காதல் செய்யாதே -3
வயல் வரப்பில் நடந்து பழக்கம் இல்லாத மகிழ் சில்லறை வாரியப்படியே சென்றாள் (அட அதான் பா விழுந்து வைக்கிறது)..
“அவுச் பாட்டி இப்படியே இன்னும் எவ்ளோ தூரம் நடக்கனும்..??”
“இன்னும் ஒரு காணி நடந்தா ஊர் வந்துடும் கண்ணு..!!”
“அப்பா…! இதே தான் அப்போ இருந்து சொல்றிங்க.. எனக்கு இந்த வரப்பு மேல நடக்க முடில பாட்டி.. உங்கிட்ட பேசினரே அந்த போலீஸ் எப்படி பாட்டி..?”
“ஆரு வளவன் தம்பியா அது குணத்துல சொக்க தங்கமான பிள்ளை மா..!!”
“அப்போ அவர் கூடவே போய் இருக்கலாம்ல அவர் தான் கூட்டிட்டு போய் விடுறேன் சொன்னாரே..??”
“அட நீ வேற கண்ணு இந்த தள்ளாத வயசுல இப்படி காடுகன்னில நடக்க எனக்கு மட்டும் ஆசையா என்ன…? எல்லாம் அந்த கோட்டி புடிச்ச கழுதைக்கு பயந்துதான் ஆத்தா, நாம மட்டும் வளவன் தம்பி கிட்ட நின்னு பேசுனோம்னு தெரிஞ்சுது அந்த பாதகத்தி மவ என்ன பண்ணுவ நினைச்சாலே எனக்கு உள்ள நடுங்குது…!!”(கோரால் பாட்டி ஜோகம்..)
“என்ன சொல்றிங்க..?? பாட்டி எனக்கு புரியல..?? யாரு அது..??”
“ஊர் போய் சேர இன்னும் தொலைவு இருக்கு வா ஆத்தா உனக்கு இந்த ஊர் அருமை பெருமையை சொல்றேன்… கத சொல்ல போறிங்களா… ஆமா ஆத்தா கத பேசிட்டே போன தூரம் தெரியாது களைப்பு அண்டாது சொல்லுவாங்க… (ஐயோ கோரால் பாட்டி நீ பாட்டுக்கு லெங்த்தா போயிடாத அப்புறம் ரீடர்ஸ் தெறிச்சு ஓடிட போறாங்க..)
“லாங் லாங் எகோ, ஒன்ஸ் அப் ஆன் எ டைம்.!!” (சரி சரி கல்ல துக்காதிங்க நான் கதைக்கு நேர வந்துடறேன்) அதாக பட்டது என்னனா மக்களே
“நம்ம சிங்கம்பட்டி கிராமத்துல ஒரு பெரிய குடும்பம் இருந்தாங்க அங்க குடும்பத்துக்கு மூத்தவர் முத்துவேல் அவருக்கு மகேஸ்வரன், சந்திரன் ரெண்டு மகன்கள் அவர்கள் இருவருக்குமே ஒரு மகன் ஒரு மகள் என நான்கு பிள்ளைகள்..ராஜதுரை -லிங்கேஸ்வரி,குணசீலன் -சுபத்ரா..!!”
“இதுல சின்னவர் மகன் குணசீலன் ஐயா பேருக்கு ஏத்த மாதிரியே நிரம்ப நல்லவரு.. உதவினு கேட்ட அள்ளி அள்ளி தருவாரு. (பாரிவள்ளல் பக்கத்து வீட்டுக்காரர் போல.ஹிஹி ஜோக் ஜோக்…)ஆனா அவர் அண்ணன் ராஜதுரைக்கு கட்டுப்பட்டவரு.. அண்ணன் மேல அவ்ளோ பக்தி உள்ளவரு..!!”
“ஆனா பெரியவர் இருக்காரே அப்படியே சின்னவருக்கு நேர் எதிர்.. அவர் முன்னாடி நின்னு பேச கூட எல்லாம் அப்படி நடுங்குவாங்க..அவர் வச்சது தான் சட்டம்.. அவர எதிர்த்து நிக்குறவங்கள எரிச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பார்..அவருக்கு அவர தவிர வேற யாருக்கும் மரியாதை தந்தா புடிக்காது உடனே” நீ எல்லாம் எனக்கு சமமான்னு போட்டு தள்ளிடுவாரு..”(ஆத்தி ஊறுகாய் போடுற மாதிரியே சொல்றாங்களே )
“அப்படியே பட்டவர அடக்க வந்தவங்க தான் சிவசங்கரனும் அவங்க தங்கச்சி வடிவுவும்..!!”
