காதல் செய்யாதே -2
கையில் பயண பொதிகளுடன் தன் எண்ண மூட்டைகளையும் சுமந்த படி அந்த மண் பாதையில் அவளும் பவள பாட்டியும் நடந்து சென்றனர்..
“அடுத்த என்ன? எங்க போறது? என்ன பன்றது?” என யோசித்தபடி மண் பாதை முடியும் வரை நடந்து சென்றவள் அருகே..வந்து நின்றது ஒரு போலீஸ் வாகனம்…
வந்தது போலீஸ் வாகனம் என்றதுமே அதிரிச்சியில் கைலிருந்த பைகளை கீழே போட்டவள் சிவந்த அரளிபூ முகம் உடையவள் முகம் ரத்தம் எல்லாம் வத்தி வெளிறி போனது..(ஷ்ஷ்ஷாஷாக்காம…)..
பின்னாலேயே வந்த பவள பாட்டி அவள் முன்னே வந்து வெளிறிய அவள் முகத்தை கண்டு திரும்பி பார்க்க..அங்கே நின்ற வாகனத்தை கண்டு அவருமே கதிக்கலங்கி தான் போனார்..
“பின்னே வந்தது மட்டும் அவனா இருந்தா மகிழினியை தப்பிக்க வச்சதுக்கு தன் வயதையும் பாராமல் நார்நாராக கிழித்து விடுவான் இல்லையா..!!”(ஆன்டி ஹீரோனா அந்த பயம் இருக்கனும்ல )
“இரு தாயி..!! நான் யாருனு பார்க்குறேன்..
நீ என் பின்னாடி ஒளிஞ்சிக்க தாயி..!!”என அவளை தன் பின்னால் மறைத்த படி நிற்க.. ஜீப்பில் இருந்து காக்கி உடையில் இறங்கி வந்தான் வளவன்..
காவல் ஆய்வாளர் வளவன்..
“என்ன பவள பாட்டி எப்போ மெட்ராஸ்ல இருந்து வந்தீக..??” என கேட்ட படி அருகில் சென்றான்..
“ஆரு அது..??”
“என்ன பாட்டி பட்டணத்து காத்து உங்களையும் அடிச்சிடுச்சா..அங்க போனவாக்குல நம்ம மனுஷ மக்களையும் மறந்துட்டியலோ..??”
“யப்பா வளவா..!! உச்சி வெயில் சுள்ளுனு அடிக்கே என்ன செய்ய..இல்லனா எங்க அண்ண சிவசங்கரன் புள்ளைய தெரியாம எட்டு பட்டி கிராமதுல ஆராச்சும் இருப்பாங்களா..!!”
“ஆக மொத்தம் கண்ணு தெரியல சொல்லுதிய சரிதானே..!!”
“அட போடா போக்கிரி பயலே…!! எனக்கென்ன அவ்ளோ வயசா ஆகிடுச்சு..(சதம் அடிக்க இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு.. அந்த சின்ன பிள்ளைய பார்த்து என்னசொல்லிட்ட..) ஆமா இது என்னப்பு காக்கி உடுப்பு..!!”
“பரீட்சை எழுதி வாங்கிட்டேன் ஆத்தா..!!” என்றவன் அப்போது தான் மகிழினியை கண்டான்..
“யாரு பாட்டி இது?..” என்றவனை பார்த்து இன்னும் பவள பாட்டி பின்னால் ஒளிந்து கொண்டவளை..
“அது தெரிஞ்சவங்க பிள்ளை தான்யா.. என்கூட தான் இனிமே தங்க போவுது அதுக்கு ஒரு வேலை வாங்கிகுடு ராசா…!!!”
“அடேயப்பா.. மெட்ராஸ்ல கிடைக்காத வேலையா இந்த கிராமத்துல கிடைக்க போவுது..இங்க இருக்குற பயலுக எல்லாம் பட்டணத்து வேலைக்கு கிளம்பி போறானுக.. நீ என்னடானா இங்க வந்து கேக்குறியே பாட்டி..!!!”
“என்னய்யா பண்றது நமக்கு பட்டணம் தோது படல வயசு பிள்ளையை அங்க வச்சிட்டு எப்படி காலம் தள்ளுறது.. ஆயி அப்பன் இல்லாத பிள்ளையப்பு.. அதான் வயசான காலத்துல எனக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு கூட்டியந்தேன். நீங்க ஒரு வேலை இருந்தா சொல்லுங்க தம்பி..பெரிய படிப்பு படிச்ச புள்ள அப்புறம் இந்த சோப்பு டப்பால கூட பிள்ளை வேலை பாக்கும்..!!”
“எதே சோப்பு டப்பாவா..??”
“அதான் அந்த டப்பால கூட வேலை பார்ப்பாங்களே.. அத கையோட வேற கொண்டு போவாங்களே..!!”
“ஹாஹா. அது சோப்பு டப்பா இல்லை.. லேப்டாப் இல்ல மடிக்கணினி சொல்லுவாங்க பாட்டி..!!”
“அது என்ன மாயக்கன்னியோ..(மடிக்கணினி மாயக்கன்னி ஆக்கிய பெருமை பாட்டியை சேரும்..) என்னவோ..!! பிள்ளைக்கு அதுல வேலை பாக்க தெரியும் அவ்ளோதான்.. அதுக்கு ஒரு வேலை வாங்கிகுடுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்..!!”
