தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே..5

5

வெளிச்சம் மெல்ல மங்கத் தொடங்கி இரவுக்குள் இன்னொரு நகரம் முளைத்தது… ஒளிரும் விளக்குகளால் அந்த நகரம் ரம்மியமாக மிளிர்ந்தது…

வானையும் மண்ணையும் இணைக்கும் பலமாக உயர்ந்து நின்ற கட்டிடங்களில் ஒன்றான கண்ணாடி கட்டிடத்தில் இருபத்தி ஒன்றாவது மாடியில்…

நாற்புறமும் இருள் சூழ மங்களான ஒளி குவிந்த வெளிச்சத்தில் தனியாக நின்று பில்லியட்ஸ் கேம் விளையாடிக் கொண்டு இருந்தான் தீரன். அவனுக்கு எதிரிகள் என்றாலே பிடிக்காது, அது விளையாட்டாகவே இருந்தாலும் சரி. ஒன் மேன் ஆர்மியாக விளையாடினான்…

அவன் குறி வைத்து ஒவ்வொரு பந்துகளையும் குழிக்குள் தள்ளும்போதும் ஆஆஆ ஊஊஊ என வினோதமான சப்தம் ஒலித்தது…

என்னங்கடா இது சவுண்ட் ஒரு தினுசா இருக்குது, வாங்க டேபிளுக்கு அடியில அப்படி என்னதான் நடக்குதுன்னு போய் பார்ப்போம்…

அட பாவமே! டேபிளுக்கு அடியில் வர்மா அடிபட்டு ரத்தம் வழிய பேச்சு மூச்சு இன்றி கிடக்கிறான். தீரன் அவன் மேலே கதகளி ஆடி இருக்கிறான், அவன் வலியில்கிடந்து அனத்திக் கொண்டு இருந்த சப்தம் தான் அது.

கடைசி பாலை பாக்கெட் போட்டு விட்டு பில்லியர்டு ஸ்டிக்கை எடுத்து அதன் கூரான பகுதியை வர்மாவின் நெஞ்சில் கால் இன்ச் இறக்கியபடி அவன் அருகில் குத்த வைத்து உட்கார்ந்த தீரன்.

இது எதுக்கு தெரியுமா…?? யாரும் நாளைக்கு இந்த தீரன் முதுகுல குத்திட்டான்னு சொல்லிட கூடாது இல்ல…

என்ன வர்மா நான் சொல்றது சரிதானே…

வேணாம் தீரன் என்னை விட்ரு… நான் உன்னை ஏமாத்தணும்னு நினைக்கல க்ஹு என வாயில் ரத்தம் வழிய கெஞ்சினான்…

ஏன், ராம் இவனுக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது… என வர்மா சொல்வதை நம்பவில்லை என்பதை அவன் பி.ஏ.விடம் சாடையாகக் கூறியவன்.

என் நெற்றியில் என்ன கேனையன் என்று எழுதி இருக்கோ , ஒருவேளை போட்ட ஆழம் பத்தலை போல, இன்னும் நல்லா விட்டு இதயத்துல துளை போட்டா தான் சரியா வரும் போல… என்றவன் வர்மாவின் இதயத்தில் ஈட்டியென கூறிய அவ்வாயுதத்தை இறக்கி விட…

ஆஆஆஆ தீரன் சத்தியமா சொல்றேன் நீ சொன்ன மாதிரியே நான் அந்த டீலிங்கில் இருந்து மொத்தமாக விலகிட்டேன்… ஆனால்…??

ஆஹான் அப்புறம் என்ன சொன்னாலும் தீரன் நம்ப தயாராக இல்லை…

இடையில் பெரிய கை புகுந்து அந்த காண்ட்ராக்ட் அவங்க எடுத்துப்பாங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல என்னை நம்பு தீரா என் பொண்டாட்டி புள்ளைங்க மேல சத்தியமா நான் உனக்கு துரோகம் பண்ணல…என வர்மா இறைஞ்சினான்…

நாட் பேட் நான் எதிர்பார்த்ததை விட பொண்டாட்டி பிள்ளைங்க மேல நிறைய பாசம் வச்சி இருக்க என கீழே இருந்த வர்மாவின் நெஞ்சில் இருந்த ஸ்டிக்கை எடுத்து விட்டு அவன் எழ தன் கையைக் கொடுத்தவன்… ஆனால் அது தான் உன்னோட மெயின் வீக்னஸ் என்றான் ஒருவித நக்கலோடு கூறினான்…

