதைக் கையாளத் தெரிந்தவன் அவன்… அவன் மனதில் இருப்பதை அவ்வளவு எளிதில் எவராலும் கண்டு கொள்ள முடியாத அளவு அவன் அழுத்தக்காரனும் கூட…

இடையில் துண்டை கட்டிக்கொண்டு குளிக்க குளியல் அறை நோக்கி அவன் வருவதைக் கண்ட குறிஞ்சி, பயத்தில் ஒளிவதற்கு அங்கும் இங்கும் ஓடி அலைந்தவள், அழுக்குத் துணி கூடையில் சென்று பதுங்கிக் கொண்டாள்…

கதவை நோக்கி வந்த மகேந்திரன் காலில் ஏதோ தட்டுப்பட, குனிந்து தரையில் கிடந்ததை எடுத்தவன் யோசனையாகப் பார்த்து நின்றவன், பின் திரும்பி அதை அவன் இழுவை அலமாரியில் வைத்துப் பத்திரப்படுத்திவிட்டு குளிக்கச் சென்றான். தண்ணீரைத் திறந்து விட்டு வெகு நேரமாக குளியல் அறையை நோட்டம் விட்டபடி நின்றவன்…

இரண்டு சொம்பு தண்ணீரை மேலே ஊற்றி குளித்தவன், பின் என்ன நினைத்தானோ, அழுக்குக் கூடை அருகே வந்தவன், அவன் இடையைத் தழுவி இருந்த அந்தத் துண்டை, அதாவது அவனது மொத்த உடலிலும் அவன் ஆண்மையை மறைத்து இருந்த அந்த ஒற்றைத் துண்டை அவிழ்த்து அழுக்குக் கூடையில் போடப் போவது போல் சென்றவன், கூடையில் இருந்த கள்ளனைப் பிடிக்க…

“ஐயோ அத்தான், நான் தான் தெரியாம வந்துட்டேன், என்னை விட்ருங்க…??” என குறிஞ்சி பயத்தில் அவளாகவே முன் வந்து மாட்டிக்கொள்ள, அவள் கழுத்தில் மாலையாகத் துண்டை வைத்துப் பிடித்த மகேந்திரனின் பிடி, ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத் தளர்ந்து மீண்டும் இறுகியது…

“ஹக் க்ஹா… அத்தான் விடுங்க, எனக்கு மூச்சு திணறுது…!” என குறிஞ்சி கூறியதுமே, அவள் கழுத்தில் இருந்து பிடியை இளகச் செய்தானே தவிர, அவளை முற்றிலுமாக அவன் கைச் சிறையிலேயே வைத்திருந்தான்…

“சொல்லு, எதுக்குடி இங்க வந்த…?” எனப் பெண்களைப் பார்வையில் கூட மரியாதையாக நடத்துபவன், குறிஞ்சியிடம் மட்டும் ஏன் இவ்வளவு அழைப்பு…??

“அது அத்தான்…??” என இவள் வார்த்தையை மென்று விழுங்கினான்.

“சொல்லுனு சொல்றேன்ல…?” எனப் பாவி பயத்தில் எகிறி கத்தினான். அந்தக் கத்தலில் பச்சைப்பில்லை பயந்துபோயேடுச்சி (இந்த இடத்தில் பச்சைப்பில்லை என்பது நானு ஈஈஈ).

“நா… நா… ஹான், நான் ஆசையா வளர்த்த ஆமை குஞ்சு ஒன்னு இங்க ஓடி வந்துடுச்சு, அதை பின்னாடியே நானும் இங்க வந்துட்டேன்…!” என என்ன சொல்வது என யோசித்தவள், அந்த நேரத்தில் வாயில் வந்ததை அடித்துவிட்டாள்…

