-4
அத்துமீறி உள்ளே நுழைந்த துரியன்…கனலினியை கட்டாயமாக தீண்ட அவன் வன்மையில் திண்டாடியவள்….
அவன் அதிரடியில் ஆஆஆஆஆ நோஊஊஊஒ என கத்தி கொண்டே எழும்பி கண்ணை திறந்தவள் திகைத்தாள் ஏனெனில் அவள் கண்டது அத்தனையும் என்று கனா என்று தெரியும் ஆனால்…??
அவளுக்கு வரும் வழக்கமான கனவில் அவளை கெடுத்த அந்த கயவன் முகம் தெரியாமல் இருக்கும் ஆனால் இன்று கண்ட கனவிலோ…. சந்தித்த புதியவனின் முகம் தெரிய உறைந்து போனாள்….
ஏதே…எப்பவும் வர கனவா…???
ஆம்… துரியனுக்கு வருவது போன்றே கனலினிக்கும் அந்த துர் சொப்பனம் வரும் அது வெறும் கனவோடு நின்று இருந்தால் நன்றாக இருக்கும் கனலினிக்கு பல நேரங்களில் தோன்றமல் இல்லை…
ஏனெனில் அது கனவே அல்ல… நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கனடாவில்… நடத்த தொழிலதிபர்கள் மாநாட்டில்…கலந்து கொண்ட கனலினிக்கு கொடுக்க பட்ட மதுவில் வீரியம் மிக்க போதையைத் கலந்து கொடுத்து கனலினியை நாசம் பண்ண காத்திருந்த கயவர்களிடம் இருந்து தப்பித்து வந்தவள்… அன்று அவள் போதாத நேரமோ என்னமோ…. அந்த அறையில் ஏற்கனவே…. போதையில் கிடந்த துரியனிடம்…சிக்கி கொண்டாள்…
அவள் கொண்ட போதை அவளை செயலிழக்க வைக்க… அவள் பெண்மையை களவாடி விட்டான் துரியன்…ஆனால் இருவரும் நல்ல போதையில் இருந்ததால்… இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளாமல் போய்விட…
காலையில் கண் விழித்த கனலினிக்கு அவளுக்கு நிலைமை புரிந்ததில் … ஹோட்டல் நிர்வாகத்திடமும் போலீஸ்லும் புகார் தெரிவிக்க பட… அவர்கள் தேடி பார்த்ததில்… “வந்தவனை அடையாளம் காண முடியாமல் போய் விட…. !!”அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை…
ஆனால் அன்றைய இரவின் தாக்கம் கனலினியின் வாழ்க்கையில்….. பெரும் விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது…
ஆம் கனலினி கர்ப்பம் தரித்து இருந்தாள்… முதலில் இதைப் பற்றி அறிந்த அவளின் பெற்றோர் மற்றும் உற்றோரும்… அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்… பின் அதை அழித்து விட்டு… அவர்கள் குடும்பம் நண்பர்களான விஹானின் அண்ணனும் ஆன …. ரித்விக்கை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்த….
இயல்பிலே இரக்க குணம் கொண்டவளான கனலினிக்கு அந்த குழந்தையை சுமக்க முடிவு செய்து…. அனைவரின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்து கொண்டாள்…இருந்தாலும் தளர வில்லை….
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக் கொள்வது இங்கு எப்படி… ஏற்புடைய செயலாக கருதப்படவில்லையோ அதே போல் தான் மேற்கத்திய நாடுகளிலும்… ஒரு பெண் பாய் பிரண்டோ அல்லது கணவனோ இல்லாமல் குழந்தையை சுமப்பதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை….
யாரும் ஆதரிக்காத போதும்… அவளுக்கு துணையாக அவள் பள்ளி நண்பனான விஹான் துணையாக இருக்க சிப்பியில் இருந்து வெண் முத்தாக பெண் பிள்ளையை ஈன்றெடுத்தாள்….
பிள்ளை பிறந்தவுடன் அவள் அழகில் தங்கள் பெண்ணை கண்டவர்கள் எல்லாவற்றையும் மறந்து கனலினியை ஏற்று கொண்டனர்..
அதன்பின் தொழிலும் அவள் குழந்தையும் மட்டுமே என இருந்த அவள் உலகத்தில் மீண்டும் ரித்விக்கை இணைக்கு வேண்டும் என தொடர்ந்து…. அழுத்தம் கொடுத்து வர…
முதலில் அதில் தப்பிக்கும் மார்க்கமாக சில காலம் அவகாசம் கேட்டு பெற்றவள்… முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த சமயம்… ரித்விக் வந்து அவளை சிறு வயது முதலே காதலிபதாகவும் அவளுக்கு சிறந்த துணையாகவும்…அவள் குழந்தைக்கு ஒரு சிறந்த தந்தையாகவும் இருக்க விரும்புவதாக கூறி கனலினிக்கு தொழிலை கவனிப்பதிலும் குழந்தையை பராமரிப்பது என எல்லாவற்றிலும் அவளுக்கு உறுதுணையாக இருப்பது போல் காட்டிக் கொள்ள…
மறுப்பதற்கு வேறு ஏதும் காரணம் இல்லாததாலும்… ரித்விக்கை ஏற்று கொள்ள சம்மதம் தெரிவித்த போதிலும்…அவள் மனது அமைதி இல்லாமல் தவித்த சமயம் தான் விஹான்… ஒரு மாறுதலுக்காக அவளை தன்னோடு இந்தியாவிற்கு வற்புறுத்தி அழைத்து வர அதுவும் ஒரு காரணம்…
********
தூக்கம் தெளிந்தாலும் ஒருமுறை அறை முழுவதும் தேடிப் பார்த்தவள் துரியன் அங்கு இல்லாததைக் கண்ட பின்னே தான் நிம்மதி பெருமூச்சு கொண்டாள்… உட்கார்ந்து யோசிக்கலானாள்…. ஏன் அவன் வர வேண்டும்..??
