கானக் குயில் கூவும் ஓசையில்…
உலகம் புதிதாய் மலர்ந்தது…
அதிகாலையிலேயே குளித்து முடித்தவள், தோகையாக விரிந்த ஈரக் கூந்தலுடன் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி…
பனித்துளியில் நனைந்த சோலைவனத்தின் நடுவே அன்று பூத்த புதிய மலராகவே காட்சி அளித்தாள் அவள்…
சட்டென்று ஏதோ ஒரு முரட்டுக்கையினால் இழுக்கப்பட்டு, செம்பருத்தி மரத்தடியில் விழுந்தாள் தேன்மொழி…
என்ன ஏது என்று அவள் சுதாரிக்கும் முன்பே, தீரனின் கைசிறையில் கைதாகினாள் மாது…
என்னடி நடக்குது இங்க…? யாரைக் கேட்டு உனக்கும் அந்த அறிவுக்கும் நிச்சயம் பண்ணாங்க…? எனத் தீரனின் வார்த்தைகளில் இருந்த கடினம் அவனது இறுகிய பிடியில் தெரிந்தது…
அய்யோ வலிக்குது! ஏன் இப்படி முரட்டுத்தனமா நடந்துக்குறீங்க? என்னை விடுங்க! என அவன் பிடியில் நின்று திமிறினாள்…
ப்ஸ்! கேட்டுட்டு இருக்கேன்ல! அது என்னடி, அந்த அறிவு பக்கத்துல நிக்கும் போது மட்டும் இளிச்சிட்டு நிக்கிற என்னை பார்த்தா மட்டும் மூஞ்ச மூணு ஊருக்கு இழுத்து வைக்கிற என்னடி கொழுப்பா…
ஆமாம் கொழுப்பு தான், விடுங்க! அறிவு என்னை கட்டிக்கப் போறவர், அவர் கிட்ட சிரிச்சு பேசுறதுல என்ன தப்பு? அதை விட எல்லாம் தெரிஞ்சும் என்னை கட்டிக்க என்கிட்ட சம்மதம் கேட்டவர் அந்த மாதிரி ஒரு நல்ல மனுஷன், பு ஆஆ…
என தேன்மொழி வாக்கியத்தை முடிக்கும் முன்பே, அவள் செவ்விதழைக் கடித்து வைத்து இருந்தான் தீரன்…
வலி உயிர் போனது; அது நிச்சயம் முத்த வகையேறாது என்பது நிச்சயம்…
இதுக்கு மேல இன்னொரு வார்த்தை பேசுனா உன்னைக் கொன்னுடுவேன்டி…
நீ எனக்குச் சொந்தமானவள்; உன்னை எவன் என் கிட்ட இருந்து காப்பாத்துறானோ, அவனை நானும் பார்த்துடுறேன்…
ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்கோ…
உன் இடுப்பு என் கை பட்டு தான் கசங்கணும், உன் உடுப்பு என் கை தொட்டு தான் நழுவனும், உன் உதடு ரெண்டும் என் பெயர தான் உச்சரிக்கணும் இவ்வளவு ஏன் உன் இதயம் கூட எனக்காகதான் துடிக்கணும், உன் கண்ணுல கண்ணீர் வந்தாக் கூட அது எனக்காக மட்டும் தான் இருக்கணும்…
மொத்தத்தில் இந்த ஐந்தரை உடம்பும் உள்ளமும் இந்த தீரனுக்கு மட்டும் தான் சொந்தம்… அதுல ஏதாவது கோளாறு வந்துச்சுன்னா, இந்த தீரனோட இன்னொரு அவதாரத்தை பார்ப்பேன்… எனத் தீரன் மிரட்டிய தினுசில் மிரண்டு போய் முழித்தாள் தேன்மொழி…
“கொஞ்சம் விட்டால் நாம் வில்லன்கள் என்றையே மறந்துவிடுவார்கள்…” எனத் தீரன் அவள் காது அருகே முனகினான்.
