புள்ளி மானிற்கு விரித்த வலையில் கயல்மான் மாட்டிக்கொண்டு தவிப்பதைப் பார்த்தபடி நின்ற அந்நியனைக் கண்டு கயல் மிரள…
அவள் அருகில் குனிந்து அமர்ந்தவன், கயல் மீது கை வைக்கப் போக…
“ஐயோ வேணாம்…!” என கயல் பயந்து கத்த,
“ஹே ரிலாக்ஸ்… மான் குட்டி, நான் ஒன்னும் பண்ண மாட்டேன்…!” என மீண்டும் அவள் மீது கை வைக்கப் போனான் கரிகாலன்…
“ஹாஆ… என்னைத் தொடாதே! அடிச்சிடுவேன்…!” என அவனை எட்டித் தள்ளிவிட,
“அடிங்க, வலையில சிக்கி இருக்கியே, எடுத்து விட வந்தா ரொம்ப பண்ற… போடி… நீயா எப்படி வரேன்னு நானும் பார்க்குறேன்…!” என எழுந்து நின்றவன், தள்ளிப் போய் நின்று வேடிக்கை பார்க்க…
அவனை நம்பாமல் கயல் தானே முயன்று பார்த்தவள் முடியாமல் போக… எதிரில் நின்றவனைப் பாவமாகப் பார்க்க… அவனோ “போடி” என்பது போல் நிற்க…
வேறு வழியே இல்லாமல் “ப்ளீஸ் எடுத்துவிடு, வலிக்குது! என்னால இதுல இருந்து வெளில வர முடியல….!!!” என அழத் தொடங்கினாள்.
“ஹே இரு, அழாத! இப்போ என்ன உன்னை இந்தச் சிக்கலில் இருந்து வெளியில் எடுத்து விடணும், அவ்ளோ தானே? போன போகுதுனு உதவி பண்றேன் மான்குட்டி…!” என குத்த வைத்து அமர்ந்து கயல் மீது பின்னி இருந்த வலையை கத்தியால் அறுத்து அவளை விடுவித்து கைகொடுத்து எழுப்பினான்….
ஓடி ஓடி ஓய்ந்த கால்கள் வலுவில்லாமல் தள்ளாட… கயலின் மென் இடையைப் பிடித்துத் தாங்கியவன், தன் மேல் பெண் அங்கம் அழுந்த, அணைத்து நிறுத்தி… கயல் விழிகளின் உள்ளத்தை ஊடுருவும் பார்வை கொண்டு பார்க்க… அதில் கட்டுண்டாள் பெண் மான்…
ஜீப்பில் இருந்து ஆறடி ஆணழகனாக குதித்து இறங்கி வந்தவனை கண்டு திடுக்கிட்ட மஹா, பின் வாங்க……
“ஹே பார்ஸ்ட் பியூட்டி, உனக்கு ஒன்னும் ஆகலையே…?” என இறங்கி வந்தவன், கீழே விழுந்த மகாவைத் தூக்கிவிட்டு…
“இந்தக் காட்டுக்குள்ள வந்து தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு உனக்கு என்ன கஷ்டம் பியூட்டி… அப்பா அம்மா உன் லவ்வுக்கு சம்மதிக்கலையா? இல்லை உனக்கு ஓகே சொன்ன உன் பாய் ஃப்ரெண்ட் உன்னை ஏமாத்தி அவன் பெஸ்ட்டோட போயிட்டானா? அவனால நீ கர்ப்பமாகி, அவன் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை பண்ணிக்க வந்துட்டியா? நோ நோ, தற்கொலை உன்னைத் தீர்க்காது பியூட்டி… இப்போ உனக்கும் உன் குழந்தைக்குத் தேவை ஒரு இன்சியல், அதானே? இதுக்காகவே என்னைப்போல நைண்டிஸ் கிட்ஸ் நாங்க இருக்கோம்… உன்னையும் குழந்தையையும் நான் காலம் பூரா வச்சு காப்பாத்துறேன், வா சுருதி போவோம்…!!” என மஹாவை அணைக்க…
“ஹான்…!!!” மிரண்டாள் மாது…
“ஏய், என்ன அப்படிப் பாக்குற…? நான் அழகுன்னு எனக்குத் தெரியும், ஆனா நீ இப்படி வெறிச்சுப் பார்க்குற அளவுக்கு அழகன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல…!!!” என சிலாகித்தபடி கூற…
“யோவ் மனுஷனா நீ… உன்னை பார்த்தா ஆண் அழகன் மாதிரி இல்லை, அறை மெண்டல் மாதிரி தெரியுது… நானே கொலைகார கும்பலிடம் இருந்து உயிரைக் காப்பாத்திக்க காயத்தோட ஓடி வந்துட்டு இருக்கேன்… இடையில் வண்டி ஏத்தி கொல்லப் பார்க்குறது மட்டும் இல்லாம… பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க… சீ போயா…!!!” படபட என பொரிந்து தள்ளியவள், காட்டுப் பாதையில் திரும்பிப் போக,
“ஏய் பொண்ணே நில்லு…??”
