மதுரம் சிந்தும் காதலே-4

“மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி

சுபாகே த்வம்

சஞ்சீவ சரத சதம்”

கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றதும் 

 மங்கல இசை முழங்க…

கரும் பச்சை பட்டில் அமர்ந்திருந்த சந்தியாவின் சங்கு கழுத்தில் தாலி கட்டி தன் சரி பாதியாக ஆக்கிக் கொண்டான் அவள் காதலன் கதிரவன்…

அருகிலே அரக்கு பட்டில் உர் என அமர்ந்து இருந்த மதுரா கழுத்தில் தனஞ்ஜெயன் தாலி கட்ட போக… விலக பார்த்தவளின் இடையோடு அழுத்தி பிடித்து தாலி கட்டி வினையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டான்…

ஊரில் உள்ள அனைவருக்கும் மதுராவை பற்றி நல்லாத் தெரியும். அதனால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முறைப்பையனுடன் விளையாடுவதாகவே எண்ணிக்கொண்டனர்.

அட்சதை தூவி, ஆசிகள் வழங்கி “வாழ்க பல்லாண்டு” என வாழ்த்தியது இதற்காகவே காத்திருந்த அன்பு நெஞ்சங்கள்….

தங்கள் காதல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆசையாக அணைத்தபடி ஒரு ஜோடி நிற்க…

ஆறடிக்கும் மேல் உயர்ந்தவன் விலகி நின்ற ஐந்தேகால் அடி உள்ள மதுராவின் தோளில் கை போட்டு இறுக்கி அணைக்க, அவனை வெட்டுவது போல் தலையை உயர்த்தி பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்தான். எத்தனை அன்பு அவன் கண்களில்… அதை உணரும் நிலையில் அவள் இல்லையே. கோப விழிகளுடன் அவளும் என அழகாக புகைப்படம் ஆக்கப்பட்டது அவ்வழகிய தருணம்…

இளையவர்கள் திருமணம் இனிதே முடிந்ததும், புரோகிதர்கள் குறித்த நேரத்தில் சஷ்டியப்த பூர்த்தி நடந்தேற…

அங்கு வந்த மக்கள் அனைவரும் ஜோடியாக வந்து பணிந்து ஆசிர்வாதம் வாங்க…

வீட்டு மருமகன் என்னும் முறையில் சந்தியா, கதிரவன் முதலில் பணிந்து வணங்க பூரண மகிழ்ச்சியாக அதிவீரராமபண்டியன் சிவகாமி தம்பதியினர் வாழ்த்தினர்.

அடுத்து தனஞ்செயன் மற்றும் மதுராவை வணங்க சொல்ல

தாலி ஏறும் வரை பொறுத்திருந்தவள் பொங்கி எழுந்துவிட்டாள்.

“முடியாது…. முடியாது..” என பிடிவாதமாக கத்திக்கொண்டே மாலையை கழற்றி வீசியவள்… யாரும் தடுக்கும் முன்பே அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்…

அனைவர் முகத்திலும் அவமானம் கலந்த அதிர்ச்சி. இத்தனை பேர் நடுவில் இப்படி பண்ணுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அன்றோ…

கோபத்தில் முகம் சிவக்க நரநரவென்று பல்லைக் கடித்தபடி தங்க காப்பை ஏற்றி விட்டவன் அவள் பின்னால் போக எட்டு வைக்க…

அவன் கைகளைப் பிடித்து தடுத்தார் சிவகாமி, “வேணாம் தனா… அவ சின்ன பொண்ணு தானே, ஏதோ கோபத்துல பண்ணிட்டா விடு, எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லை….!!” என்றவர் முகத்தில் அத்தனை வலி இருந்தது… அதையே அதிவீரராமபாண்டியன் ஆமோதித்தாலும் அவர் பார்வை அனைத்தும் பூட்டிய அறை கதவின் மேலே இருந்தது…

பூட்டிய அறைக்குள் கிடந்தவள் கதறி அழுது கொண்டிருந்தாள்… அவளுக்கு அவள் செயல் கோபம் தந்தது உண்மை…. ஆனால் “கழுத்தை அறுத்துவிட்டு வலிக்குதா என்று கேட்பது போல்…. பிடிக்காத திருமணம் செய்து வைத்து விட்டு ஆசீர்வாதம் ஒன்றுதான் கேட்கிறீர்களா..!” என அழுதாள்….. பைத்தியக்காரி ….

சந்தியா சடங்குகள் முடிந்து விடைபெறும் நேரம் என கூறிய பின்பே வெளியே வந்தாள்….

