கற்பனைக்கும் அப்பாற்பட்ட ரகசியங்களைத் தன்னுள் அடக்கிய இருள் சாம்ராஜ்யம் மறைந்து, சூரியன் தன் ஒளி வெளிச்சத்தை பூமி எங்கும் பாய்ச்சியபடி மேலே தோன்றி, வனப்பு மிகுந்த வன மகளைத் தழுவிச் சென்றான்…
உடலைத் தீண்டும் மெல்லிய குளிர் காற்று… செவிக்குத் தென்றலினும் இனிமையாய் கானப் பறவைகளின் இசைத் தேன் பாய… தன் தங்கக் கதிர்களைப் பச்சை மரகத இலைகள் ஊடே பாய்ச்சிக் கொடுத்து, வண்ண இணைவாக மரகதத் தங்கத்தை உலகிற்குத் தந்த கண்டுபிடிப்பாளன்…
ஒரு பக்கம் விடாது துரத்தும் கெட்ட நேரம், மறுபக்கம் புரியாத புதியவர்கள், புதிரான வனம்; நடுவில் எங்கணம் உறக்கம் வரும் கன்னியர்களுக்கு…
கண்ணில் விழுந்த கருவளையம், உறங்காத கண்களுக்குச் சாட்சியாக…
பொழுதே அரியவகை மூலிகை தேடி கிளம்பத் எத்தனித்தனர் காளையர்கள்…. அவர்களை நோக்கிச் செல்லும் சமயம் அவ்விடம் வந்தார் துரையன்…
“என்ன தம்பிகளா, கிளம்பிட்டீங்களா… எல்லாம் சரி, நீங்க மட்டும் போங்க; கௌதம் தம்பியை மட்டும் இங்கேயே விட்டுட்டுப் போங்க…!!”
என்றதும் வெகுண்டான் கவுதம்… “ஏன்?” என்கிற ஒற்றை வார்த்தையில் அத்தனை உக்கிரத்தை கொட்ட முடியுமா…?? முடிந்ததே…!!
“தம்பிக்கு கோபம் மூக்குக்கு மேல நிக்குதுப்பா.. நான் ஏன் சொல்றேன்னா, அவசரத்துக்கு அண்டாக்குள்ள கைவிட்டாலும் பூசணிக்காய் கிடைக்காது என்று சொல்வார்கள், அது மாதிரி இப்போ நீங்க பதட்டத்துல இருக்கீங்க. நீங்க இங்கனையே இருக்கறதுதான் நல்லது, அவங்க மட்டும் போயிட்டு வரட்டும்…!!” என ஆவது ஆகட்டும் என்று கௌதமை தன்னோடு நிறுத்திக்கொண்டார்….
அதை பார்வையாளர்களாக இருந்து கேட்ட பெண்கள் என்னவென்று விசாரிக்க, துறையில் ஒளிவுமறைவில்லாமல் அனைத்தையும் மறுபடியும் ஒப்பிட்ட விதமாக…
“என்ன சத்யாவுக்கு மருந்து எடுக்கப் போறீங்களா…?? அப்போ நாங்களும் வரோம்…!!” என கயலும் மஹாவும் பிடிவாதம் பிடிக்க… அதற்கு பரத் ஒத்து ஊதினான்…
“ஏன்டா கூட்டா சேர்ந்து என்ன குடிதண்ணி கிணறு தோண்டப் போறோம்…?? மருந்து எடுக்க கரடுமுரடான பாதைகளை காட்டுக்குள்ள போகப் போறோம், அங்க எதுக்குடா இவங்க எல்லாம்…??” என கரிகாலன் கடிந்தான்…
இருப்பினும் கயலும் மஹாவும் கரிகாலன் முதற்கொண்டு துரை ஐயன் வரை யாருடைய அறிவுரையும் கேட்காமல் பிடிவாதமாகவே மூலிகை மருந்தெடுக்க புறப்பட்டுச் சென்றனர்….
