கனா கண்டேனடி சகியே -2

கனா கண்டேனடி சகியே -2

இந்தியா வந்து இறங்கிய அந்த விமானத்தில் இருந்து வெளி வந்த பயணிகள்….தங்கள் பொதிகைகளை எடுத்து கொண்டு வெளியேற…

அதில் இருந்து ஒரு ஜோடியான ஆண் பெண் இருவரில் … அவன் விஹான்… கனடாவின் வளர்ந்து வரும் தொழில் அதிபன்….  அவன் குடும்பத்திற்கு என்று ஒரு சாம்ராஜ்யம்  இருக்கிறது…ஏற்கனவே அங்கு அவர்கள் மல்டி மில்லியனர் தான்….  ஆனால் அதில் நாட்டம் இல்லாத விஹான் தனியாக ஆர்கானிக் கெமிக்கல் தொழில்சாலை நடத்தி வருகிறான்….

 சிறு வயதில் இருந்து தன்னோடே வளர்ந்து தன்னோடு யூனிவர்சிட்டியில் கெமிக்கல்ஸ் படித்த தன் ஆருயிர் தொழியான கனலினி, உறுதுணையாக இருக்க… அவளே அவனுக்கு அனைத்தும் ஆகி போனாள்….

பீச் ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு பெட்டியை எடுத்து கொண்டு இருந்தவன் அருகில்… ஐந்தே கால் அடியில் வெண் பனி சிலையாய்…. மேற்கத்திய உடையில் அல்ட்ரா மாடர்னாக வந்தவள்… இத்தியாவின் சீதோஷ்ண நிலையால் கண்களை கைவைத்து மறைத்தவள்… ஸ்டைலாக குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டு…அவள் பளிங்கு தொடை தெரியும் படி ராம்வாக் நடையில் மயங்காத ஆண் மகன் தான் உண்டோ…???

கனலினி… இந்திய தந்தை பரதனுக்கும் கனடா அழகியான ஒலிவியாவிற்கும் பிறந்த மூத்த மகள்….

“விஹான் இட்ஸ் சோ ஹாட்….” என கையால் விசிறி கொண்டே கூற 

“யா ஹாட்டீஈ இந்தியா உன்னை விட செம ஹாட்டா இருக்கு…!!” என கேலி பேசியவனை அனல் பார்வை பார்க்க…

“ஓ நோ ஹாட்டீ… நான் எறிஞ்சிட போறேன்…!!”என மேலும் சீண்டி விட்டு…

“ஹே கூல் கனல்… இங்க நாம பிஸ்னஸ் விடயமா வந்து இருக்கிறாம்…உன் கூடவே நான் இருப்பேன்…முடிஞ்சதும்  உடனே கிளம்பிடுவோம் ஓகே…!!”என சமாதானம் சொன்னாலும்…

ஏனோ கனலினிக்கு நெருடாலகவே இருந்தது…. எப்பொழுதும் பிஸ்னஸ் மீட் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு விஹான் செல்வது தான் வழக்கம்…

ஆனால் இந்த இந்திய பயணத்திற்கு… வந்தே ஆக வேண்டும் விஹான் பிடிவாதம் பிடிக்க அவளுக்கும் சில மறுக்க முடியாத காரணங்கள் இருக்கவே உடன் வந்து விட்டாள்….

விமானம் தரை இறங்கும் வரை… அமைதியாக இருந்த அவள் மனது ஏனோ இந்தியா மண்ணில் கால் வைத்ததில் இருந்து… சீறும் புயலாக அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது…. ஏன்..??எதனால்..?? விடை இல்லை அவளிடம்….

“கனல்…?? கனல்…??”

“ஹாஆ…விஹான்….!!”