“அந்த அம்மா வந்ததுக்கு அப்புறம் தான் எங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் வந்துச்சுனே சொல்லலாம்..எங்களுக்காக ஊருக்கு ஆஸ்பத்ரி,பள்ளிக்கூடம்,ஊரக வளர்ச்சி வங்கினு எல்லாம் கொண்டு வந்தாங்க அதும் ராஜதுரை எதிர்த்துகிட்டு அந்த அம்மா சிங்க பெண்ணா தனியா நின்னு போராடி கொண்டு வந்தாங்க.. (சிங்க பெண்ணே சாங் எத்தனை பேரு மனசுக்குள்ள ஓடுச்சி.. ஓடலான உட்ருங்க..சண்டைக்கு வராதீங்க..)
“ஓஹ் செம துணிச்சல் தான் பாட்டி.. இன்னும் யாருக்கு பயப்படுறீங்கன்னு சொல்ல காணோமே..??”
“சொல்றேன் கேளுத்தா. எங்க சிவசங்கரன் மகன் தான் இந்த வளவன் தம்பி குணத்துலயும் அவங்க ஐய்யன கொண்டு பிறந்த பிள்ளை.. வடிவுக்கு ரெண்டு பிள்ளைங்க அதுல ஒருத்தி தான் இளையவ சாம்பவி..!!”
“அவ எங்க வடிவம்மா பொண்ணு,வீரம் மட்டும் தான் அந்த அம்மா மாதிரியே மத்தபடி நேர்மாற பொறந்துட்டா.. அவளுக்கு அவ மாமன் அதான் நம்ம வளவன் தம்பினா உசுரு அதுகிட்ட மத்த பிள்ளைங்க யாராவது நின்னு பேசுனத பாத்தாளோ கேட்டாளோ பேருக்கு ஏத்த மாதிரியே சாமி ஆடிடுவா பாரு, வளவன் கிட்ட பேசிட்டேன்னு…. எப்பா என்ன கெழவினு கூட பாக்காம நாய விட்டு சுத்த விட்டா பாரு (ஹாஹா.. பின்ன அந்த பீதி கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா..)
“ஹாஹாஹா.. பாட்டி உங்களையே இந்த பாடு படுத்தி இருக்காங்களே அடேயப்பா…!!! அவ்ளோ வில்லங்கமான ஆளா,யாருக்கும் அடங்கமாட்டாங்களோ..??”
“ஏன் இல்ல ஊரயே உண்டு இல்ல பன்றவள எங்க வளவன் தம்பி கண்ணு அசைவுக்கே கட்டுப்பாட்டுல வச்சி இருப்பாரு..!!”என அவர்களை பற்றி மகிழினிக்கு கூறியவாரு வந்து சேர்ந்தானர்..
இவர்கள் எல்லாம் தன்னை பற்றி பேசுவது அறியாது. நம்ம ராணி மங்கம்மா நண்டு சிண்டு கூட முக்குழியாட்டம் ஆடிக்கொண்டு இருந்தாள்..
“எக்கா..!!! நீ பன்றது சரியே இல்லக்கா நீ தான் ஆட்டத்தை விட்டுட்ட இல்ல..
“டேய் யாருடா சொன்ன..?” என ஓங்கி ஒலித்த அவள் சத்தத்தில்.. எல்லா பிள்ளைகளும் வாயில் கை வைத்து நின்றனர்..
“டேய்..!!”
“ஸ்ஸ்ஸ்..பாண்டி..!!”
“என்னடா அர்னல்டு..??”
“இப்படியே விட்ட இன்னைக்கும் நம்மகிட்ட இருந்து எல்லாத்தையும் உருவிட்டு உற்றும்டே…. எதாவது செஞ்சி காப்பாத்துட்டே…!!”
“இருடா….!!! நானே எங்க ஆத்தா கிட்ட இருந்து உருவிட்டு வந்த மொத்தத்தையும் ஆட்டைய போட்டுருமோனு நிக்குதே..!!” என அவன் காதை மற்றவன் கடிக்க (ரகசியம் பேசறது எப்பே. நீங்க பாட்டுக்கு நான் சொன்னேன் சொல்லி பக்கத்துல இருக்குறவங்க காத கடிப்புடாதீங்க அப்பே..)
“டேய் இந்தக்காய் மட்டும் சாம்பவி அடிச்சிடுச்சி வச்சிக்கோ நம்மகிட்ட இருந்து எல்லாத்தையும் உருவிடும் டோய்..!!” என எல்லாம் தலையில் கை வைக்க.. ஆபாத்பாண்டவனை வந்தான் வளவன்..
“டேய்…. அங்க பாருங்க வளவன் அண்ணன்…வராரு…இத விட்டா அக்காவ கவுக்க முடியாது…!!”
“சரி சரி நான் பாத்துக்குறேன்…!!” என்ற அர்னல்டு..சொல்லவும் சாம்பி குழியில் குண்டை தள்ள குறி வைக்க..சரியாக இருந்தது
“எக்கா… அங்க பாரு உன்ற மாமனை..!!”என்ற சொல் போதுமானதாக இருந்தது அவள் குறி தப்ப..
