கண்ணி வைக்கும் கலாபனே -20

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 29/Sep/2026 ◷ 4 min read

அந்தி சாயும் பொன்மஞ்சள் மாலை நேரம், குயிலின் இசையில் இருட்டு பெருகத் தொடங்கிய கருப்பொழுது… நாகரிகம் தீண்டாத, மரபு மாறாத எளிய பழங்குடி மக்களின் மாப்பிள்ளை விருந்து. தீபந்தங்களின் தங்கத் தீப ஒளியில், பஞ்சபூதங்களின் சாட்சியாக ஊர் மக்கள் பொதுவாக ஒன்று கூடி, தீ மூட்டி நெருப்பு சுடர்விட்டு எரியத் தொடங்கிய மந்தகாச இரவு பொழுது…

பறப்பன, ஊரவன என அனைத்துமே படையலாக வைக்கப்பட்டது… அவர்களின் விருந்துக்காகவே பிரத்யேக ஆடைகள், ஆபரணங்கள் தரித்து கயல், சத்யா, மஹா ஆகியோர் வனத் தேவதைகளாகக் காட்சி அளித்தனர்… ஏவலின் பொக்கிஷங்கள் மட்டுமே மறைக்கப்பட்டு இருக்க…

காளையர்களின் கண்கள் அவரவர் பெண்களின் மீது மையலோடு செலுத்திய பார்வையில், பெண்கள் நாணப் பூ சூடிக்கொண்டனர்… ஆண் கொக்குகளின் தொண்டையில் சிக்கிக் கொண்டது கெண்டை மீன்…

குனிந்த தலை நிமிராமல் வந்த பெண்கள் அவரவர் துணைகளோடு அமர்ந்து கொண்டனர்…

“காண்பது கனவா…” என எண்ணும் நிலையில், பெண்களின் மீது எழுந்த நறுமணத் தைலத்தின் வாசம் நாசியைத் தீண்டி, ஆணின் நரம்புகளை வீணை மீட்டு எடுத்தது.

“மச்சான், என்னடா நடக்குது இங்க…?” என அருகில் உட்கார்ந்த மஹாவின் வெட்கம் பரத்தின் இதயத்தை எம்பி குதித்ததை தாங்க முடியாமல், அருகில் இருந்த கரிகாலனிடம் கேட்க…

பதில் சொல்ல அவன் இலோகத்திலேயே இல்லை… அவன் கயலோடு வானுலகம் தாண்டி காமன் களி மண்டபத்தை விலைக்கு வாங்கி இருந்தான்.

சற்று எட்டிப் பார்க்க அங்கு கௌதமின் நிலையைப் பார்க்க, அவனோ அருகிலிருந்த சத்யாவை என்று வாயைப் பிளந்தபடி பார்க்க, உள்ளே சென்று கொசு அவன் காது வழியாக வெளியே வந்ததைக்கூட அறியவில்லை… “இவனுங்களுக்கு நாமளே தேவலாம்…” என விட்ட ஜொல்லைத் தொடர்ந்தவன், மனம் பொறுக்காமல் ஏன் என்று பெண்களிடம் கேட்டுவிட…

“போட்ட வேஷத்தை சரியா போடனும், அவ்வளவுதான்; நீங்கள் எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க…!!” நறுக்குத் தெரிந்தது போல் பதில் வந்ததில், ஆண்களின் லிட்டில் குட்டில் ஹார்ட் ஆனது, வெம்பி விம்மிப் போனது; அந்தோ பரிதாபம்…

ராஜபோகமாக காட்டில் விளைந்த உணவுகளைப் பரிமாறினர்; பின் அவர்களின் பிரத்யேக சோம பானமானது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது…

