கண்ணி வைக்கும் கலாபனே -6

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 26/Aug/2026 ◷ 5 min read

சத்யா, மஹா, கயல் மூவரையும் குற்றவாளிகள் என செய்திகளில் ஒளிபரப்பத் தொடர்ந்து, பொது மக்கள் அவர்களைப் பிடிக்க முனைந்தனர்; அவர்களிடமிருந்து தப்பிக்க ஓட்டம் எடுத்தனர்.

வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிப் போனது…!!

சிற்றுண்டி கடையில் இருந்து தப்பி ஓடியவர்களைத் துரத்திப் பிடித்தனர்…. கயவர்கள் கூட்டம்….. சத்யா, மஹா, கயல் மூவரையும் ஒன்றாகக் கட்டி இழுத்து வந்து அவர்களின் தலைவன் முன்னால் தள்ள, புழுதியில் சரிந்தன மலர்ச் செண்டுகள்…

“து தெறிக்க… என்னாங்கடி இது, எனக்கே ஆட்டம் காட்டுறீங்களா…??? இந்த காடு மொத்தமும் என் ராஜ்யம்… இந்த பத்ரா ராஜ்யம்! இந்தப் காட்டோட ஒவ்வொரு மூலை முடுக்குலையும் என் பேர் தான் எதிரொலிக்கும்… நான் தான் இந்த மொத்த காட்டுக்கே ராஜா! ஹாஹா…!!” ராட்சஸின் சிரிப்பில் அந்த வனமே பூகம்பம் கண்டது போல் அதிர்ந்தது; விலங்குகள் அச்சத்தில் ஆர்ப்பரித்து பயத்தில் ஓலமிட்டன….

“இந்த காடு என் காலடியில்! இதுல நீங்க ஒளிஞ்சிகிட்டா என்னால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டீங்களா… இங்க நீங்க எங்க ஒளிஞ்சாலும் அடுத்த இருபது நிமிஷத்துல என் கையில தான் உங்க சாவு… சங்கு அறுத்துருவேன்…!!” என அக்கூட்டத்தின் தலைவன் பத்ரா கர்ஜித்து விட்டு கத்தியை எடுத்தான்…

“அண்ணையா… அவசரப்படவே வேண்டாம்…!!” எனத் தலையைச் சொரிந்தான் ஒருவன்.

‘ஏமிரா… என்ன சொல்ல வர்ற? தெளிவா சொல்லுடா…!” எனக்கத்தினான்.

“இல்லை அண்ணையா, எப்படியும் இவளையெல்லாம் கொல்லப் போறோம்… மண்ணு திங்கப் போறத ஏன் நாம தின்னக் கூடாது? இந்த மாதிரி அழகான பொண்ணுங்க நமக்குக் கிடைக்க மாட்டாங்க…!!” என வக்கிர புத்தி கொண்டவன் விழுந்து கொண்டே சொல்ல,

“ஹாஹா… கற்பழிச்சுச் கொல்லப் போறன்னு சொல்லு… ஏற்கனவே இப்படித்தான் ரெண்டு பொண்ணக் கொன்னவன் தானடா நீ… ஹாஹா… எடுத்துக்கோ…!” எனச் சிரித்தவன் தன் கூட்டத்தைப் பார்த்து…

“ரேய்…. இன்னைக்கு உங்களுக்குக் கொழுத்த வேட்டை தான்! இவங்களத் தூக்கிட்டுப் போய் நீங்க பண்ற கொடுமையில அவங்க கத்தல் இந்த காட்டோட ஒவ்வொரு முனையிலும் எதிரொலிக்கணும்… அதை என் காது குளிரக் கேட்டு நான் ரசிக்கணும்… இனி பத்ரனுப் பேரா கேட்டாலே கதி கலங்கிப் போகணும்… தூக்கிட்டுப் போங்கடா…!!!” என வான் அதிர அரக்கன் கத்த, காடே நிலநடுக்கம் கண்டது…

