இளவேனிற்கால இரவு வேளை….பால் நிலா ஒளியில் வெள்ளி ஓடையில் பவானி வந்தாள், குளிர் தென்றலுடன்…
ஜல் ஜல் என ஓசை எழுப்பும் சலங்கையை கழற்றிக் கொண்டிருந்தாள். எங்கே தப்பிச் செல்லும் போது மாட்டி விடுமோ என்று சூதனமாக இருந்தாள் மதுரா….
“எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்..” என்பதில் விவரம்… மாலை வரை முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு வலம் வந்தவள்…
இரவில் கருப்பு நிற உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்… மதுரா அறைக்கு பக்கத்து அறை கதவு திறந்து இருக்க எட்டி பார்த்தாள்… அவள் பெற்றோர் மாறன், கவிதா அவர்களின் இரண்டு புதல்விக்கும் திருமணம் என்னும் சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தனர்…
அவர்களை பார்த்தவள் “போயிட்டு வரேன் கவி, போயிட்டு வரேன் பா..!!” என மனதுக்குள்ளே விடை பெற்று கொண்டாள்…
கீழ் தளம் இறங்கி வர அங்கு சோபாவில் அவளின் இரண்டு தாய்மாமன்கள் வேலை செய்தபடி அப்படியே உறங்கி விட்டார்கள்…
தாய் அன்புக்கு நிகர் எதுவும் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட தாய் மாமன் உறவைப்பற்றி குறை சொல்லிவிட முடியாது…. தாய்க்கு நிகர் தாய் மாமன் உறவு… அவளுக்கும் அப்படியே அவ்வீட்டில் யார் என்ன சொன்னாலும் அவளை செல்லமாக கூட கண்டிக்க மாட்டார்கள் …. அத்தனை பேரன்பு அவள் மீது….
இந்த வீட்ல நான் மன்னிப்பு கேட்கணும் என்றால் அது உங்க ரெண்டு பேர் கிட்ட மட்டும் தான்…
மன்னிச்சிடுங்க மாமா அன்பை மட்டும் கொடுத்த உங்களுக்கு இன்னைக்கு கஷ்டத்தை கொடுத்துட்டு போக போறேன்…!! என உண்மையான வருத்தத்துடன் தனக்குள்ளே கேட்டுக்கொண்ட அவர்களிடம் மானசீகமாக விடைபெற்றுச் சென்றாள் மதுரா…
அவளுக்கு திருமணத்தில் எல்லாம் இஷ்டமில்லை, அவள் படித்த படிப்புக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்படியே அவர்கள் திருமணம் செய்து வைத்தாலும் கணவருடன் சென்று வேலை பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் இருந்தாள். ஆனால் தனஞ்ஜெயனுடன் திருமணம் என்றானதும் முடிவு செய்துவிட்டாள், இந்த ஊரை விட்டு மட்டுமல்ல இந்த நாட்டை விட்டும் செல்ல…தேனிலிருந்து சென்னைக்குப் போய்விட்டால் போதும், மற்றதெல்லாம் அங்கு அவளின் நண்பர்கள் உதவியால் எல்லாமே தயார் நிலையில் உள்ளது…
முதலில் இந்த வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்பு ஊர் எல்லையைக் கடப்பதும்தான் பெரிய டாஸ்க்…
எப்படியோ சாதுரியமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்…. கிளைச் சாலையில் இருந்து மெயின் சாலைக்கு வந்து வாகனம் ஏதும் போகிறதா என்று நின்றவளுக்காகவே வந்தது தக்காளி ஏற்றிவந்த டெம்போ லாரி…
யோசிக்க எல்லாம் இல்லை, குறுக்கே பாய்ந்து விட்டாள்…
“எம்மா யாரு மா நீ…!!” இருட்டில் இப்படி கருப்பு உடை அணிந்து வந்து லாரிக்குக் குறுக்காகப் பாய்ந்தால் பூதமோ என பயந்து விட்டார்…
“அண்ணா, நான் மனுஷிதான்.. என் பிரண்ட்ஸோட நான் அருவியில் குளிக்க வந்தேன்… போறப்போ என்ன மட்டும் மறந்து விட்டு போயிட்டாங்க…. கொஞ்சம் என்ன டவுன் பஸ் ஸ்டாண்ட்ல விடுறீங்களா….!!” என கதை சுற்றினாள் நாடகக்காரி..