அதை மரியாதைக்காக வாங்கி குடித்தவர்கள்…

“என்னடா நாக்குல பட்ட உடனே சுர்ர்ர்னு ஏறுது…!!” கெளதம்…

“தம்பி, இது புதுசா கல்யாணம் ஆனவங்களதுக்காகவே தனியா சிறப்பா செய்யப்பட்டது… இங்க காட்டுல விளையும் மூலிகை, வேறு குதிரை **** உடம்பு ரத்தம், இன்னும் இன்னும் பல பல விஷயங்களை போட்டு செய்யுறது தம்பி… இத குடிச்சா உடம்பு சும்மா அப்படி முறுக்கிட்டு இருக்கும்… இந்த பானத்தை குடித்தால் வயசு பூட்டான் கூட சும்மா புது மாப்பிள்ளை கணக்கா முறுக்கிக் கொண்டு அலைவான்… சும்மா குடிங்க, நாலு நாளைக்கு வெளியவே வர முடியாது… நின்னு பேசும்…!!” என சொல்ல

அவர் எதை சொல்கிறார் என்பது புரியாமல் பெண்கள் விழித்திருக்க, ஆண்களோ “ஐயா, நீங்க சொல்றத பார்த்தா இது வயக்ரா விட பவர்ஃபுல்லான மேட்டர்னு சொல்றீங்க, அப்படி தான…!!” என பரத் கேட்டான்…

“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு…?” என கௌதம் தன் சந்தேகத்தை வெளிப்படையாகக் கேட்டு வைத்தான்.

“தம்பி, உங்களுக்கு நம்பிக்கை இல்லனா குடிச்சுப் பாருங்க, அப்போ தெரியும் சங்கதி…!” என உசுப்பேற்றி விட, அதை கேட்டவர்கள் வினயமாக அள்ளிப் பருக ஆசைவேர்கள் குத்திட்டு நின்றன…

மேலும் அவர்களை உசுப்பேற்ற, நாட்டுப்புற நடனமும் இளம் பெண்களின் ஆட்டமும் அங்கம் அதிர அதிர அங்க லாவண்யங்கள் குலுங்கியதில், ஆண்களின் ஆசைவேரும் குலுங்கியது; வேதனைத் தீயில் வாடி வந்தனங்கினார் ஆண் சிங்கங்களும்…

உள்ளே சென்ற காமப் பானமானது, கண்களின் போதையும் காதலையும் காமத்தையும் போட்டி போட்டு ஆசை நரம்புகளைப் பின்னிப் பிணைந்து, சர்பத்திற்கு ஈடாக செவ்வரொடி கண்களால் தன் பேடைகளைத் தேட…

கையில் பானத்துடன் ஆட்டத்தை ரசித்துக் கொண்டு இருந்தவர்களின் அழகை அப்பட்டமாகத் திருடியவர்கள்…

அதற்கு மேல் தாங்காமல் அவரவர் ஜோடிகளைத் தூக்கிக் கொண்டு அவரவர் குடிலுக்குச் சென்று கதவை அடைத்தனர்…

சத்யாவை மலர்ச் செண்டு போல் தன் வன் கரங்களில் ஏந்திய கெளதம்.

அவள் கால் தரையில் படாமல் தாங்கியவன், மிக மென்மையாகக் கட்டிலில் இறக்கிவிட்டவன்… தானும் அவளோடு நெருங்கியவன், சத்யாவின் முகத்தின் வெகு அருகில் தன் மூச்சை கொண்டு சென்றவன், அவள் விடும் சுவாசம் தின்று வாழும் அரக்கனாக வாழும் ஆசை கொண்டான்…

மன்னவன் நெஞ்சை குத்தி கிழிக்கும் அவள் கூர் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, அவள் முகத்தை கையில் தாங்கியவன், இதழும் மலர, அவளின் இதழும் பட்டுப் படாமல் உரசிக்கொள்ள…

“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சத்யா… உன் திமிரு தான்டி உன் அழகே… சும்மா இந்த கண்ண வச்சுப் பார்ப்ப பாரு ப்ப்பா… இங்க கெடந்து துடிச்சுடி…!!” என இதயம் தொட்டு காட்டியவன்…

“உன்னை பார்த்ததுல இருந்து இந்த கெளதம் மொத்தமா சாஞ்சிட்டான்டி… நான் ஒன்னும் நல்லவன் இல்லை, ஆனா எப்போ இந்த நேர்கொண்ட பார்வையை பார்த்தேனோ, அப்போவே விழுந்தவன் தான். உன்கிட்ட இருந்து எந்திரிக்க தோணவே இல்லைடி…!!” என போதையில் தள்ளாடியவன் சத்யாவின் மீது மொத்தமாக விழுந்தான்….