அடுத்துத் தங்களுக்கு நடக்கப் போகும் கொடுமையை நினைத்துத் தவித்த பெண்கள்….. ரட்சிக்க யாரும் வர மாட்டார்களா…???? என ஏங்கினர்…

அவர்கள் நல்ல நேரமோ அல்லது அதிர்ஷ்டமோ…. தூரத்தில் சில வண்டிகளின் சத்தம் கேட்க, சுதாரித்த சத்யா மற்ற இருவருக்கும் சைகை செய்ய, புரியாமல் விழிக்கவும்… பிரேதம் பூசும் ஆசையில் கயவர்கள் நெருங்கும் நொடியும் தாமதிக்காமல், சத்யா மண்ணைத் தூவி விட்டு அவர்களின் கண்ணைத் தற்காலிகமாகக் குருடாக்கிவிட்டு, மற்ற இருவரையும் தள்ளிச் சுமந்து கொண்டு ஓட ஆரம்பித்தாள்….”

“ஆஆ அடி * உங்கள…!!!” என கண்ணை கசக்கிக் கொண்டு நிற்க… அப்பொழுதே பெண்கள் அங்கு இல்லாததை உணர்ந்து…

“டேய் தப்பிச்சு ஓடுறாளுங்க * பிடிங்கடா அவளுங்கள ….?” என அவர்கள் பின்னாலே ஆயுதங்களுடன் துரத்திச் சென்றனர்…

அந்தக் காட்சியானது… கூட்டத்தில் இருந்து பிரிந்த மூன்று இளம் புள்ளி மான்களைச் சதைப்பசி கொண்டு கூரிய பற்களுடன் வேட்டையாடத் துரத்தும் கழுதைப்புலிகளை நினைவுபடுத்தியது….

எத்தனை…. பிரயத்தனம் செய்தும்… உடலில் தேவையான சக்தி இல்லை என்பது ஒரு பக்க அவலம் என்றால், மறுபக்கம் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஓடித் தப்பிக்க இயலாது எனத் தவித்துப் போயினர்…

“ஹாம்ம்.. ஹுயூ ம். சத்யாஹா முடியலடி … இதுக்கு மேல ஒரு அடிக்கூட வைக்க முடியாதுடி…….!?” என கயல் இரைந்தாள்

“ஆமா சத்யா, இதுக்கு மேல நம்மால தப்பிக்க முடியும்னு தோணல… அவங்க கிட்ட மாட்டி சித்திரவதைப்பட்டு சாகறதுக்கு பதிலா நாமளே செத்துடுவோமா… ஆ..!!!” மஹா அவலநிலையை நினைத்து கதறியபடி கேட்க,

இரண்டு நாட்களாக சாப்பிடாதது உடல் சோர்வை மட்டும் கொடுக்காமல்… அடுக்கு அடுக்காக நடந்த அதிர்ச்சிகளால் மன சோர்வும் சேர்ந்து அவளது நம்பிக்கையைச் சிதைத்தது…

“அப்படி சொல்லாதடி மகா கயல், இங்க பாருங்க…. வண்டி சத்தம் கேக்குது, நமக்கு உதவி பண்ண நிச்சயம் யாராவது வருவாங்க… உங்க நம்பிக்கையை கை விட்டுடாதீங்க… எதுவா இருந்தாலும் போராடி பார்க்கலாம், ப்ளீஸ்…!!” என அவர்களைத் தேற்ற முயற்சித்தவள், முதலில் அவர்கள் கை கட்டை அவிழ்க்க நினைத்து ஒரு மரத்தின் பட்டையில் பின் புறமாக உராய்ந்து கட்டை அறுக்க முயலும் போதே

“டேய் இங்க இருக்காளுங்கடா, அந்த **** வாங்கடா… எவளையும் விட கூடாது… சீக்கிரம் வாங்கடா..!!” என இருவர் வந்து விட

அவர்களிடமிருந்து தப்பிக்கும் சமயம், ஏற்கனவே அடிபட்ட கயல்விழி அவர்களிடம் எளிதாகப் பிடிபட்டு விட…

“எங்கடி *** தப்பிச்சு ஓடுற…!!” என வெண்பட்டு கன்னம் கிழிய அறைந்து தள்ளினான்.