அதை கேட்ட மகேந்திரனுக்கு அப்பட்டமாகப் பட்டது… “ஓஓ… ஆமை குஞ்சு வேகமா ஓடுச்சா… அதுவும் இங்க அத்தனை அறைகள் இருக்கும் போது, அது எப்படி சரியா மூடின என் குளியல் அறைக்குள்ள வந்துச்சு…?” என மகேந்திரன் சரியாகக் கொக்கி போட்டு கேட்க…

நீங்க விட்டு பாருங்க நான் எப்படி ஓடிபோறேன் தெரியும்

என்னது

“அத்தான், நீங்க முயல் ஆமை கதை படிச்சது இல்லையா? அதுல ஆமை தான் ஜெயிக்கும்… அது மட்டும் இல்லாம, ஓடுற ஆமைக்கு உங்க ரூம் எப்படி தெரியும்? பாவம், அது கூகிள் மேப் கிட்ட என்ன கேட்டுச்சோ, அது தெரியாம உங்க பாத்ரூம்ல வந்து மாட்டிக்கிச்சு. விட்ருங்களே! நானும் ஆமை வந்தா மாதிரியே தெரியாம போயிடுறேன்…!” என குறிஞ்சி கொஞ்சியே பேசினால், “உசுரு முக்கியம் பிகிலு!” இவள் ஏதோ சொல்லப் போய் அவன் கோபத்தைத் தூண்டிவிட்டாள், யார் சமாளிப்பது…?

“நீ சொல்ற கதையை நான் நம்பணுமா…?” என்றவனின் அழுத்தமான கண்கள், குறிஞ்சியின் குவளை மலர் போன்ற கண்களைக் கவ்விக்கொண்டன… அவன் விழியின் தீட்சண்யத்தைத் தாங்காது குறிஞ்சி கண்களைத் தழைக்க, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஓர் அடி இடைவெளியைக் குறுக்கிஅவள் அருகாமையில் சென்றவன்…

புசுபுசுவென அவன் விடும் சூடான மூச்சுக்காற்றும் தததடக்கும் அவள் இதயமும் ஒரே லயத்தில் இயங்கி இசைக்க… தன் மூளை செயலிழக்க நின்றவள், காதருகே குனிந்தவன் “எடுத்ததை நீயே ஒழுங்கா கொடுத்துடு, இல்லன்னா நானே எடுத்துப்பேன்…!!” என்ற அவனது சொற்களில் கண்கள் விரிய அவனைப் பார்த்தவள்; அதற்குப் பின்பு சுற்றம் உரைக்க எதிரே நின்ற மகேனைப் பார்த்தவள்… “ஐயோ அத்தான், நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல… என்னை விட்டுடுங்க!!” என அலறிக்கொண்டு ஓடப் பார்த்தவள்… தன்னிடமிருந்து தப்பிக்க நினைக்கிறாள் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இரண்டு ஏட்டில் தாவி குறிஞ்சியைப் பின்னால் இருந்து அணைத்துப்பிடிக்க…

அணைத்தவன் பிடிக்குள் அடங்காது திமிறியவளை முரட்டுத்தனமாக அணைத்து, அவள் எதிர்பாராத வண்ணம் அவள் இடையினுள் கையை விட்டான் அக்மார்க் நல்லவன் மகேன்…

அறியாமல் செய்தானா அல்லது அறிந்து செய்தேனோ தெரியாது; ஆனால் பெண்ணவள் இடையில் கையை விட்டவன், கை விரல்கள் அவன் தேடிய பொருள் கிடைத்தும் பெண்ணவள் இடையை விட்டு வெளியே வர மறுத்து அதர்மம் செய்தது… “ஸ்ஸ்ஸ்ஹா ஹக்த்தா…அன் ஹ்ம் விடுஹங்கஅ…!” என வெயில் படாத பொத்தி வைத்த இடத்தில் அவன் விரல்கள் களைப் பிடுங்கப் பிடித்த ஆணின் பிடிக்காத தொடுகையில் கரைந்து போனாள் மாது…