“தங்க் காட்… முழிச்சுகிட்ட… எப்போ இருந்து இப்படி கண்ண திறந்துகிட்டே கனவு காண கத்து கிட்டியோ… அது சரி உன் ஹண்ட்ஸம் நான் பக்கத்துல இருக்கும் போது எதுக்கு கனவை வேஸ்ட் பண்ற ஹாட்டீ…!!”

“விஹாஆஆஆஆன்ன்ன்ன்ன்…!!” என பல்லை கடித்து அவனை அடிக்க போக அவன் அங்கு இருந்தால் தானே… பெட்டிகளோடு வெளியே ஓட அவனை விரட்டி கொண்டு இவளும் பின்னால் அவனை அடிக்க ஓடினாள்…

இவர்கள் அட்டகாசத்தை பார்த்த குறும்பான கணவன் மனைவி என வேடிக்கை பார்த்தவர்கள் சொல்லி சிரித்து விட்டு போக அது கூர் தீட்டிய இரு செவிகளிலும் தெளிவாக விழுந்தது…

ஓடி பிடித்து விளையாடி… ஒருவரை ஒருவர் வாரி கொண்டே அவர்கள் புக் செய்த அந்த ஏழு நட்சத்திர ஹோட்டல்லுக்கு வந்து சேர்ந்தனர்…..

“ஹாட்டீ நீ இங்க ஓய்வு எடுத்துக்கோ நான் நம்ம மீட்டிங் ஏற்படுகளை பார்த்துட்டு வரேன் ஓகே…!!” என வெளியே சென்று விட்டான்… அது கூட அவளுக்காக  என்பதால் அமைதி ஆகி போனாள்..

சிறிது நேர ஓய்வுக்கு பின் விஹான் மற்றும் கனல் இருவரும் தயாராகி ” பீச் ” ரிசார்ட்டிற்கு கிளம்பி சென்றனர்…

விஹான் மற்றும் கனலினி சென்ற கார்…ரிசார்ட்டை நெருங்க நெருங்க…. கனலினியின் இதயம் வேகமாக துடிக்க துவங்கியது…. ஏன் என்று புரியாமல்… அசௌகரியமாக உணர்ந்தாள்….

ஆனால் இவ்வளவு தூரம் வந்து விட்டு இப்பொழுது இந்த மீட்டிங் வேண்டாம் என்றால்… விஹான் நிறுத்தி விடுவான்… அவளுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய கூடியவன் ஆனால்…… இந்த மீட்டிங்காக அவன் எத்தனை எதிர் பார்ப்புடன் காத்து இருக்கிறான்…இது அவனுக்கு எத்தனை முக்கியமானது என்று அறிந்தவளால் வாய் வரை வந்த வார்த்தைகளை உள்ளேயே இழுத்து கொண்டாள்….

“விஹான் கூட இருக்கும் போது எனக்கு எதுவும் ஆகாது… ஆக விடமாட்டான்…!!’என பட படத்த மனதை சாமாதானம் செய்து கொண்டு வந்தவளுக்கு எங்கே தெரிய போகிறது…

அவள் இதய துடிப்பிற்கு காரணமானவன்  உள்ளே தான் இருக்கிறான்… அவன் கண்ணில் விழுந்தால்… நொடிக்கு ஒரு முறை துடிக்கும் இதயத்தை… வெடிக்கும் படியாக வைப்பான் என்று… அவளுக்கு தெரியாதே…

விஹானோடு இறங்கி சென்றவள் அவர்களுக்காக புக் செய்யப்பட்ட டேபிள் அருகே செல்ல…..

அங்கே அவர்களுக்கு முன்னால் வந்து அமர்ந்து இருந்த நபர்களை கண்டவள்… இதயம் அவளிடம் சொல்லாமலே எம்பி குதித்தது….

“ஏன்…?? இந்த துடி துடிப்புக்கு காரணம் என்ன …?? என யோசித்தாவளுக்கு இவர்களை இதுவரை பார்த்தது இல்லை என அவள் அறிவு அடித்து சொல்லியது ஆனால் மனது…

எதிரே கருப்பு உடை அணிந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அந்த புதியவனை கண்டு ஆர்ப்பரிக்கிறது…..

