கண்ணி வைக்கும் கலாபனே-14

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 23/Sep/2026 ◷ 4 min read

உறங்கும் சத்யாவை கொலை செய்ய முற்பட்டவனை லாவகமாக அந்த மூன்று ஆண்களும் தடுத்து நிறுத்தினார்கள்…

வந்தவன் யார் எனப் பார்க்க முற்பட்ட விளக்கை அவன் முகத்தில் அடித்தபோது, அதில் தெரிந்த உருவம் சாட்சாத் பத்ராவே….

பெண்களால் சாம்ராஜ்யம் அழிந்து… பணம் இழந்து… மக்களிடையில் பயம் மறைந்து… குப்பைத் தாளாக ஆகிப்போனான் பத்ரா… அதில் வன்மம் கொண்டவன், பெண்களை வேட்டையாடும் இரத்த வெறியில் அந்த வனத்திற்குள்ளே பதுங்கி இருந்தவன், சரியான சமையம் வரக் காத்திருந்து பாய்ந்துவிட்டான் வஞ்சகன்…

“விடுங்கடா என்னை கொல்லனும் அவளுங்கள கொல்லனும் விடுங்கடா…!!” என ஆத்திரம் கொண்டு துள்ளிய மாமிச மலை ஆடவர்களின் சிலந்திமீன் பிடியில் இருந்து விடுபட்டு, சத்யாவின் கழுத்தை கொல்லும் எண்ணத்தோடு நெறிக்க, சத்யாவை காப்பாற்ற பத்ராவை மூவரும் இழுக்க, என நடந்த இழுப்பாரியில் சத்யா கீழே விழுந்தாள்…

“கயல் சத்யாவை தூக்கு…!!!” என பணித்து விட்டு, பத்ராவை வெளியே இழுத்துச் செல்ல முனைய,

“விடமாட்டேன் உங்களை கொல்லாம விடமாட்டேன்டி…!!” என ஆங்காரம் கொண்டு திமிர, பத்ராவை கண்டு பெண்கள் கதி கலங்கி நின்றனர்…

பத்ரா சென்றபின் நடப்பிற்கு வந்த பெண்கள், அப்பொழுது தான் சத்யா கண் விழித்ததையே உணர்ந்தனர்…

“ச.. சத்யா.. ஆஆ…!” தாயைப் பிரிந்த கன்று போல் வாரிச் சத்யாவை அணைத்துக்கொண்டு கதறினர் கயலும் மஹாவும்…

இருவரையும் ஆறுதலாக அணைத்துக் கொண்ட போதிலும்… சத்யாவின் நெரித்த புருவங்களுக்கு மத்தியில் இருந்த முடிச்சு, அவள் சிந்தனையில் இருப்பதை எடுத்துரைத்தது…

“சத்யா..?? ஏ..சத்யாஆ…??” என கயலும் மஹாவும் அவளை உலுக்கி நடப்புக்குத் திருப்பினர்…

“ம்ம்ம் பசிக்குது சொன்னீங்களே…?? சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்… கயல் உன் தோள் பட்டையில அடிபட்டுச்சே, மஹா உனக்கு தலையில…!” சத்யா பதறி இருவரையும் ஆராய்வதைக் கண்டு நெகிழ்ந்து போயினர் அங்கிருந்த அனைவரும்…

“நாங்க சாப்பிட்டோம்டி… எங்களுக்கு ஒன்னும் இல்லை, நாங்க நல்லாத்தான் இருக்கோம். நீதான் அடிபட்டு ரொம்ப மோசமான நிலைமைக்குப் போயிட்ட. உன்னை எப்படி காப்பாற்றணும்னு தவிச்சிட்டு இருந்த நேரத்தில்தான் இவங்க மூணு பேரும் தெய்வமா வந்தாங்க….!!” என மகா வாயில் பக்கமாக நின்ற கரிகாலன், பரத், கௌதம் மூவரையும் காண்பித்து

“இவங்க தான் நம்ம மூணு பேரையும் அந்தக் கொலைகார கும்பல் கிட்ட இருந்தும் காப்பாத்தி, சரியான நேரத்தில் உனக்கு சிகிச்சை அளிச்சு காப்பாத்தினது… இவங்க தான்…” என மஹா, சத்யா சத்தியம் செய்து மயங்கி விழுந்தது முதல் இன்று நடந்தது வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிவிட்டு, “இவங்க மட்டும் இல்லையென்றால் நாம என்ன ஆகியிருப்போம்னு தெரியலடி சத்யா…!!” என உணர்ச்சி ததும்பக் கூறினாள் மகா.

