கனா கண்டேனடி சகியே -5

காதலை  இன்டர்நெட்க்கு முன்  இன்டர்நெட் பின்… என இரண்டு வகையாக பிரிக்கலாம்….

இன்டர்நெட் முன்பு இருந்த காதலுக்கு புறா மூலம் தூது சென்றது…அந்த புற போய் சேருவதற்குள்ளேயே அங்க அந்த அம்மாக்கு பேரனே பிறந்து இருப்பான்…( ஹிஹி தமாசு…தமாசு.)

ஆனால் இப்பொழுதோ இன்ஸ்டா முகநூல் என அதி விரைவு வேகத்தில் புது வைரஸ் போன்று பரவி வருகிறது… சில நேரங்களில் நன்மையாகவும்.. பல நேரங்களில் நன்மை அல்லாதவைகளும் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்க…. உண்மையில் இன்டர்நெட் சாதக பாதாகங்களை அறிந்து செயல் பட வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் இருக்கிறோம்…அப்படியும் அதுல நடந்த நல்ல விடயம் தான்…

இங்கே கனடாவை சேர்ந்த விஹானும்… மும்பையை சேர்ந்த தமிழ் பெண்ணான…தியாவும்… முக நூலில் அறிமுகம் ஆகி ட்விட்டரில் தூது விட்டு இன்ஸ்டாவில்… முதல் பார்வையை பகிர்ந்து…. வாட்ஸாப்பில் காதல் விதையை விதைத்து…டேட்டா பேக் என்னும் உரம் போட்டு….. காதல் விருட்சமா வளர்த்து வச்சி இருக்காங்க…..

இந்த சமையத்தில் தான் தியாவிற்கும்… அவள் அண்ணனின் நண்பருடன்  திருமண பேச்சுக்கள் நடைபெறுவதாக தியா… கண்ணீர் மல்க விஹானிடம் கூறி….

விஹானை இந்தியா வந்து அவள் அண்ணனிடமும் பெற்றோரிடமும் பேசும்படி கேட்டுக் கொள்ள….

 எந்த உயிர்  காதலனுக்கு தான்.. தான் ஆசை காதலி கண்ணீர் சிந்துதை பார்க்க இயலும்…

தாமதிக்காமல் உடனே கிளம்பி வந்து விட்டான்…..இங்கே அவன் ஏற்கனவே… திட்டமிட்டு வைத்து இருந்த தொழில் தொடர்பான வேலைகளையும் முடித்து கொண்டு செல்ல முடிவு எடுத்தவன்… அதன்படி முதல் கட்டமாகவே துரியனை சந்தித்து ஏற்றுமதி குறித்து பேசியது… 

“ஹாட்டீ… எனக்கு ஒரே நெர்வோஸா இருக்கு… அவங்க எங்க லவ் ஏத்துபாங்கல…!!” என படபடப்பாக கேட்ட விஹான் கனலினி கண்களுக்கு ஒரு கை தேர்ந்த தொழிலதிபன் போல் இல்லாமல் விடலை பையனாக தான் தெரிந்தான் 

“விஹான் ஜஸ்ட் ரிலாக்ஸ்…. ஒன்னும் ஆகாதுடா…அமைதியா இரு பதறாதே…!!”  என அவினிக்கு ஆடை அணிவித்து கொண்டே அவனை சமாதானம் படுத்த…

“எப்படி கனல்…எப்படி பதறாம இருக்க முடியும்…. உனக்கு தெரியுமா… அவளுக்கு இந்திய மாப்பிளை பார்த்து வச்சி இருக்காங்க…. இப்போ.. என்னை..என்ன.. எப்படி ஏத்துப்பாங்க…??”என கவலை கொண்டவன்.. கையை பிடித்து கொண்டவள்…

“விஹான்…. விஹான்…ஜஸ்ட் காம் டவுன்…. கண்ண மூடி யோசி… அவங்க ஏத்துகிட்டாலும் இல்லைனாலும் உன் காதல் இல்லனு ஆகிடாது…. இவங்க அறிமுகம் ஆக முன்னாடியே உங்க ரெண்டு பேருக்குள்ளவும்  காதல் இருந்துச்சு ஒருத்தரை ஒருத்தர்…நேரில் பார்க்காமலே அழகான ஆழமான காதல்… இப்பவும் உங்க ரெண்டு பேர் உள்ளேயும் அதே காதல் இருக்கு… அந்த காதல் தானே உன்னை இவ்ளோ தூரம் வழி நடத்தி வந்துச்சு…அதுவே உங்களையும் சேர்த்து வைக்கும்…நம்புங்க…காதல்… என்னைக்கு காதலர்களை கை விடாது….!!”

