காதல் செய்யாதே இராவணா-1

காதல் செய்யாதே -1

இளம் காலை பொழுதில் ‘சில்லென்று’ வீசும்  தென்றலுடன் சாலையில் இரு மருங்கிலும் விளைந்த நெற் பயிர்கள் சமைந்த குமரி பொண்ணாக மின்ன(ஒரே கிளுகிளுப்பு தான் ரீடர்ஸ்க்கு…).அந்த சிற்றுந்தில் (மினி பஸ் ) பயணிக்கும் பயணிகளுக்கு குறிப்பா பெண் பயணிகளுக்கு ஏத்தபடி பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தது..  பள்ளி /கல்லூரி அருகே செல்லும் போது…

“பதினெட்டு வயது

இளமொட்டு மனது ஏங்குது பாய் போட

பனி கொட்டும் இரவு

பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட

கங்கை போலே காவிரி போலே

ஆசைகள் ஊறாதா

சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு

ஜாடையில் கூறாதா… என்ற பாடலும்.. பருவ பெண்கள் காலை வேலைக்கு செல்லும் பெண்கள் வந்தால்..

மாசி மாசம் ஆளான பொண்ணு

மாமன் எனக்குத்தானே

நாளை எண்ணி நான் காத்திருந்தேன்

மாமன் உனக்குத்தானே

பூவோடு ஆ……ஆ…..ஆ……தேனாட

தேனோடு ஓ……ஓ…..ஓ….. நீயாடு.. என சிற்றுந்துக்கே உரிய பாடல்களை போடுவதில் நம் ஓட்டுநர்களுக்கு நிகர் அவர்களே..அதுவும் நம் தமிழ்நாடு பேருந்து ஓட்டுநர்கள் அதில் மன்னர்கள்.

இசைக்கும் பாடல்களுக்கு ஏற்ப பயணிகள் சிலர் தங்களுக்குள் சிரித்த படியும், ஊர் கதைகளை பேசியவாறும், சிலர் அந்த பாடல்கள் மூலம் தங்களின் காதலை வளர்த்தபடியும் என அவரவர் மனநிலையில் பயணித்தனர்..(ரீடர்ஸ் உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா.. மக்களே..)

அவள் ஒருத்தியை தவிர.. அவள் மட்டும் அசோக வனத்தில் சிறை இருந்த சீதையை போல் அந்த இனிமையான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாள்.. அவள் மகிழினி..!!(என்ன சீதையா ஷாக் ஆகாதீங்க டைட்டில்க்கு ஏத்தபடி ஒரு இன்ட்ரோ போடனும்ல எப்படி கவர் பண்ணேன் .. அவ்வ்வ் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு..)

பெயரில் மட்டுமே இருக்கும் மகிழ்ச்சி துளியும் அவளிடம் இல்லை..!! கண்களில் நிறக்காமல் வழியும் கண்ணீரோடு ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியே பார்த்தவண்ணம் வந்தாள்…

“ஏன் எனக்கு இந்த நிலைமை..?? என்ன மாதிரி வளந்தேன்.. எவ்வளவு பாசமா பாத்துக்கிட்ட குடும்பம்.. நண்பர்களோட சந்தோஷமா எப்படியெல்லாம்  ஆடி பாடி திரிந்தேன்..!!! இப்போ இப்படி யாருமே இல்லாத அனாதையா எங்க போறேன் கூட தெரியாம போய்ட்டு இருக்கேன்.” என எண்ணியவள் உள்ளம் வேதனையில் துடித்தது..(அவ வாழ்க்கை எத நோக்கி போகிட்டு இருக்குனு தெரிலையோ…)

“அம்மாடி.. இனி கண்ணு அழாதடா…!எல்லாம் சரி ஆகிடும்..!!” என பவளபாட்டியால் வார்த்தைகளால் கூற மட்டுமே முடிந்தது.. அவருக்கும் அவள் நிலை தெரியுமே..

“எந்த பாவி கண்ணு பட்டுச்சோ மான் குட்டி கணக்கா துள்ளி விளையாடிட்டு இருந்த பிள்ளைய இப்படி ஒடுங்கி உக்கார வச்சுட்டானே அந்த சண்டாளன்.(நோ.. பாட்டி ஹீரோ பாவம் )இருந்திருந்து அந்த விளங்காதவன் கண்ணுலய இந்த புள்ள படனும்..!!” என்ற அவரின் பேச்சில் அவன் என்றதுமே மகிழினிக்கு உடலில் மெல்லிய பயம் உண்டானது…

“அவன் தான்…! அவனே தான்…!! அந்த படுபாவியல தான் இன்னைக்கு அப்பா அம்மா யாருமே இல்லாம அனாதையா இருக்கேன்..!!”