பேதை உள்ளமும் தடுமாறும் அழகான வனமகள் எழில் கோலம்… தன்னைத் தானே வளர்த்துக் கொண்ட மரங்களுக்கு இங்கே எந்தக் கட்டுப்பாடும் இல்லை; கொட்டிக்கிடக்கும் வண்ண வண்ண மலர்கள், கொடிகள்; எங்களுக்கு எதுக்குச் சட்டங்கள் எனத் தானே உருவாக்கிய பாதையில் ஓடிச் செல்லும் காட்டாறு… பாடம் அறியா பறவைகளின் சத்தம் கூட இசையாய்… பாமரனின் உள்ளம் கவரும் ஆரண்யம்…
மாடனின் வழிகாட்டுதலில் கரிகாலம், பரத், கயல், மகா ஆகிய நால்வரும் மருந்தைத் தேடிச் சென்றனர்…
ஓர் அடர்ந்த காட்டுவழிப் பாதை அருகே வந்தவர்களை மாடன்…
“இது ஒத்தையடிப்பாதை, இங்கே தனித்தனியாகத்தான் போக வேண்டும்… மொத்தமாகப் போனால் சிக்கல்கள்…!!” மாடன்…
இங்க உள்ள சில ஆபத்தான முள்ளம்பன்றி, மலைப்பாம்பு, விஷத் தேனீக்கள், பூச்சிகள் இருக்கு கண்ணு. மொத்தமா போனாக்கா… சாவு உறுதி! அததுக்குத் தான் சொல்லுதுன், ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் சத்தமில்லாமல் வாங்க சரியா… என எச்சரித்த மாடன் முன்னே செல்ல, அவன் பின்னால் மஹா, கயல், பரத், கரிகாலன் எனத் தொடங்கிய வரிசை எப்பொழுது… மஹா-பரத் மற்றும் கயல்-கரிகாலன் என மாறியது என்று அவர்களுக்குத் தெரியாமல் போனது…
சலசலக்கும் நீரோடை அருகே தென்பட…
ஐயா, இங்கதான் அந்த அரிய வகை மூலிகை இருக்கும். நாம நாலாபுறமும் பிரிஞ்சு போய் தேடினா சீக்கிரம் கிடைக்கும்ங்க…. மாடன், அந்த வேரின் நிறம், அளவு, வாசனையைப் பற்றி விவரித்துவிட்டு கரையோரம் சென்று தேடிடா…
மறு கரையோரம்… மஹாவும் பரத்தும், அதற்குச் சற்று தள்ளி கயலும் கரிகாலனும் தேடினார்….
இவர்கள் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த சமயம், யாரும் எதிர் பார்க்காத வண்ணம் உயரமான மரக்கிளையில் இருந்த விஷத் தேனீக்கூட்டை யாரோ விட்டெரிந்த கல்லால் அது சிதறி, அருகில் இருந்தவர்களைத் துரத்தி வந்தது…
“என்ன சிக்கல்…??” மஹா…
அதை எதிர்பாராத அவர்கள் தப்பித்துச் செல்ல முனைந்த மாடன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியான்…
பரத் மஹாவை இழுத்துக் கொண்டு அருகில் இருக்கும் குகை போன்ற அமைப்புடைய இடத்தில் பதுங்கிக் கொண்டான்…
கரிகாலன் நோக்கி வந்த விஷத் தேனீக்களைப் பார்த்தவன் சற்றும் தாமதிக்காது கயலைத் தன்னோடு அணைத்துப்பிடித்துக் கொண்டு தண்ணீரில் குதித்துவிட்டான்…