கண்மூடி கனலினி சொன்னதை சிந்தித்தவன்…தெம்பு அளித்தது அவன் காதல் நினைவுகளும்.. புது நம்பிக்கையோடு… தியாவின் குடும்பத்தை நாடி சென்றான்…

அதாவது…. என்னதான் நாம முங்கு நீச்சல் போட்டு ஏழு கடல் ஏழு மலைய தாண்டி போய் கிளிய காப்பாத்த நினைச்சாலும்… அது விதி…. பூஊஊ நகத்தால கூட போகலாம்னு இருந்தா யார் என்ன பண்ண முடியும்…அதுக்கு பேர் தான் விதி வலியதுனு சொல்லுவாங்க….

கனலினிக்கும்…. இதுக்கு மேல பிஸினஸ் டீல் எல்லாம் விஹான் பார்த்துக்குவான்… நாம இனி துரியனை பார்க்க வேண்டாம் நிம்மதியா இருக்கலாம் நினைச்சா கூட… அவளுக்கு அந்த பாக்கியமே கிடையாது போலயே…

என்னவா…?? பின்னே… இன்று இவர்கள் பார்க்க போகும் பெண் தியா… துரியனின் தங்கை என்பது தான் சிறப்பு…… அதில் மேலும் சிறப்பு என்ன என்றால்… துரியன் தன் தங்கைக்காக பார்த்து வைத்த மாப்பிளை வேறு யாரும் இல்லை எல்லாம் அவன் அருமை  ஆருயிர் நண்பன் கர்ணன் தான்….

விடயம் தெரியாம வான்டெட்ஆஆ போய் தலைய குடுக்க போற ஜீவன்களை நினைச்சதான்… எனக்கு பீலிங்ஸ் அருவியா கொட்டுது… ஆனா இவங்க இப்படி மாட்டலான  கதை வராதுனு நினைக்கும் போது…  பாவமாவது மண்ணாவதுனு அது எல்லாம் போயிந்தி இட்ஸ் கான்…

ரூப் டாப் கார்டன்…ஹோட்டல்…

தியா.. அவள் பெற்றோரான ராஜன்-  ஜீவிதாவும்  மற்றும் அவளின் பாட்டியான சத்தியவதியையும் அமர்ந்து இருக்க… விஹானும் கனலினியும் அவினி குட்டியை தூக்கி கொண்டு அவர்களிடத்தில் வர….திகைத்து போய் பார்த்தனர் 

அவர்கள் கவனம் எதுவும் பெரியவர்கள் இடம் இல்லை… எல்லாம் குட்டி அவினியில் தான் இருந்தது…அதுவும் துரியனின் முக ஜாடையையும் அவனின் கண்ணையும் கொண்டு உள்ள குழந்தையை பார்த்து அதிராமல் இருந்தால்தான் ஆச்சரியம்…..

“வணக்கம் பாட்டி…!!! என விஹான் தியா சொல்லி கொடுத்தது போல் பெரியவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க…

அவினி குட்டியும் விஹானை பின் பற்றி ஆசிர்வாதம் வாங்கி டபுள் ஸ்கோர் வாங்கினாள்…

அவினி பிஞ்சி கரம் பட்டதுமே சிலிர்த்து அடங்கியது சத்தியவதிக்கு….

இரு தரப்பினரும் பரஸ்பரம் பேசி கொள்ள… விஹான் தன்னை பற்றி அத்தனையும்  கூறி விட்டு அவர்கள் நம்ப வேண்டி சில ஆதரங்களையும் காட்டியவன்… பேராவலுடன் அவர்கள் என்ன கூற போகிறார்கள் என பார்த்து இருக்க…..