என அவள் குறுக்கே போய் வழி மறைத்தவனை…
“என்ன…??” என பார்த்தவளிடம்…
“நிஜமாவே நான் அழகா இல்லையா…???” என கேட்டான் பாருங்க ஒரு கேள்வி…
“யோவ்… பைத்தியம்… லூசு… மெண்டல்… கிறுக்கா… பிராந்து… பிச்சு… அறிவு கெட்டவனே…!!” எனத் திட்டியபடி…
அதில் குறுக்கிட்டவன், “எக்ஸ்கியூஸ் மீ… இது எல்லாத்துக்கும் ஒரே மீனிங் தானே…!!” என கேட்டு, அமைதியான மஹாவையே பொங்க வைத்துவிட்டான்.
“முண்டம்… முண்டம்… நானே உயிருக்கு போராடுற நிலைமையில, ஒருத்தியையும்… காணாமல் போன ஒருத்தியையும்… எப்படி காப்பாத்த போறேன்… தெரியாம தவிச்சுட்டு இருக்கேன்… ஏன்டா நீ வேற நிலைமை புரியாம வந்து என் உயிரை எடுக்குற…?” எனத் தோழிகளின் நினைவில் பாவை உடைந்தாள்…
“ஹே… ரிலாக்ஸ்… என்ன உன் பிரச்சனை? யார் உன் ஃப்ரண்ட்ஸ்? யார் உன்னை கொல்ல வரா? என்கிட்ட சொல்லு, ஐயா அர்னால்டுக்கு ஆசான் இந்த சுண்டுவிரலால் அத்தனை பேரையும் அடிச்சு பறக்க விடுவேன்…!!” என்றவன், “ஆமா, உன் ஃப்ரண்ட்ஸ் உன்னை மாதிரியே அழகா இருப்பாங்கல… சும்மா பிகர்க்கு எல்லாம் எனர்ஜி வேஸ்ட் பண்ண முடியாதுமா…!!” என விவரமாகக் கேட்டான்….
அவன் பேச்சில் பிற்பாதியை ஒதுக்கிவிட்டு, முற்பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு…
“நி… நிஜமாவா… நீ… நீங்க… எனக்கு உதவி செய்வீங்களா…?” என உணர்ச்சிவசப்பட…
“யா… யா… இது என் அசிஸ்டன்ட் ஆர்னால்டு மேல சத்தியம்… இப்படி எல்லாம் சமூக சேவை செய்யத் தானே பெண்களின் காவலன் நான் இருக்கிறேன்! சோ, கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணி… உன் வாயாலேயே நான் அழகன், பலசாலி, புத்திசாலி எனப் பெயர் வாங்க வேண்டாமா? சரி சரி, பேசி டைம் வேஸ்ட் பண்ணாத, வந்து ஜீப்ல ஏறு…!” என அழைத்துக்கொண்டு போக…
வெள்ளத்தில் சிக்கியவனுக்குக் கிடைத்த மரக்கட்டையைப் பற்றுவது போல், முன் பின் தெரியாத அந்நியனை நம்பித் தோழிகளைக் காப்பாற்ற மஹா அவனோடு சென்றாள்…
இங்கு காட்டில் தன் கையில் இரத்தக் காயங்களுடன் மயங்கிச் சரிந்த பூவையாளைத் தாங்கினான் நெடியவன் கௌதம்…
“ஏங்க… இங்க பாருங்க… ஏங்க என்னைப் பாருங்க…. என்னாச்சு உங்களுக்கு…??” என அவளது கன்னத்தைத் தட்டி மயங்க விடாமல் தடுத்தான் புதியவன்…
அதில் பெரும் பிரயத்தனம் கொண்டு கண்ணைத் திறந்தவள்… எதிரில் மங்கலாகத் தெரிந்தவனைப் பற்றுக்கோலாகப் பிடித்துக்கொண்டவள்… “கா… காப்பாத்துங்க… கா.. ப்..…!!” என எக்கி அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டு, முகம் வலியால் துடிக்க…
“சரிங்க காப்பாத்துறேன்… கண்ணை மூடாதீங்க… உங்கள யாரு இப்படி பண்ணா…???” என அவளை மயங்க விடாமல் தடுக்கக் கேள்வி கேட்டுக்கொண்டே, அவளைச் சாய்வான இடத்தில் உட்கார வைத்து, காயம்பட்ட இடத்தில் துணி வைத்து கட்டி, அதிகமாக வெளியேறும் இரத்தப் போக்கை தற்காலிகமாகத் தடுத்தான்.
அப்பொழுது “தட தட” என காலடிகள் அவர்களை நெருங்குவது போன்ற ஓசை கேட்டது… மெல்ல தலையை நிமிர்த்தியவள், புதியவன் தோளில் தட்டி ஆள்காட்டி விரலை உயர்த்தி அவர்கள் வரும் திசையைக் காட்டியவள், கண்களைத் தட்டித் தட்டி விழிக்க….