மூர்க்கத்தனமாகச் சுற்றித்திரிந்த தேனீக்கள் திரும்பிச் சென்றுவிட, குகைக்குள் பதுங்கியிருந்து பரத்தும் மஹாவும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். ‘போய்டுச்சா?’ என கேட்ட மஹா, அப்பொழுதுதான் தான் பரத்தை அணைத்து இருப்பதை உணர்ந்து விலகிட முயன்றாள்; ஆனால் அதற்கு பரத் விடாமல் மேலும் மஹாவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்…
அதில் மிரண்ட பெண்மான் விழிவிரித்து நோக்க,
“ப.. பரத்… எ.. என்ன பண்றீங்க வி..விடுங்க…!!” என்றவள் குரலில் அத்தனை கண்டிப்பு இல்லையோ…
“ஷ்… மஹா, கத்தாதே பாம்பு…!!” என பரத் கூறியதும்
“அஆஆ.. ஐயோ எங்க… பரத், எனக்குப் பாம்புனா பயம்! ப்ளீஸ் விரட்டுங்க… விரட்டுங்க!!” என மேலும் மேலும் பரத்தின் நெஞ்சினுள் நுழைந்தாள் மாது…
“ஷ், கத்தாதே மஹா, உன் இடுப்புப் பக்கம் தான் இருக்கு…!” என பரத் கூறவும், மஹாவின் இடையில் ஊரும் அந்தப் பாம்பை மாயோனுள் புதையெடுக்க மஹாவின் முகம் பரத்தின் கழுத்து வளைவில் வெப்பச் சலனமாய் இருவர் உள்ளமும்…
“ப்ளீஸ் ப்ளீஸ் எடுங்க…!” எனச் சட்டை காலரை இறுக்கிப் பிடிக்க, பரத்தின் வன் விரல்கள் மஹாவின் இடையை ஊர்ந்து செல்லும் பாம்பைப் பிடிக்க முயல, ஆனால் மாட்டியாதோ வெண்ணையிடையே
“ஹக் ஹ்ம்ம்ம்…!!” என மஹா கட்டியிருந்த பரத்தின் கழுத்தில் கடித்து வைக்க… தீண்ட வரும் அரவதிற்குப் பயந்து இருவரும் மோகக் காய்ச்சலில் விழுந்திட…
விழிகள் நான்கும் சிக்கிக் கொள்ள… தாபம் கொண்ட உடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உரசி மோகத் தீயாய் எரிய… ஆடவன் விரல் பெண்ணவளின் மெல்லிடையில் அழுந்தும் செய்தியை உணர்ந்து, பாவையவளின் இதழ்களில் ஒரு துடிப்பு…
ஆண் பெண் பேதமற்று…!!!
உடல்கள் இரண்டும் மட்டும் மோகத் தீயில் காதல் கொண்ட மனதால்…
உயிர் உருகிடாதோ கலாபானே…!!
அதற்கு மேல் தாங்க முடியாதவன்….. கண்ட நாள் முதல் படுத்தி எடுக்கும் கனி இதழ்களை கவ்விக்கொண்டவன்… தன் உடல் வெப்பத்தை மங்கையவளுக்குக் கடத்த….
“ஹ்ம்…முஹூம்…ம்ம்ம்ம்…!!” என நாவுகள் பின்னிப் பிணைந்து… கொண்டாடத் தொடங்கும் முதல் எது முடிவது தெரியாத பயணம் அது….
முத்தமிட்டு முத்தமிட்டு உதடுகள் உலர்ந்து… வேகமாக எடுத்த வெப்பம் மூச்சில் இருவரின் எச்சில் கலந்து… பூலோகம் கடந்து இந்திரலோகம் செல்லும் பாதைகள் இடர்பாடாக, வெளியே இவர்களை அழைக்கும் சத்தத்தில் தன்னிலை மீண்டனர்… ஒருவரை ஒருவர் முகம் பார்க்கக் கூசித் தயங்கி மௌனியாகிப் போனார்கள் மஹா மற்றும் பரத்.
“பாம்பு போய்டுச்சா பரத்…?” தயக்கத்துடன் மஹா..