தீரன் நீட்டிய கரத்தைப் பற்றுக் கோலாக பிடித்து மேலே எழுந்த வர்மா தன் வாயில் வழிந்த ரத்தத்தைத் துப்பி விட்டு தீரனை நேராக பார்த்து சொன்னான்…

நீ ஒன்னு புரிஞ்சிக்கல, தீரா அன்பும் பாசமும் மனுஷனுடைய வீக்னெஸ் மட்டும் இல்ல, அதுலதான் அவனோட உண்மையான பலமே அடங்கி இருக்கு… என்ன பார்க்கிற இவ்வளவு ஆன பிறகும் என் ஃபேமிலி மேல நான் வச்ச பாசம் தான் என்னை மீண்டும் எழுந்து நிக்க வச்சது. நிச்சயமா நான் இதுக்காக ஒருநாள் உனக்கு பதிலடி கொடுப்பேன்… என அப்போதும் தைரியமாக நிமிர்ந்து நின்ற வர்மாவை நோக்கி தீரனின் கரங்கள் உயர்ந்தது…

ஆனால் அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தி நின்ற வர்மாவை அடிப்பதற்காக அல்ல மாறாக கை தட்டல் ஓசை ஒலித்தது… வர்மாவின் பேச்சைக் கேட்டு கைகளைத் தட்டினான் தீரன்…

சபாஷ் இவ்வளவு அடி வாங்கினதுக்கு அப்புறமும் வசனம் நல்லாவே பேசுற உன் தைரியம் பிடிச்சிருக்கு வர்மா… ஆனால் நீ ஒன்னை மறந்துட்டே… இந்த தீரனுக்கு இதயமே கிடையாது… அது இருந்தா தானே அந்த ஈவு இரக்கம் வரும், அன்பு வரும், பாசம் வரும். நான் தான் அதை எப்போவோ தூக்கி எரிஞ்சிட்டேனே… இந்த தீரனுக்கு எதிரா அன்பு பாசம்னு வந்தா அந்த அன்பையே ஆயுதமாக்கி பாசத்தையே படையலாக்கத் தயங்க மாட்டேன்… அது என் சொந்தக் குடும்பமா இருந்தாலும் சரி தூக்கி எறிய நான் தயங்க மாட்டேன்… என தகுந்த ஏற்ற இறக்கத்துடன் கூறிய தீரனை வர்மாவின் கண்கள் வெறித்துப் பார்த்தன…

நீ இதயமே இல்லாதவன் தான் தீரா ஆனால் ஒருநாள் உன்னை அன்பு அடிமையாக்கும் பாசம் சங்கிலி போடும் உன் கொள்கைகள் உனக்கு எதிராகவே மாறும் அப்போ உன் இதயமே சுக்குநூறா உடையும்  அன்னைக்கு தெரியும் என்னோட வலி…என சபித்து விட்டு சென்ற வர்மாவின் வரிகளால் தீரனின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது…

லூசர்… என்னை பலத்தால் வெல்ல முடியலனு சாபம் கொடுத்துட்டு போறேன் stupid பெல்லொவ்… என்றப்படி ராம் என அழைக்க அடுத்து ஐந்து வினாடிகளுக்கு அந்த இடம் ரத்த கரையின்றி சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது…

அலுவலகத்தில் தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன் ராமை பார்க்க…

அர்த்தம் புரிந்தவன்…தீரனிடம் ஒரு கோப்பை நீட்டினான்…

பாஸ் வர்மா சொன்ன மாதிரி அந்த கான்ட்ராக்டுக்குப் பின்னாடி பெரிய கை வேலை இருக்கு… இந்த காண்ட்ராக்ட் மட்டுமல்ல, இதுக்கு முன்னாடி நம்ம கைவிட்டு நழுவிய காண்ட்ராக்டுக்குப் பின்னாடியும் இதே பெரிய கைதான் இருக்கு…

யார் ராம்… இங்கு நமக்கே தெரியாத பெரிய கையா…

பாஸ் அது யாரோ பிக் பி யாம்… அரசு குடும்பத்துக்கே ரொம்ப நெருக்கமானவராம்… அவர் பேரை சொன்னாலே பிசினஸ்மேன் எல்லாம் நடுங்கி போறாங்களாம்… அவரோட பிசினஸ் இல்லாத இடமே இல்லை, அவருக்கு நிறைய பெரிய இடத்து சப்போர்ட் இருக்கு பாஸ்…

