ஓங்கி உயர்ந்து கட்டுப்பாடுகள் இன்றி காட்டுத்தனமாக வளர்ந்த காட்டு மரங்கள்…
ஊடே உச்சி மின்னும் சூரியன்… மண் சாலையில் செல்லும் ஜீப் நிழல் விம்பம் பின் தொடர ஒரு காட்டு வழிப் பயணம்…
தன் தோழிகளோடு இனிமையாக இருந்த தருணங்களை நினைத்தபடி வந்தவர்களை இடையிட்டது…
கரிகாலனின் கேள்வி…
“ஆமா, எதுக்காக அந்த ரவுடி கும்பல் உங்களைத் துரத்திட்டு வந்தாங்க? அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்களைப் பார்த்தா படிச்ச பொண்ணுங்க மாதிரி தெரியுது… இந்த காட்டுல உங்களுக்கு என்ன வேலை?” என கிடுக்குப்பிடியாகக் கேள்வி…
அதில் கனவுலக மாயை தெளிந்தவர்கள், நேற்றைய முன்தினம் நிகழ்வு நினைவுக்கு வர மிரண்டனர் பெண் மான்கள்…
கேள்வியை தொடர்ந்து அவர்களின் முக மாற்றங்களை Rear-view mirror வழியாகப் பார்த்து இருந்த கரிகாலன், பரத்திடம் தங்களுக்குள்ளாகவே கண்களால் பின்னால் இருந்த இருவரையும் சுட்டி காட்டிப் பேச… அதை புரிந்து கொண்டான் பரத்…
“ஏங்க, உங்களுக்கு எத்தனை பாய்ஃப்ரெண்ட்ஸ்னு கேட்டோம்… பார்க்க அழகா வனதேவதைகள் மாதிரி இருக்கீங்க… இந்த அடர்ந்த காட்டுக்குள்ள வந்து அந்தத் துஷ்டன் கிட்ட எப்படி மாட்டிக்கிட்டீங்கன்னு சொன்னால், உங்களுக்கு ஏதாவது எங்களால பண்ண முடியுமான்னு தான் கேக்குறோம்…?” என பரத் இயல்பாகவே கேட்டுக்கொண்டிருக்க…] , ,
“அது நாங்க ஹாஸ்டல்…!!” என கயல் அனைத்தையும் கூற முனைய, அவள் கையை பிடித்து “சொல்லாதே” என மஹா கண்களால் அடக்க… கயல் வாயை இறுக மூடிக்கொண்டாள்… அதையும் கண்ணாடி ஊடே பரத்தும் கரிகாலனும் கவனித்தனர்…
“என்ன…? என்ன சொல்ல வந்தீங்க…? இந்த எஃப்எம் சத்தத்துல எனக்கு ஒண்ணுமே கேட்கல, இருங்க சத்தத்தைக் குறைக்கிறேன்…” என்ற பரத்…
வண்டியில் இருந்த எஃப்எம்மை வேண்டுமென்றே அதிகமாக ஒலிக்கச் செய்ய, அதிலும் ஹைதெராபாத் பெண்கள் விடுதியில் நடந்த கொலைச் சம்பவம் பற்றிப் பேச… அதில் பேட்டியாளர் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு ஹைதெராபாத் காவல்துறை அதிகாரியிடம் பேட்டி எடுத்தனர்…
“வணக்கம் சார், உங்களை ஏன் ஹைதெராபாத் மக்கள் செல்லமாக கருடன் என்று அழைக்கிறார்கள்…!!” – பேட்டியாளர்…
கருடனின் பதில்…
“குற்றவாளிகள் எங்க தப்பிச் சென்றாலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களைத் துரத்திப் பிடித்துக் கொண்டே இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்…!”
பேட்டியாளர்: “சார், இந்த வழக்கை நீங்கள் பொறுப்பேற்று விசாரித்த பிறகு என்ன மாதிரியான முன்னேற்றங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளலாமா…?”
“இப்போதைக்கு எங்களுக்குக் கொலை செய்யப்பட்ட அறையிலிருந்து கிடைத்த கத்தியில், மூன்று குற்றவாளிகளில் ஒருவரான கயல் என்கிற குற்றவாளியுடைய கைரேகை கிடைத்ததாகப் தடயவியல் ஆய்வகத்திலிருந்து (Forensic Lab) எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது… சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக் கருதி இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும். எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை நாங்கள் முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம், அப்போது உங்களுக்கே எல்லாம் தெரியவரும்…!” என கருடன் கூறி முடித்தார்.
“சார் ப்ளீஸ் ஒரே ஒரு கடைசி கேள்வி…?” என பேட்டியாளர் விடாமல் தொந்தரவு செய்ய… “சரி கேளுங்க, அந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன்…!!” என அமர்ந்திருந்த கருடனிடம், “இதுவரைக்கும் மக்கள் மத்தியில் போலீஸ் மேல இருந்த அதிருப்தி பரவி இருக்கு, இதுக்கும் உங்களுக்கும் இந்த கேஸ்க்கும் என்ன சம்பந்தம் இருக்கு..!!”
“குற்றவாளிகளைச் சட்டத்திற்கு முன் கொண்டு வருவேன் என என் மேல மக்கள் நம்பிக்கை வச்சிருக்காங்க, அந்த நம்பிக்கை வீண் போக விடமாட்டேன்… குற்றவாளிகளுக்காகவே வைத்த கண்ணிப் பொறியில் அவர்கள் ஏற்கனவே சிக்கியாச்சு… இந்த வேட்டைக்காரன் வலையில் சிக்கிய புள்ளி மான்கள் தப்பவே முடியாது…!!”