அவன் பாரம் தாங்காது மூச்சு முட்டி திண்டாடினாள் மங்கை…

“உன்கூட கனவுலேயே வாழ்ந்துட்டேன்டி, எப்போடி நிஜமா நாம வாழுறது…ம்ம்ம்ம்…!!” என கேட்டபடி சத்யாவின் மேல் ஏறியவன், அவளின் மலைப்பள்ளத்தாக்கில் முகத்தை புரட்டியதில், அவன் ஊசி முனைத் தாடி குத்தி காயமடைந்தாள் மாது…

“ஸ்ஸ் ஹா கௌதம் ப்ளீஸ் ஹா… தள்ளி இருந்து பேசுங்க, நீங்க இப்ப எல்லாம் பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. ம்ம்ம்ம் எந்திரிங்க ஹா….!!” என சத்யா, கௌதமின் தலையை ஆழமான பள்ளத்தாக்கிலிருந்து எடுக்கப் போராடிய வண்ணம் கூறினாள்…

மண்ணுக்குள் புதைந்திருந்த வான்கோழியாகத் தலையைத் தூக்கி சத்யாவைப் பார்த்தான் கௌதம்…

“முடியாது, உன்னை இனி விட முடியாது. உன்னை என் கூடவே வச்சி அணு அணுவா ரசிச்சு ரசிச்சு வாழணும்… எனக்கு ரொம்ப நாள் ஆசை என்ன தெரியுமா? நீ என்னை பாவான்னு கூப்பிடணும். அப்படி கூப்பிடும் போதும் இந்த உதடு இருக்குல்ல, அதை அப்படியே செர்ரி பழமா நினைச்சு கடிச்சு திங்கணும்.” இப்படி என்றவன் கூறியபடியே கடித்து இழுக்கத் திணறிப் போனாள் காரிகை… “இப்படி நீ துள்ளும் போது குதிக்குது பாரு இந்த ரெண்டு டென்னிஸ் பால், எகிறி குதிக்கும் போது அப்படியே இந்த கையால அடக்கி ஆளணும்…!!” என கூறியவன் கொங்கை மலர்களைப் பறிக்க…

“ஹாஆஆ பொறுக்கி விடுடா என்னை…?” என கௌதமின் திடீர் தாக்குதலைத் தாங்காமல் சத்யா கத்திவிட….

“எஸ் எஸ் இதே இதேதான் நான் உன்னோடதை பிடிச்சு கசக்கும் போதும் விடுடா பொறுக்கி பாவாணு நீ சிணுங்குவ பாரு, அந்த சிணுங்களுக்கே எனக்கு நட்டுக்கும்டி. அப்போ உன்னை சரக்குக்கு சாயிடு டிஷா தொட்டு திங்கும் ஆசை வரும். இந்த தொப்புள்ல சரக்கு ஊத்தி குடிக்க எவ்ளோ ஆசை தெரியுமா…!!” என்றவன் குனிந்து அவள் மேலாடை நீக்கியவன், குவிந்த அவள் தொப்புள் குளத்தில் அழுந்த முத்தம் வைத்து கவ்வி உறிஞ்சினான்….

“ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம் பொறுக்கீ…!!” அவ்வளவுதான் சத்யாவின் பொறுமை காற்றில் கரைந்து போனது. ஆவேசம் கொண்டு கௌதமை தள்ளிவிட்டவள், கௌதம் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே -20

Yadhu nandhini
Completed Novel
Romance, Thriller
27

Chapters

5

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top