“ஹே ஹே….!! அக்கா தோத்துடுச்சி தோத்துடுச்சி…!!” என குதித்தவாறு அவளை சுத்தி வர. அவள் கவனம் முழுவதும் அவள் மாமனை சுற்றியே வந்தது..
அவன் ஜீப்பில் போகும் போது.. வண்டியின் பக்கவாட்டில் கையை தூக்கி பிடித்தவாரு ஒரு காலை வெளியே விட்டவாறு மற்ற கையால் மீசையை முறுக்கி விட்டபடி செல்ல சொக்கி போனாள்..
வண்டி அவளை தாண்டி செல்லும் வரை பார்த்தவள்..அதன் பின்னாடியே ஓடி சென்றாள்..
“மச்சான்…!!! மச்சான்…!!நில்லு மச்சான்..!!!” என அவன் வண்டி பின்னாலே விரைய…வண்டி நிக்காமல் செல்லவும்.. அருகில் கிடந்த கல்லை எடுத்து போலீஸ் வண்டி மீதே எறிந்தாள்..
அதில் வண்டி சடன் பிரேக் போட்டு நின்றதும்..
அருகில் சென்றவளின் காதை பிடித்து திருகியவாறே இறங்கியவன்..
“என்ன பழக்கம் பிள்ளை இது எதுக்கு இப்போ கல்லை கொண்டு எறிஞ்சவ..!!”
“ஆ விடுங்க மச்சான் வலிக்கு.. நீங்க பாட்டுக்கு நான் கூப்பிட கூப்பிட நிக்காம போனிரு அதான் நான் என் ஸ்டைல்ல வண்டியை நிப்பாட்டுனேன்..!!” என அவன் பிடியில் இருந்தவாறே உள்ளே இருக்கும் ஓட்டுநரை பார்க்க..
அவர் முகத்தில் மரண பீதி அப்படமாக தெரிந்தது “என்ன ராமசாமி அண்ணாச்சி வீட்டுல மதினி மிளகா வத்தல் காயவச்ச மாதிரி இருந்துச்சு….??”
“ஐயோ அம்மாடி..!! நான் இல்லாத்தா நீ ஓடி வராத பாத்துட்டு நான் நிப்பாடுத்தேன் தான் சொன்னேன். தம்பி ஐயா தான் நிப்பாட்ட கூடாதுனு சொல்லிபுட்டவா…!!”என சமாதானம் பேசினார்.. பின்ன இவர் அவள வண்டில ஏற்றலைனு அதுவும் வளவன் சொன்னதான் பெயரில் தான்.. அதுக்கே கழுவுற தண்ணில மிளகாதூல வச்சி சூனியம் வச்ச மகராசி ஆச்சே இருக்காதா பயம் அவருக்கு..
“அங்க என்னடி பாக்குற.. ஆமா நான்தான் வண்டியை நிறுத்த கூடாதுனு சொன்னேன்.. அதுக்கு என்னடி இப்போ…? எதுக்கு அவர மிரட்டுறவ..??”
“ஐயோ மச்சான்..!! சத்தியமா நான் பாசமா தான் பாத்தேன்..!! அவுக தான் என்னைய பாத்தாலே பயப்படுத்தாக….!!” என கண்களை பாவமாக வைத்து கூறியவளை வெளி ஊர் காரன் பார்த்தாள் அவள அப்புராணின்னே சொல்லுவாங்க..
“அடியே உன் நடிப்ப வேற யாருக்காவது காட்டு நம்புவாங்க ஆனா என்கிட்ட நடக்காதுடி.. உன்ன சின்ன வயசுல இருந்தே எல்லாத்தையும் பார்க்குற என்கிட்டயேவா..!!!”
” சீ போ மச்சான்..!! எனக்கு வெக்கமா இருக்கு..!!” என அவன் கையை தட்டி விடவாறு அவன் மீது தான் முன் அங்கம் அழுந்த சாய்ந்து நின்றாள்..
“அடியே இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்டி வெக்க படுறவ..???”
“பின்ன நீங்க தான சின்ன வயசுலே இருந்தே பாக்குறேன் சொன்னிங்க..!!”
“ஆமா அதுக்கு என்னடி.. ஏன் இப்படி நெளியுரவ..??”
“ஐயோ போ மச்சான் சின்ன புள்ளைல நான் கொத்தவரங்க பிஞ்சி மாதிரியே இருப்பேன் சொல்லுவ.ஆனா இப்போ நான் முழுசா விளஞ்சி நிக்குதேன் எங்க நீ என்ன பாக்களையோனு நெனச்சு வேசன பட்டேன்..இப்போதான் நீங்க என்ன நல்லா பாக்குறீங்கன்னு சொல்லிட்டீங்களே அதான் வெக்கம் வெக்கமா…!! வருது மச்சான் என இன்னும் இன்னும் நெருங்கி நின்று அவன் இளமைக்கு சோதனை வைத்தாள்..
அவன் எங்கனம் அறிவான் அவள் அவனை சோதிப்பதற்கு மட்டுமே பிறந்தவள் என்று..