“சரி ஏறுமா, வயசுப் பிள்ளை இப்படி ஒத்தைல விட்டு போக முடியாதே… நானும் மூணு பொண்ணுக்கு தகப்பன் தான்… தைரியமா வண்டில ஏறு…!!” என முன் பின் தெரியாதவருடன் செல்ல பயந்து விடக் கூடாதே…
மதுரா உள்ளே ஏறியதும் வண்டி வெளிச்சத்தில் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தவர்…”உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேம்மா… ஆமாம் யார் நீ…?” என்றதும் தூக்கிவாரிப் போட அமர்ந்தவள்.
“இல்லையே… என்னை நீங்க எப்படி பார்த்திருக்கப் போறீங்க… நான் இந்த ஊரே கிடையாது, நான் சென்னையில இருந்து வரேன். இதே சாயல்ல யாரையாவது பார்த்திருப்பீங்க, ஆனா அது நானில்லை….!!” படபடத்தாள், மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் முடிந்த மட்டும் அமைதியாக பேச முயன்றாள்…
“அப்படியும் இருக்க வாய்ப்பு இருக்கு…!!” என்றவர் வாகனத்தைக் கிளப்பிய பின்புதான் மூச்சு விட்டாள்…
ஊர் எல்லை தாண்டும் வரை கொட்ட கொட்ட முழித்துப் பார்த்திருந்தவள், ஊர் எல்லை தாண்டியதும் நிம்மதிப் பெருமூச்சுடன் கண்ணயர்ந்து விட்டாள்….
அதாவது ஒருத்தனுக்கு கிரக நிலை கோளாறு இருந்தா அவன் திரும்புன பக்கம் எல்லாம் கன்னி வெடி இருக்குமாம் என்பதை மதுராவை வைத்து சொல்லிவிடலாம்…
காலை குயில் கூவலில் முகத்தில் அடித்த இளஞ்சூரியன் ஒளியில்…. உடலை வளைத்து திமிரை முறித்து கொட்டாவி விட்டபடி கண்ணை திறந்த மதுரா சர்வமும் அதிர்ந்து போனாள்….
ஏன்னா…?
அவள் வந்திருப்பது இந்திரபவனம் அன்றோ… திடுக்கிட்டு துள்ளிக் குதித்து இறங்கியவள்…
இரும்புத் தூணில் முட்டிக்கொண்டு நிற்க…
“ஆஆஆஆ இங்கு எவன்டா அது இங்க தூண நட்டு வெச்சது…!!” என நெற்றியைத் தேய்த்து விட்டபடியே நிமிர்ந்து பார்க்க கோலி குண்டு விழிகள் விரிந்து கொண்டது…
“ஹி….மாமா…!” என உதடு உள்ளாகவே முனகிக் கொண்டாள்…
எனில் எதிரில் நின்றது?
ஆம்…!! தனஞ்செயன் தான்…
பேயைக் கண்டது போல் திரும்பி ஓடப் போன மதுராவை…
“எட்டிப் பிடித்து நிறுத்தியவன் “எங்க ராங்கி அதன் மார்னிங் ஜாகிங் முடிச்சாச்சுல்ல… போ உள்ள போய் சமத்தா கல்யாணத்துக்கு ரெடி ஆகு பார்க்கலாம்….!!” என அவள் திமிறத் திமிற… வாயைப் பொத்தி பின்னிருந்து அணைத்து உள்ளே தூக்கிச் சென்றான்… ஏனெனில் யாருக்கும் அவள் ஓடிப்போனது தெரியாதே… அவன் தெரியவும் விடமாட்டான்…”
அவளை அறைக்குள் தூக்கிச் சென்று விட்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் விலகிச் சென்றவள்..
“இங்க பாருங்க மாமா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை… என்னை என் இஷ்டப்படி விட்ருங்க… நான் போறேன்….!!” என கோவமாக கூறினாள்.
“அப்படியெல்லாம் விட முடியாதுன்னு சொன்னா என்னடி பண்ணுவ…!!” என்ற குரல் அழுத்தமாக வந்தது.
ப்ளீஸ் மாமா புரிஞ்சுக்கோங்க, பிடிக்காத பொண்ணுகூட கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணா வாழ்க்கை நல்லா இருக்காது…. நீ விரும்புற அவளை விட உன்னை விரும்புறவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்…!! என உருக்கமாக சொல்ல…
என்னடி டிவில வள்ளி படம் பார்த்தியா…?? என நக்கலாக கேட்டவனை அப்பாவியாக பார்த்தவள்… ஐயோ கண்டுபிடிச்சிட்டானே என மனசுக்குள் நினைக்காமல் இல்லை… சரி நம்புற மாதிரி ஒரு ஆக்டிங் போட வேண்டியது தான்…
கண்கள் நீர் மல்க “இங்க பாருங்க மாமா… இதுக்கு மேல என்ன கட்டாயப்படுத்துனா எனக்கு தற்கொலை பண்ணிக்கிறத தவிர வேறு வழியே இல்லை ….!!” என அழுதவள் கைக்கு கிடைத்த விஷத்தை காட்டி கெஞ்சினாள்… ம்ஹும் மிரட்டினாள்.