“உங்கள பத்தி சொன்னிங்க தம்பி இவங்க யாருனு சொல்லவே இல்லையே…!!” என கனலினியையும் குழந்தையையும் கை காட்டி கேட்டார்… ராஜன்…

“ஓ சாரி அங்கிள் பதட்டத்துல இன்ட்ரோ பண்ண மறந்துட்டேன்… இது கனலினி மை சைல்ட்ஹூட் ஃப்ரண்டு.. அது மட்டும் இல்லை… என் அண்ணன் ரித்விக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு சிஸ்டர் இன் லா ஆக போறாங்க… இந்த கியூட் லிட்டில் ஏஞ்சல் அவங்க பொண்ணு அவினி…!!”என அறிமுகம் படுத்த 

பெரியவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்து கொண்டனர்….

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் தம்பி… இந்த காலத்து பிள்ளைங்க அட்வான்ஸா இருக்கீங்க சரிதான்…ஆனா உங்க வேகத்துக்கு எங்களால மாற முடியாது.. ஏன்னா வயசாகிடுச்சு பாருங்க… அது மட்டும் இல்லாம தியாவோட அண்ணா அவளுக்கு மாப்பிளை பார்த்து இருக்கான்…. எங்க வீட்டை பொறுத்த வரை என் பெரிய பேரன் எடுக்குற முடிவு தான்… அதனால…???”

“அதுக்கு என்ன நான் இப்போவே தியா அண்ணா கிட்டவும் பேசுறேன்….!!” என சத்தியவதியை முந்தி கொண்டு உரத்த குரலில்  சொல்ல….(அடேய் அலையாதடா )

அவனை தியா குடும்பத்தினர் பார்த்த பார்வையில்… என்ன இருந்ததோ அப்படியே வாயை இறுக மூடி கொண்டான்…அவன் கை மேல் கை வைத்து தட்டி கொடுத்த கனலினி..

“அது ஒன்னுமில்ல பாட்டி… விஹான் தியா அண்ணாவ மீட் பண்ண ரொம்பவே ஆவலாக இருக்கான் போல… இதுவரைக்கும் பேசுனதுல உங்களுக்கும் விஹான பிடிச்சிருக்கு நினைக்கிறேன் அதனால தான் தியா அண்ணன் கிட்ட பேச சொல்றிங்க…என்னால புரிஞ்சுக்க முடியுது …. நாங்க தியா அண்ணா கிட்ட  விஹான் குடும்பத்தோட வந்து பேசுறோம்…!! என முடித்து கொண்டு கிளம்ப எத்தனிக்க..

அவள் கையை பிடித்து தடுத்த சத்தியவதியை….. கேள்வியாக பார்க்க….

“நீ இதுக்கு முன்னாடி இந்தியாவுக்கு வந்து இருக்கியா மா…!!” என மென்மையாக… கேட்க…

“இல்லையே பாட்டிமா…!” என இவளும் கனிவாக பதில் சொல்ல..

“குட்டிக்கு என்ன வயசு…?” என குரல் மாறாமல் கேட்க….

கனலினி பதில் சொன்னதும்… கணக்கு போட்டு பார்த்தவர்…கண்கள் பளிச்சிட…இருவர் தலையிலும் ஆதுரமாக தடவியவர் கண்கள் கலங்க… அதை மறைத்து கொண்டு… அவர்களை வழி அனுப்பி வைத்த பின்….

“இது சரியா வருமா அத்தை…??” என ஜீவா மாமியாரை கேட்க….

“உண்மைய சொல்லணும்னா எனக்கும் பதில் தெரியல…  சரியா வரும்னு சின்னதா ஒரு நம்பிக்கை… அப்படியாவது…. நமக்கு பிராயச்சித்தம் செய்ய   ஒரு வாய்ப்பா நினைக்குறேன்…!!” என்றதும்….

ராஜனும் ஜீவாவும் “அப்படி நடந்த சந்தோசம் தான்…”  என கண்ணீர் மல்க கூறினர்…  குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்க தானே செய்யும் 

கானல் ஆகுமோ சில கனவுகள்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top