“அவங்களப் பார்த்தா மூணு நாளா தூங்காம ரஸ்ட்லெஸ்ஸா இருந்து இருப்பாங்க போல தெரியுது. இதுல நிறைய ரத்தம் வேற வெளிய ஏறி இருக்கு, அதனால கூட மயக்கம் தெளிவா இல்லாம இருக்கலாம்… இன்னும் கொஞ்சம் தூரத்துல கிராமம் வந்திடும்… பயப்படாதீங்க, அவங்களுக்கு ஒன்னும் ஆகாது…” என்று ஆறுதல் கூறினான் பரத்.
“அப்போ நீங்க மூணு பேரும் டாக்டரா…?” என்று கயல் கேட்டாள்.
“ஆமா, நைட் பத்து மணி டாக்டர்…!” என பரத் கேலியாகக் கூறிவிட்டான்.
“ஓ, நீங்க நைட்ல மட்டும் பாக்குற டாக்டரா…? அந்த நேரத்தில் வர்ற பேஷண்ட்ஸ்க்கு என்ன பிரச்சனை இருக்கும்…?” என அவனது கேள்வியை புரிந்து கொள்ளாமல் கேட்டாள்.
சூழ்நிலையை மீறி அனைவரும் கயலால் சிரித்துவிட்டனர்.
“அட, ஏன்மா நீ? நான் டாக்டர் எல்லாம் இல்லை… என் பெயர் பரத், நான் டில்லியில் வேலை பார்க்கிறேன்… இவனுக்காகத்தான் இங்க வந்தேன்…!” என கரிகாலனை காட்டி தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான் பரத்.
“அப்போ நீங்க மூணு பேரும் நண்பர்களா…?” என மஹா கேட்க…
“ஆமா…!!” கரிகாலன்
“இல்லை…!” கெளதம்
“ஆமா…!” பரத்
“ஆமாவா…? இல்லையா…? ஏன் குழப்புகிறீங்க…?” கயல்…
“நாங்க மூணு பேரும் நண்பர்கள் தான், ஆனா காரண காரியத்திற்காக கூடிய நண்பர்கள் போதுமா…?” என கரிகாலன் பதில் அளிக்க…
“ஏ, என்ன காரண காரியம்…?” மகா கேட்டுவிட,
“அதுவா, நாங்க மூணு பேரும் தனித்தனியா வேற வேற ஊர்ல வேலை பார்க்கிறோம். ஆனா வருஷத்துல ஒரு முறை விடுமுறை நாட்களில் ஒன்றுகூடி இது போன்ற சுற்றுலா இடங்களுக்கு போய் கொண்டாடுவோம். அதன் காரண காரியத்திற்காக கூடிய நண்பர்கள் என சொல்றான்…!” பரத் விளக்கம் அளித்தான்…
“ஓ அப்படியா…!!” என மகா கூறியதும், அவள் நினைவு இரண்டு நாட்களுக்கு முன்பு தன் தோழிகள் இருவருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய கயலின் பிறந்தநாள் பார்ட்டி அன்று இரவை நோக்கிப் பயணித்தது.
*-
அன்று
வெள்ளிக்கிழமை இரவு…
அணையப் போகிற விளக்கு தான் சுடர் விட்டு எரியுமாம்… அது போல.
“அடுத்த நாள் என்ன செய்யலாம்..??? எங்கு செல்லலாம்..???” என மூவரும் பேசி கொண்டே மொட்டை மாடியிலே உறங்க முடிவு செய்தனர்…
வலதுபுறம் சத்யா… இடதுபுறம் மஹா, அவர்கள் நடுவில் கயல் என தூக்கத்தால் மூவரும் திறந்தவெளியில் நட்சத்திர மண்டலங்களை எண்ணிக்கொண்டே படுத்திருந்தனர்.
கயல் இன்று நடந்ததைப் பற்றிப் பேசி கொண்டே இருக்கையில்… திடீரென்று ஞாபகம் வந்தவளாக சத்யா, “ஏன்டி எரும, எதுக்குடி எனக்கு அந்த மாதிரி லெட்டர் எழுதின சனியனே…!!” என கயலைப் பார்த்து கேட்டாள்….
சத்யாவிற்கு கயல் தான் தனக்கு ஒரு ரசிகன் என்ற பெயரில் பரிசுகளை அனுப்புகிறாள் என்று பலமாக நம்பக் காரணம்….