தன் தமக்கையைக் கட்டிக்கொண்டு அழுதாள்…. கோபம் வந்தால் “போடி எல்லாத்துக்கும் நீதான் காரணம் உன்னால தான் என்னை யாருக்கும் பிடிக்காம போச்சு…!!” என்று சொல்பவள் தான்… ஆனால் ஒருபோதும் அடுத்தவர் மீது உள்ள கோபத்தைக் காட்ட மாட்டாள்…. யாரிடம் எப்படியோ ஆனால் அக்கா என்றுமே அவளுக்கு இன்னொரு அன்னை…. “உனக்கு வேணுமா மது குட்டி இந்தா நீயே வச்சிக்கோ….!!” என அவள் பங்கை விட்டுக்கொடுக்கும் தமக்கையை யாருக்குத்தான் பிடிக்காது…

அவள் மீது அனைவருக்கும் மனக்கசப்பு இருந்தாலும், அதை அவளிடம் காட்டக் கூடாது என்பது அதிவீரராம பாண்டியரின் உத்தரவு. அதை மீற யாருக்கும் துணிவு இல்லையே…

இருந்தாலும் இல்லாத கொண்டை ஊசியைக் குத்திக்கொண்டு இருந்தார் கவிதா… “அது என்னடி அவ்வளவு திமிரு உனக்கு அத்தனை பேர் முன்னாடி எங்க அப்பாவை அசிங்கப்படுத்துறதுல …. உங்க மாமாக்கள் கொடுக்கிற செல்லம் தாண்டி உனக்கு இதெல்லாம் செய்யத் தோணுது… கை கால உடைச்சுப் போட்டா தான் நீ சரியா வருவ… எனக்குன்னு வந்து பொறந்திருக்கியே….!!” என வார்த்தைக்கு வார்த்தை கொட்டிக்கொண்டிருந்தவரைப் பிடித்துத் தடுத்தவள்…

“இங்க பார் கவி, உனக்கு என்கிட்ட பேசுறதுக்கு எதுவும் கிடையாது… நீயும் உன் பெரிய பொண்ணும் மட்டும் உங்களுக்கு பிடிச்சவரை பார்த்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும்… நீ வீட்டோட இருந்துகிட்டு அத்தைங்களை ஏமாத்திட்டு உட்கார்ந்து சாப்பிடுவ….ஆனா எனக்கு மட்டும் பிடிக்காதவரை வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணி வச்சி நான் அழறத வேடிக்கை பார்க்குற சாடிஸ்ட் அம்மா நீ. இனி என்கிட்ட பேசாத கவி….!!” என முகத்தை வெட்டி கொண்டு போன மகளை பார்த்து அயர்ந்துதான் போனார்…

எப்படித்தான் என் அண்ணன் மகன் இவளை சமாளிக்கப் போகிறானோ….?? ” என எண்ணியவருக்கு மகள் நினைவு கலக்கத்தைக் கொடுத்தது…. “கவி ப்ளீஸ் கவி எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்… சொல்லு கவி, அப்பா சொல்லுங்கப்பா ப்ளீஸ் எனக்கு வேண்டாம்பா…!!” என்று கெஞ்சிய மகளைப் பார்த்து இரக்கம் வந்தாலும் அவளின் நலன் கருதியே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்…..

அது தவறு என புரிய வைக்கப் போகிறாள் மகள்.

ரோஜா இதழ்களைக் கொண்டு அலங்கரித்த கட்டிலில் மதுரா அமர்ந்து இருந்தாள், புலம்பியபடி.

“வந்தா கண்டிப்பா குதிப்பார், என்ன ஆனாலும் சரி, இன்னைக்கு அவர்கிட்ட எனக்கு உங்கள பிடிக்கல, டிவோர்ஸ் தாங்க கேட்க வேண்டியது தான்!” என அவள் நினைத்துக் கொண்டாள், மட்டும் போதுமா?

தன் மனம் போன போக்கில் யாரையும் விட்டு வைக்காமல் திட்டிக்கொண்டு இருந்தவள்… கதவு படார் என திறக்கும் சத்தத்தில் எழுந்து நின்று கொண்டாள்.

பட்டு வேட்டி சட்டையில் தனஞ்ஜெயன் கதவை அறைந்து சாத்தி தாளிட்டவன், தன் கை காப்பை முறுக்கியபடி அவள் அருகில் வர…

இதயம் எம்பி குதித்தாலும் வெளியே தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டவள் அமைதியாக நிற்க…

“அப்புறம் என் அத்தை பெத்த மயிலே இன்னைக்கு நமக்கு முதலிரவாமே… மாமானுக்கு பிடிச்ச மாதிரி செமயா ரெடியாகி இருக்க போல…. வா குடும்பம் நடத்தலாம்.. புடவையில நல்ல தளதளன்னு இருக்கடி…!!” என அவளை நெருங்க…

பதறி போனாள்…. வருவான், கத்துவான், திட்டுவான், அடிப்பான் என்று பார்த்தால்… இப்படி ஒரு அதிரடியை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