வில்லன் என்கிற வார்த்தை தேன்மொழிக்கு கடந்த கால நிகழ்வை நினைவுபடுத்தப் போதுமான சொல்லாக இருந்தது.
அன்று தேன்மொழி கிணற்றில் விழுந்த பிறகு…
அருகில் இருந்த ஆட்கள் ஓடி வந்து தூக்கினர்.
முதலில் யாரோ என்று தெரியாமல் பதறியவர்கள், அந்த இருட்டில் பெரும் பாடுபட்டுத் தான் தேன்மொழியை மீட்டனர்.
தேன்மொழி மேலே கொண்டு வரப்பட்டு, வீட்டிற்குச் செல்வதாகச் சொன்னும் இன்னும் வராமல் இருந்த அவளைத் தேடித் தேடி வந்தனர் அவிநாசியும் ருத்ரனும்.
யாரோ ஒரு பெண் கிணற்றில் விழுந்துவிட்டதாகச் செய்தி காற்றை விட வேகமாகப் பரவ, அதைத் கேட்ட அவிநாசியும் ருத்ரனும் அவ்விடம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
மண்ணில் இருந்து பிடுங்கி எரிக்கப்பட்ட கொடியாகத் தேன்மொழியை கண்டவர்க்கு இதயம் வெடித்தது… பெற்றவர் என்பதால், மகளைத் தவிர அவர் கண்களுக்கு வேறு எதுவும் புலப்படவில்லை…
ஆனால் ருத்ரனுக்கு அப்படி இல்லையே; ஏனெனில் மயங்கி கிடந்த தேன்மொழிக்கு வெகு அருகிலே ஈரம் சொட்டச் சொட்ட நனைந்தபடித் தீரன் நின்றது அவன் கருத்தை வெகுவாக ஈர்த்தது…
“இந்த நேரத்தில் இவனுக்கு இங்கு என்ன வேலை…” என யோசித்தவனின் சிந்தையை கலைத்தது அவிநாசியின் கதறல் சத்தம்…
“ஐயோ தேனு!” எனப் பாய்ந்து சென்று மகளைத் தன் மடியில் கிடத்தினர்… அடுத்து என்ன செய்வது என்று அந்தப் பரபரப்பான சூழ்நிலையில் அவரால் சிந்திக்க முடியவில்லை…
“தேனு… தேனு…” என அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப எழுப்ப, துணியாகத் துவண்ட மகளைப் பார்த்துத் துடித்துப் போனார் பாவம்…
“ஐயா பயப்படாதீங்க, பிள்ளை விழுந்து சத்தம் கேட்ட உடனே வந்து காப்பாற்றிட்டோம். தண்ணி எல்லாம் அவ்வளவா குடிக்கல, பயத்துல தான் மயங்கிப் போய் இருக்கு. நீங்கள் வீட்டுக்குத் தூக்கிட்டுப் போய் செத்த ஓய்வு எடுக்கட்டும், தூங்கி எழுந்ததும் காத்தலை விபூதி அடிச்சா எல்லாம் சரி ஆகிடும்…”
என அவர்கள் சொன்ன ஆறுதல் எதுவும் அவிநாசி செய்வியை எட்டவில்லை; அவர் கவனம் முழுவதும் மயங்கி கிடந்த மகள் மீதே இருந்தது. கைகள் நடுங்க மகளைத் தாங்கிப் பிடித்தவருக்கு, உயிரே அவரிடம் இல்லாதது போன்ற உணர்வு…
அவர் நிலையை உணர்ந்தவர்களோ… “தம்பி, நீ அப்பாவைத் தேத்தி கூட்டிட்டுப் போ, பாப்பாவை நாங்களே தூக்கிட்டு வந்து சேர்க்கிறோம்” என்று உதவ முன் வந்தனர்…
“இல்லைங்க ஐயா, நானே பார்த்துகொள்கிறேன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க. நாளைக்கு மறக்காமல் வீட்டுக்கு வாங்க…” என்ற அறியா பையனான ருத்ரன், அந்த நிமிடம் பெரிய மனிதனாகப் போனான்…
தந்தையின் மடியில் கிடந்த தேன்மொழியைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டவன், “அப்பா வாங்க” என்று அவரையும் அழைத்து வழிநடத்திச் சென்றான்…
அவிநாசிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை; குறுக்கும் நெடுக்குமாக நடையோ நடை என நடந்தார்… மகள் அருகில் அமர்ந்து, “அமிர்தவள்ளி, நான் என்ன குறை வைத்தேன்?”