தீரன் மெதுவாக அந்த பெயரை மீண்டும் உச்சரித்தான்… “பிக் பி”

அவன் விரல்கள் மேசை மேல் தாளம் தட்டின…

நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் என் லைன்ல குறுக்க வந்திருக்கக் கூடாது பிக் பி… ராம் அவன் டீடைல்ஸ்…

கிடைக்கல பாஸ், அவனைப் பற்றி ஒரு சின்ன துணுக்கு கூட கிடைக்காத படி ஏற்பாடு பண்ணி இருக்கான். நான் எவ்வளவோ நோண்டி பார்த்தும் அவன் பெயர் பிக் பி என்கிறது தவிர வேற எதுவுமே கிடைக்கல பாஸ்…

ஓஓ… என்றபடி தன் தாடையை சொறிந்தவன் கண்கள் பளிச்சிட…

ராம்…

பாஸ்…

நான் சொல்ற மாதிரி மட்டும் செய், அந்த பிக் பியே நம்மள தேடி தன்னாலே ஓடி வருவான்… என தந்திரமாக புன்னகைத்தான் தீரன்…

ஆனால் அவன் அறியாதது வல்லவனுக்கு வல்லவன் மட்டுமல்ல தந்திரனுக்கு மேல் ஒரு இந்திரனும் உண்டு என்பது…

சில நாட்கள் கழித்து…

“பாஸ் டன்” என ராம் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு வெற்றிக் களிப்பில் ஆனந்தக் கடலில் திளைத்தான் அனுதீரன்…

அதுவும் சில நொடிகள் மட்டுமே நிலைத்தது… மறுநொடியே ராம் செல்லிற்கு வந்த அழைப்பை ஏற்றவன் முகம் முற்றிலும் மாறியது… தீரனின் புருவம் சுருங்கியது…

தந்திரமாக எதிரியைத் தோற்கடித்து விட்ட மமதையில் மூழ்கிக் கிடந்தவனின் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் வந்து விழுந்தது அந்த செய்தி…

தீரன் பிக் பி எடுத்த அந்த காண்ட்ராக்ட் மூலப் பொருட்கள் இறக்குமதியைத் தடுக்க முயன்றான் அதில் வெற்றியும் கண்டு விட்டான். ஆனால், அதில் அவன் எதிர்பார்க்காதது… தீரன் இதுவரை செய்து வந்த சில முக்கிய ப்ராஜெக்ட் ஒப்பந்தங்கள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டது… அதிலும் சில ப்ராஜெக்ட்கள் எல்லாம் முடியும் தருவாயில் இருந்தது குறிப்பிடத்தக்கது… இதனால் தீரன் கம்பெனி முதலீடு சரிவை சந்தித்தது…

பாஸ் நல்லவேளை நாம் ப்ராஜெக்ட் போட்ட இன்சூரன்ஸ் மட்டும் இல்லாவிட்டால் இந்நேரம் நம்ம ஃபண்டு எல்லாம் கரைந்து பெரிய லாஸ் ஆகி இருக்கும்…

ராம் சொன்னதை கேட்ட தீரனின் முகம் இருண்டது… சோ நான் அவன் தலையில் கை வைக்க நினைத்தேன் அவன் என் அடி மடியிலே ஆப்பு வைத்துவிட்டான் என்றவாறே மேஜையை விட்டு எழுந்தவன் வெளியே தெரிந்த பரந்த உலகைப் பார்த்தான்…

இன்டெரெஸ்ட்டிங் முதல் முறையா எனக்கு சமமான ஒரு எதிரியுடன் போட்டி போடப் போறேன் ம்ம்ம் இதுவும் நல்லா தான் இருக்கு எத்தனை நாளைக்கு தான் சிங்கிள்ஸ் ஆடுவது அப்போனென்ட் வந்தா தானே ஆட்டம் சூடு பிடிக்கும்…

இந்த முறை நான் காயை நகர்த்தப் போவதில்லை, அதற்கு பதிலாக ஆட்டத்தையே மாற்றப் போகிறேன். அதில் தோற்றாலும் வெற்றி எனக்கு தான், ஜெயிச்சாலும் வெற்றி எனக்கு தான் என்றவனை குழம்பி போய் பார்த்தான் ராம். “இது என்ன விளையாட்டு?”…

தீரன் நினைத்தது விளையாட்டு, காலம் நடத்தும் கண்ணாமூச்சியா அல்லது விதி ஆடப் போகும் சதுரங்க ஆட்டமா…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top