“அம்மாஆஆஆ…!!” என சுருண்டு தூரப் போய் விழுந்தவளிடம், “டேய் இந்த பீஸ் முதல்ல எனக்கு, அப்புறம் நீ…!!” எனப் பங்கு போட்டுக்கொண்டு சதை புசிக்க கயலை நெருங்கிய சமயம்…….

“ஆஆஆஆ….!!” என மரண ஓலமிட்டபடி மண்ணில் சரிந்தான் காமுகன்… அதில் கண்ணைத் திறந்து கயல் பார்க்க, அவள் எதிரில் உக்கிரமான தோற்றத்துடன், கையில் ரத்தம் படிந்த கட்டையுடன் காளி அவதாரமாக காட்சி அளித்தாள் சத்யா.

மேலும் ஆட்கள் அவர்களை நெருங்கி வரும் சத்தம் கேட்டு, கீழே விழுந்து கிடந்த கயலை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்க… அவர்கள் முன்னால் ஓடிய மஹா… வேறு ஒருவனிடம் போராடிக்கொண்டு இருக்க… அவனையும் அடித்து நொறுக்கிவிட்டு மஹாவை இழுத்துக்கொண்டு ஓடினர்….

தங்கள் முன்னால் ஓடும் பெண்கள் மீது குறி வைத்து ஆயுதங்களை எறிந்தனர்… மாரி மழையாக ஆயுதங்கள் பொழிய, அதன் நடுவே புகுந்து உயிரைக் காக்க ஓட முயல… காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த கூரான கத்தி ஒன்று மஹாவை நோக்கி வருவதைப் பார்த்த சத்யா, அவளைத் தள்ள நினைத்து கால் இடறித் தடுமாறி விழ, கத்தி சரியாக சத்யாவின் இடது தோளில் குத்தி நின்றது…..

“சத்யாஆஆஆஆ….!!” என மஹா திரும்பி வரத் துடிக்க… ஆயுதங்களில் ஒன்று மஹாவின் நெற்றியைப் பதம் பார்த்தது…. இவர்கள் இருவருக்கும் முன்னால் ஓடிய கயலும் மஹாவின் அலறல் கேட்டுத் திரும்பிப் பார்க்க….

“வராதடி கயல் ஓடு… இங்க வராத… நான் சொல்றேன்ல, வந்த நானே அடிப்பேன்! அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப் போ…!!!” என அவ்வளவு வலியிலும் சத்யா கத்தினாள்… என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பி நின்ற கயல், சத்யாவின் கட்டளையைக் கேட்டு ஓட ஆரம்பித்தாள்…

அதற்குள் சத்யாவை நெருங்கி இருந்த மஹா, அவளை எழுப்பித் தன்னோடு அணைத்துப்பிடித்து ஓட முயல… அதற்குள் எங்கிருந்தோ பாய்ந்து வந்த வெட்டு அருவா வந்து சத்யாவின் ஒரு காலைப் பதம் பார்த்தது…

“அம்மாஆஆஆஆஆ…..!!” எனத் துடிதுடித்தபடி கீழே விழுந்தாள் சத்யா….

“ஓடவா செய்றீங்க, இருங்கடி…!” என ஒரு குரல் அவர்களை நெருங்க… அவளுக்குச் சாவு நெருங்கிவிட்டதை உணர்ந்தவள், தன்னைத் தூக்க முயன்ற மஹாவைத் தடுத்தாள்….

“வேணாம் மஹா…. நீயும் போடி….!!” என விரட்ட…

“மாட்டேன், நீயும் வாடி சத்யா, ஒன்னாப் போய்டலாம்..…!!” என மறுக்க…

“ஐயோ மஹா… ப்ளீஸ் போடிஇ… எ..என்னாலஆ… இதுக்கு மே.. லாஆ ஓ ஓட முடியாதுஊ.. நீயும்ம்ம்ம் கயலும்ம்ம்ம் எ..எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சுப் போயிடுங்க… ஆயிஷா கிட்ட போய்டுங்க… நிக்காத, போஒஒஒடி…!!!” எனப் பிடித்துத் தள்ளினாள்….