அவள் கண்களை பார்த்தபடி அவளை நெருங்கியவன்…
“எதுவா இருந்தாலும் தாலி கட்டினதுக்கு அப்புறம் பண்ணிக்கோ…!” என்றவன் பேச்சில் உறைந்து நின்றாள்…
அதைப் பயன்படுத்திக் கொண்டு அவன் அவள் கையில் இருந்த விஷ பாட்டிலை தட்டிப் பறித்தவன் அதைக் குடித்து விட்டான்…
“நோஓஓஓஓஒ…!!” என பதறி அவள் தடுக்கும் முன்னே குடித்து விட….
க்ஹ க்ஹ என்னடி விஷம் இனிக்குது…. பிராண்ட் சரியில்லையோ…. தாலி கட்டினதுக்கப்புறம் நான் நல்ல பிராண்டா வாங்கித் தரேன் சரியா….லூசு தனமா எதையும் பண்ணாம ஒழுங்கா ரெடி ஆகு என்றவன்…!! கதவு வரை போனவன்…
அப்புறம் கால்ல இருக்குற கொலுசை மட்டும் கழட்டுனா போதாது… ரூம் கதவை சாத்திட்டு போக கத்துக்கோ… என்ன புரியுதா…!! என புருவத்தை உயர்த்தி கேட்க…
இப்பொழுது அவளுக்குப் புரிந்து விட்டது… அவள் இங்கே எப்படி வந்தாள் என்று.
அதாவது அவளிடம் தனியே பேச வேண்டும் என வந்த தனஞ்ஜெயன்… அவள் அறை கதவு திறந்து கிடப்பதைக் பார்த்து அவளைத் தேட அம்மணி தான் சென்டிமென்ட் சீன் ஓட்டிக் கொண்டு நின்றாளே… எதுவரை போகிறாள் என பார்க்க நினைத்தவன் அவளைப் பின்தொடர…
அவள் லாரியில் ஏறியதும் பின் தொடர்ந்து சென்றான்… அப்பொழுதே அழைத்து வந்திருந்தால் மீண்டும் ஏதாவது ஏடாகூடமாக செய்து விடுவாள் என்றுதான் அவளை வண்டியில் வைத்து ஊரைச் சுற்ற வைத்து விடியும் வேளையில் கொண்டு வந்து விட்டார் அவர்கள் ஆலைக்கு ரெகுலராக வரும் அந்த லாரி டிரைவர்…
“மண்ட மேல இருந்துகொண்டே மறந்துட்டியே சைக்..!!” என அவளே அவளை காரி துப்பிக்கொண்டவள் அவனை பாவமாக பார்க்க…
லுக்கு நல்லா இல்லை…. எத்தனை வாட்டி ரியாக்ஷனை மாத்தி மாத்தி கொடுத்தாலும் ஏமாற மாட்டேன்… கல்யாணம் கண்டிப்பா நடக்கும் ரெடி ஆகுடி இல்லை…!! என அவளை அழுத்தமாக பார்த்தவன்…. “நானே வந்து என் கையால ரெடி பண்ணி விடுவேன்…!!” என்றவன் “அந்த தொப்புள் மச்சம் இன்னும் இருக்காடி .!” என்றவன் கண்கள் அவளின் இடையில் இருக்க.. சுருண்டு கிடந்த தன் டீ ஷர்ட்டை நன்றாக இழுத்து விட்டு கொண்டவள்…
‘எனக்கு மச்சம் இருக்கிறது இவருக்கு எப்படி தெரியும்..!!” என அவள் மனதில் நினைத்தாள்..
“உன் அனைத்தும் நான் அறிவேன்..!” என வெளியே இருந்து குரல் வர… ஓடி சென்று கதவை அடைத்து கொண்டாள், மனக்கதவையும் சேர்த்தே….
அந்த அளவுக்கு அவன் மீது வெறுப்பு மண்டி இருந்தது…
வெறுப்பை விருப்பமாக மாற்றுவேன்….
அவன் காதலில் மதுரம் சிந்தும்….