ஹைதராபாத்திற்கு வந்த புதிதில், மற்ற பெண்கள் சகஜமாகப் பழகினாலும், சத்யாவிடம் கயலைப் போல ‘பாய் ஃப்ரண்ட்’ இல்லாததை வைத்து மற்ற பெண்கள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியிருந்தனர்… மன உறுதியும் தெளிந்த மனப்பான்மையும் கொண்ட சத்யாவும் மகாவும் அதை எளிதாகக் கடந்துவிட, பூஞ்சை மனம் கொண்ட கயல் அதில் மாட்டிக் பரிதவித்தாள்…
பாவம், அவளும் என்னதான் செய்வாள்? அவளுக்கு வந்த காதல் அப்ளிகேஷன்களையும், சத்யாவும் மகாவும் நேர்முகத் தேர்வு வைக்க, அதில் ஒன்றுமே தெரியாதவர்கள் இவர்களை விரட்டிவிட வேறு வழியே இல்லாமல்… தன்னை மற்ற பெண்களிடம் உயர்த்திக் காண்பித்துக்கொள்ள நினைத்து, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி, அவளுக்கே லெட்டர் மற்றும் கிஃப்ட் வாங்கி அனுப்பி ஆனந்தம் கொண்டவள்…
“யான் பெற்ற இன்பம் பெறுக நீங்களும்…!!” என அவள் தோழிகளுக்கும் ஆள் இருப்பதாகக் கூறி, பரிசுப் பொருட்களோடு கடிதங்களை அனுப்பினாள்…
கயலின் செயல் பிடிக்காமல், “கயல் இதை எல்லாம் இப்போதே நிறுத்து.. எனக்குப் பிடிக்கல… லூசாடி நீ… யாரோ என்னமோ சொன்னாங்கனு கிறுக்குத் தனம் பண்ணாத…!!” என முதலிலேயே கண்டித்துவிட, அவர்களுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டாள்.
“ஐயாயோ… லெட்டரா…?? நான் எதுவுமே அனுப்பவே இல்லையே… அதைச் சொன்னா செமயா அடிப்பாளே… எதுக்கு வம்பு? நாம் அனுப்பினோதாவே சொல்லிடலாம்…??” என முடிவெடுத்தவள்…
“ஈஈ ஏன் மச்சி உனக்கு பிடிக்கலையா…?” என அவள் கேட்ட விதத்தில், சத்யா பல்லை கடித்து மஹா பக் என்று சிரித்து விட்டாள்…
“ஏன்டி மஹா சிரிக்குறா… சொன்னா நானும் சிரிப்பேன்ல…??” என கயல் அப்பாவியாக கேட்க,
“ஹாஹா… இல்லை பக்கி, அது என்னடி லெட்டர்ல அப்படி பீல் பண்ணி எழுதி இருக்க… அவ்வளவு லவ்வா சத்யா மேல உனக்கு… ஹாஹா..!!” என அந்த கவிதையை வாசித்து காட்ட,
“உன் இதழ் சுழிப்பில்…”
“தினம் தினம் செத்து போகிறேன்…”
“உன் கண்கள் என்னும்…”
“உயிர் சக்தியில் மீண்டும் நான் பிறக்கிறேன்….”
“உன் நினைவில் அலையும் இந்த வழிப்போக்கனுக்கு உந்தன் கூந்தலில் ஓர் இடம் தந்து,”
“உன் மார்புச் சூட்டில் கரையும் வரம் தருவாயா ரதியே….!!”
இதை கேட்டதும் கயல்,
“ஆத்தி கவிதையா! எனக்கு எந்த காலத்தில் கவிதை எழுத வந்திருக்கு… ஆமா, இவளுக்கு போய் யார் இப்படி அனுப்பி இருப்பா… சரி, சமாளிப்போம்…???” எனத் திருதிருவென்று முழித்து விட்டு,
“ஏன்டி, சத்யாவுக்கு என்ன குறைச்சல்? வில் போன்ற புருவம், சுருள் சுருளான முடி…. மரக்கொத்தி கண்கள், செரிப்பழ உதடுனு.. ஒல்லியான உடல்வாகோட செம பிகரா தான இருக்கா…!!” என கயல் தான் ஏற்ற வேடத்தை சிறப்பாகச் செய்ய நினைக்க,
“ஹாஹாஹ மச்சி சாரிடி, நானும் அமைதியா போகத்தான் பார்க்கிறேன், ஆனாஆஆ… இவள் போற போக்கப் பார்த்தால் நம்ம வார்டன் நினைக்குற மாதிரிதான் எனக்கும் தோணுது… ஹாஹாஹா….!! அவளாடி நீங்க ரெண்டு பேரும்….??? எதுக்கும் கயல் கிட்ட இருந்து தள்ளி இருடி சத்யா… ரொம்ப ரசிக்குறாடி உன்னை…. எப்படி எப்படி உன் மார்புச் சூட்டில் கரையை வா ஹாஹா ஆமாவா கயல்….!!” என மஹா கலாய்க்க…”
“சீ.. அசிங்கம் புடிச்சவளே…!!” என சத்யா தலையணை எடுத்து இருவரையும் அடிக்க, அவர்களும் பதில் தாக்குதல் தலையணையால் நடத்தினர்.
அதில் வெகுவாகக் கலைத்தவர்கள், “மச்சி.. ஹாஹூ… எத்தனை நாள் ஆச்சுலடி இது மாதிரி விளையாடி..??” என கயல் கேட்டாள்.
“ம்ம்ம்ம், லாஸ்ட்டா காலேஜ் பைனல்ஸ் படிக்கும் போது ஹாஸ்டல்ல செம ஜாலியா என்ஜோய் பண்ணோம்….!!” என மஹா கூறினாள்.