கயல், “ஆமா சத்யா…!” என அமோதித்தாள்…

சத்யா அவர்களுக்கு நன்றி கூறுவாள் என இருவரும் எதிர்நோக்கி இருக்க…

“அறிவில்லையாடி உங்க ரெண்டு பேருக்கும்… ஒரு பிரச்சனை வந்தா ஒன்னு நமக்குத் தெரிஞ்சவங்க கிட்ட உதவி கேக்கணும், இல்லனா போலீஸ் தேடிப் போகணும். அதை விட்டுட்டு முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்டு இருக்கிங்க, அதுக்கு அவங்களும் உங்கள அவங்க பொண்டாட்டி ஆக்கி இருக்காங்க… நீங்களும் மண்டை ஆட்டிட்டு நிக்குறீங்க… புத்தி கெட்டுப் போச்சா உங்க ரெண்டு பேருக்கும்…!!” என சத்யா கயலையும் மஹாவையும் திட்டிவிட்டு, ஆண்களிடம் சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினாள்…

“அப்புறம் நீங்க இப்படித்தான் அர்த்த ராத்திரியில தனியாக இருக்குற பொண்ணுங்க ரூம்க்குள்ள வருவீங்களா…? ஆமா, பத்ரா என்னை கொல்ல வருவான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்…?” என சரவெடி பட்டாசாகக் கேள்விக்கணை வீசினாள் சத்யா…

“என்னங்க நீங்க, உங்கள காப்பாத்த வந்தா எங்களையே சந்தேகப்படுறீங்க, இதெல்லாம் நல்லா இல்லை, பார்த்துக்கோங்க…!” என பரத் வீரப்பாகக் கூறினாலும், உள்ளுக்குள் சத்யாவை நினைத்துத் திணறவே செய்தான்…

“விடற பரத்… அவங்க சொல்றதும் சரிதான்… இப்போவே நேரம் தாண்டிப் போயாச்சு, எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம், வாங்க போகலாம்… கெளதம் வா…!” என கரிகாலன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நழுவப் பார்த்தான்…

“ஒரு நிமிஷம், இவங்கள வேணா நீ ஈசியா ஏமாத்திடலாம், ஆனால் என்னை அவங்களை மாதிரி நினைச்சா உங்களுக்குத்தான் கஷ்டம்… மறைந்து இருக்கும் உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்…!” என அழுத்தமாகச் கூறிவிட்டு கதவை அடைத்துவிட்டாள் சத்யா…

“எப்பா, என்ன பொண்ணுடா அது! அந்த லேசர் கண்ணை வச்சே நம்ம மனசுல இருக்குறதை வாங்கிடும் போலயே… இந்த பொண்ணு போலீஸ்ல இருக்க வேண்டியதுடா…!!” என கரிகாலன் அலற…

“அதை விட அந்தப் பிள்ளை கேக்குற கேள்வி இருக்கே எப்பா…?? பாயிண்ட் பாயிண்ட்டா கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம நாக்கு தள்ளிடுச்சு… இந்த பிள்ளை வக்கீலா வந்தா எதிர் தரப்பு வக்கீல கிழிச்சு தொங்க விட்டுடும்டா சாமி, செம அறிவு…!!” என பரத் அங்கலாய்க்க…