இரத்தக் காயங்களுடன் மரத்தில் சரிந்து நின்ற சத்யாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஓடிச் சென்றாள் மஹா.

கயலுக்குப் பயத்தில் மூளை வேலை செய்ய மறுக்க… அந்த நேரத்தில் சத்யா சொன்ன ‘திரும்பிப் பார்க்காமல் ஓடு’ என்பதை மட்டும் பிடித்துக்கொண்டு ஓடினாள்… எவ்வளவு தூரம் ஓடினாள் என்று அவளுக்கே தெரியாது. திரும்பிப் பார்த்தபோது சத்யா, மஹா இருவரும் காணவில்லை என்றதும்… பயந்து போனவள் அவர்களைத் தேடி மீண்டும் வந்த வழியே வர… அங்கு முயலுக்கு விரித்த வலையில் சிக்கிக்கொண்டவள் தவித்தாள்…

“என்னடா இது, முயலுக்கு வைத்த வலையில் மான் குட்டி மாட்டிக்கிச்சே…!” என கேலி செய்தபடி… ஆறடியில் அம்சமான உடல்வாகுடன் வந்தான் ஒருவன்…

அவனைப் பார்த்து விக்கித்துப்போனாள் கயல்…

இங்கே மஹாவோ…. தலையைப் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியவள், ஒருவழியாகக் காட்டு வழிப்பாதையைக் கண்டுபிடித்து அதில் செல்ல… அப்போது எதிர்பாராமல் வந்த ஜீப் அவள் மீது மோத….

“ஆஆஆஆ…!!” எனக்கண்ணை மூடி கீழே அமர்ந்து கொள்ள… வண்டி இன்னும் தன் மீது மோதவில்லை என்பதை உணர்ந்து மெல்ல எழுந்து நின்றவள்…. ஜீப்பிலிருந்து எகிறிக்குதித்து வந்த வாலிபனைப் பார்த்து… பயந்து பின்வாங்கினாள்….

இங்கே காட்டில் சத்யாவோ… அடிபட்ட காலை இழுத்துக்கொண்டு முயன்றவரை தப்பிக்க நினைத்து ஒரு பெரிய மரப் பொந்தில் மறைய முயன்றாள். “டேய் அதோ அங்க இருக்கா… வாங்கடா, கொல்லாமல் விடக்கூடாது…!” அவளைக் கண்டுபிடித்து வந்த கயவர்களிடம் இருந்து தப்பிக்கத் திரும்பிப் பார்த்துக் கொண்டே வேகமாக நடக்க முயன்றதில், அவளின் அடிபட்ட காலில் செங்குருதி அதிகமாக வெளியேறிட உடல் ஒடுங்கி… நிலையான பூமியும் நிலை இல்லாமல் சுற்றி, எதிரில் இருந்த விம்பங்கள் மறையத் தொடங்க, நிதானமின்றி எதிலோ பலமாக மோதி விழப் போனவளின் மென்இடையைப் பற்றியது இரண்டு வலிமிகுந்த கரங்கள்… தன்னோடு சேர்த்து அணைக்க…. யார்…??? எனப் பார்க்க நினைத்தவளுக்கு அது முடியாமல் போக, அவளைத் தாங்கிய கரங்களிலேயே மயங்கிச் சரிந்தாள்…..

பாவை…

யார் இந்த மூன்று அந்நியர்கள்…??? கயவர்களிடம் இருந்து காக்க வந்த ரட்சகர்களா…??? அல்லது….. கண்ணிவெடி வைத்து காத்திருக்கும் கலாபர்களா…???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே -6

Yadhu nandhini
Completed Novel
Thriller
27

Chapters

10

Views

4

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top