புதிதாக வந்த வேற்றவர்களைச் சூழ்ந்து கொண்டனர் முல்லை வன மக்கள்…
அன்பு, கருணை, பகிர்வு, மன்னிப்பு, நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளைத் தொலைத்த மக்களுக்கு மத்தியில், அவற்றை மதித்து இன்றளவும் காட்டில் வாழும் உன்னத மனிதர்கள் ஆவர்…
கள்ளம் கபடம் ஏதும் அறியாதவர்கள் புதியவர்களை வேடிக்கை பார்க்க அவர்களுக்கிடமிருந்து முன்னே வந்தார்… அவ்வின மக்களின் தலைவர் துரை ஐயன்…
முன்னே நின்று அவர்களைக் குழப்பத்துடன் பார்த்தவர், பின் வந்த கரிகாலனைப் பார்த்ததும் முகம் பிரகாசிக்க… “அடடே வாங்க தம்பி வாங்க! நீங்க தானா? நான் கூட யார்ரா அது, நம்ம territory-க்குள் தைரியமா வந்து இருக்கிறது என்று பார்த்தேன்…!!” என வரவேற்றார்…
கௌதம் கையில் கிடந்த சத்யாவைப் கூர்மையாகப் பார்த்தார்… அவ்வண்ணமே அவ்வின மக்களும் சத்யாவைப் பார்த்தனர்…
“உங்க உதவியைத் தேடித்தான் நாங்க இங்க வந்து இருக்கோம் ஐயா… இதோ இவங்க ரெண்டு பேரும் என் உயிர் நண்பர்கள்… இங்க ஹனிமூனுக்கு வந்தப்போ எதிர்பாராத விதமா என் நண்பன் கௌதமின் மனைவி சத்யாவிற்கு அடிபட்டுப் போச்சு…!!” எனச் சர்வ சாதாரணமாகப் பொய்யைக் கூறினான் கரிகாலன்…
“எதே..” என அதிர்ந்து நின்றார்கள் பெண்கள்; பெண்கள் என்றால் அதில் ஆனந்தம் கொண்ட கரடியாகிப் போனது பரத் மட்டுமே.
“ஹிஹி மச்சான் ஹனி மூணா… இது வரைக்கும் உயிர எடுக்குற நண்பன்னு நினைச்சேன், இப்போ தான் ஃப்ரண்டுக்கு பிகர உஷார் பண்ணி தேவதாவா ப்ரோமோட் ஆகிட்ட…!!” எனப் பரத் மனதில் மட்டும் தான் நினைக்க முடிந்தது…
“ஆண்டவா அப்படியா…?” என விரைந்தவர் கெளதம், கையில் சத்யாவைச் சணல்கயிறு பின்னிய மரக்கட்டிலில் கிடத்தியவர், அவள் காயத்தை ஆராய்ந்தார்…
“அச்சச்சோ, காயம் ரொம்ப ஆழமா தான் பட்டிருக்க… ஏதோ கூரான ஆயுதத்தால் ஏற்பட்ட காயம் போல இருக்கு…?” எனப் புருவம் சுருக்கித் தன் சந்தேகத்தைக் கேட்டார் துரை ஐயன்…
“அது துருப்பிடித்த கத்தி…!!” என கயல் முந்தி வந்து பதில் சொல்ல முயல, அவள் இடையில் கை கொடுத்து இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் கரிகாலன்…
கரிகாலனின் இச்செயலில் அதிர்வலைகளால் சிக்கி அதிர்ந்து நின்ற கயல், திடுக்கிடலுடன் புரியாத பார்வையை கரிகாலனை நோக்கி வீச…
“இங்க நான் மட்டும் தான் பேசுவேன், உங்கு யாருக்கும் பேச அனுமதி கிடையாது… இனி பேசுனா…?!” எனப் பற்களுக்கு இடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன், சிற்றிடையாளின மென் இடையை கசக்கிப் பிழிந்து சிவக்க வைத்தான்; வன்முறையாளனின் அணுகுமுறையை மென்று கூட்டி விழுங்கிப் பார்த்தாள் நங்கை…
