கண்ணி வைக்கும் கலாபனே-3

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 23/Aug/2026 ◷ 4 min read

ஹைதராபாத்… “முத்துக்களின் நகரம்” என்றும் “நிஜாம்களின் நகரம்” என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது… இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கூடங்களான ஹைடெக் சிட்டி போன்றவற்றை உள்ளடக்கியது…

கிழக்கில் உதித்த சூரியன் சார்மினார் மேல் பிரகாசிக்கும் அழகிய வேளை….

பரபரப்புக்கு பஞ்சமில்லாத பெண்கள் விடுதியின் காலை நேரம்; எதை எடுத்தோம்… “யாருடையதை உடுத்தினோம்…?? எதை தின்றோம்…??” எனத் தெரியாமல் அவரவர் வேலைகளுக்குத் தயாராகிக் கொண்டு இருக்க…

“சத்யாஆஆஆஆ ப்ளீஸ்டி…. இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும்டி, இனி கேட்கவே மாட்டேன் ப்ளீஸ்டி.. இதை மாட்டிவிடேன்…!!!” என கயல் குளியல் அறையில் இருந்து கொண்டு கெஞ்ச…

“எருமை, ஏழு கழுதை, வயசாகுது… இன்னும் உனக்கு ஹூக் போட்டு மாட்டத் தெரியாம எதுக்கு இருக்க? என்னால முடியாது போடி…???” எனப் பல்லை கடித்துத் திட்ட…

“நான் என்னடி பண்ண… இந்த பிராஸியர்ல ஹூக் பின்னாடி வச்சி… கொடுமை பண்றாங்கடி… நான் என்னடி பண்ணுவேன்… ப்ளீஸ் டி, டைம் ஆச்சு, பிறந்தநாள் அதுவுமா அந்த வழுக்கை மண்டையன் கிட்ட திட்டு வாங்க விரும்பல மச்சி, ப்ளீஸ்டி வாயேன்…!!” என கெஞ்ச…

“சனியனே… உனக்கு எத்தனை தடவை தான்டி சொல்றது… ஹூக் வச்சித வாங்காத, உனக்கு தான் அந்த இழையை போட வரலைல… அப்புறம் என்ன ம**** வாங்குற… அப்படியே மாட்டுற மாதிரி இருக்கு, அதை வாங்குடி சொன்னேன்ல…!” என சத்யா திட்டுவதிலே தெரிகிறது… இது அவளுக்கு வழக்கமான ஒன்று என்பது…

பெண்கள் மட்டுமே இருக்கும் தங்கும் விடுதியில் இது சாதாரணமே…

கயலிடமிருந்து பதில் வராமல் போக… இவர்கள் காலை நேர சண்டையைப் பார்த்து சலித்துப்போன மஹா… பெருமூச்சு விட்டுக்கொண்டு…

“சத்யா டைம் ஆகுதுடி… சீக்கிரம் போய்ட்டு வாடி… இல்லனா இன்னைக்கு முழுக்க உள்ளயே தான் இருப்பாள்…!!” என மஹா சொல்லவும், சலித்துக்கொண்டே குளியல் அறைக்குள் சத்யா நுழைந்தாள்…

இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்ட கயல்… எல்லாவற்றிற்கும் சத்யாவை மட்டும் நாடியே பழகிவிட்டாள்…

இது போன்ற செயல்களால்… அவர்கள் நட்பில் தனக்கான தனித்துவம் குறைந்து விடுமோ என்று மஹா ஒருபோதும் எண்ணியதும் இல்லை… எண்ணும்படி சத்யாவும் கயலும் விட்டதில்லை… சத்யா-கயல்… உறவு நட்பைத் தாண்டியது என்பது அவளுக்கே தெரியும்…

புரிதலுடன் கூடிய காதல்

மட்டும் அல்ல, நட்பும் அழகானதுதான் (நமக்கு வந்து வாய்க்குதுங்களே.. அம்புட்டும் பிசாசுங்க…)

உள்ளே சென்று பார்க்க அங்கு தலை குனிந்து நின்ற கயலுக்கு ஹூக் மாட்டி விட்டவள்… அவள் தலையிலே குட்டு வைத்து… “ஈரத்திலே நிக்காம சீக்கிரமா ட்ரெஸ் மாத்திட்டு வந்து தொலைடி எரும..!!” என்று விட்டுத் திரும்ப….

