காதல் செய்யாதே இராவணா-4

காதல் செய்யாதே -4

நட்டநடு சாலையில் தன்னை கட்டிக்கொண்டு இருந்தவள் மீது இருந்து எழுந்த அந்த நறுமணம் ஆணவனை கிறங்கச் செய்யப் போதுமானதாக இருந்தது…

தன்னிலை மறந்து அவளை அணைக்கப் போனவன் சுதாரித்து..

“ஏடி தள்ளி நில்லு, அது என்ன ஒரு வயசுப் பிள்ளை, இப்படி பொதுவெளியில வந்து கட்டிப் பிடிக்கிறது? அதுவும் சுத்தி ஆளுங்க இருக்கிறப்ப…!!” என அவளைத் தள்ளிவிட ரப்பர் பந்தாக மீண்டும் வந்து கட்டிக்கொண்டாள்..

“ப்ச், அடி கூறுகெட்டவளே ராமசாமி அண்ணா என்ன நினைப்பாரு என்னைப் பத்தி…? எட்டி நில்லுடினா..!!” என அவளை விலக்கி வைக்க, மீண்டும் மீண்டும் மேலே விழப் போனவளின் இரு பக்க தோள்களைப் பற்றி தடுத்து நிறுத்தினான்..

“என்ன மச்சான்…? நீயே அங்க பாரு..!!” என டிரைவர் சீட்டைக் காட்ட, அங்கே யாருமே இல்லை..

“எப்போடி…?”

“அதெல்லாம் நான் மிளகாய் வத்தல் பத்தி பேசும்போதே கிளம்பி போயிட்டார். இந்நேரம் காயவச்ச மிளகாயைக்கூட எடுத்துட்டு இருப்பார்..!!”

“ஏன்டி இப்படி சண்டித்தனம் பண்ணிட்டுத் திரியுற? உன்னால என் பேருதான்டி கெட்டுப் போகுது. ஊர்ல ஒருத்தர விடறதில்ல, எல்லாரையும் உரசி இழுத்துட்டு அலையுறவா..!!”

“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா மச்சான்…? நான் சமைஞ்சு வருஷம் ஆறு ஏழு ஆகுது. ஏன் வயசுப் பிள்ளைங்க எல்லாம் கையில ஒன்னு இடுப்பில் ஒன்னு சுத்துறாளுங்க…!! நீ என்னடானா என்னைக் கண்டுக்க மாட்டேங்குற… அப்புறம் அந்த கிழவிங்க ஒன்னும் அப்பிராணிங்க இல்ல… நான் இங்க ஒருத்தி உனக்காக இருக்கேன்னு தெரிஞ்சும் என் மாமன், அதான் உங்க ஐய்யன் கிட்ட அவளுக பேத்திகளை உனக்குப் பேசி முடிக்கப் பாத்தாங்க. அதான் நம்ம அரவிந்த்சாமி வச்சி (அவ வளக்குற நாய்..) என் வழியில சொல்லிப் புரிய வச்சேன்..!!” என தெனாவட்டாக சொல்ல

“நீயெல்லாம் எப்படிடி எங்க அத்தைக்கு வந்து பொறந்த…?!!”

“ஏன் எனக்கு என்ன குறைச்சல் மச்சான்…?” என அவள் உடலை வளைத்து நெளிந்து காட்ட..

“நான் எதைச் சொன்னா நீ என்னடி பண்ற… சீ.. போடி கழுதை..!!” அவளைத் தள்ளி விட்டு சென்றுவிட்டான்..

“போ மச்சான் போ..!! என்னைக்காவது என்கிட்ட மாட்டுவ, அப்போ அந்த முறுக்குற மீசைய அப்படியே….!! ஐயோ. ச்சீ என்ன இப்படி பகல் கனவு காண வச்சிட்டு போய்ட்டாரே.. ஹம்..!!”

சென்னை..

உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு இருட்டு அறையில் ஒருவன் அலறும் சத்தம். சுத்தி நின்று அவனை அடித்துக் கொண்டு இருந்தனர் காவலர்கள்..(இருட்டு அறைனா யாருக்கெல்லாம் அந்த படம் நியாபகம் வருது.. ஹிஹி நான் விசாரணை படம் தான்ப்பா சொன்னேன்.. மீ கிரீன் பிள்ளை..)