அவள் விரல் காட்டிய திசையில், கையில் வனவிலங்குகளை வேட்டையாடும் ஆயுதங்களுடன் வந்தவர்களைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்… குனிந்து சத்யாவையும் பார்த்தான்… அவள் கண்ணில் தெரிந்த மிரட்சையைக் கண்ட அவன்… எதையும் யோசிக்காமல்…
சத்யா அருகில் கிடந்த கனமான கட்டையை எடுத்தவன், எதிரில் வந்தவர்களை விலக்கித் தள்ளினான் கெளதம்…
அதற்குள் எங்கிருந்தோ ஈசல் போல் பத்து பேர் வந்து கௌதமை ஓநாயாகச் சூழ்ந்து வட்டம் அடித்தனர்… அவர்களில் முதலில் தாக்க வந்தவனை அடித்துக் கொண்டு இருக்கும் போதே… நயவஞ்சகமாகப் பின்னால் இருந்து பிடித்த ஒருவன், “பெத்த ஹீரோவாடா நீ…?” என சத்யாவைக் காப்பாற்ற வந்தவனை கத்தியால் குத்தப் போக…
அப்பொழுது காற்றில் பறந்து வந்த கட்டை ஒன்று சரியாகப் போனவன் பின் மண்டையில் பட்டு உடையவும், அவன் கீழே சரியும் போதே….
அதில் திடுக்கிட்ட அனைவரும் ஒருசேரக் கட்டை வந்த திசையை நோக்க…
“எனி ஹெல்ப் பாஸ் …???” என கையில் இரும்புத் தடியுடன் வந்தான் மஹாவுடன் வந்த பரத்.
மஹா அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சத்யாவைப் பதறிப் பார்க்க, ஆண்கள் இருவரும் செந்நாய் கூட்டத்தை அடித்துத் துவம்சம் செய்தனர்.
பேடைகளைத் தேடிப் போனதன் கை, கூலிகளைத் தேடி வந்த பத்ரா, அங்கு தன் அடியாட்களைப் பாந்தடி கொண்டு இருந்த இருவரையும் கண்டு உக்கிரம் கொண்டு, மாமிச மலையாக வந்து அவர்கள் பின்னால் இருந்து எட்டி உதைக்க…
அதில் தடுமாறியவர்கள் கீழே விழாமல் கால்களை நிலத்தில் ஊன்றி சமாளித்துக் கொண்டு நின்று, திரும்பிப் பார்த்தனர்.
அங்கே ராட்சச மலையாய் நின்ற பத்ரா, இருவரையும் பார்த்து “து ரா *** …!!” என சண்டைக்கு அழைத்தான்.
இருவரும் ஒரே சேர பத்ராவைத் தாக்கித் தங்கள் முழுபலத்தைக் காட்ட, அது எல்லாம் தூசி போலும் அவனுக்கு எளிதாகத் தட்டியவன், பதிலுக்கு இருவரையும் திருப்பி அடித்துத் துவைத்து எடுக்க ஒரு கட்டத்தில், கௌதமும் பரத்தும் பத்ராவை அவை சமாளிக்க முடியாமல் தோல்வியை தழுவ, அவர்கள் இருவரையும் தன் இரு கரங்களால் அவர்களின் கழுத்தை நெரித்துக்கொள்ள முயன்றான் ஆறடி ராட்சசன் பத்ரா.
அவனிடம் இருந்து விடுதலையாகப் போராடி, முடியாமல் உயிர் மூச்சிற்காக ஏங்கத் தொடங்கினர்.
கயலின் வேண்டுதலை ஏற்று அவள் நண்பிகளைக் காப்பற்ற வந்த கரிகாலன்…
“என்ன மச்சி, உதவி வேணுமா…?” என குரல் கொடுத்தான்.
“பாஸே, கேள்வி கேட்க வேண்டிய நேரமா இது? வந்து காப்பாத்துயா! நான் இன்னும் ஒரு கிஸ் கூட அடிக்கல, அதுக்குள்ள பரலோகம் போனா ஆவியா வந்து உன் ஃபர்ஸ்ட் நைட் கெடுப்பேன்…!!” என பரத் இரையிட்டான்.
அதில் வெகுண்ட கரிகாலன் அதிரடியாக பத்ராவின் மீது பாய்ந்து தலையால் முட்ட, அதில் விடுதலை பெற்ற மற்ற இருவரும் சேர்ந்து கொண்டனர்.
மூவரும் ஒன்று கூடி மாமிச மலையான பத்ராவை மண்ணில் சாய்த்தனர்.
கண்ணெதிரே வீழ்ந்த பத்ராவைப் பார்த்த பெண்கள், “யார் நீங்க…?? எங்கிருந்து வந்தீங்க…?” என எண்ணி வியப்படைந்தனர்.
இவ்வளவு பில்டப் கொடுத்து இன்ட்ரோ பண்ணி இருக்கேன், இவன்தான் கதாநாயகன் என்று தெரியவே மாட்டேங்குதே…. ராஸ்கல்ஸ்!
கலாபர்கள் வந்தார்கள்…

