தீஞ்சுவை தந்திரனே, காதல் இந்திரனே -2

2

அவன் ருத்ரன்…

ஆருத்ரன்… என்பதை விட

அவிநாசியின் மகன் ஆருத்ரன் என்று சொல்வது தான் அவனுக்கு மிக பொருத்தமான அடையாளம் ஆகும்… அதில் அவனுக்கு கர்வம் மிகுந்த பெருமையும் கூட…

தந்தை சொல் தட்டாத தலை மகன்…ம்ம் எனும் முன் கோபம் வருவதில் அவன் தந்தைக்கும் ஒரு படி மேல்… பிரச்சனை என்று வந்து சொன்னால் என்னவென்று கேட்கும் முன்பே கன்னத்தை பழுக்க வைத்து விட்டு தான் மறுவார்த்தையே கேட்பான்…

அவன் கண் முன்னாடி ஒரு தவறு நடந்தால் நமக்கு என்ன என்று ஒதுங்கி செல்பவன் அல்ல.. நீ கொம்பனாகவே இருந்தாலும் எனக்கு என்னடா என தில்லாக தட்டி கேட்பவன்… வெல்லம் திரண்டு வரும் காட்டாறு போல, சுழற்றி அடிக்கும் சூறாவளி போல, தப்பிக்க முடியாத நீர் சுழல் போல…

அன்பு என்ற சொல்லை தவிர அவனை வேறு எதனாலும் கட்டி வைக்க முடியாது… எந்த அளவுக்கு என்றால் அவனின் அன்பானவர்கள் சொன்னால் ஒன்னும் ஒன்னும் நான்கு என்றால் இவனும் நான்கே சரி என்பான் தவறு என்று எடுத்து சொன்னால்… இது வேற கணக்கு அது வேற கணக்கு என்று கோணல் கணக்கு படிப்பான்…

ருத்ரனுக்கு அவன் குடும்பம் தான் எல்லாம்… அவனை பொறுத்தவரை அவனது குடும்பம் ஒரு அழகான குருவி கூடு… அதில் சின்னதாக தேனீ தொந்திரவு செய்தால் கூட மொத்த காட்டையும் அழிக்க தயங்காதவன்…

தன் மகனை நினைத்த மாத்திரத்தில் மிடுக்கு வந்து தொற்றிக் கொண்டது அவிநாசி முகத்தில்… அதே மிடுக்குடன் தன் வீட்டிற்கும் ஜீப்பில் வந்து சேர்ந்தார்…

அவர் வண்டியின் சப்தம் கேட்டதுமே அதற்காகவே காத்திருந்தது போல் உள்ளே இருந்து வெளியே வந்தார் அவரது சகதர்மினி ஆனந்தவள்ளி… கையில் தண்ணீர் குவளையுடன்…

குவளையை கையில் வாங்கும் போது அவரது விரல் வள்ளியை மெல்லமாக வருடியது… கண்கள் நான்கும் பேசிட, கன்னங்கள் இரண்டும் சிவந்தது யாரும் காண வண்ணம் அரங்கேறிய காதல் நாடகம் கொள்ளை அழகு… இத்தனை வருடம் கடந்தும் அவர்களின் மங்காத தாம்பத்தியத்தின் அடையாளம்…

“காலம் மாறினாலும்…

அவர்களின் காதல் மட்டும் மாறவில்லை…!”

இது ஜென் z க்கே சவால் விடும் யூத் கப்புல்டா…

இனிதாக இசைக்கப்பட்ட அவர்களின் காதல் சங்கீதத்தில் ஒரு அபஸ்வரம் போல் அந்த சப்தம் ஒலித்தது…

ஐயோ யாராவது காப்பாத்துங்க… எங்களை விட்ருங்க… அடிக்காதிங்க… காப்பாத்துங்க… என உயிர் வலியை அந்த குரல்கள் பிரதிபலித்தன…

அரவம் உணர்ந்து … யார் உன் மகனா அதான பார்த்தேன் என்ன வீடு இன்னைக்கு அமைதியா இருக்கேன்னு… விட மாட்டானே இன்னைக்கு என்ன பஞ்சாயத்து உன் மகனுக்கு நிதம் ஒருத்தனை போட்டு அடிக்கலேன்னா தூக்கம் வராதே ஏன்டி இவன் இப்படி இருக்கான்…எங்க அவன்.. என சத்தம் வந்த திசையை பார்த்தபடி கேட்டுக் கொண்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு இவர் தயாரானார்…