“ஏன் கடுவுளே அவன படைச்ச.. அப்படியே படைச்சாலும் அவன் கண்ணுல எதுக்கு என்ன  தென்படவச்ச. என் தப்புதான் அவன் கண்ணுல பட்டதால தான் எல்லாமே.என்னால தான் அப்பா அம்மா என்னையும் விட்டுட்டு போய்ட்டாங்க ஹோ..!!” என கதறினாள்..இடம் பொருள் ஏவல் மறந்து…

“இனி”.. கண்ணு அழாதடா அழுத மட்டும் போனவங்க வந்துடவா போறாங்க. இதுக்கு அப்புறம் தான் டா நீ தைரியமா வாழனும் உன்ன நம்பி இருக்கவங்களையும் காப்பாத்தனும்.. என்று சமாதானம் செய்தார்..

அவர் எடுத்து சொல்லியதுமே அவள் கண் முன் வந்து போனது ஒரு பிஞ்சு முகம்.. “கண்கள் சிவந்து உதடு வெம்பி என்னை நீயும் விட்டுட்டு போறியா..??” என கேள்வியை தாங்கி..

அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கதறியபடி விட்டுவிட்டு வந்தது.. கண் முன் வந்து சென்றது..

“இது எல்லாத்துக்கும் காரணமானவன் மட்டும் கண்ணு முன்னாடி வந்தான்..  கொன்று போடும் ஆத்திரத்தில் இப்போது இருந்தாள்.!!” அவள் வலி பெரியது அதனால் மனம் அவ்வாறு எண்ணியது உண்மையில் நடக்க கூடியதா அது.. பெரும் பதவியில் இருக்கும் அவனை நெருங்க முடியுமா என்ன.. அதுவும் மக்களுக்கு சேவை செய்யும் பெரும் பதவியில் இருந்து கொண்டு அவன் செய்யும் அராஜகமும் அட்டூழியமும் எதிர்க்க முடியாமல் தானே புறமுதுகிட்டு வந்தது..

 “எப்படியோ இனி அவன் கண்ணை விட்டு மறஞ்சாச்சி இதுக்கு மேலயாவது எனக்கு கருணை காட்டு கடவுளே..!!” என மனதார வேண்டி கொண்டுவளுக்கு எப்படி தெரியும் இனிமேல்தான் அவள் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை அனுபவிக்க போகிறாள் என்று.. (அதான நீ தான ரைட்டரு உனக்கு தான தெரியும் சொல்றிங்களா மக்களே.. ஹிஹி அதே அதே..)

“எம்மா யாரு மா. அது சிங்கம்பட்டிக்கு டிக்கெட் வாங்குனது அடுத்து ஸ்டாப்பிங் சிங்கம்பட்டி தான் மா..!!” என அவளது சிந்தையை கலைத்தார் நடத்துனர்….

இடம் வந்ததும் இறங்கியவர்களை..

திருநெல்வேலி மாவட்டம்.. அம்பாசமுத்திரம் ஊராட்சி.. சிங்கம்பட்டி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.. என்ற பதாகை வரவேற்றது..

இங்கு தான் அவளுக்கு வாழ்க்கையில் பெரிய  இடிகள் விழ போவது தெரியாமல்..அவனிடம் இருந்து தப்பித்து வந்த நிம்மதியான உணர்வோடு வலது காலை எடுத்து வைத்து வந்தாள்.. (சிம்பாலிக்கா எல்லாம் இல்லை டைரக்ட் மீனிங் தான் பா..)..

அவள் வாழ்க்கையை புரட்டி போடப்போவது யார்.. யாருக்காக ஊரை விட்டு ஓடிவந்தாள்.???…

“அப்படி அல்லாத்தையும் அடுத்த எபில தான் சொல்லுவேன் மக்களே.. ஹிஹி அப்போ தான கதைல ஒரு இது இருக்கும்…எதுனு நீங்க கேட்டாலும் நான் அதுனு தான் சொல்லுவேன்.. இப்படியே அந்த அது எது இதுன்னு குழம்பிட்டே இருங்க வந்துடறேன்…!!”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top