“மா…மா… மாமா..” என்றவளுக்கு வார்த்தை பஞ்சமாகிப் போனது அவன் ஆசைப் பார்வையில்…

அவனுக்கு அவள் மீது அதீத கோபம் இருந்தது உண்மையே…. ஆனால் இப்போது அதைக் காட்டினால் அவள் வெறுப்பு பெருகக் கூடும்… முதலில் அவளுக்கு தன் அன்பை உணர்த்தி அவள் வெறுப்பைக் குறைக்கலாம் என்று நினைக்க… விடுவாளா சண்டிராணி…

சுவற்றில் முட்டி நீண்ட ராவளின் இருபுறமும் கை வைத்து அணைத்துக்கொண்டு…. நீள் வட்ட முகத்தை பார்த்தான். கோதுமை நிறம்… கோலி குண்டு கண்கள் படபடக்க… கூர் நாசி விடைத்து அடங்க…பவள இதழ்…. பயத்தில் தந்தி அடிக்க…அதை தன் முரட்டு இதழால் கவ்வி சுவைத்தான்… “ஹுக்… ம்ம்ம்… முஹம்…” என தலையை அசைத்து விடுபட போராட…. தலையை கைகளால் தாங்கி… இதழ் அமுதத்தை ரசித்து ருசித்து உறிஞ்சினான்…

மூச்சு முட்ட விலகியவர்கள் ஆசுவாசம் அடைந்தனர்…. சீராக மூச்சு விட்டவளின் குட்டி குன்றுகள் ஏறி இறங்க கண் மூடி நின்றவளின் நெற்றியில் படிந்த அவன் கரம் மென்மையாக வழுக்கியபடி அவள் சங்கு கழுத்தில் நிற்க… புது தாலி தொங்க நின்றவளின் அழகு பித்தம் கொள்ளச் செய்ய விரல் தீண்டிய இடம் அவன் மீசை அதரம் தீண்டி பற்கள் பதம் பார்க்க… “ஹா..ஆஆ வ்…. கடிக்காத மாமாஆஆ…!!” அவன் பிடறி முடி பிடித்து தடுக்க குரல் கொஞ்சியதோ…

அவள் கள்ளூறும் கண்களைப் பார்த்துக் கொண்டே சேலை மறைப்பை எடுக்க… பதறித் தடுத்தவளின் விரலை கிடுக்குப் பிடி போட்டுப் பிடித்துக் கொண்டு…. “வேணும் தாடி…!!” என மறுக்க முடியாத குரலில் கேட்க….

“ஹா மாமாஆஆஆஆ கொஞ்சம்ம்ம்ம் பேசலாம்ஆஆ.. ம்….!!” அவன் தீண்டல் அடிவயிற்றில் அட்ரினலின் சுரக்க…. தவித்தபடி….

ம்ம் நீ கொஞ்சமா பேசு நான் கொஞ்சிக்கிட்டே கேட்கிறேன்…!! என்றவன் அவள் கழுத்தில் முகம் வைத்து ஊராய்ந்தவன் கைகள் சேலை மறைப்பில் பெண் பூவை பிடிக்க…

வெடித்து சிதறினாள் மங்கை…”மாமா பால் ஆருது குடிக்கலாமே…!!” எப்படியாவது அவனை தள்ளி விட்டால் போதும் என்று சொன்னாள்.

“இப்போ பால் வராதுடி பாப்பா வந்ததுக்கு அப்புறம் வரும்…!!” என சொல்லிக் கொண்டே பசி மணியை தேடி நசுக்க…

“ஸ்ஸ்ஸ்… பசிக்குது மாமா காலைல இருந்து சாப்பிடல…!!” என்றதும் அவளை விட்டவன் பாலையும் பழத்தையும் அவளுக்கு கொடுக்க…

சாப்பிட்டு கொண்டே “உங்களுக்கு..?” என்றாள். “எனக்கும் பசிக்குது தான் அது வேற பசி நீயே சாப்பிடு..!” என்றவன் அவள் சாப்பிடும் அழகை பார்க்க…

“மாமா இப்படி சாப்பிடும்போது பார்த்து வைக்காதீங்க. இதோ நீங்களும் சாப்பிடுங்க. இல்லன்னா எனக்கு வயிறு வலிக்கும்..!!” எனக் கொடுக்க, மறுக்கத் தோன்றாமல் உண்டவனுக்குப் பாலை அவள் கையால் கொடுக்க, வாங்கிப் பருகினான். அவளையும் சேர்த்தே உதட்டை அவள் தோளில் துடைத்து அவளை அணைத்துக்கொண்டு கட்டிலில் விழ…

சிறிது நேரத்திலே தன் பாரமாக மயங்கிக் கிடந்தவனைத் தள்ளிவிட்டு, “ஷாப்பா தடியன், என்ன கணம் கணக்குறான்….!!”

போன வாட்டி பண்ண தப்பை இம்முறை சரியாக செய்யாமல் அலெர்ட் ஆகி பறந்து விட்டாள்.

அவள் பறந்து போனாளே , நியூயார்க்கு போனாளே

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top