என்னை ஏன் கேக்குறீங்க… உங்க புள்ள உங்களை மாதிரி தான இருப்பான்… அந்த கோவம் மட்டும் உங்களுக்கு மேல இருக்கு… காலைல நீங்கள் கிளம்பி போனதிலிருந்து நடந்துகிட்டு இருக்கு… வேணான்னு எவ்வளவு சொன்னாலும் கேக்குறது இல்ல வர வர என் பேச்சையே கொஞ்சம் கூட கேட்க மாட்டேங்கிறான்… யார் என்னனு பார்க்காம சட்டுன்னு கையை நீட்டிடுறான்… நமக்கு வயசுக்கு வந்த ஒரு பொண்ணு வேற இருக்கு நாளைக்கு இவனுக்கோ இல்லை இவனால நம்ம பொண்ணுக்கோ ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு பெத்த வயிறு கலங்குது… சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்குறான்… கொஞ்சம் நீங்களாவது சொல்லுங்களேன்… என ஒரு அன்னையாக அவர் பரிதாவிப்பது சரியே…

ஆருடி இவள் அப்படி எவனாவது என் புள்ளைங்க மேல கை வைக்கிற அளவுக்கு இங்க எவனுக்கு தைரியம் இருக்கு இல்லை அப்படியே வைக்க துணிஞ்சாலும் நான் தான் பார்த்துகிட்டு சும்மா இருப்பேனா… போடி போடி போய் உன் வேலைய பாரு அதான் நான் இருக்கேன்ல… என அவிநாசி தன் மீசையை முறுக்கி விட்டப்படி வீரமாக சொல்லி விட்டு தான் ஒரு டெரர் பாடியாக்கும் என்பது போல் நடந்து செல்ல…

அதை நினைச்சு தான் எனக்கு பயமே… என்கிற ஆனந்த வள்ளியின் வார்த்தைகளில் தேங்கி நின்றார் அவிநாசி…

என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிபுட்ட என்பது போல் பார்த்தார் அந்த மனிதர்

நீங்கள் இருக்கீங்கிற தைரியத்துல தான் அவன் ஆட்டமே… அவன் கோவம் குணம் எல்லாமே உங்களை விட அஞ்சி இல்லை பத்து மடங்கு வருது அவனுக்கு… ஒரு அம்மாவா என் பிள்ளைங்க எதிர்காலத்தை நினைச்சு பயப்படுறது தப்பா என ஆதங்கத்தில் ஆரம்பித்து கேள்வியில் நிறுத்தினார்

அவர் பயம் கண்ணீராக உரு பெற்று உருண்டு ஓடியது…

அவிநாசி சற்று நிதானித்தவர் தன் மனைவியை ஆழமாகப் பார்த்து விட்டு…

என் பிள்ளை இன்னைக்கும் என்னைக்கு சரி ஆத்திரத்திலயும் அவசரத்தில் எந்த தப்பும் பண்ண மாட்டான் அவன் கோவத்துல கூட நிச்சயமா ஒரு நியாயம் இருக்கும்… அவனை நான் நம்புறேன்… என அறுதியிட்டு சொன்னவர் ஆனந்த வள்ளியின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்து விட்டு…

இருந்தாலும் நான் புத்தி சொல்றேன்… அவன் எனக்கும் மகன் தான் மறந்திடாத என விரைப்பாக மொழிந்து விட்டு தன் மகனை தேடி சென்றார்…

கரு கருவென கேசம் காற்றில் அலை அலையாக ஆட கிராமத்து கதைக்கென்றே வளர்த்து விட்டவன் போல் எல்லை சாமி கணக்காக நின்றான் ருத்ரன்…

அவன் முகம் கை சட்டை என அனைத்திலும் அப்பியிருந்த ரத்தக் கரை இவன் சண்டியன் தான் என அடித்து சொன்னது… அது மட்டுமா…??

அவனும் தான் கோவத்தில் சிவந்து கிடக்கும் கண்களுடன் அந்த ஊர் காக்கும் சாமியின் ஆவேசத்துக்கு ஈடாக அந்த மூவரையும் போட்டு புரட்டி கொண்டு இருந்தான்…

அப்படி தான் விடாத மச்சான்.. போடு!!

இன்னும் நாலு போடு

பார் …பார் அங்க ஒருத்தன் ஓடுறான் பாரு…

புடி புடி…

அவனை அங்கனையே மிதி…

என ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கும் இவர்கள் தான் அந்த நாலு பேரும் நல்லா இருந்த ஊரும் டைட்டில் பக்காவா பொருந்தும்…

பின்ன இவனுங்க சும்மா இருந்தாலும் இவனுங்க வாய் சும்மா இருக்காது… இவனுங்க செய்யுற வேலை ஊருக்கு புடிக்காது… இவனுங்க ஒன்னா இருந்தா இவனுங்கள பெத்தவங்களுக்கு பிடிக்காது ஆக மொத்தம் இருந்தாலும் அங்க சம்பவம் உறுதி உறுதி உறுதி…

இவனுங்கள கூட வச்சிக்கிட்டு சுத்துறதும் பூனைய மடியில் கட்டிகிட்டு சுத்துறதும் ஒன்னு தான்…