எங்கிருந்தோ ஒலித்த கடிகார மணி கூண்டால் நடப்புக்குத் திரும்பியவன், போனால் போகுது எனக் குறிஞ்சியின் இடையில் இருந்து அவள் பதுக்கி வைத்த அவன் பல் குச்சியை வெளியே எடுத்தான்…

“பதுக்கி வைக்க வேற இடம் கிடைக்கலையாடி, அடுத்த தடவ மேலே ட்ரை பண்ணு…” என அவள் காதில் மீசை உரசக் கூறியவனைத் திரும்பிப் பார்த்து முறைக்க முயன்றவள், அதன் பின்னரே அவன் நிற்கும் கோலம் ஞாபகம் வர…

“ஐயச் ச்சீஈஈ அத்தான், நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நினைச்சேன், ஆனா நீங்கள் இப்படி மோசமா நடந்துபிங்கனு நான் நினைச்சு கூடப் பார்க்கல… நீங்க ரொம்ப ரொம்ப தப்பானவரு….!!” என குறிஞ்சி அவன் நெஞ்சில் தன் தாமரை மொட்டு போன்ற கரத்தால் குத்தி அடிக்க…

“அடிங்க, நான் என்னடி உன்னை பண்ணி விட்டா ஓவரா பேசுற…???” என்ற மகேனுக்கு ஏக கடுப்பு குறிஞ்சியின் வார்த்தைகளால் ஏற்பட்டது…

“இன்னும் என்ன பண்ணல, அதான் என் முன்னாடி கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் எதுவும் இல்லாம இப்படி நிக்குறிங்களே…??” என முகத்தை அஷ்ட கோணலாகத் திருப்பி வைத்துக்கொண்டு சொல்ல…

“ஏய், எதுக்குடி முகத்தை திருப்புற? என்னை பாருடி, என்னை பற்றி முழுசா தெரியல உனக்கு… பார்த்தா தாங்க மாட்ட…??” என்றவனுக்கு ஆற்றமை, அவனை ஏதோ பொறுக்கி போல் சித்தரித்து பேசும் பெண்ணால்…

“ஐயோ அத்தான், இதுக்கு மேல தெரிய என்ன இருக்கு? அதான் முழுசா காட்டிட்டு நிக்குறிங்களே, தள்ளி போங்க அத்தான், ஒரு மாதிரி இருக்கு…!!” என்றவள், அதுவரை அவளை உரசி நின்ற ஆண்மையை உணர்ந்தவள் சற்று ஆடித்தான் போனாள்…

“என்ன சொல்றா இவள்…?” என அவளை விட்டு சற்று நகர்ந்து பின்னால் வந்தவன் தன்னை உற்று நோக்க, “ஐயயோ ஷேம் ஷேம், பப்பி ஷேமாக இருந்தான்…” என மகேன்…

திருடனைப் பிடிக்கும் ஆர்வத்தில் இடையில் அணிந்திருந்த துண்டை கழட்டியவனுக்கு அவன் உள்ளே எதுவும் போடவில்லை என்பது தெரிய, குறிஞ்சி தன் இரு கைகளால் அவனை மறைக்க…

அதுவரை உணர்வுபூர்வமாக மட்டுமே அவனை அறிந்தவள், கண்கள் முதல் முறையாகச் சின்னவனைப் பார்த்து அரண்டு விழிக்க… “ஆஆஆ” என வாயைப் பிளந்தாள்…

“ஏய் ஏய் பார்க்காதடி! பார்த்த அவ்ளோதான்! ஐயையோ பார்க்காதடி அடியே! ஐயோ இந்நேரம் பார்த்து ஒரு பிட்டு துணி கூட கிடைக்கலையே…!” என அந்த குளியல் அறைக்குள் அங்கும் இங்கும் ஓடினான் மகேன். மானத்தைக் காப்பாற்றத்தான் இங்க பரந்தாமனும் வரவில்லையே ஐயகோ…

“ஐயோ கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம எப்படிப் பார்த்து வைக்கிறா பாரு அடியே, மூடித் தொலைடி…!” என…

என்ன நினைத்தாளோ, குறிஞ்சி தன் வாயை இரு கரங்களால் பொத்திக் கொள்ள…

“அடி எருமை! உன்னை பொத்தச் சொன்னது கண்ணைடி, வாயை இல்லை…

அறிவு கெட்டவளே! தெரிந்து பண்றாளா தெரியாம பண்றாளா…

ஆக மொத்தம் உசுர வாங்குறா…!”