இருப்பினும் அதை வெளியே காட்டி கொள்ளாமல்… இருக்க… அவள் குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்து மறைத்து கொண்டவள்..…  எதார்த்தமாக இருப்பது போல் ஒரு புன்னகையை உதட்டோரத்தில் வரவழைத்து கொண்டாள்….

“ஹலோ மிஸ்டர் துரியன்… நைஸ் டு மீட் யூ…நான் தான் விஹான்… அண்ட் இது என்னோட பார்ட்னர்.. கனலினி…!!”என கையை குலுக்க…

அது வரை வைத்த கண் வாங்காமல் கனலினியை பார்த்து இருந்த துரியன் கண்களை மட்டும் திருப்பி விஹானை பார்த்து அளவிட்ட படி கையை குலுக்கி விட்டு….

“வெல்கம் டு இந்தியா மிஸ்டர் விஹான் அண்ட் கனலினி… அப்புறம் இது என் உயிர் நண்பன் கர்ணன்….!!”என கனலை மேலிருந்து கீழாக ஒரு கூர் பார்வை பார்க்க…

அதில் அசுசூசை கொண்டவள்… அமைதியாக…சிரித்து மட்டும் வைக்க….

பின் நால்வரும் அமர்ந்து அவர்கள் தொழில் பற்றி பேசினர்…

அதன் சாராம்சம் இதுதான்….. துரியன் நடத்தி வரும்… ஆர்கானிக் கெமிக்கல் தொழில்சாலையில் இருந்து கனடாவில் இருக்கும் விஹானின் மருந்து தயாரிக்கும் தொழில்சாலைக்கு ஏற்றுமதி செய்வதன் தொடர்பான ஒப்பந்தம் பற்றி  பேசிவிட்டு… இறுதியாக….. விஹாணும் கனலினியும் ஒரு முறை…துரியனின் தொழிற் சாலையை நேரில்  பார்த்து விட்டு அங்கேயே….. ஒப்பந்தம் கை எழுத்து செய்து கொள்ளலாம் என்று  ஒரு மனதாக முடிவு எடுக்க…

நால்வரும் மரியாதை நிமித்தமாக கை குலுக்கி விடை பெற… இறுதியாக வந்த கனலினி தயங்கியபடி துரியனிடம் கையை குடுக்க….

 உதடு வளைய அவளின் கரத்தை பற்ற…. இருவருக்கும் மின்சாரம்…பாய்ந்து போன்று…. அதிர்ந்து நின்றானர்… அது ஒரு நொடி தான்… இருவரும் சட்டடென்று  கையை இழுத்து கொண்டனர்….

அதற்கு மேல் அங்கே நிற்காமல்… விரைவாக வெளியே சென்ற…கனலினிக்கு…. மூச்சு நின்று துடித்தது….

“ஏன்..?? ஏன்..?? அவன் பார்வை என்ன தடுமாற வைக்குது…??அவன் தொடுதல் ஏன் சிலிர்க்குது… ?? ஓ காட் ஏன் என்ன இப்படி சோதிக்குறீங்க…ப்ளீஸ்… எனக்கு என்னோட இப்போதைய நிலைமையோ போதும்… புதுசா எந்த வலியையும் எனக்கு கொடுக்காதீங்க ப்ளீஸ் இவன் யாரா இருந்தாலும்… இனி அவனை என் கண் முன்னாடி கொண்டு வராதீங்க ப்ளீஸ்…என வேண்டி கொண்டவள் மீது இரக்கம் கடவுளுக்கு இல்லை போலும்…

ஏன் என்றால்… நாளையே அவன் முன்னால்…போய் நிற்க வைக்கும் படி செய்ய போகிறார்…தெரியவில்லை போலும்…

கனவுகள் துரத்தும்…..!!!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top