“ஆஆஆஆ.. விட்ருங்க சார்..ஹா ஆஆஆஆ.. நான் இல்ல, நான் பண்ணல சார், நான் பண்ணல சார்..!!” என வாயில் ரத்தம் வழிய கெஞ்சிக் கொண்டு இருந்தான்..

அப்போது கதவு திறக்கப்பட கண்கள் கூசும் வெளிச்சத்தில் ஆஜானுபாகுவாக ஒரு உருவம் அவன் அருகில் இருப்பவர்களைச் சிறிதாக்கிக் கொண்டு உள்ளே வந்தான். “ராவணன்” சென்னை காவல் உதவி ஆணையர்..

“என்ன ஏட்டு ஒத்துக்கிட்டானா…?!!”

“எங்க சார்… இவ்ளோ நேரம் இவனை அடிச்சு லத்தி உடைஞ்சதுதான் மிச்சம்..!!”

“அப்படியா…?!!” என நெருங்கி வந்து நாற்காலியில் கட்டி வைத்து இருந்தவனின் முடியை கொத்தாகப் பிடித்து தூக்கியவன்..

குற்றுயிரும் குறையுயிருமாக இருந்தவனைக் காண்பித்து “இப்படியா அடிப்பீங்க…?” என்றவன் அவன் வாயில் இருந்து வழிந்த ரத்தத்தை எடுத்தவன்..

“அச்சோ.. பாருங்கய்யா எவ்ளோ ரத்தம் வருதுன்னு…?” என்றவன் திரும்பி..

“ஏன்பா இப்படி போட்டு அடிக்கிறாங்களே பேசாம நீதான் ஆக்சிடென்ட் பண்ணேன்னு ஒத்துக்கோயேன் டா. உன்னை விட்ருவாங்க.. இல்லன்னு வையேன் இவனுங்க எல்லாம் மோசமானவங்க உன்னை அடிச்சே கொன்னுட்டு தற்கொலைன்னு கேஸ் முடிச்சுடுவாங்க.. சொல்லு ஒத்துக்கிறியா…?!!”

“ஹா.. ஆஆஆஆ..!!” என ஈனமாக முனங்கியவன் வாய் அருகே காதை கொண்டு வைத்தவன்..

“நான் பண்ணல சார்ர்ர்…!!” என்றவனை விட்டு நான்கு அடி எட்டிச் சென்றவன்..

கையில் இருந்த வெள்ளி காப்பை மேல் ஏற்றியவன் வேகமாக வந்து நாற்காலியில் இருந்தவனை ஓங்கி மிதித்தான்..

நாற்காலியோடு பின் பக்கமாக விழுந்தவனை விடாது அவன் நெஞ்சில் ஏறி காலை வைத்து மிதித்தபடி நின்றான்..

அவன் மிதித்தது ஆயிரம் காட்டு எருமை வந்து மோதியது போலிருக்க விழுந்தவன் வாயில் இருந்து உமிழ்நீரோடு குருதி வெளியேற இதற்கு மேல் தாங்காது என உணர்ந்தவன்..(காட்டு எருமையா..!!! என் ஹீரோ தான் அதுக்கு உண்மைய சொல்லாம இருக்க முடியுமா..)

“ஒத்துகிறேன் சார்.. விட்ருங்க… வி..ங்க..!!” என மூச்சுத் திணறியபடி ஒருவாறு சொல்லி முடித்ததும் தான் தன் காலை அவன் நெஞ்சில் இருந்து அகற்றினான்..

“யோவ் இங்க என்ன பலான படமா காட்டுறாங்க இப்படி ஆஆஆஆனு வாயைத் திறந்து பார்த்துட்டு இருக்கீங்க…? போங்கயா போய் அவன் மயங்குறதுக்குள்ள ஸ்டேட்மென்ட் வாங்குங்க..!!” என்றவன் வெளியே சென்றுவிட

அவன் சென்றதும் தலைமை காவலரிடம் புதிதாக சேர்ந்த காவலர்..

“என்ன சார் இந்த அடி அடிக்கிறாரு…? ஆக்சிடென்ட் பண்ணது அந்த மந்திரி பையன் தான சார், அப்புறம் இந்த அப்பாவிய போட்டு இவ்ளோ கொடுமை பண்றாரு…?!!”

