இன்று
நொடிக்கு நொடி மரணத்தை காட்டும் பயங்கரமான இரவை உயிர் பயத்துடன் கடந்தனர் பெண்கள் மூவரும்….
கிழக்கு சிவக்கத் தொடங்கிய பின்பே உயிர் சுவாசம் பெற்றனர்….
சூரியன் மெல்ல மேகக் கூட்டங்கள் நடுவே செங்கதிர்களோடு தோன்றிய அழகான விடியல் அது… ஆனால் பெண்களுக்கு…???
“சத்யா…??” என ஈனக் குரலில் கயல் அழைக்க…
“சொல்லு கயல், வலிக்குதா? கொஞ்சம் பொறுத்துக்கோ… இன்னும் கொஞ்ச தூரம் தான், ஹாஸ்பிடல் வந்துவிடும், மருந்து போட்டுக்கொள்ளலாம் சரியா…!!” என சமாதானம் சொல்ல…
அவள் முகத்தைப் பார்த்து “ரொம்ப பசிக்குடி” எனப் பாவமாகச் சொல்ல… மற்றவர்கள் “எங்களுடைய வயிறும் காலியாக இருக்கிறது, எங்களுக்கும் ஏதாவது வேண்டும்…!!” எனச் சத்தமிட
இந்த அத்துவானக் காட்டில் எங்கு சென்று எதைச் சாப்பிடுவது எனப் புரியாமல் தவித்துப்போயினர்….
அவர்கள் பசியால் தவிப்பதைப் பார்த்து விதிக்கும் இரக்கம் சுரந்ததோ அல்லது அவர்களை வைத்து விளையாட எண்ணியதோ தெரியவில்லை, ஆனால்… அவர்கள் பாதையில் ஒரு தேனீர் கடை இருந்தது…
அங்கே சென்று வெளியில் இருந்த மர பெஞ்சில் கயலைச் சாய்வாக அமரவைத்தவர்கள்…. கடையில் சென்று சாப்பிட ஏதுவாக வாங்க…
அவர்கள் பார்வையில் பெண்கள் மூவரும் வித்தியாசமாகத் தெரிய, “என்ன?” என வினவ “ஒன்னுமில்லை” எனச் சமாளித்த போதும் சந்தேகக் கண்ணோடு பார்த்தனர்.
அப்போது… ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தித் தொலைக்காட்சிகளில் பரபரப்புத் தலைப்புச் செய்தியாக… “ஹைதராபாத் பெண்கள் விடுதியில் பயங்கரம் ….!!!! குற்றவாளிகளான சத்யா, மகா, கயல் ஆகிய மூன்று பெண்களும் தலைமறைவு; வலைவீசித் தேடுகிறது போலீஸ்…!!! சிக்குவார்களா குற்றவாளிகள்..…??”
“யார் இந்த மூன்று பெண் குற்றவாளிகள்… என்பதை அவர்களுடன் வேலை பார்த்த சந்துக் ரெட்டி நமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியைப் பாருங்கள்…!!” என வேறொரு திரையைக் காட்ட..
அத்திரையில் தோன்றிய சந்துக் “அந்தப் பொண்ணுங்களே மகா மோசமானவங்க சார்…. எங்க ஆபீஸ்லேயே ஒழுங்கா நடந்துக்க மாட்டாங்க …ஏன் தட்டிக் கேட்டாக்கூட என் மேலேயே அபாண்டமா பழி போட்டு மாட்டி விட்டுட்டாளுங்க சார்… இந்த மாதிரி பொண்ணுங்கள வெளியில விடாதீங்க…!!” என வஞ்சம் தீர்த்தான் நயவஞ்சகன்…
அதனைத் தொடர்ந்து பெண் குற்றவாளிகளின் குடும்பத்தினர் என சத்யா மஹா கயலின் பெற்றோரை போலீஸ் விசாரணை நடத்துவதை செய்தியில் போட்டுக்காட்டினார்…
உறைந்து நின்றனர் பெண்கள்….
இவ்வாறு ஒரு பக்கம் மரணமும் மறுப்பக்கம் சட்டமும் கன்னியர்களைத் துரத்தி என்ன நடந்து கொண்டிருக்கும்..???
அன்று..
வெள்ளிக்கிழமை மாலை வேளை..
வேலை முடிந்த பின்னும் அழுது கொண்டே இருந்த கயல்
“இப்போ எதுக்குடி அழுதிட்டே இருக்கிறாய்…??”
