ஹாஸ்டலில் நடந்த பார்ட்டியில் இல்லாத பாய் ஃப்ரண்டு இருப்பதாகக் கூறி கோர்த்துவிட்ட கயல்விழியை சத்யாவும் மஹாவும் மொத்து மொத்துனு மொத்தி எடுத்தனர் மொட்டை மாடியில்… (அடடே ரைமிங்கு!)
“ஆஆஆஆ மச்சி மன்னிச்சுடுங்கடி… அவங்க அப்படி இல்லையனு சந்தேகமாக கேட்டதும்…. எனக்கு என்ன சொல்லத் தெரியாம சொல்லிட்டேன்…!!” என சத்யாவிடம் சரணாகதி ஆகிவிட…
“எருமை நாயே லூசாடி நீ…?? ஏன்டி இப்படி இருக்க…. போலி கௌரவத்துக்கு பாய் ஃப்ரண்டு வேணுனா உனக்கு மட்டும் இருக்குனு சொல்லித் தொலைய வேண்டியதுதானே…. எதுக்கு எங்க ரெண்டு பேரையும் இதுல இழுத்து விட்ட… பன்னி… நாய்… உன்னை அடிக்கவும் முடியல திட்டவும் முடியல…!!”
“ஆனா ஊனா மூஞ்சி மட்டும் தூக்கி வெச்சுக்கோ…!! நாளைக்கு டேட் போனீங்களானு யாராவது கேட்டா நீயே தனியா சமாளிச்சுக்கோ… நாங்க ரெண்டு பேரும் இதுல தலையிடவே மாட்டோம்….??” என சத்யாவும் மஹாவும் அவள் கூற்றில் நியாயம் இருக்கவே… சத்யாவுடன் சென்றாள்.
“அய்யோ எண்ட தெய்வமே… மச்சி மச்சி சாரிடி ப்ளீஸ் ப்ளீஸ்… நீங்க என்ன அடிங்க திட்டுங்க என்ன வேணுனாலும் பண்ணுங்க உங்களுக்கு இல்லாத உரிமையா… ஆனா இப்படி தனியா மட்டும் கோர்த்து விடாதிங்கடி ப்ளீஸ் சத்யா… ப்ளீஸ் மஹா நான் பாவம்ல… நேக்கு உங்கள விட்டா யாரையும் தெரியாதுடி காப்பாத்துங்க…??!!” என இருவரையும் பிடித்துக் கெஞ்ச…
“இல்லை…!!” என கோராசாகச் சொல்ல…
“உனக்கு எத்தனை தடவை தான் எக்ஸ்க்யூஸ் கொடுக்கிறாய்… நீ பண்ற தப்புனு கூட உனக்கு புரிய மாட்டிங்குது… உன்னால… கூட இருக்குற நாங்களும் சேர்ந்து அனுபவிக்கிறோம்… எப்போ தான்டி திருந்தப் போற நீ… உன்னை திட்டி திட்டி எனக்கு தாண்டி வாய் வலிக்குது…!!!! நீ எக்கேடு கெட்டுப்போனா இனிமே உனக்கு சப்போர்ட் பண்ணவே, பேசவே மாட்டோம் போ…!!” என சத்யா கொஞ்சம் கடினமாகச் சொல்லி விட…
கயல்… ஸ்தம்பித்து விட்டாள்… இதுவரை எவ்வளவு சண்டை வந்தாலும்… சத்யாவும் மஹாவும் பேசாமல் இருந்தது இல்லை… அவர்கள் ஒற்றுமை அப்படி… ஆனால் இன்று பேசவே மாட்டேன் என்று சொன்னதுதான் அவள் செய்த பெரிய தவறு தான் என்பது அவளின் சின்ன புத்திக்கு புரிய வர… கண்களில் கண்ணீர் வடிய விக்கித்து நின்றிருந்தாள் மாது…
படி வரை போனவர்கள்… கயல் தொடர்ந்து வராததை உணர்ந்து திரும்பி பார்க்க… அவள் கலங்கிய தோற்றத்தைக் கண்டு மனமிரங்கி வந்தனர்… “இவளுக்கு இதே வேலையா போச்சு, பாம்புனு ஒதுங்கவும் முடியல, பழுதுனு மிதிக்கவும் முடியலை…!” என நொந்து கொண்டனர்…