கௌதமோ ஒன்னும் பேசாமல் அவர்களைப் பார்க்க…

அவன் அருகில் வந்தவர்கள்… அவனின் இரு பக்கத் தோள்களில் கை போட்டுக்கொண்டு…

“டேய் மச்சான்… எங்க இருந்துடா இந்த பிள்ளையைப் பிடிச்ச…??” கரிகாலன்…

“நல்லா யோசிச்சு சொல்லு, உனக்கு இந்த பெட்டர் மாஸ் லைட்டே தான் வேணுமா…?” பரத்…

“ஹா ஹா ஹா நான் தான் அப்பவே சொன்னேன்லடா… நீங்க நினைக்குற மாதிரி ஆள் அவள் கிடையாதுன்னு… தெளிந்த தீர்க்கமான சிந்தனை உடையவள், இந்த பிரச்சனையில இருந்து வெளியே வருவா; அப்படி அவளால் முடியலனா நான் வர வைப்பேன்… அவங்க தப்பு செய்யலன்னு இந்த உலகத்துக்கே நிரூபிப்பேன்…!” என கெளதம் தீவிரமாக கூறினான்…

“அவங்க தப்பு செஞ்சாங்களா செய்யலையாங்கிறத பார்க்கச் சட்டம் இருக்கு கெளதம்… இப்போ நமக்கு பார்க்க அதிமுக்கியமான வேலை ஒன்னு இருக்கு, மறந்துட்டியா? எங்களுக்கு எல்லா வகையிலயும் நீ ஒத்துழைப்பு கொடுப்பேன் சொல்லி தான் வந்து இருக்க… அதை மட்டும் மறந்துடாத…!” என கரிகாலன் காரமான குரலில் கூறினான்…

கயலும் மஹாவும் சத்யாவின் முன்னால் தங்கள் காதுகளைப் பிடித்துக்கொண்டு, தவறு இழைத்த பிள்ளைகள் ஆசிரியருக்குப் பயந்து அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தனர் இருவரும்…

“ப்ளீஸ்டி, காது வலிக்குதுடி, எங்களை மன்னிச்சு விட்டுடு…!!” என கயல் பாவமாகப் பார்க்க,

“உனக்காகத்தான்டி எல்லாம் செஞ்சோம்ம்ம்ம்…!!” என மஹா கூறவும், சத்யா அவளை முறைக்கச் சுருதி குறைந்து நின்று போனது…

“கூமுட்டை கழுதைங்களா, யார் வந்து உதவி பண்றேன் சொன்னாலும் நம்பிடுவீங்களா… இன்னைக்கு பொண்டாட்டி சொன்னவங்க, நாளைக்கே கூப்பிட்டா போய்டுவீங்களா…!!” என இருவரையும் கூரிய வார்த்தைகளால் துளைத்தது; அது இலக்கைச் சரியாக எட்டியது…

“ச.. சத்யா, அப்படிச் சொல்லாதடி… அவங்க நமக்கு உதவி தான் செஞ்சாங்க…” கயல்

“அவங்க அப்படிப்பட்டவங்க இல்லடி, ரொம்ப கண்ணியமானவங்கடி. நமக்காகத்தான் ஒரு பொய் சொன்னாங்க, அதுக்கு போய்…!!” என மஹா கண்களில் கண்ணீரோடு கூறியதில், புஞ்சையின் மனதின் வலி அதிகரித்தது…

அவர்களின் பதிலில் இருவரையும் ஆழ்ந்து பார்த்தவள்… “காதலிக்கிறீங்களா டி…?” என புருவம் உயர்த்தி கேட்ட விதத்தில்… கயலுக்கும் மஹாவிற்கும் தொண்டை வறண்டு போனது…

“அ… அது வந்து…?? உதவி… நல்லவங்க…!!” என கயலும் மஹாவும் திணறினர்…

“காதலிக்கிறீங்களா இல்லையா…? பதில்….?” என காராரக கேட்டாள் சத்யா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

kanni vaikkum kalabane

கண்ணி வைக்கும் கலாபனே-14

Yadhu nandhini
Completed Novel
Romance, Thriller
27

Chapters

11

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top