“யோவ் சத்தமா கேட்டுத் தொலையாதயா…? நீ வேலைக்கு புதுசுல அவரைப் பத்தி உனக்குத் தெரியல, அவர் மேலிடம் அதான்யா அந்த மந்திரி மகன் கிட்ட வாங்கி இருப்பாரு…!! அதான் அவனைத் தப்பிக்க விட்டுட்டு இவனை அப்ரூவராக வச்சி மாட்டி விட்டுட்டாரு..!!”

“சார்.. இது பாவம் இல்லையா…?!!”

“கத்தித் தொலையாதயா அந்த ஆள் காதுல விழுந்துச்சு அவ்ளோதான். ஏற்கனவே ஒரு கான்ஸ்டேபிள் இவன் மேல லஞ்ச புகார் குடுத்தான்னு என்கவுண்டர்ல ரௌடிங்க கூட போட்டுத் தள்ளிட்டு குறி தப்பிடுச்சின்னு சொல்லி வெளியே வந்துட்டாரு….!!” என்றதும் மற்றவர் மிடறு விழுங்கினார்..

“அது மட்டும் இல்லையா அந்த கேஸ் பத்தி எழுதின பத்திரிகைகாரனைக் கூட லாரி வச்சி மேல ஏத்திட்டு ஆக்சிடென்ட்னு கேஸ மாத்திட்டாரு..!!”

“என்ன சார் சொல்றீங்க…?!!”

“ஆமாம்யா அந்த ஆள் பண்ணாத பாவங்களே இல்ல… இவ்ளோ ஏன் இந்த ஸ்டேஷன்ல உனக்கு முன்னாடி இருந்த கான்ஸ்டேபிள் வேல பார்த்த தயாநிதி அவன் பொண்ணு மேல ஆசைப்பட்டு, அவன் குடுக்கலைன்னு அந்த குடும்பத்தையே கொன்னுட்டு அந்த பொண்ண கடத்தி வச்சி இருக்கறது இவர் தான்னு பேசிக்கிறாங்க..!!”

“சார்…? அவ்ளோ பெரிய அயோக்கியனா சார்…?!!”

“ஆமாம்யா பெயருக்கு ஏத்த மாதிரியே அரக்கன்யா… அவர எதிர்க்குறவன அழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான்… பார்த்துயா…. நான் சொன்னதை மனசுல வச்சி நடந்துக்கோ..!!” என இருவரும் அடிப்பட்டவனிடம் இருந்து வாக்குமூலம் பெற்று அங்கிருந்து சென்றனர்..

இருக்கையில் சென்று அமர்ந்த ராவணன் மேசையில் இருந்த புகைப்படத்தை எடுத்து..

“எங்கடி சிட்டு போன…?!!”

“என்கிட்ட இருந்து தப்பிச்சி போன உன்னை என்ன பண்ணலாம்…?” என்றவன்..

சிகரெட்டை பற்றவைத்து புகையை இழுத்து விட்டவாரே புகைப்படத்தில் இருந்த மகிழினியை சுட்டு “பறந்து போன உன் ரெக்கைய வெட்டி எடுக்கல நான் ராவணன் இல்லடி..!!” என்றவன் அந்த புகைப்படத்தில் இருந்த மற்றொரு உருவத்தினை நெற்றியில் கைவைத்து யோசித்து கொண்டு இருந்தவன்..(ஸ்மோக்கிங் இஸ் இன்ஜுரியஸ் டு ஹெல்த்.. ஹிஹி உங்க மேல எனக்கும் அக்கறை இருக்கு மக்கா )

சட்டென்று மூளையில் மின்னல் வெட்ட உடனே தொலைபேசி எடுத்தவன் அவனுக்கு தேவையான தகவலை பெற்றபின் அவன் கண்களில் வேட்டையாடும் வேங்கையின் கண்களைப் போல மின்னியது..

ஒரு முடிவோடு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவனை இரு பெண்கள் வந்து அவன் காலைப் பற்றிக் கொண்டு கதறினர்..

“ஐயா சாமி என் பையன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்யா…?!!”