“சாரி மச்சி தெரியாம பண்ணிட்டேன்… நீங்க சொல்ற மாதிரி நான் லூசு தான் போல… பின்விளைவு பத்தி யோசிக்காம பண்ணிட்டேன், சாரிடி… இப்போவே போய் எங்களுக்கு எந்தப் பயமும் இல்ல, நான் பொய்தான் சொன்னேன் சொல்லிட்டு வந்துடுறேன் சரியா…?” என போக முனைந்தாள்…
அடியே அறிவு கெட்டவளே….!! மஹா
ஏன்டி எதையும் பேசறதுக்கு முன்னாடி யோசிக்கவே மாட்டியா…..!! என சத்யாவும் மஹாவும் அவளைத் தடுத்துக் கூட்டி வந்து மொட்டை மாடி பக்க சுவரில் அமர வைத்து, அவளின் இரு பக்கமும் சிறை பிடித்தபடி அமர…
அப்போ நான் என்ன தான்டி பண்ண? நாளைக்கு டேட்டிங் போனீங்களான்னு கேப்பாங்கலே… அதுக்குத்தான் அப்படி ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டா பிரச்சனை இல்லைல…??
நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்… நாளைக்கு முழுக்க நாம மூணு பேரும் ஊர் சுத்திட்டு, உன் ஆசைப்படி நைட் ஷோ பார்த்துவிட்டு வருவோம், சரியா…?!
என மஹா சொன்னதும்.. சத்யா அதை ஆமோதிக்க… கயல் முகம் பிரகாசிக்க “ஈஈ சரி மச்சிஇஇஇஇஇ….!!” எனப் பல்லைக் காட்டிட…
“நாயே… இதுதான் உனக்குக் கடைசியா இருக்கணும்….. நாளைக்கு அவுட்டிங் போயிட்டு வந்ததும் என்ன பண்ணுவியோ ஏதோ பண்ணுவியோ தெரியாது, இந்த போலி பாய்பிரெண்ட் அத்தியாயத்தை முடிச்சு வைக்கிறாய்… இல்லை…??” என சத்யா பல்லை கடித்தான்…
“அமைதி தங்கம் அமைதி…. நாம அவுட்டிங் போயிட்டு வந்ததும்.. நம்ம மூணு பேருக்கும் பிரேக்கப் ஆயிடுச்சு சொல்லிடறேன்… சரியா…??”
“மூணு பேருக்கும் ஒன்னா ஒரே நேரத்துல பிரேக் அப் ஆச்சுன்னு சொன்னா நம்புவாங்களா…??” என சத்யா மறு கேள்வி கேட்டு மடக்கினான்….
“அவங்க நம்புற மாதிரி சொல்ல வேண்டியது என் பொறுப்பு மச்சிஸ்.. ப்ளீஸ் நம்புடி என் தங்கம்…..!!!” என சத்யா கையை பிடித்து கெஞ்சினான்…
“சரி விடு சத்யா, அதான் இவ்ளோ சொல்றாளே… விடு பார்த்துக்கொள்ளலாம்… இனி இது மாதிரி லூசு வேலை செய்ய மாட்டாள்னு நினைக்கிறேன்…… அப்படி பண்ணா நாம பேச மாட்டோம்னு பயம் இருக்கும்…!!” மஹா சொன்னதும்…..
“அப்படி சொல்லுடி என் செல்லக்குட்டி….. இனி நான் லூசுத்தனமா பண்ணவே மாட்டேன் பா… நட்பு ப்ராமிஸ்……!” (ஐயோ இவ திருந்திட்டா கதைக்கு நான் எங்க போவேன்…) என சத்தியம் பண்ணிய சத்யா மற்றும் மஹா இருவரையும் கட்டிப்பிடித்தாள்.
எந்த ஒரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு… என்பதைத் தெரியாமல் இவர்கள் சொன்ன அந்தப் பொய்கள் இவர்களுக்கே எதிராக வினையாகிப் போனது தான் பரிதாபம்….
