கண்ணி வைக்கும் கலாபனே – பகுதி – 2.

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 07/Oct/2026 ◷ 3 min read

டீசர் :-

டீசர் :-

காதல் கண் கட்டுதே…

வீரா தாலியை கயல் கழுத்தில் கட்ட நெருங்கிய சமயம், அவன் முன்னால் வந்து ஒரு குத்தீட்டி குத்தி நிற்க… திடுக்கிட்டு வாசல் பக்கம் பார்க்க…

அங்கு ரௌத்திரம் கொண்டு அக்னி ஜுவலையாக நின்றான் கரிகாலன், ஐ.பி.எஸ்…

“யார்ரா நீ? எதுக்குடா என் பொண்ணு கல்யாணத்துல வந்து கலாட்டா பண்ற? ஒழுங்கா போய்டு, இல்லைன்னா அருவா தான் பேசும்…!!” என கயலின் தந்தை குமாரவேல் தடுக்க…

அவரை ஏளனமாகப் பார்த்தவன்…

“ஓ வெட்டுவியா? எங்க வெட்டு பார்ப்போம்! என் பொண்டாட்டி கழுத்துல எவனோ தாலி கட்டப் பார்ப்பான், அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க நான் என்ன *****யா?” என கத்திவிட்டு மேடை நோக்கி நடந்தவனை,

“யாருக்கு யாருடா பொண்டாட்டி…?” என குமாரவேல் தடுத்து அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக மேடை ஏறியவன், கயலின் கையைத் தரத் தரவென்று இழுத்து வந்து அனைவர் முன்னாலும் விட்டவன்…

“இதோ இங்க ஒன்னுமே தெரியாம நிக்குறாளே, இந்த ஊமைக் கோட்டான் கயல் இவள் தான் என் பொண்டாட்டி! அதுக்கு சாட்சி இதோ…?” என வாயின் பக்கமாக கை காட்டி, அங்கு சாட்சிக்கு வந்த ஊர் தலைவர் துரைசாமியைப் பார்த்துத் திடுகிட்டவள், கரிகாலனிடம் கண்களால் கெஞ்ச…

“என்னடி என்னை ஏமாத்திட்டுப் போறது அவ்வளவு சுலபம்னு நினைச்சுட்டியா? சொல்லடுமா, கத்திச் சொல்லட்டுமா? உனக்கும் என்ன நடந்துச்சு? உனக்கு எங்க எங்க என்ன அளவிலா மச்சம் இருக்கு, எத்தனை இருக்குனு ஒன்னு விடாம சொல்லட்டுமா…!” என கண்களில் பழிவெறி ஏறிப்போய் கேட்ட கரிகாலனைப் பார்த்து,

துடி துடித்துப் போனாள் மாது…


“சாம்ராட் சார், எங்க வீட்டுக்கு மஹாலக்ஷ்மி வந்து இருக்கா சார், ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்றதும்…

ஆறடி ஆணழகனாக இருந்த பரத் இவனா என அடையாளமே தெரியாமல், தாடி வளர்த்து பொலிவு இழந்த முகத்தில் ஒரு மின்னல்…

“மஹாலக்ஷ்மியா? எங்க அவள்? ஏன் என்னை பார்க்க வரல? எதுக்கு உங்க வீட்டுக்கு வந்தா?” என பரபரத்தவனை சமாதானம் செய்த அவன் ஜூனியர்,

“எனக்கு முதல் பெண் குழந்தை பிறந்து இருக்கா சார்… அதை தான் எங்க வீட்டுக்கு மஹாலக்ஷ்மி வந்தான்னு சொன்னேன் சார்” என சொன்னதும்…

பரத்தின் கருத்த உதட்டில் ஒரு விரக்தி புன்னகை. இப்படிலாம் சீன் வைக்க எனக்கும் ஆசை தான்…

ஆனா அந்த பக்கிக்கு அவ்ளோ சீன் இல்லை… பக்கி அடுத்த பிகரை உஷார் பண்ண முன்ன விட செம ஸ்டைலா கிளம்பிட்டு இருக்கு. எங்கையோ ஏதோ பிளைண்ட் டேட்க்கு தான்… சாய் பரதேசி அங்க போடுற சென்ட் இங்க வரை நாறுது. வாங்க, நாம மூக்கை பொத்துக்கிட்டு அடுத்த ஜோடிக்கு போயிடுவோம்…


சத்யா தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள். இப்பொழுது கிளம்பினால் தான் இந்த டெல்லி டிராஃபிக்கில் வேலை நேரத்திற்கு சென்று வர முடியும்…

இன்று அவள் நிறுவனத்தை ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைக்கப் போகும் முக்கியமான நாள்…

அவளுக்கும் இது மறக்க முடியாத நாள்…

அறைக்குள் நுழைந்தவள் எதிரில் இருந்த கௌதமைப் பார்த்துத் திகைத்ததை விட, அவன் செயலில் திகைத்தது அதிகம்…

“இடியட், நீ எல்லாம் எதுவுமே லாய்க்கு இல்லை… உன்னை எல்லாம் எவன் வேலையில எடுத்தான்… உள்ள வரும்போது தட்டிட்டு வரமாட்ட… பாரு என் டார்லிங் எப்படி மிரண்டு போயிட்டான்னு…!” என சத்யாவை திட்டி கொண்டே…

அருகில் இருந்த பெண்ணின் இடையில் அழுந்த கிள்ள, அதற்கு அப்பெண் “ஹா… டார்லிங், நீங்க ரொம்ப மோசம்ம்ம்ம்… இவள போக சொல்லுங்க, இவ முன்னாடி கூச்சமா இருக்கு” என போலி வெட்கம் கொள்ள…!!

கௌதம் அவளை வெளியே செல்லும் படி சொல்வதை கேட்க கூட அங்கு சத்யா நிற்கவில்லை…

வெளியே வந்தவள் கண்ணீரை அடக்க முடியாமல் அழ… அதை கேபின் வழியாக பார்த்த கௌதம் பிரபாகரன்…

“அழுடி நல்லா அழு, எனக்கும் இப்படித்தான் வலிச்சுது… காரணமே சொல்லாமல் இந்த பைத்தியம் மாதிரி உன்னை தேடி அலைய வைத்ததற்கு இது போதாது…!!” என்றவன் தோளில் வந்து தொங்கிய கிளியை பார்த்த பார்வையில், கையை இழுத்து கொண்டு கன்னத்தை பொத்தி கொண்டு ஓடிவிட்டாள்…

வாழ்க வையகம்….!!!

வாழ்க வளமுடன்…!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே – பகுதி – 2.

Yadhu nandhini
Completed Novel
Romance, Thriller
27

Chapters

5

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top