“ம்ஹும், அந்தப் பாம்பு போய்டுச்சு, ஆனா வேறப் பாம்பு முழிச்சுகிச்சு…!” என கரகரப்பான குரலில் பரத்….
“ஹான்…?” என மஹா புரியாமல் முழிக்க…
“ப்ச், சும்மா முட்டக்கண்ண வச்சி உருட்டி உருட்டி காட்டாதடி, பாம்பு கண்ட்ரோல் இல்லாம ஆடுது…. அப்புறம் ஏதாவது ஆகிப் போச்சுன்னா இந்த ஆம்பளைங்களையே இப்படித்தான் குத்தம் சொல்வீங்க…!!” பரத் மோகம் கலையாத காய்ச்சலில் சிக்கிக்கொண்டவன் போல் இரைய…
“ஹான், என்ன சொல்றீங்க பரத்…?” மஹா புரியாது விழிக்க, மதியவளின் முகத்தில் தெரியும் கலக்கத்தில் அமைதி உற்றவன், அவள் எதிர் பார்க்காத வண்ணம் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு விலகிச் செல்ல…
“இந்த ரைட்டாருக்கு என்ன வச்சு விளையாடுறதே வேலையா போச்சு? கட்டதுரைக்கு (ரைட்டர்) கட்டம் சரியில்லை, என்னத்த சொல்ல…??” என கடுப்பில் முணுமுணுத்தபடி வெளியேறியவனை, கண்களில் காதல் மின்னப் பார்த்திருந்தாள் மகாலட்சுமி….
ஆற்றில் விழுந்த கரிகாலன் கயலோடு நீந்திச் சென்று மறுக்கரையையை அடைந்து இருந்தான்…
சலசலக்கும் வெள்ளி நீரோடையில் முழுகி முக்குளித்து, ஈரம் சொட்டச் சொட்ட வெளியே வந்த நதிமகள் கோலத்தில், மூச்சடைத்துப் போனான் தீரன் கரிகாலன்…
உச்சியில் உதித்து நெற்றி வளைவில் வழிந்து, மூக்கின் நுனியில் ஊசலாடி, இதழ் மோட்சத்தைத் தழுவி, சங்கு வளைவில் சறுக்கி, கூர் தீட்டி நின்ற இரு முனை மத்தியில் வழியும் நீராகிப் போக மாட்டேனோ என ஏங்க வைத்தாள் ராட்சசி…
பெண் மயிலின் மையில் மீது மையலில் நின்று இருந்தவனை நடப்பக்கு இழுத்தது கயலின் தேன் குரல்….
“நீங்க எதை பண்ணாலும் அதிரடியா பண்றீங்க சார்…!!” என முணுமுணுத்தபடி, கயல் அணிந்து இருந்த தாவணியைத் துடைத்துத் தண்ணீர் பிழிய…
ஆடையில் படிந்த வெண்ணைக் கட்டிகளைக் கண்டவன், உரைப்பனியாக உறைந்து போனான்…
அள்ளத் துடிக்கும் கரங்களை அடக்கியவன்… தன் டீ-ஷர்ட்டைக் கழற்றித் தண்ணீர் பிழிந்து, கயலிடம் அணிந்து கொள்ளும் படி கொடுத்தவன்.
“என் அதிரடி இனி தான் இருக்கு, போகப் போக பழகிடும்…!!” என்றவன், மார்க்கமாக நின்றவளைப் பார்த்தவன் மீண்டும் மூர்ச்சையாகி, “சும்மா சும்மா கண்டதையும் காட்டி இம்சை பண்ணாதடி, கவனம் சிதறுது…!!” என கரகரப்பாகக் கூறிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டான்…
வாய்ப்பு கிடைத்தும் பெண்ணிடம் கண்ணியமாக நடந்து கொள்கிறான் என கரிகாலனை நினைத்து கயல் ஆசை பார்வையை வீசினாள்…
காட்டில் வைத்து களவாடப்பட்டது கன்னியர்களின் இதயம் மட்டும் தானா…?