சத்யா கீழே இருந்த… சோப்பில் தெரியாமல் காலை வைத்து… வழுக்கி கீழே விழப் போன நேரத்தில்… கயல் அவளைப் பிடித்துக் காப்பாற்ற முயன்றபோது அவளும் வழுக்கித் தள்ளாட, இருவரும் கீழே விழாமல் இருக்க பேலன்ஸ்க்கு கதவைப் பிடிக்க முயல… அது பிடிமானம் இல்லாமல் திறந்து… இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு படித்து வெளியே விழுந்தனர்…

அந்நேரம் பார்த்து… நைட் நடந்த பார்ட்டி பற்றி விசாரிக்க வந்த வார்டன் இருவரின் கட்டிப்பிடித்த கோலத்தைப் பார்த்துவிட்டு…..

“சீ.. சீ.. கருமம்…. ஏன்டி இப்படிப்பட்ட பகல்ல அசிங்கம் பண்றீங்க… கலி முத்திடுச்சு….. பகவானே இன்னும் என்ன என்னலாம் பார்க்கணுமோ.. சைக்கு ட்ரெஸ் போட்டுட்டு கீழ வந்து என்ன பார்த்துட்டு போங்க…!!” எனத் தன் பாட்டுக்குக் கத்தியவர் கடகடவென்று கீழே இறங்கிச் சென்று விட்டார்..

வார்டன் வந்ததையும், கயலும் சத்யாவும் விழுந்து கிடப்பதையும் பார்த்துவிட்டு தவறாகப் புரிந்து கொண்டு பேசிச் சென்றதைக் பார்த்து இருந்த மஹா “ஹாஹாஹா…!” என விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க….

அவர் என்ன நினைத்தார் என்பது… கயலைத் தவிர மற்ற இருவருக்கும் நன்றாகவே புரிந்தது…

“ஏன் மச்சி எதுக்காக வார்டன் அப்படி பேசிட்டுப் போகுது… மஹா ஏன் இப்படி சிரிக்கிறா…?” என அஞ்சலி பாப்பாவாகக் கேட்டவளை… என்னதான் செய்ய…

சத்யாவிற்கு கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்… “அதை கொஞ்சம் மேல இருந்து எழுந்துட்டு கேக்கிறியா..!!” எனப் பல்லை கடித்துக் கொண்டு சொல்ல…

“அச்சச்சோ ஆமால சாரிடி…!!” என இளித்துக்கொண்டு எழுந்தவள்… சத்யா எழக் கை கொடுக்க.. அவள் கையைத் தட்டிவிட்டுத் தானே… எழுந்தவள் மஹாவை முறைக்க… கப்சிப் ஆகினாள்…

“அதான பார்வையிலே அடக்கிடுவா.. இவ கிட்ட மாட்டப் போற அப்பாவிய நினைச்சா பாவமா தான் இருக்கு…!!!” என மஹாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை

அதன் பின்பு அடிப்பிடி போட்டு ஒருவழியாக கிளம்பி அலுவலகம் சென்றவர்கள் அவரவர் பிரிவுக்குச் சென்று தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்….

சத்யா தன் இருக்கையில் அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்யப் போக, அவள் முன்னால் சில பரிசுப் பொருட்களோடும் “உன் ரசிகன்..” என ஒரு கடிதமும் இருந்தன… முதலில் குழம்பியவள், பின் யார் வேலை இது என யோசித்து, “இவளை” வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு… இடைவேளையில் பார்த்துக்கொள்ளலாம் என வேலையைத் தொடர்ந்தாள்…

மஹா வந்ததும் டீம் மீட்டிங் இருப்பதால் அங்கு சென்றுவிட, கயல் தன் முன்னால் சின்னதாக வைத்து இருந்த பிள்ளையார் சிலையைத் தொட்டு “கடவுளே… இன்னைக்கு என் பிறந்தநாள்.. இன்னைக்கு ஒரு நாளாவது எனக்கு சந்தோஷத்தைக் கொடுப்பீங்களா…!!” என வேண்டிக்கொண்டவள் மீது என்ன கோவமோ, கடவுளுக்கு இன்று தொட்டு அவர்கள் அடையப் போகும் வேதனைகளின் விதையை விதைத்து விட்டார்… கயலுக்கு அதன் தொடக்கமாக…

