கண்ணி வைக்கும் கலாபனே-21

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 30/Sep/2026 ◷ 4 min read

தன்னை அறைந்த அவள் கைகளைத் தன் கன்னத்தில் அழுத்திப் பிடித்துக் கொண்டவனிடமிருந்து பதறி கையை எடுக்க முயல… அவனோ விடாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டே, “என்ன அடி சத்யா, உன்கிட்ட தப்பா பேசிட்டேன்ல? ஆனா என்ன பண்ண, எனக்கு உன்மேல கொள்ளை கொள்ளையா அன்பு, காதல்… ஆசை, மோகம், காமம் எல்லாமே இருக்கு… அதை மறைக்கத் தெரியலையே! நான் என்ன பண்ண, உன்னை பார்த்தாலே என்ன என்னமோ ஆகுதுடி…” என்று கூறியபடி சத்யாவைக் கட்டி அணைக்க முயன்றவனிடமிருந்து சத்யாதான் பயந்து பின்வாங்க வேண்டியதாகிப் போயிற்று… “ஷ், தப்பு தப்பு! இப்போ உன்கிட்ட அப்படி பண்ண கூடாது… உன்னை ஊர் கூட்டி உன் கழுத்துல தாலி கட்டி அப்புறம் தான் எல்லாம் பண்ணனும்… அதுவரை கூடாது, ம்ஹும் கூடாது…!!” என வாயில் விரல் வைத்து குழந்தையாக மறுத்தவன்.

“ஏன் தெரியுமா? இந்த உலகத்திலே எனக்கு ரொம்ப பிடிச்சது எங்க அம்மா, அவங்களுக்கு அப்புறம் உன்னை மட்டும் தான் மதிக்கிறேன், உயிரா நேசிக்கிறேன்… உன் கையை பிடிச்சிகிட்டு நூறு மாசம் அதிகம்ல ஒரு அறுபது வச்சிக்கலாம், அதுவரை உன்கூட வாழ்க்கையை திகட்ட திகட்ட வாழணும்… என்னோட கடைசி காலம் வரை இந்த மடியில நான் மட்டும் இருக்க ஆசை… என்னை ஏத்துக்குவியா? நீ தான் எனக்கு மறுபிறவி தந்தவள், நீ இல்லனா அந்த உயிர் எனக்கும் வேணாம்…!!” என அதுவரை போதையில் உளறிக்கொண்டு இருக்கிறான்; சலிப்பாக நினைத்த சத்யா, கௌதமின் கடைசி வாக்கியத்தில் தடுமாறிப் போனாள்…

“தாய்க்கு நிகராக உன்னை மதிக்கிறேன்” என்கிறவன் எப்படித் தவறு இழைக்க முடியும்… அதில் சலனம் கொண்டாள் மங்கை… அதற்கு மேல் அவளைச் சிந்திக்க விடாமல் அவள் கவனத்தைத் தன் பக்கம் இழுத்தான் கெளதம். அவளோடான சின்னச் சின்ன ஆசைகள் என விடிய விடியக் காதல் கதைகளை அவளருகே படுத்துக்கொண்டு பேசினான்…

சத்யாவும் சலிக்காமல் கேட்டுக்கொண்டாள்… அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகருமாம்… சத்யாவின் பாறை மனதில் கெளதம் சோலை விதைப்பான், அதில் மாற்றமில்லை…

உன் ஓரப்பார்வையில்…

என் கர்வம் சரிந்ததுடி சகியே…

நின் இதழோரச் சிரிப்பில்

உன் தாசனானேன்டி

உன் சுவாசம் கொண்டு

என் ஆயுள் நீளுமடி சகியே…!!

மஹாவைத் தூக்கிக் கொண்டு வந்த பரத், அவளைத் தரையில் நிற்க வைத்தவன், உணர்ச்சி வேகத்தில் மஹாவைத் தாவி அணைத்துக்கொண்டான்…

“ப.. பரத்… எ.. என்ன பண்றீங்க விடுங்க…!!” என அவன் கைகளில் நெளிய,

“சும்மா இருடி, எல்லாம் தெரிஞ்சிகிட்டே என்ன பண்றீங்க, நொண்ணு பண்றீங்கணு… ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி…!!” என அவன் வாய் கடிந்தாலும், கைகள் அவளை இறுக அணைத்தன…

ஒருவர் அணைப்பில் மற்றவர் இந்த உலகத்தையே மறந்து எத்தனை மணி நேரம் நின்றார்களோ… மாயவனின் உரமேறிய நெஞ்சில் சாய்ந்தவள், மதி மயங்கி நின்ற சமையம் அவளை விடுவித்தவன்….

அந்தக் குடிலின் மூலை முடுக்குகளில் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தான் ஒரு கயிறை…

கயிறையும் மஹாவையும் இழுத்துக்கொண்டு கட்டில் அருகே வந்தவனைப் பார்த்து, “இவனுக்கு என்ன பைத்தியமா…?” என்று மஹா புரியாது முழித்துக் கொண்டு இருந்த சமையம், கயிறை அவள் கையில் கொடுத்துவிட்டு….

“இந்தா புடி, இதை வச்சி என்னை கட்டிப் போடு….!!” என்றதும், முடிவே பண்ணிவிட்டாள் இவனுக்கு முத்திவிட்டது என்று….