“என் பெண்ணுக்கா இந்த நிலைமை வரணும் கடவுளே!” எனத் துடித்து அழ…
“அம்மா கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தா தான் என்னால வைத்தியம் பார்க்க முடியும்” என்று தேன்மொழியைப் பரிசோதித்த மருத்துவர்…
அப்போதுதான் வேலை முடிந்து வீடு திரும்பியவரை வீடு கடத்தியது அவிநாசி அண்ட் கோ…
“சார், அவங்களுக்குப் பயப்படுற மாதிரி ஒண்ணுமில்லை, அதிர்ச்சியில தான் மயங்கி இருக்காங்க… கொஞ்சம் நேரம் கழித்து அவங்களே எழுந்திரிச்சிடுவாங்க… அதுக்கு அப்புறம் நான் கொடுத்த மாத்திரையை இரண்டு நாள் கொடுங்க, போதும்…” என்று விட்டுச் செல்ல…
“மகளுக்கு வேறு எதுவும் இல்லையே” என்று விம்மி அழுத மருத்துவரோடு வெளியே சென்றார் அவிநாசி…
அதுவரை அவ்வறையில் மௌனமாக நின்ற ருத்ரனின் பார்வை, படுக்கையில் துவண்டு கிடந்த தங்கையின் மீது பதிந்தது. யோசனையின் சாயலாக அவன் புருவங்கள் இடுங்கின…
அனைவரையும் ஒருவாறு கலங்கவிட்ட தேன்மொழி ஒருவழியாகக் கண்மலர்ந்தாள்…
என்ன ஏது என்று விசாரித்தவர்களுக்கு மௌனத்தையே பதிலாகத் தந்தாள்… தனியாக இருந்து எதையோ யோசித்துத் தானே அழுவது, சிரிப்பது எனப் பித்து பிடித்தது போல் திரிந்தாள்…
முந்தாநாள் சடங்கான பிள்ளை தனியாக வந்ததுல காத்து கருப்பு அடிச்சி இருக்கும், எல்லாம் நம்ம குலத் தெய்வக் கோவிலில் ஒரு பூஜை போட்டால் சரி ஆகிவிடும் என வயதில் முதிர்ந்த பாட்டி சொல்ல…
அதை நம்பிவிட்டாள் ஆனந்தவள்ளி; அதையோ அவிநாசி காதில் போட்டு அவரையும் தேனுவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்…
ஆனால் ருத்ரனுக்கோ, தேனுவின் இந்த நிலைக்கும் தீரனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக எண்ணினான்…
தேனு கிணற்றில் விழுந்த நிகழ்வுக்குப் பிறகு இருந்து தேன்மொழியை கூர்ந்து கண்காணிக்கத் தொடங்கினான் ருத்ரன்… அவனின் சந்தேகம் சரியே என்பது போல ஒன்று நடந்தது…
பரிகார பூஜிக்காகத் தேன்மொழியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது, தேன்மொழி அவர்கள் கண்ணில் படாமல் நழுவித் தனியே எங்கோ சென்றாள்…
தேன்மொழி எங்கே சென்றாள் என்று தானும் பின் தொடர்ந்து அவளைச் சென்றான் ருத்ரன்…
அங்கு விதி அரங்கேற்றிய கடைசி காட்சியின் மௌன சாட்சியாய் நின்றான்.