“அது ஒன்னுமில்லைங்க ஐயா, காட்டுப் பன்னி வச்ச வலையில தெரியாம கால் வச்சுட்டாங்க… அதான் நல்லா பதம் பார்த்துடுச்சு…!!” என கரிகாலன் சமாளிக்க…
“அடடே! எத்தனை சட்டம் வந்தாலும் இந்த ஜனங்களுக்குப் புரியிறதே இல்ல தம்பி… காட்டு விலங்குகளுக்கு இந்த மாதிரி கூரான பொறி வைக்கக் கூடாதுன்னு சட்டம் இப்போ வந்தது, ஆனா என் பாட்டன் பூட்டன் காலத்துல இருந்தே அதை ஒரு கடுமையான விதிமுறையா நாங்க கடைப்பிடித்துக்கொண்டு வரோம்… இந்த காட்டுல விலங்குகளுக்கும் மிஞ்சினது தான் எங்களுக்குன்னு வாழும் கூட்டம் தம்பி நாங்க… படிச்சவன் பகுத்தறிவாளர்கள் பெயரில் அதுங்கள வேட்டையாடிக் கொன்று குவிக்கிற மக்களை விட்டுட்டு, எங்கள போய் காட்டுவாசிகள் என்று சொல்றாங்க, இது என்ன நியாயமோ…?” எனச் சலித்துக்கொண்டவர் சத்யாவின் நாடியைப் பிடித்துப் பரிசோதித்தார்…
“தம்பி, ரத்தம் நிறையப் போய் இருக்கு, காயம் வேற ரொம்ப ஆழமா இருக்கு… பிள்ளைக்குச் சீரான நாடித்துடிப்பு வேற இல்ல… நல்லவேளை பிள்ளையை இங்க தூக்கிட்டு வந்துடிங்க… தூக்குங்க குடிலுக்கு, சில பச்சிலை மருந்து என்கிட்ட இருக்கு, போடுவோம்…!!” என்றபடி சத்யாவை அவர் குடிலுக்குத் தூக்கிச் சென்றனர்…
சத்யாவின் காயத்தைச் சுத்தம் செய்து, சில பச்சிலை மருந்துகளை அரைத்து உள்ளேயும் காயத்தின் மீதும் போட்டு கட்டிவிட்ட துரைஐயன்…
பரத், கரிகாலன், கௌதமியைத் தனியே அழைத்தார்….”தம்பி, அது வந்து…??” என அவர் தயங்க…
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க… சத்யாவுக்கு ஏதாவது ஆபத்துன்னா அவளைக் காப்பாற்ற முடியாதா…?” என கௌதம் படபடக்க…
“தம்பி, தம்பி, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைப்பா, ஏன் பதட்டப்படுகிறீர்கள்… இப்போதைக்கு அந்தப் பிள்ளையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை கண்ணு, ஆனால்…??” என தயங்க…
“ஆனால் என்னங்க ஐயா.. எதிர்மறையாக இருந்தாலும் பரவாயில்லை, சொல்லுங்க…??” என கரிகாலன் கூர்மையாகக் கேட்க…
“அந்தப் பிள்ளை காயத்திற்குப் போட்டிருக்கிற மருந்து ரொம்ப வீரியம் மிக்க ஓர் அரிதான வேர்… அந்த வேர் என்னிடம் ஆத்திர அவசரத்திற்கு என்று கொஞ்சம் தான் இருந்தது… அந்த மருந்தைத் தொடர்ந்து போடவில்லை என்றால்… காயம் ஆறாமல் பாதிப்பு மேலும் அதிகமாகி, அந்தப் பிள்ளையின் காலை எடுக்க வேண்டிய நிலைமை வரும்…!!” என தயங்கியபடியே கூறி முடித்தார்…”
“என்னங்கயா இப்படி சொல்றீங்க… உங்கள் நம்பி தான் வந்திருக்கோம்… நீங்களே எப்படி கை விடுவீங்க எப்படி…??’ என இயலாமையுடன் கௌதம் சினந்து கொள்ள…
“என்ன கௌதம் இது…?” என கரிகாலன் கடியது…