“வழுக்க மண்டை” என அவளால் பட்டப் பெயர் பெற்ற அவள், டீம் லீடர் அவளை அழைப்பதாகத் தகவல் வர… போயிட்டு வந்தவள் முகம் பேய் அறைந்தது போல் பிரம்மித்து உட்கார்ந்து விட்டாள்…

இடைவேளையில் கயலை பார்க்க வந்த சத்யா மற்றும் மஹா இருவரும்… அவள் இடிந்த தோற்றத்தைக் கண்டு என்னவென்று வினவ… மஹா அவளைக் கட்டிப்பிடித்து நடந்ததை கூறினாள்.

அமைதியாகக் கேட்டு நின்ற சத்யா ஒரு முடிவு எடுத்தவளாக, கயலை “வா” என இழுத்துக்கொண்டு… அந்தப் பெண்கள் இருவரும் அவர்களின் அலுவலக கேன்டீன் பகுதிக்குச் சென்றார்கள்.

அங்கு மற்ற டீம் லீடர்களோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கயலின் டீம் லீடரின் முன்னால் கயலை நிறுத்தியவள்…

“கூப்பிடுறா… எங்க இப்போ தைரியம் இருந்தா எங்க முன்னாடி கூப்பிடு…” சத்யா…

“என்ன பார்க்கிற? அவளை ஏதோ உன் கூட நைட் ஸ்டே பண்ணச் சொன்னியே, அதைத்தான் கேக்குறா, சொல்லு!” மஹா

“நீ என்ன டீம் லீடர்னா பெரிய புடிங்கியா… உனக்குக் கீழே வேலை பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் உன் கூடப் படுத்தே ஆகணும்னு கட்டாயமா… ஏன்டா.. ஏன் இப்படி **** அலையறீங்க… எத்தனை கனவுகளோடு வேலைக்கு வர்ற பொண்ணுங்கள உன்னை மாதிரி ***** யால அழிச்சுப் போகணுமா… எத்தனை பொண்ணுங்க நீ கொடுக்குற டார்ச்சரைத் தாங்க முடியாம வேலை விட்டுப் போய் இருப்பாங்க… எத்தனை பேர் விதியே நொந்து கிட்டு உன்னைச் சகிச்சுட்டுப் போய் இருப்பாங்க… இனி இப்படி நடந்தா கொன்னுடுவேன் ஜாக்கிரதை…!!!!” என மிரட்டி விட்டுப் போக…

அங்கு இருந்த அனைவரும் அவனைப் பார்த்த பார்வையில் அவன் கூனிக் குறுகிப் போனான்…

ஏற்கனவே அவன் மீது பல பெண்கள் குற்றச்சாட்டுகளை வைத்திருக்க… இன்று நேரடியாகத் தலைமையைச் சந்தித்து, அவனைப் பற்றி மூவரும் எழுத்துப்பூர்வமாகப் போலீசில் புகார் அளித்தனர்.

அதனால் அந்த டீம் லீடர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் அறிவிக்கவே, அதை பெரும் அவமானமாக கருதியவன்…

“கேவலம் பொண்ணுங்க நீங்க.. என்னையே அவமான படுத்திட்டிங்களா… விடமாட்டேண்டி ஒவ்வொருத்தியும் இந்த ஊர விட்டு ஓட ஓட விரட்டி அடிக்கல நேனு ராயலசீமா சந்துக் ரெட்டி காதுடி…!!” என பெண்கள் மீது வன்மம் கொண்டான் அம்மிருகம்…

வஞ்சம் கொண்டவானால் பெண்கள் அடையப் போகும் இன்னல்கள் தான் என்னவோ…??

பெண் தானே என இகழ்வாக நினைக்கும் பல பேர்க்குத் தெரிவதில்லை… ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே-3

Yadhu nandhini
Completed Novel
Thriller
27

Chapters

12

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top