“சரி பாட்டி வடிவு அத்தைகிட்ட சொல்லி விடுறேன் அத்த பாத்துக்குவாங்க..!!”
“நன்றி தம்பி..”என திரும்பியவரை..
“அது யாருடா அது ஊரை பத்தி தெரியாம கூட்டிட்டு போறதுனு பார்த்தேன்.. ஏன் பாட்டி உனக்கு ஊர் நிலவரம் தெரியும்ல வயசு புள்ளைய இப்படி ரெண்டு கெட்டான் நேரத்துல கூட்டிட்டு போறியே..வாங்க உங்கள ஊருக்குள்ள விட்டுடுதேன்..!!”
அவ்வளவு தான் பாட்டி எதையோ நினைச்சு பயந்த போல..
“அய்யயோ…!!! ஐயா வளவா.. ராசா பாட்டிக்கு வழில ஒரு சோலி கெடக்குப்பா அத பாத்துட்டு.. நானே பிள்ளைய பத்திரமா கூட்டியந்துடறேன்.. உனக்கு எதுக்கு தம்பி அலைச்சல்..!!”என பதட்டமாகவே சொன்னாவர்..அதற்கு மேல் நிற்காமல் மகிழினி கையை பிடித்து கொண்டு சாலையில் ஏறி வயல் வரப்பில் திரும்பி பார்க்காமல் நடக்க ஆரம்பித்து விட்டார்..
அவர் ஏன் அவ்வாறு பதறுகிறார் என்று அவனுக்கும் தான் நன்றாகவே தெரியுமே.. பாட்டி மட்டும் அல்ல ஊருல உள்ள வயசு பொண்ணுங்க முதல் வயசான பல்லு போன கிழவி வரை அவனிடம் நின்று பேச பயந்து நடுங்குவர்.
“ஆஹன் நீங்க நினைக்குற மாதிரி இல்லை வளவன்.. குணத்தில் வல்லவனே. நேர்மையின் சிகரம், உண்மை விளம்பி கிட்டத்தட்ட பிக்பாஸ் ஆரி மாதிரி. அதுக்காக சுமார் ஃபிகரும் இல்ல மாநிறம் ஆறடிக்கு மேல் உயரமான கட்டுமஸ்தான குறிப்பாக கற்றை மீசையை ஒரு கையால் நீவி விடும் போது கன்னி பெண்கள் அனைவரையும் அவன் பக்கம் கட்டி இழுக்கும்…!!” (குடுத்த காசுக்கு கூவிட்டேன்..)
“அப்புறம் ஏன் எல்லாம் பயந்து ஓடுறாங்கன்னு கேக்குறீங்களா..?? அதுக்கு ஒரு முக்கியமான ஆள் தான் காரணம்.. அவளை மீறி வளவன் கிட்ட எந்த பெண்ணாளையும் பேசத்தான் முடியுமா இல்ல பேச விட்ருவாளா நம்ம சண்டி ராணி.. “சாம்பவி ..” வளவனின் அத்தை பெத்த மரகதம்.. வடிவுவின்
ஒரே தவ புதல்வி..!!”
“அப்படி அவளுக்கும் தெரியாம பேசிவிட்டாள் அவ்ளோதான் அந்த பெண்ணின் நிலை, பிரிச்சி மெய்ஞ்சுடுவா … வயதான கிழவி என்றாலும் விட மாட்டாள்.. வளவனிடம் பேசிவிட்டால் போதும் அவர்களின் தடியை பிடிங்கி தள்ளாட விடுவது.. நாயை விட்டு துரத்த விடுவது.. அவர்கள் அசந்த நேரம் வெத்தலையில் மூக்கு பொடி கலப்பது என அவள் கொடுக்கும் தண்டனைகள் ஏராளம்..!!”
நம்ம பவள பாட்டிக்கும் அது தெரியுமே. பின்ன போன முறை ஊர் கொடைக்கு வந்த போது அவனிடம் நலம் விசாரித்தற்கே, தண்ணீர் எடுக்க சென்றவரை நாயை விட்டு ஊரையே சுத்தி வர செய்தவளை எங்கனம் மறப்பார்.. கண்ணு முன்னாடி அந்த பீதி வந்து போகுமா இல்லையா..?? ” அதான் விட்ட போதும்டா சாமின்னு பாட்டி கிரேட் எஸ்கேப்..!!’
“அவளை நினைத்தாலே கோவம் தான் வருது ஊர்ல ஒரு கிழவியாவது விட்டு வச்சி இருக்காளா..”
“எல்லாரையும் பயமுர்த்தி வச்சிருக்கா சிறுக்கி.. என்ன தான் பண்றது அவள என தலையில் அடித்தவன் அங்கிருந்து சென்று விட்டான்..”
இவனுக்கு தான் அவளை நினைத்தால் எரிச்சல் ஆனால் வளவன் என்றால் கொள்ளை பிரியம் சாம்பவிக்கு.. அவன் மீதுள்ள அதீத அன்பின் வெளிப்பாடகவே அவள் அத்தனையும் செய்கிறாள்.. இந்த அதீத அன்பே ஒரு நாள் அவனுக்கு உயிர்வலியை கொடுக்கும் என்பதை எப்போது அறிவாள்..??