சந்துக் ரெட்டியைத் தொடர்ந்து…. பெண்கள் மூவரைப் பற்றியும்… அவர்கள் தங்கியிருந்த ஹாஸ்டலில் விசாரிக்கும் பேட்டி ஒளிபரப்பானது….
ஹாஸ்டல் வார்டன் சத்யாவையும் கயலையும் தவறாகப் புரிந்து கொண்டதை அப்படியே கூறிவிட்டாள்….
அது பொது வெளியில் பேசு பொருளாக மாறிப்போனது…. அடுத்து அவர்களுடன் தங்கியிருந்த மற்ற பெண்களிடம் கேட்டபோது….
அவரவர் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டு…. கூடுதலாக அம்முவின் பாய்ஃப்ரெண்ட் பற்றியும் தகவல் கொடுத்தனர்….
இது போதாதா மீடியாவிற்கு…. கிளைக் கதைகளை அவர்கள் தோன்றியபடி எல்லாம் புனைந்தனர்…..
பெண் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மர்ம ஆசாமிகள் யார்…??
மர்ம காதலர்களுடன் மூன்று பெண் குற்றவாளிகளும் தலைமறைவா…???
யார் இந்த பயங்கரவாதிகள்? இவர்களுக்கும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பா…..???
காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்…??? கலையுமா காவல் துறை மௌனம்….???? என யூடியூப் மிஞ்சிடும் அளவு புதுக் கதைகளை உருவாக்கினர்…
அவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தார்.. ஹைதராபாத் சிட்டி கமிஷனர்…..
லோட்டஸ் பெண்கள் விடுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்களையும் காவல் துறை மூன்று தனிப் பிரிவுகளை அமைத்துத் தேடி வருகிறது….
“சார்…. கொலை நடந்து முழுசா இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது….. இன்னும் குற்றவாளிகளைப் பிடிக்காம என்ன சார் பண்ணிட்டு இருக்கீங்க… இந்த சிட்டில பெண்களுக்குப் பாதுகாப்பு குறைஞ்சுகிட்டே வருதுனு மக்கள் கிட்ட ஒரு அதிருப்தி நிலவுதே அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க……???” என சரமாரியாகக் கேள்வி கேட்க… வந்த கோவத்தை வெளிக்காட்டாமல்…
“போலீஸ் அவங்களோட வேலைய சரியா செஞ்சிகிட்டு தான் இருக்காங்க… ஆனா அது போதாது… குற்றவாளிகளை பிடிக்க பொது மக்களும் முன் வர வேண்டும்…. இது தான் அந்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்கள்…. அவங்களை பிடித்து தருபவர்களுக்கு…. அரசாங்கம் தக்க சன்மானம் வழங்கும்…!!” என அழுத்தம் தாங்காமல் கூறி விட்டுச் சென்றார் கமிஷனர்….
இதை எல்லாம்…. கேட்ட பெண்கள் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சியில் இருந்தார்கள்….
அப்பொழுது தான் அங்கு வந்த சில உள்ளூர் கிராம வாசிகள் செய்தியையும்… எதிரில் இருந்த பெண்களையும் மாறி மாறி பார்த்தார்கள்….
“டிவிலோ சுப்பிஞ்ச்ச அம்மையாலு வீரே.. பட்டுக்கொண்டி…!!” (டிவில காண்பிக்கிற பெண்கள் இவர்கள் தான், இவளுங்கள பிடிங்க…..) என மூவரையும் பிடிக்க முயன்றனர்….
அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என கிரக்கித்தவர்கள்…. பாய்லரில் இருந்த சுடுதண்ணியை அவர்கள் மீது தட்டி விட்டு கயலை இழுத்து கொண்டு மீண்டும் ஓட்டத்தை தேர்ந்தெடுத்தனர்….விதியும் அவர்களை விடாமல் துரத்தியது…
நிற்காமல் விரட்டி வரும் காலன் ஒரு புறம்….!!! செய்யாத குற்றத்திற்காக…. துரத்தி வரும் காவல் ஒரு புறம்….??? போததிற்கு அதில் மக்களும் இணைந்து கொள்ள….!!! இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் கண்ணி வெடி வைத்து விதி காத்து இருக்க…. வெற்றி யாருக்கோ….???