“பொண்ணுங்க தானே நம்மள என்ன பண்ணிட்டுப் போவாளுங்கனு வக்கிரம்கொண்ட சிலர் அவங்க வக்கிரத்தைத் தீர்த்துக் எந்த எல்லைக்கும் போவார்களே… ஒன்னு நீ அவனுங்க முன்னாடி அடிபணிந்து போகணும், இல்ல அவனுங்கள எதிர்த்து நின்னு தைரியமா போராடணும்…??”
“நாம தட்டி கேட்டா தான் மத்த பெண்ணுக்கு நடக்காமையது இருக்கும்…!!” – மஹா
“இப்படியே பயந்து சாகாதே விடுடி, எதுவா வந்தாலும் எப்பவும் போல ஒன்னா பார்த்துக்கலாம் சரியா…? மூஞ்சத் தொடைச்சுக்கோ, உன் பிறந்தநாள் பார்ட்டியை நிம்மதியா என்ஜோய் பண்ணுவோம் சரியா…?” என நம்பிக்கையளித்து அழைத்துச் சென்றாள்… இந்தத் திடம் நாளையும் தொடருமா என்பது விதியின் வெளிச்சம்…
அன்றைய இரவு…
பெண்கள் விடுதியில்
கயல், மஹா, சத்யா மூவரும் வெள்ளை ஆடையில் தேவதைகளாக ஜொலித்தனர்… கயலின் பிறந்தநாள் பார்ட்டி… கோலாகலமான டேரிங் பார்ட்டி இனிதே தொடங்கியது…
டேரிங் பார்ட்டியா அப்படி என்னவா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…
பெண்கள் தாங்கள் செய்ய நினைத்த அல்லது ஆசைப்பட்ட விஷயங்களை எந்தவிதத் தயக்கமும் இன்றி இரவு முழுவதுமாகத் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வதே டேரிங் பார்ட்டி.
“ஹே கேர்ள்ஸ் கவனிங்க… இன்னைக்கு நம்ம கயல் பிறந்தநாள் பார்ட்டி! அதனால நம்ம ஹாஸ்டல் ரூல்ஸ் படி… அவளுக்கு பிடிச்ச மூணு ஆசைகள் நிறைவேற்றப்படும்…!!” என ஒருத்தி அறிவிக்க…
(எப்பா, இது லேடீஸ் ஹாஸ்டல்யா? ஒன்னு ஒன்னுதுக்கும் பெயர் வைக்கணும்னா கதை பாதி பெயரிலேயே போய்டும், சரியா? அதனால உங்களுக்கு பிடித்த பெயரை வச்சுக்கோங்க…. இப்படிக்கு சோம்பேறி ரைட்டர்…)
பெரும் கரகோஷத்துடன்… “கேளு கயல்… கேளு கயல்…” என ஊக்குவிக்க….
அவள் சத்யா, மஹா இருவரையும் பார்த்து கொண்டே… “என்னோட முதல் விஷ்… ஸ்பெஷல் கிராப் ஜூஸ் குடிக்கணும்……!!” என சொல்ல… “ஹேஹே ஏஏஏஏஏ..” என அனைவரும் கத்தி ஆமோதித்தனர்.
சத்யாவும் மஹாவும் அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தனர்… ஏனெனில் அவர்கள் ஹாஸ்டல் அகராதியில் கிராப் ஜூஸ் என்பது மதுவகை அன்றோ…
“என்னடி ஜூஸ் கேக்குறா…???” மஹா
“அதானே! இந்த பூனைக்குள்ள இப்படி ஒரு ஆசையா? மோந்து பார்த்தாலே மட்டை ஆகிடுவா, இதுல முழு பாட்டிலா இருக்கு அவளுக்கு…!!” சத்யா
“அடுத்து… அடுத்து..” என கோரஸாக ஊக்குவிக்க…
“சொல்றேன் சொல்றேன், அடுத்து எனக்கும் முக்கிய ரகசிய கோப்புல இருக்கறதை தெரிஞ்சுக்கணும்….!!” என கண்ணை மூடி வெட்கத்துடன் சொல்ல…
“ஊஊஊ… ஏ கயல், கூட பெரிய மனுஷி ஆகிட்டாட்டியா? அதுவும் பலமான படம் பாக்குற அளவுக்கு…!!” என மற்ற பெண்கள் கிண்டலடிக்க…
(முக்கிய ரகசியக் கோப்பைத் திறந்து பார்த்து ஏமாந்து போனால் சங்கம் பொறுப்பல்ல…)
“என்ன சத்யா, இது கூட்டத்துல இப்படி கேக்குற…??” என மஹா அப்படமாக அதிர்ச்சியை வெளிப்படுத்தி கேட்க…