பழைய நினைவுகள் தந்த இனிமையில் சத்யா அமைதி
..
“மச்சி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதெரியவில்லை, ஆனால்… இன்னைக்கு தான் நாம முதன்முதல்ல நம்ம ஊர் பஞ்சாயத்து ஸ்கூல்ல தான் உங்கள பார்த்தோம்… நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று ஊரே சொல்லிக்கொண்டிருக்கும் போது… கடவுள் ஒன்றை எடுத்தால்… அதைவிடச் சிறந்த வேறொன்றை நமக்குக் கொடுப்பார் என்று என் பாட்டி சொல்லுவார்… அப்படிப் பார்த்தால்… எனக்கு அப்பா அம்மா அன்புக்குப் பதிலாக உங்க ரெண்டு பேரையும் கடவுள் கொடுத்து இருக்கார்… நான் ரொம்ப லக்கிடி…!” என கேட்க…
இருவரிடமும் பதில் வராமல் போக சத்யா, மகா இருவரையும் திரும்பிப் பார்க்க…
அவர்கள் எப்போது உறங்கி கனவு உலகத்திற்குப் பைபாஸ் பிடித்துச் சென்றார்கள்…
“அடிப்பாவிங்களாஅஅஅஅ… இருந்து இருந்து நானே இப்போ கொஞ்சமே கொஞ்சமாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசினேன், அதைத் தாங்காமல் தூங்கிட்டீங்களேடி… அவ்வளவு மொக்கையா நான் பேசினேன், சே போங்கடி… பண்ணிங்களா…!” என அவர்கள் திட்டி கொண்டே குப்புறப் படுத்தவள் சிறிது நேரத்திலே “கொர்ர்ர்ர்ர்…” என குறட்டை விட்டுத் தூங்கிவிட…
அவள் தூங்கிவிட்டதை உணர்ந்த சத்யாவும் மஹாவும்… தலைதூக்கி ஒருவரை ஒருவர் பார்த்து கண் அசைத்துக் கொண்டிருந்தவர்கள், கயலை ஒருசேரப் பார்த்த பார்வையில் அத்தனை கனிவு இருந்தது…. அவர்கள் சொல்லாத அன்பை அவர்களின் விழிநீர் சொன்னது….
நட்புக்கு
ஆண் பெண்
பேதம் இல்லை…
நட்புக்கு
இனம் மதம் மொழி
தேவை இல்லை….
புனிதமானது காதல் என்றால்..
அதனினும் மேலானது நட்பு…!!!!
சத்யாவும் மஹாவும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே டக் என்று தலையைத் தூக்கிப் பார்த்தாள்… கயல்…
“கண்டுபிடிச்சிட்டேன்…. நீங்க ரெண்டு பேரும் தூங்கல தான….!! கண்ணுல என்னமா தண்ணியா சத்யா, எனக்காக தான…!!” என கேட்க….
“இல்லையே…. கண்ணுல தூசி விழுந்திருச்சு, அப்படித்தானே மஹா…!!!” சத்யா…
“அப்படியே தான்டி சத்யா.. இவளுக்காக யார் இங்க அழுதாங்களாம்….!!” மஹா கிண்டல் பேச,
“ஏஏஏய்! பொய் சொல்லாதீங்க மச்சி, எப்படி ரெண்டு பேர் கண்ணுலயும் ஒன்னா தண்ணி வரும்… என் மேல அம்புட்டு பாசம் உள்ளுக்குள்ளே இருக்குதானே… சோ ஸ்வீட்.. ஐ லவ் யூ மச்சிஸ்…!!” இருவரையும் கட்டி கொள்ள….
“கருமம் புடிச்சவளே…. ஏற்கனவே இந்த கதைய படிக்குறவங்களே நம்மள ஒரு மார்க்கமா பார்க்குறாங்க… இதுல ஐ லவ் யூ வேறயா… கம்முனு தூங்குடி…. எஸ் ஓ எஸ் நைட் மஹா… எஸ் ஓ எஸ் நைட்டி கயல்….!!!” என்று விட்டு சத்யா திரும்பி படுத்து கொள்ள…
“ஓ சூப்பர்! எஸ்.ஓ.எஸ் நைட்டி சத்யா.. எஸ்.ஓ.எஸ் நைட்டி கயல்!” எனப் பதில் அளித்துவிட்டு இடது பக்கம் திரும்பி, போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கினாள்…..!!
“எத்தனை நாள் இந்த எஸ்.ஓ.எஸ்-க்கு அர்த்தம் கேட்டேன், நீங்க சொல்லல; நானே கண்டுபிடிச்சிட்டேன். இந்த எஸ்.ஓ.எஸ்னா சேவ் அவர் ஷிப் @ சோல் (Save Her Ship @ Soul) சரியா..???” என கயல் மீண்டும் அஞ்சலி பாப்பாவைப் போல நிரூபிக்க…
“இல்லை..!!” என கோரஸ் மட்டும் வந்தது.