அப்புறம் ஏன் இவனுங்கள கூட வச்சிக்கிட்டு நம்ம ஹீரோ சுத்துறான் பார்க்கிறிங்களா… அது வேற ஒன்னும் இல்லை அவன் போற இடம் எல்லாம் கூடவே வந்து அல்லக்கை வேலை பார்க்கிறதுக்கும்… நம்ம வில்லேஜ் ஹீரோவுக்கு பில்ட்அப் கொடுக்கிறதுக்காகன்னு நீங்கள் நினைச்சா அது… தப்பே இல்லை…

அதுவும் இல்லாம இவனுங்கள தனியா விட்டா தொழில் ரகசியத்தை கத்துக் கிட்டு நாளைக்கே எங்களுக்கும் ஹீரோ சான்ஸ் வேணும்னு வந்து அவன் வேலைக்கே உலை வச்சிடுவாங்களோ பயமாவும் இருக்கலாம் வெல் இதை கமல் மட்டுலேஷன்ல படிச்சா பெட்டெரவும் இருக்காலம்…

க்கும் க்கும் என கணைத்தப்படி அவர்கள் அங்கே வந்தார் அவிநாசி…

டேய் பெரிய சண்டியர் வந்துட்டார்டா… ஷ்ஷு கொஞ்சம் சும்மா இருங்கடா

டேய் ருத்ரா உங்க அப்பா என ருத்ரனை நிறுத்தினான் அறிவு ருத்ரனின் உயிர் தோழன் அவனின் நல்லது கெட்டது அனைத்திலும் அவனுடன் இருக்கும் நண்பன்…

தந்தை என்றதும் அதுவரை மூர்க்கமாக அவர்களை அடித்து கொண்டு இருந்த ருத்ரன் அடிப்பதை நிறுத்தி விட்டு அமைதியாக நின்றான் ஆனால் அவனுள் இன்னும் அந்த கோவம் கனன்று கொண்டே தான் இருந்தது…

ஏன் எதுக்கு இவங்கள போட்டு இப்படி அடிக்கிற என ஒரு வார்த்தை வாயை திறந்து கேட்டார் இல்லை…

உங்க அம்மா நம்ம வீட்லையும் வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு அவளுக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா தம்பிகிட்ட சொல்லி அடித்தடியை கடுப்படுத்துங்கன்னு சொன்னாள் என்று விட்டு ருத்ரனை பார்க்க அவனோ தந்தையை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டு நிற்க.. அவனின் குனிந்த தலை வெறித்து பார்த்து விட்டு

அதுக்கு நான் சொன்னேன் என் புள்ள எதை செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு என்றவரை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான் ருத்ரன்…

அவர் கண்களில் இதுக்கு என்ன பதில் சொல்ல போறே என்பது போல் பார்க்க…

அவன் அடித்து போட்ட மூவரையும் இழுத்து வந்து அவர் முன்னால் நிறுத்தியவன்…

இவன் நம்ம பாப்பாக்கு தினமும் ஃபேஸ்புக் இன்ஸ்டா ல லவ் மெசேஜ் போட்டு இம்சை பண்ணி இருக்கான்… புள்ள பயந்து போய் எனக்கு ஃபோனே வேணாம் என்றுடுச்சு

இதோ இந்த ஆளு நம்ம பாப்பா பத்து நிமிஷம் கிளாஸ்க்கு லேட்டா வந்ததால புள்ளைய வெளில நிக்க வச்சி இருக்கான்… பாவம் புள்ள ரெண்டு மணி நேரம் வெயில்ல நின்னு மயக்கம் போட்ருக்கு எங்கவெளில சொன்னா இவனை கொன்றுவோமோன்னு நம்ம கிட்ட சொல்லாம மறைச்சிடுச்சி பாப்பா… என்றவன்…

இந்தா கடைசியா நிக்கிறானே இந்த பரதேசி !! இவன் செஞ்ச வேலைக்கு? இவனை இங்கயே அறுத்து போட்டு இருக்கனும் என்று ஆத்திரம் பொங்க அடிக்க..

ஐயா சாமி என்னை காப்பாத்துங்க நான் உங்க பொண்ணு முகத்தைக் கூட ஒழுங்கா பார்த்தது இல்லை .. என்னை அநியாயமா கட்டி வச்சி அடிக்கிறாரு…

எதே அநியாயமா கட்டி வச்சி அடிக்கிறேனா இரண்டு எத்து எத்தினேன் செத்து போய்டுவ ராஸ்கல்…

இவ்ளோ பேசுறான் இல்லை பா இவன் என்ன பண்ணான் தெரியுமா…?? தெரியுமா…??

அப்படி என்ன தான்டா செஞ்சான் இவன் என்கிற அவிநாசியின் கேள்வியே அங்கிருந்து அனைவரின் முகத்திலும் பிரதிபலித்தன…

அப்படி என்ன பெரிய தப்பை அவன் செஞ்சு இருப்பான் எனக்கே ஒன்னும் புடிப்படலையே உங்களுக்கு எதாவது தெரியுதா கைஸ் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்க…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top