“என்னடா இவன் பாட்டுக்கு வந்தான், கட்டிப் பிடிச்சான், அப்புறம் கயிறு கையில் கொடுத்து கட்டிப்போட சொல்றான்னு பாக்குறியா… சொல்றேன், அதுக்கு மொதல்ல நீ என்னை கட்டிப் போடுறது தான் உசிதம்…ம்ம்ம் சீக்கிரம்…!!” என பிடிவாதமாக கயிறைக் கட்ட வைத்தான்…

“ம்ம்ம்ம்… நாட் பேட், நல்லா கட்டிப் போட்டு இருக்க…!!” என காற்றின் வலிமையைச் சோதித்துப் பார்த்தவன் பின்…

“இங்க பாருமா, பக்கத்துல இப்படி ஒரு டக்கர் ஃபிகர வச்சிட்டு என்னால சும்மா இருக்க முடியாது. சும்மாவே உன்னை பார்த்தா தாறுமாறா குத்திக்கிறான்… இதுல நீ வேற பால்ல ஊறவச்ச ஆப்பிள் கணக்கா வந்து நின்னா… நான் சும்மா இருந்தாலும் இவன் சும்மா இருக்க விடமாட்டேன், பாரு இப்போவே எப்படி படமேடுத்து ஆடுறான்னு…!!” என ஆடை அடியில் ஆடிய சர்பத்தைக் காட்ட…

சிவந்த போனாள் தங்கக் காரிகை

“ஏம்மா, செத்த சும்மா இருமா, சும்மா! ஆ வெக்கப் பட்டு, வெக்கப் பட்டு அவனை இன்னும் டெம்பர் பண்ணாத, அப்புறம் கயிறு அறுத்துக்கிட்டு வந்துடப் போறான்…!!” என ஆசை வேதனையில் வெம்பியவன் கட்டிலில் படுத்தவாறு…

“என் மேல இந்த ரைட்டர்க்கு என்ன காண்டோ, எனக்கு மட்டும் சீன் வைக்காம சோதிக்குது… ஊர்ல எத்தனையோ நல்ல ரைட்டர் இருக்கும் போது நான் மட்டும் ஏன் யது நந்தினி கதைக்கு ஹீரோவா வரணும்? பாரபட்சம் பார்க்காமல் எல்லாருக்கும் சீன் உண்டுன்னு நம்பி தானே வந்தேன்… விடமாட்டேன், இந்தப் பார்ட்டுல வைக்காத சீனியும் சேர்த்து அடுத்த பார்ட்டில் எனக்கு பெரிய சீனா வச்சே ஆகணும்னு போராட்டம் பண்ணப் போறேன்…!!” என சுகவேதனைத் தீயில் தகித்தபடி புலம்பிக்கொண்டே தூக்கத்தைத் தழுவினான் பரத்.

இவை அனைத்தையும் பார்வையாளராக இருந்து பார்த்த மகா, சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தபடி நின்றாள்… பரத்தின் செயல்கள் கோமாளித்தனமாக இருந்தாலும், அவன் செயலின் காரணத்தை எண்ணிப் பார்த்தவள் வெட்கித்தான் போனாள்… தன் மீது கொள்ளை ஆசை இருந்தும் தள்ளிச் சென்றவனை நினைத்து கர்வம் கொண்டது மஹாவின் காதல் மனது… ஆம், காதல் தான் தன் குறும்புப் பேச்சால் கவர்ந்தவன்… இன்று கண்ணியமான செயலால் கன்னியவளைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தான்….

எதற்காக வந்தான்…

எனக்காக வந்தான்…

என்னை கேட்டான்…

அவனைத் தந்தான்…

இனி அவனும் நானும் வேறல்ல…

ஒன்றுதான் எனத் தெரியும் நாள் எப்போது…??

குடிலுக்குள் கயலைத் தூக்கி வந்தவன், அவள் போதையில் தள்ளுவதைக் கண்டு, இந்த ஆர்வக்கோளாறு சோம பானத்தைக் குடித்துவிட்டதை யூகித்தவன்… அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டுப் போகத் தயாரான…

அவன் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் மீது சாய்த்தவள்…

“டேய் **** பையா, என்ன விட்டுட்டு எங்க போற…!!” என அவன் மீசையை இழுத்துத் கேட்டாள்…

“ஆஆ… வலிக்குதுடி எருமை…!!” என கரிகாலன் துள்ளினான்.

“வலிக்கட்டும், அப்போதான் என்ன விட்டுப் போகத் தோணாது… டேய் கேடி, எனக்கு என்னடா குடிக்கக் குடுத்த உடம்பு என்ன என்னமோ பண்ணுதுடா…!!” என உடலை முறுக்கி, உச்சிப் பகுதியைக் காட்டி அவனைச் சோதிக்க,

“நான் குடுத்தேனே, சரிதான்… போதை தலைக்கு ஏறிப்போச்சா…!!” என்றபடி கயலுக்குப் போர்வை எடுத்துப் போர்த்தி, அவன் இளமையைச் சோதிக்கும் குன்றவரை மூடினான்…

இவள் விலக்கி அவனுக்கு நல்ல தரிசனம் தர, அவன் மீண்டும் மூட இவள் விலக்க, என கட்டில் விளையாட்டைத் தொடங்கி வைத்தாள் மாது…

“இதுக்கு மேல் இங்க இருந்தா சரி வராது…!” என நினைத்தவன், அவள் மீது போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு எழுந்து போனான்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே-21

Yadhu nandhini
Completed Novel
Romance, Thriller
27

Chapters

7

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top