தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே-4

நாய்கள் விலகி சென்றதும் தாமதிக்காமல் அடிபட்ட குருவியை தன் கைக் கொட்டைகளுக்குள் பத்திரமாக பொதிந்து கொண்டாள் தேன்மொழி…

அவள் அதற்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தாள். நல்ல வேளையாக அதிக காயம் இன்றி அந்த குருவி காப்பாற்றப்பட்டது, அவள் கருணை உள்ளத்தால்…

இவள் இப்படித்தான் என்பது போல் பார்த்து இருந்தாள் அவள் தோழிகளில் ஒருத்தி.

பார்த்தீங்களாடி அதிசயத்தை, இவள் அண்ணன் பேரை சொன்னதும் நாய்களே எப்படி தெறிச்சு ஓடி போச்சுன்னு… நெட்டையாக ஒருத்தி.

அதனால தான் அவரை நாய(கன்) சொல்றாங்களோ என குட்டையாக ஒருத்தி சொல்ல அனைவரும் ‘கொல்’ என்று சிரித்து விட்டனர்…

நாயவே இந்த பாடுபடுத்துறானே, நாளைக்கு இவனைக் கட்டிக்கப் போறவளை என்ன பாடுபடுத்தப் போறானோ… சும்மாவா வச்சாங்க பேர சண்டியர்னு, ஊர் முழுக்க சண்டை இழுத்துட்டுத் திரியுறத பத்தாதுன்னு இப்போ ஊர்ல உள்ள நாய்களையும் விட்டு வைக்கிறது இல்ல போலடி, அந்த கருப்பு கமல்ஹாசன் என துடுக்காக ஒருத்தி சொல்லவும்…

“கொள் என்று கூட்டம் கொந்தளித்து சிரித்தது…”

“அதுவரை அவர்கள் பேச்சை அமைதியாக கடந்தவளால் கடைசி கூற்றை ஏற்க முடியவில்லை…”

“அவள் அண்ணன் ஒன்றும் அப்படி கிடையாதே… அவனுக்கு பாசத்தை வாரி வழங்கத் தெரியுமே ஒழிய அதை எப்படி காட்ட வேண்டும் என்பது மட்டும் தான் தெரியாது. மற்றபடி வீண் வம்புக்கு அலையுறவன் போல் இவர்கள் பேசுவது அவள் பூஞ்சை நெஞ்சைப் புண்படுத்தி விட…”

“ஏய் அப்படி எங்க அண்ணனைப் பற்றி எல்லாம் சொல்லாதீங்கப்பா!”

“அவரைப் பற்றி உங்களுக்குச் சரியா தெரியல.. அவர் எவ்ளோ நல்லவர் தெரியுமா? என்ன கொஞ்சம் முன்கோபம் வரும், மற்றபடி நீங்க சொல்ற மாதிரி அவர் கிடையாது.”

பார்த்தியாடி இவளை, இவ்வளவு நேரம் நம்ம கிட்ட வாயைத் திறக்காதவ, இவள் அண்ணனைப் பற்றி சொன்னதும் எப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றாள்னு…

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, “சோழியும் குடுமியும் சும்மா ஆடாது”ன்னு. அம்மா தாயே, நாங்க ஒண்ணும் உங்க அண்ணனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லலைம்மா, உள்ளதை தான் சொன்னோம்…

அவர்களிடம் மறுத்து மொழிய தேன்மொழி வாய் திறக்கும் பொழுதே…

அக்கா அக்கா தேனு அக்கா, அங்க ருத்ரன் அண்ணன் யாரையோ மூணு பேரைக் கட்டி வச்சு அடிக்குதாம்… அவங்களுக்கு எதுவும் ஆகுறதுக்கு முன்ன உன்னை சீக்கிரம் அத்தை கூட்டி வரச் சொல்லுச்சு, வா அக்கா… எனத் தெரிந்த சிறுவர்கள் வந்து சொல்லவும் சரியாக இருக்க…

தேன்மொழி அவள் நட்பு வட்டத்துக்குள்ளே கேலிப் பார்வைக்கு ஆளானால் “நாங்க தான் சொன்னோமே..?!” என்பது போல அவர்கள் கிண்டலாகச் சிரிக்க… அவர்கள் அனைவரையும் நேர்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கித் தலைக் குனிந்தவள்… அவர்களின் அடுத்த கட்டத் தாக்குதலைச் சமாளிக்க முடியாது என்று தோன்றியதால் அச்சிறுவர்களை அழைத்துக் கொண்டு வேகமாகத் தன் வீட்டை நோக்கி விரைந்தாள்…

அவள் வீட்டை நோக்கி நடக்க நடக்க அவள் மனமும் தடக் தடக் என்று ரிதமாக ஒலித்தது… “இன்னைக்கும் சண்டையா…?? அகப்பட்டது யார்…?? கடவுளே ஒருவேளை அப்படி இருக்குமோ கூடாதே…??” என்று அவள் உள்ளம் பதறியது…