குளித்து முடித்து வந்தவள் உடல் அசதியில் நாற்காலியில் அமர்ந்தவுடன் உறங்கி விட்டால்… அவனை நினைத்து கொண்டே தூங்கியாதல் வந்த கனவாக இருக்கும் என எண்ணி கொண்டவள்…
“எஸ்…. தங்க் காட்…!!”என பெருமூச்சு விட…
அவள் அறைக் கதவு தட்டும் சத்தம் திடுக்கிட்டாள்…
ஏனெனில் இது போல் தானே அவள் கனவு கண்டால்..
கதவருகே சென்று கதவைத் திறக்காமல் உள்ளே இருந்தபடி “யாரு..??” என ஜாக்கிரதையாக கேட்டு வைக்க…( அலார்டா இருக்காளாம்..)
“ஹே ஹாட்டீ மீ விஹான் பேபி என்ன பண்ற இவ்ளோ நேரம் கதவை திற…!!” என்ற சத்தத்தில் நிம்மதி கொண்டவள் கதவை திறக்க…
“அம்மாஆஆஆ …!”என ஓடி வந்து கட்டி கொண்டது கனலினியின் வாழ்வின் ஆதாரமான சின்ன சிட்டு… பவள மொட்டு…. அவினி…
“எஸ் ஹனிமா…. மம்மியா விட்டுட்டு எங்கடா போனீங்க…!!” என தூக்கி கொஞ்ச….
“மம்மி.. நானும் விஹான் அங்கிளும் ஒரு ஏஞ்சல் ஆன்ட்டிய பார்க்க போய் இருந்தோமே…அவங்க எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்தாங்களே சாப்பிட்டுட்டு வந்தோமே…!!” என குதூகலம் பொங்க சொன்ன குழந்தையை முத்தம் இட்டவள்..….
“அப்படியா பேபி ஏஞ்சல் ஆன்ட்டிய பார்த்தீங்களா சரிடா உள்ள போய் விளையாடுங்க…மம்மி அங்கிள் கிட்ட பேசிட்டு வரேன்..!!” என இறக்கி விட்டு விஹானை பார்த்து முறைக்க
“ஹிஹி ஹாட்டீ அது..!” என வழிந்து வைக்க…
“டேய் லூசு அதன் நாளைக்கு அவங்க குடும்பத்தை பார்த்து பேச போறோம்ல அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்…!!” என விஹானிடம் சண்டைக்கு ரெடி ஆக…
“ஹே இல்லை ஹாட்டீ… அவளுக்கு தான் என்ன உடனே பார்க்கணும் போல இருந்துச்சாம்….. காதலி ஆசையை நிறைவேற்றுவது காதலன் கடமை அன்றோ அதான் உடனே போய்ட்டேன்….!!” ( பிராடுகார பையன் என்னமா பொய் சொல்றான்…)
“இதை நான் நம்புவேன் நீ நினைக்குற….???” என ஏளனமாக கேட்க…
“சரி முறைக்காத விடு… அவளை பார்க்க தான இவ்ளோ தூரம் வந்தது….. நாளைக்கு வரைக்கும் காத்து இருக்கும் பொறுமை இல்லை அதான்… சும்மா ஜஸ்ட் பார்த்துட்டு தான் வந்தேன் நம்புமா… நான்லாம் சமத்து பையன்… கல்யாணம் பண்ணி தான் கிஸ்க்கே அல்லோவ் பண்ணுவேன் இருக்கேன்…அப்படி பட்ட என்ன இப்படி குறுகுறுன்னு பார்க்காத அப்புறம் ஏதாவது உளறி வைக்க போறேன்…..!!” என உளறி வைத்தவன்…
” நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க நான் ரூமுக்கு போறேன் எதனா வேணும் எனக்கு கால் பண்ணு சரியா… !!”என அவளிடமிருந்து தப்பித்தால் போதும் என ஓடி சென்றவனை பற்றி தெரியாதா என்ன…??
பார்ப்பதற்கு விளையாட்டு தனமாக இருந்தாலும்… எத்தனை தீவரமாக காதலிக்கிறான் என்பதை உடன் இருந்து அறிந்து கொண்டவள் ஆயிற்றே..தன் நண்பனின் உண்மை காதலை சேர்த்து வைக்கவே…. கடல் கடந்து இவ்வளவு தூரம் அவனுடன் தனியாக வந்தது மற்றொரு காரணம் என்றால் மிகையல்ல…
நாளைக்கு விடியல் யாருக்கு எப்படியோ ஆனால் அவினிக்கு… அவள் வாழ்நாள் ஏக்கம் தீர போகும் நாள்…என்பது மட்டும் உண்மை….
அதிரடியான கனவுகள் ஆரம்பம்….