“பார்க்க பச்சை குழந்தை மாதிரி இருந்துகிட்டு கேக்குறது பூரா கிளுகிளுப்பா இருக்கே! அடுத்து என்ன ஏடக்கூடாம் பண்ணப் போறாளோ தெரியல… அடுத்து என்ன வச்சி இருக்கா பார்ப்போம்…??” – சத்யா
ஆர்வத்துடன் இருவரும் கயலை பார்க்க…
“கடைசியா என்னோட ரொம்ப நாள் ஆசை நைட் ஷோ சினிமா பார்க்கணும்ங்கிறது…!!” என கால் விரலால் கோலம் போட்டு கொண்டே சொல்ல…
எதையோ எதிர்பார்த்து நிற்க… கயல் சொன்னதைக் கேட்டு மஹா “ஹப்பா” என நிம்மதிப் பெருமூச்சு விட… அவள் கையைத் தட்டி, “அதுக்குள்ளேவா? இன்னும் முடியல, அங்க பாரு…!!” என காட்ட…
“அதுக்கு என்ன, உன் பாய்ஃப்ரண்ட்டு வரச் சொல்லி நாளைக்கு ஃபுல்லா என்ஜோய் பண்ணிட்டு வா..!!” என கூட்டம் குரல் கொடுக்க…
“அ… அது நான் மட்டும் எப்படித் தனியாப் போக…!!” என அவர்களையே எதிர் கேள்வி கேட்டாள்…
“சோ, பாவம் பயந்த பிள்ளை…!!” என சிலர் சொல்ல…
“ஆமாண்டி, பாய்ஃப்ரண்டு கூடப் போகப் பயப்படுறவ தான் ரகசியக் குறிப்பு பத்தி கேட்டாளாமா….??” நடுவில் நின்றவள் எகத்தாளமாகச் சொல்ல…
“ஆமாடி, இவ சொல்றதும் சரிதான்.. இதுவரை நீங்க உங்க பாய்ஃப்ரண்டு கூட டேட்டிங் போய் நாங்க பார்த்ததே இல்லை…. நீங்க மூணு பேரும் ஏன் அவங்க அவங்க பாய்ஃப்ரண்டு வரச் சொல்லி நாளைக்கு முழுக்க டேட்டிங் போகக் கூடாது….??” என வில்லங்கம் இழுத்து விட…
சத்யாவும் மஹாவும் திகைத்தனர். ‘கயலோ ஆத்தி மாட்டி விட்டுட்டாங்களே, எப்படி சமாளிக்க…??’ எனத் தெரியாமல் விழித்தனர்…
“என்னங்கடி இதுக்கு போய் இப்படி யோசிக்கிறீங்க? உங்களுக்கு உண்மையாகவே பாய் ப்ரெண்ட் இருக்கா…???? இல்ல பொய்யா…?” என இழுக்க, அனைவரின் சந்தேகப் பார்வையும் அவர்களை நோக்கின…
“இல்லை சே, இருக்கு… உண்மையாவே எங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்காங்க…!” என கயல் விழுந்து அடித்துக்கொண்டு சொல்ல,
“அப்புறம் என்ன, நாளைக்கு முழுக்க வெளில போய் மஜாவா இருந்துட்டு வாங்க…!” என கட்டளையாகக் கூறினர்.
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை வெண்கல சிலை
சிலை வெண்கல சிலை
காலேஜ்க்கு புக்ஸ்-உ மலை
தூக்கி வரும் ***-உ மலை
லேடீஸ் ஹாஸ்டல் அழகு சிலை
மெடி போட்ட மெழுகு சிலை…!!” (இந்த பாட்டு இல்லாத லேடீஸ் ஹாஸ்டலே லேது மக்கா…)
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்… என முழுங்கி விட,
ஆனால் அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்த முப்பெரும் தேவியர்கள் அங்கு இல்லை… அவர்கள் துணி வெளுப்பதில் பிஸி…
அதாவது ஓட்ட வாய் கயலை அடி வெளுப்பதில்…
ஐயோ அப்பாவிப் பிள்ளைக்கு… என்னாச்சு? பதறாதீங்க…
அந்த அப்பாவி இழுத்து வைத்த வில்லங்கம் அப்படி… அதுவே அவர்களைப் புதைக்குழியில் தள்ளும் என்று அறிந்திலர்…