“பரவாயில்லை தம்பி… பொண்டாட்டி சுகம் இல்லாம கிடந்தால் புருஷன் துடிக்கிறது தானே அன்பு…!!” என கரிகாலனிடம் கூறியவர், கௌதமிடம் திரும்பி “வெசனைப் படாதீங்க தம்பி, அந்த வேர் என்கிட்ட இல்லை என்று மட்டும் தான் சொன்னேன், இந்தக் காட்டிலேயே இல்லைன்னு சொல்லலையே…!!” என வார்த்தைகளால் நம்பிக்கை அளித்தார்…
“நிஜமாவா ஐயா? எங்க இருக்குன்னு சொல்லுங்க, இப்போவே நான் போய் உடனே கொண்டு வரேன்…!!” என பரபரத்தான் கௌதம்…
“சொல்லுறேன் தம்பி சொல்லுறேன்… இப்போ பொழுது சாய்ந்து ரா கூடிப் போச்சு, பாருங்க நாளைக்குக் காலையில என் சிஷ்ய பிள்ளை மாடனை உங்க கூட அனுப்பி வைக்கிறேன், போய் கொண்டு வாங்க…!!” என்றதும் கௌதமின் முகம் ஒத்துழையாமையை அப்பட்டமாகத் காட்டியது…
“எங்களை நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுக்கிற இனம் தம்பி…!!” என்றவர் வார்த்தையில் இருந்த சத்தியம் அவர்களை கட்டிப்போட வைத்தது என்றால் மிகையல்ல…
அனைவருக்கும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்த அதில் கயல், மஹா, பரத், கெளதம் அனைவரும் கரிகாலனுக்காகக் காத்திருந்தனர்… கூட்டத்தில் வைத்து கேட்க முடியாது போனதால் தனியே வர எதிர்பார்த்து இருந்தனர்….
மூலிகை மரப் பட்டையால் ஆன குடிலினுள் கரிகாலன் நுழைந்தது தான் தாமதம்….
வில்லில் இருந்து புறப்படும் அம்பாகப் பாய முனைந்தனர் பெண்கள்….
ஆனால் எதையும் சமாளிக்கும் திறம் கொண்ட கரிகாலனோ, “நான் அப்போ சொன்னதுதான் இப்போவும் சொல்றேன், உங்களுக்கு உதவி பண்றது மட்டும்தான் என் நோக்கம்… முன் பின் தெரியாத இளம் பெண்களுக்கு வாலிபர்களாகிய நாங்கள் உதவி செய்ய வந்து இருக்கோம்னு சொன்னா எவன் நம்புவான்… அதைவிட இவங்க பார்க்க பழக சுலபமா இருந்தாலும், கடைபிடிக்க வேண்டிய மானம் காக்கும் கொள்கையில் சின்ன பிசகு, அவங்க இனத்து ஆட்களே செஞ்சாலும் சரி, பேச்சே கிடையாது, கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க… இந்த மக்களுக்குச் சட்டம் எல்லாம் இல்லை, சத்தியமும் மனசாட்சியும் மட்டும்தான்… தப்புனா தப்புதான்… இதுக்கு மேல சொல்றதுக்கு என்கிட்ட ஒன்னும் இல்லை… விருப்பம் இல்லனா போயிட்டே இருக்கலாம்…!!” என நீண்ட வசனம் பேசியவன், அவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்கும் போதே குடிலை விட்டு வெளியேறிவிட்டான்…
அவனைப் பின்பற்றியே மற்ற இருவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், பெண்கள் தான் மாட்டிக்கொண்டது பொன் வலையா அல்லது சிலந்தி வலையா என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்…
களவாடும் கலாபார்களா தான் என்னவோ..??