“சார் அப்போ குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சிட்டீங்களா…?? அவங்க எங்க…?? அவங்களைச் சட்டத்தின் முன்னாடி உயிரோட கொண்டு வரப் போறீங்களா இல்ல பிணமாக கொண்டு வரப் போறீங்களா…??” என பேட்டியாளர் கேள்வி கேட்கக் காரணம், கருடன் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் என்கவுண்டரில் முடிந்திருக்கும்; அதனால்தான் மரியாதையையும் பகையையும் நிறைய சம்பாதித்து உள்ள கருடன் என்றுமே சாகச வீரன்..
“ஹாஹா மறந்துட்டீங்களா, ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் தான் பதில்… மீதியை கோர்ட்ல வச்சு தெரிஞ்சிக்கோங்க…??” என அட்டகாசமான சிரிப்பை உதிர்த்ததன் அர்த்தம் அவன் மட்டுமே அறிவான்… அத்தோடு பேட்டியை முடித்துக் கொண்டான் மிஸ்டர் கருடன்…
வானொலியில் ஒலிபரப்பப்பட்ட செய்தியைக் கேட்டு, பெண்கள் உயர் அழுத்த மின்சாரத்தைத் தொடுவது போன்ற அதிர்ச்சியில் உறைந்து இருக்க…
“என்ன சொல்ல வந்தீங்க? என்னமா, ஏதோ ஹாஸ்டல் தான சொல்ல வந்தீங்க…?” என பரத் வினயமாகக் கேட்க,
ஏற்கனவே கருடன் அளித்த பேட்டியை கேட்டவர்கள் பயந்து இருக்க, இதில் பரத் பூடாகக் கேட்ட கேள்வியில் வியர்த்து வடிந்தனர்…
“அ… அது அவள் ஹாஸ்டல் வார்டன் மாதிரி கேள்வி கேட்கிறீங்களேனு சொல்ல வந்தா… அப்படி தான கயல்…?” என மஹா சமாளிக்க முயல,
“இ… இல்லை…! ஆமா மஹா சொல்ற மாதிரி தான் சொல்ல வந்தேன்…!” என கயலும் பயத்தில் உளறி வைத்தாள்.
“அப்படியா? அந்த அளவுக்கா விரைப்பா இருக்கு…?” என கரிகாலன் வேண்டுமென்றே இரு பொருள்படக் கேட்க,
அந்நேரத்தில் பெண்களின் மரக்க மூளை வேலை செய்ய மறுக்க, கரிகாலனின் கேள்வியை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டனர்…
அவர்களின் நிலையை கண்டு பரிதாபம் கொண்டனரோ என்னவோ, அதற்கு மேல் பெண்களிடம் துருவித் துருவி கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, இயற்கை வளம் நிறைந்த அந்த அழகிய எழில் கொஞ்சும் வனத்தை தானும் ரசித்தவாறு, அவற்றை பற்றிய பல புதிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த வண்ணம் வர…
இயற்கை அழகில் மயங்காத மனமும் உண்டோ? மயங்கியது பெண்களின் மனமும்; ஆயிரம் வலி சுமந்தாலும் அது இயற்கையவளின் அழகியலில் மனம் தொலைவதில் தவறில்லை…
அவ்வண்ணமே தங்கள் இறுக்கத்தை தொலைத்து இயல்புக்கு வந்தனர் பெண்கள்…
கருப்பு புகையை கக்கியபடி பச்சை வண்ண ஜீப் அடர்ந்த மரங்களுக்கு இடையே இருக்கும் கிராமத்திற்குள் சென்றது… ரம்யமான சூழலில் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழும் மக்களின் கூடாரத்திற்கு முன்பு இயந்திர ஜீப் வந்து நின்றது…
“இதுக்கு மேல நீங்க என் பொறுப்பு, அதனால நான் சொல்ற மாதிரி தான் நீங்க நடந்தாகணும்…?! நான் என்ன செஞ்சாலும் பேசினாலும் நீங்க தலையை மட்டும் தான் ஆட்டணும், புரியுதா…?!” என எச்சரிக்கையுடன் கரிகாலன் கீழே இறங்க, மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்து கீழே இறங்கினர்…
மற்றவர்களை முன்னால் விட்டுப் பின் தங்கிய கரிகாலனிடம்…
“எப்படி வளைச்சு வளைச்சு கேட்டாலும் பட்சீங்க, சிக்க மாட்டேங்குதே… என்ன செய்ய மச்சி…??” என பரத் கேட்க,
போகும் அவர்களைக் கண்ணில் அணிந்த கண்ணாடி வழியாகக் கவனித்த கரிகாலனின் கண்கள் வியப்பில் வட்டம் அடிக்க, மஹாவைப் பரத்தின் கூர் பார்வை பார்த்தது…
ஆனால் அந்தப் பிரக்ஞை இல்லாத பெண்களோ, கௌதமின் கையில் உணர்வற்ற தளிராகக் கிடக்கும் சத்யாவையே கவலையோடு பார்த்துக்கொண்டு இருக்க… “மான் எங்கடா போயிட்டே போகுது, எப்படியாவது வேடன் விரிச்ச வலைல தானே சிக்கும், இல்லனா சிக்க வைப்போம்…!!” என அழுகிய குரலில் கூற, அவனைத் திரும்பிப் பார்த்த பரத்தைப் புரிந்துகொண்டதும் தலை அசைக்க… இறுகிய முகத்துடன்… அவர்களைத் தொடர்ந்தான் பரத்…
வேடன் விரித்த வலையில் சிக்கப் போவது புள்ளி மான்களா…?? அல்லது வேடனா…??