வீட்டு வாசலில் அவள் பாதம் பதியும் முன்பே, “ஐயோ அம்மா வலி தாங்க முடியல, எங்களை விட்ருங்க” என வலி தாங்க முடியாமல் சிலர் இறைஞ்சும் சப்தம் கேட்டு அவள் கால்கள் அவ்விடம் நோக்கி விரைந்தன…

அங்கு அவள் கண்ட காட்சியில் உறைந்தே போனாள்…

இதுக்கு மேல அடிச்சா செத்துடுவாங்க என்பது போல் மூவர் தரையில் ரத்த சகதியாய் கிடக்க அவர்களை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தான் ருத்ரன்…

மேலும் அவர்களை அடிக்க ஓங்கிய அவனின் கரம் அவர்கள் மீது படும் வேளை “அண்ணா” என்ற தேன்மொழியின் அழைப்பு ருத்ரனின் கரங்களை அந்தரத்தில் தடுத்து நிறுத்தியது…

அந்த நேரத்தில் வந்த தேன்மொழியின் வரவானது அவர்களை ஆபத்தில் இருந்து இரட்சிக்க வந்த தேவதையாகவே அம்மூவருக்கும் தெரிந்தாள்…

ஏன் அண்ணா இப்படி பண்ற…? யார் இவங்க…?? எதுக்காக இவங்கள எல்லாம் இப்படி கட்டி வச்சி அடிக்கிற…?? என்றவளுக்கு சத்தியமாக அம்மூவரையும் அடையாளமே தெரியவில்லை அந்த அளவுக்கு அடித்து உதைத்து அவர்கள் முகரையைப் பெயர்த்து எடுத்து விட்டான் ருத்ரன்…

எல்லாம் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை கூடவே இருந்தே உன்னை ஏத்தி விட்டு குளிர் காயறாங்க பார் இவங்களைச் சொல்லணும்… இவங்க பண்றதுக்கு எல்லாம் ஊரே உன்னைக் கரிச்சுக் கொட்டிக்குது… என அந்த நாலு பேரையும் பார்த்து கடிந்தவள்… அங்க தனியாக நின்ற அறிவை திரும்பிப் பார்த்தாள்.

நீங்கள் கூட இருந்துமா அண்ணனை இப்படி விட்டீங்க இதை உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை என அறிவை பார்த்து நாலு வார்த்தை கேட்டாள்…

நான் வேண்டாம் தான் சொன்னேன்… எங்க கேட்கிறான் அவன்…?? என அறிவு சொன்ன பதிலில் திருப்தியின்மையை வெளிப்படுத்தியது தேன்மொழியின் முகம்…

கேட்கலைன்னா அப்படியே விட்டுட்டு இப்படித்தான் கைகட்டி வேடிக்கை பார்ப்பீங்களா… இந்த அடி அடிச்சிருக்காரு இவங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா…?? யாருக்கு பதில் சொல்வீங்க…?? நீங்கள் சொல்லுவீங்களா இல்ல இவங்க தான் சொல்லுவாங்களா…??

நாளைக்கு இதுவே உங்களுக்கு எதிரான பெரிய பிரச்சனையாக ஆனால் என்ன பண்ணுவீங்க, எதையுமே யோசிக்க மாட்டீங்களா… என தேன்மொழி கத்தி எல்லாம் பேசவில்லை, ஆனால் அவள் கேட்டதில் உண்மை இருந்தது… அந்த உண்மை அறிவை தலை குனிய வைத்தது, மற்றவர்களின் வாயையும் பூட்டியது என்பது மெய்.

டேய் என்னடா ஊமையாட்டம் இருக்க எப்பவாச்சும் வாயைத் திறக்கிற, அதுவும் இப்படி பாயிண்ட் பாயிண்டா பேசினா என்ன செய்ய…??

ஆமாடா இவள் கிட்ட பேச முடியாம நம்ம அறிவுக்கே அறிவு பத்தலை போலடா என அந்த நால்வரும் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொள்ள அறிவு அவர்களைப் பார்த்து முறைப்பதும் சரியாக இருந்தது…

வெயிலில் நடந்து வந்ததால் தங்கச்சிக்கு ரொம்ப உஷ்ணமாக இருக்கிற மாதிரி இருக்கு, நீ உள்ளே போய் ஏசி காத்து வாங்கு, அண்ணன் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த சில்லறை வேலையை முடித்துவிட்டு வந்து உனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தரேன்… உனக்கு குச்சி ஐஸ் பிடிக்குமா இல்லை கோன் ஐஸ் பிடிக்குமா அட என் தங்கச்சிக்கு கப் ஐஸ் மட்டும் தானே பிடிக்கும் மறப்பேனா இந்த அண்ணன் … என எதுவுமே நடக்காதது போல் ருத்ரன் பேசியது தேனுக்கு திகைப்பை அளித்தது…