அதன் பிறகே குறிஞ்சி கண்ணை பொத்த, அதுதான் சமயம் என்று அவள் அருகில் கிடந்த துண்டை குனிந்து எடுத்தவன், அவளுக்கு எதிர்ப்புறமாக முதுகை காட்டி நின்றான். துண்டை கட்ட அதுவரை விரல் இடுக்கு வழியாக அவனைப் பார்த்தவளும், இதுதான் சமயம் என்று தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவந்து தூணின் மீது சாய்ந்து கொண்டவளின் இதயம் படபடக்க, மார்புக்கூடு ஏறி இறங்கும் ரோலர் கோஸ்டர் ஆனது… கண் மூடி நின்றவள் முன் மீண்டும் நிழல் பிம்பமாக மகேந்திரனின் உருவம் வர, முகத்தை சீஈ என இரு கைகளால் மூடி கொண்டவளுக்கு வெட்கம் வண்டி வண்டியாக வந்தது…

குறிஞ்சி சொல்லக் கேட்டவர்கள் வாயைப் பிளந்தனர்…

“ஏய் நிஜமாவே பார்த்துட்டியா…?” என முகில் நம்பாமல் கேட்க…

அவளோ வெட்கத்துடன் “சீ போடி” என வெட்கத்தால் ஆமோதித்தாள்!!

“அடி பாவி, ஒன்னும் தெரியாத பாப்பாவா இருந்து கிட்டு செய்யறது எல்லாமே சென்சார் வேலை… போடி நைட் பாம்பு கண்ணை கொத்தும் போது…!!” என ரஞ்சனா கலாய்க்க…

“அதை பெட்டில போட்டு அடக்கி வைக்க எனக்கு தெரியும் போடி…!!” என இவளும் பதில் கூற…

“ம்ம் ஏய், நீங்க ரெண்டு பேரும் பேசுறது எனக்கு வேற மாதிரி தெரியுதே…??” என முகில் அப்பாவியாக கேட்க…

“ஆமாவா…?” என இருவரும் ஒரே போல் கேட்டு கலகலவென சிரித்து விட, அவர்களோடு முகிலும் இணைந்து கொண்டாள்…

“ஹாஆ… சரி சிரிச்சது போதும், இந்தா பிள்ளை உன் சங்கதி என்ன அதை மொதல்ல சொல்லு, இன்னைக்கு என்ன பண்ணி வச்சான் அந்த கோட்டி பிடிச்சவன்…?” என ரஞ்சனாவைப் பார்த்து குறிஞ்சி கேட்க, அதையே முகிலும் பிரதிபலித்தாள்…

ரஞ்சனா பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவே…

“சும்மா வெட்கப்படாமல் சொல்லு பிள்ளை, நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்…” என குறிஞ்சி ஊக்குவிக்க…

“அட, அந்த வெட்கக்கேடான விஷயத்தை சொல்ல எனக்கு எதுக்கு வெட்கம்? சொல்றேன் அதுக்கு முன்ன இதயத்தை தயார் பண்ணிக்கோங்க…”

என பிடிகை போட்டால்…

“என்னவா இருக்கும்…?? யாருக்கு தெரியும் அந்த கிருத்துவம் புடிச்சவன் என்னத்த செஞ்சான்னு? அடுத்து எபில பார்ப்போம், எதுக்கும் உங்க இதயத்தை தயார் படுத்திக்கோங்க…”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile Un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-24

Yadhu nandhini
Completed Novel
41

Chapters

15

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top