“அவன் ஒன்னும் தெரியாத பிள்ளை அவன உட்ருங்க சார்…!” என கதறி அழுதனர்..

கதறியவர்களைப் பொருட்படுத்தாது காலை உதறித் தள்ளியவன்..

“இங்க உன் பையன் தான் ஆக்சிடென்ட் பண்ணான்னு ஒத்துக்கிட்டான். அதனால இங்க இருந்து கத்திட்டு இல்லாம இடத்தை காலி பண்ணுங்க..!!”

“ஐயோ ஐயோ என் புள்ளை எந்த தப்பும் பண்ணல நீங்க தான் அவன அடிச்சி அப்படி சொல்ல வச்சி இருப்பீங்க…!” என கத்தினார்..

காதைக் குடைந்தவாரே “ஸ்ஸ்..ஆமா நான் அடிச்சு தான் ஒத்துக்க வச்சேன்.. இப்போ என்ன அதுக்கு…?!!” என்றவனின்..

சட்டையைப் பாய்ந்து பிடித்தவர்..

“அடப்பாவி என் புள்ளைய மேல அந்நியாயமா இப்படி பழி தூக்கிப் போட்டு அவன் வாழ்க்கையே கெடுத்துட்டியேயா…?!! உன்ன சும்மா விடமாட்டேன். நீ நாசமா போவ, உன் குடும்பம் விளங்காது..!!” என சபித்தவரின் கழுத்தை ஒற்றை கையால் பிடித்து தூக்க, மற்றவர்கள் அதிர்ந்து பார்த்தனர்..

கையில் பிடித்து இருந்தவரை மேலே தூக்க மூச்சுக்கு சிரமப்பட்டு அவன் கைகளில் அடிக்க, அதெல்லாம் அவனுக்கு வலிக்குமா என்ன…? கண்கள் சொருக இருந்தவரை பார்த்து பதறி ஓடிவந்த காவலர்கள்

“சார்.. வேணாம் சார் விட்ருங்க.. செத்துட போறாங்க சார்… இப்படி வெளியில வச்சி பண்ண நீங்கதான் சார் மாட்டுவீங்க விட்ருங்க சார்…!!” என கெஞ்சிய பின் தான் விட்டான்.

“யோவ் யாருய்யா இவங்கள உள்ள விட்டது…? இவங்கள எல்லாம் வெளியே தள்ளு..!!” என்றவன் அங்கிருந்து சென்று மற்ற வேலைகளை முடித்த பின் தன் இல்லம் சென்றவன்..

மகிழினி அடைப்பட்டு இருந்த அறைக்கு கையில் பாட்டிலுடன் சென்றவன் “சிட்டு இந்த ரூம் முழுக்க உன் வாசம் நிறைஞ்சு இருக்குடி..!!”

“ஏன்டி சிட்டு மாமன விட்டுட்டு போன…?” என்றவன் கையில் இருந்த சரக்கை மொத்தமாக காலி செய்தவன் கண்கள் சிவக்க..

“நீ எங்க ஓடினாலும் உன்ன விரட்டி வருவேண்டி…?” என்றவாறு மயங்கிப் போனான்..

மறுநாள் காலை பணிக்கு சென்றவனிடம்..

“சார் உங்களை திருநெல்வேலிக்கு காவல் கண்காணிப்பாளரா பதவி உயர்வு கொடுத்து இருக்காங்க சார்…!!” என்றதும் புருவ மத்தியில் முடிச்சிட்டு யோசித்தவன்..

அவன் செய்ய வேண்டிய சில முக்கியமான வேலைகளை முடித்து கொண்டு புறப்பட்டு விட்டான் திருநெல்வேலிக்கு..

தன்னை வேட்டையாட ஒருவன் வருவதை அறியாமல் சுதந்திர காற்றை சுவாசித்த படி வயல் வரப்பில் கவலை இன்றி சுற்றி திரிந்தாள் மகிழினி..

“அப்போ இராவணனுக்கு மகிழினி சிங்கம்பட்டியில் இருக்கறது தெரியுமா கேக்குறீங்களா…? தெரியாம இருக்கலாம், தெரிஞ்சும் இருக்கலாம் இல்ல தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கலாம்.. ஹிஹி பிக்பாஸ் எபெக்ட்..!!”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top