அண்ணா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்னு உனக்குப் புரியுதா…?? தயவு செஞ்சு அவங்களை அவிழ்த்து விடுங்க அண்ணா…

நான் எல்லாம் புரிஞ்சுதான் செஞ்சுகிட்டு இருக்கேன்… உனக்குத்தான் புரியலை போல… அவங்க செஞ்ச தப்புக்குத்தான் நான் தண்டனை கொடுத்துக்கிட்டு இருக்கேன், போதுமா? நீ சின்ன புள்ள, இதையெல்லாம் பார்த்தா பயந்துடுவ, நீ உள்ள போ…என்றான் ருத்ரன்.

அப்படி என்ன அண்ணா பெரிய தப்பு செஞ்சுட்டாங்க இவங்க? அதான் போதும் போதும் என்கிற அளவுக்கு அவங்களை அடிச்சிட்டியே அண்ணா? இதுக்கு மேல தாங்க மாட்டாங்க, விட்ரு பாவம்…

பின்ன, என் தங்கச்சியைத் தொந்தரவு கொடுத்தவனை, சீண்டியவனை, அழ வெச்சவனுங்களை உயிரோட விடச் சொல்றியா…?? என ஆங்காரமாக ருத்ரன் கத்தவும் உள்ளிருந்த ஆனந்தவள்ளியே அஞ்சி வெளியே ஓடி வந்தார்…

போச்சு போச்சு எது நடக்கக் கூடாது என்று பயந்தாளோ அது நடந்தே விட்டது…

பின்னா, என் தங்கச்சியைத் தொந்தரவு கொடுத்தவனை, சீண்டியவனை, அழ வெச்சவனுங்களை உயிரோட விடச் சொல்றியா…?? என ஆங்காரமாக ருத்ரன் கத்தவும் உள்ளிருந்த ஆனந்தவள்ளியே அஞ்சி வெளியே ஓடி வந்தார்…

போச்சு போச்சு எது நடக்கக் கூடாது என்று பயந்தாளோ அது நடந்தே விட்டது…

அப்போ?? ஐயோ இது அவர்களே தானா…!! கல்லூரி முதல்வரின் உறவினன், அவள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவன் என்பதால் அவனைக் கேள்வி கேட்க அங்கு யாருக்கும் துணிவு இல்லை. அந்த தைரியத்தில் படிக்கும் பெண்களுக்கு சோசியல் மீடியாவில் அவர்களின் தனி கணக்குகளில் சென்று ஆபாசமாகக் கமெண்ட் அடிப்பது மற்றும் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அசிங்கமாகப் பேசி அவர்களைத் தொந்திரவு செய்து வந்தவன்… தேன்மொழியிடமும் தன் வாலை நீட்ட, அவள் தன் தந்தை மற்றும் தமையனுக்குப் பயந்து செல்போன் பயன்பாட்டையே நிறுத்திக் விட்டாள்… சில நாட்களாக நேரிலும் அவளுக்குத் தொல்லை தரத் தொடங்கி இருந்தான்…

அந்த குறிப்பிட்ட ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட, அவரை அந்த மாணவியின் சார்பாக தேன்மொழி கம்ப்ளைன்ட் கொடுத்து அவருக்கு வார்னிங் கொடுக்கப்பட, தன்னை மாட்டி விட்ட வன்மத்தில் தேன்மொழியைப் பல வகையில் பழிவாங்க செய்தார். அப்படித் தான் அவளை வெயிலில் நிறுத்தியதும் அவள் மயங்கி விழுந்ததும்…

அந்த முயல் விற்பவனிடம் இருக்கும் கலர் முயல்களைப் பார்க்க ஆசையாக ஓடி வந்தவள் கண்ட காட்சியானது ச்சு சொல்லவே நாக்கு கூசும் படி அந்த வாயில்லா ஜீவனிடம் அவன் நடந்துகொள்ள… தேனுவுக்கு உலகமே வெறுத்துப் போனது. அவனிடம் இருக்கும் அனைத்து முயல்களையும் அவளே வாங்கிக் கொண்டவளுக்கு மனம் மட்டும் ஆறவே இல்லை…எண்ணி இரண்டு நாட்களிலே அவள் வாங்கிய முயல் குட்டி அனைத்துமே இறந்து விட மனம் நொடிந்து விட்டாள் பாவம் உலகமே அறியாத அந்த வாயில்லா ஜீவனைப் போய் ச்சே இச்சை கொண்ட மனுஷா மிருகங்கள் அவங்களையெல்லாம் கொல்லனும், யாராவது அவர்களைத் தண்டிக்க மாட்டார்களா எனத் தனி இரவில் நினைத்து நினைத்து அழுது இருக்கிறாள்…

ஆனால் அது தன் அண்ணனாக இருக்கக் கூடாது என அவளைச் சுயநலமாக எண்ண வைத்தது. அவளின் இதயம் என்ன இருந்தாலும் அவளும் கடைசியில் மனிதப் பிறவிதானே…

அண்ணா…?!

என்னம்மா… குரலில் அத்தனை கடினம் இல்லை, ஆனால் முகத்தில் அம்மூவரையும் பார்த்த பார்வையில் இருந்த ஒன்று ஆனந்தவள்ளிக்கும் தேன்மொழிக்கும் அச்சத்தை அளித்தது… எங்கே கோபத்தில் எதுவும் செய்து விடுவானோ என்று பயந்து போய் அவன் அருகில் வர… அவர்களை எட்ட நிறுத்தியது ருத்ரனின் தீப் பார்வை…

வேணாம் அண்ணா…??! என இறைஞ்சினாள் பேதை. தன் அண்ணன் உக்கிரமானால் என்ன நடக்கும் என்று தெரியுமே…

தங்கையின் இறைஞ்சல் ருத்ரனைக் கட்டிப்போட்டது… அதனால் ஒன்றும் ருத்ரன் நின்றுவிடவில்லை. அவனுக்கு பதிலாக அவன் நண்பர்கள் அவனின் பார்வைக்கு கட்டுப்பட்டு கடமையைச் செய்தனர் கண்ணும் கருத்துமாக

ஐயோ அம்மா விட்ருங்க… என அம்முவரின் சத்தமும் மெல்ல அடங்கத் தொடங்கியது…

நிறுத்துங்க போதும் நிறுத்துங்க ப்ளீஸ் அண்ணா, நிறுத்த சொல்லு அண்ணா, அவங்கள நிறுத்த சொல்லு என தேன்மொழி அவர்களைத் தடுக்க முயற்சித்தாள்…

அவனைத் தடுக்காத பாப்பா என தந்தையின் குரலில் தலையைத் தூக்கிப் பார்த்தவள், அப்பொழுதுதான் அவர் அங்கு இருப்பதை கவனித்தாள்…

அப்பாஆ என கூவியபடி தந்தையிடம் சென்றவள்…

வேணாம் சொல்லுங்கப்பா, அவங்களை அடிக்க வேண்டாம் சொல்லுங்கப்பா… ப்ளீஸ் பா என மகள் கெஞ்ச…

அவனுங்களுக்கு இது தேவைதான் என்பதுபோல் மகளை தோளோடு அணைத்துக்கொண்டு அமைதியாக நின்றார்… அவர்களைத் தடுக்க வழி தெரியாது கையறு நிலையில் நின்றாள் தேன்மொழி.

மெல்ல மெல்ல அம்மூவரும் சுயநினைவை இழக்கத் தொடங்கினர்…

அப்பாஆ வேணாம் வேணாம் அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அண்ணனை தானப்பா போலீஸ் பிடிக்கும், என் அண்ணனுக்கு ஒன்னும் ஆகக் கூடாது, எனக்கு என் அண்ணன் வேணும்பா ப்ளீஸ் பா எனக்கு அண்ணன் வேணும்பா என தேன்மொழி கதறி அழ ஆரம்பித்தாள்…

மகளின் கண்ணில் கண்ணீரைப் பார்த்தவருக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை…

ருத்ராஆ… எனும் ஒரு சொல், ஒரே அழைப்பு அவன் தந்தையிடம் இருந்து வந்து அவனை கொலைகாரன் ஆக்கவிடாமல் தடுத்தது…

நின்று தன் தந்தையை கேள்வியாக பார்க்க அவரோ தேன்மொழியின் கண்ணீரைக் சுட்டிக் காட்ட… அதில் என்ன கண்டானோ…

“டேய் போதும் நிறுத்துங்கடா…” என மூவரையும் அடிப்பவர்களை நிறுத்தியவன்… “இனி ஒரு முறை இவனுங்க இந்த தப்பு செய்யாம இருக்க கட் பண்ணி இவனுங்க மூணு பேரையும் பொட்டலாங்கட்டி தூக்கிட்டு போய் ஊருக்கு வெளிய கிடாசுங்க… *** நாய்ங்களா… என் தங்கச்சி சிந்தின கண்ணீர் உங்களை இன்னைக்கு காப்பாத்திடுச்சு; இல்லை உங்கள பொதைச்ச இடத்துல நாளைக்கு தென்னங்கன்று முளைச்சி இருக்கும்…” என்றவன் கோவத்தை கண்ட ஆனந்தவள்ளிக்கு இது எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகுதோ என்று உள்ளூர அஞ்சினார்… அவரின் அச்சம் பலிக்குமா…?? இல்லை பழிக்குமா…??

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top