மதுரம் சிந்தும் காதலே-5

நேற்று இருந்த கொண்டாட்டத்திற்கான அடையாளம் சிறிதும் இன்றி மறைந்து போயிருந்தது…. அவ்வீட்டு மனிதர்கள் முகத்தில் சிறிதளவும் சிரிப்பில்லை…. அதை அனைத்தையும் மதுரா தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டாள்….

காலையில் கண் விழித்தவனுக்கு எல்லாம் புரிந்தது…

ஆண் மகனுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித் தந்து சென்று விட்டாள்…

சாது மிரண்டால் காடு தாங்காது…

ஆனால் அவன் மிரண்டானா என்பதுதான் கேள்வி…

நடு ஹாலில் தனஞ்செயன் அமர்ந்திருக்க அவனைச் சுற்றி பெற்றோர், பெரியோர் அனைவரும் இருக்க…

“அந்த கோட்டி சிறுக்கி என் பேரனை இப்படி அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாளே உருப்புடுவாளா….!!” என சிவகாமி புலம்பிக் கொண்டு இருந்தார்…

“நம்ம கைக்குள்ளே வளர்ந்த பொண்ணு நம்ம குடும்பத்துலே வந்தா அனுசரித்து நடந்துப்பான்னு தான அவளை கட்டி வைச்சோம். இப்படி என் புள்ளையை அசிங்கப்படுத்தும் நடுவீட்டில் உட்கார வச்சிட்டு போயிட்டாளே… என் மகன் ஊர காக்குற எல்லை சாமி மாதிரி கம்பீரமாய் இருந்தானே இப்ப இப்படி இடிஞ்சு போய் உட்கார வச்சுட்டாளே…..!!” என சகுந்தலா வருத்தப்பட்டார்.

“அழுவதிங்க அக்கா கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை அந்த மாதிரி அவளுக்கு நம்ம புள்ள அருமை தெரியாம போய் கஷ்டம் தான் பட போறா பாருங்க..!!” என வேதவள்ளி கூற…

“போதும் நிறுத்துங்க எல்லாரும்…!!” என்றவனின் சிம்ம கர்ஜனையில்…

அடங்கிப் போயிருந்தது அனைவரின் இதய துடிப்பும்…

“என்ன பேசிட்டு இருக்கீங்க எல்லாம்… அவளும் இந்த வீட்டு பொண்ணு தானே…. அவ முதல்ல இருந்தே இந்த கல்யாணம் வேணாம் வேணான்னு தான் சொல்லிட்டு இருந்தா… யாராவது காது கொடுத்து கேட்டீங்களா…. என்ன பிடிக்காம தான விட்டுட்டு போனா அதனால நானே பாத்துக்கிறேன் நீங்க எல்லாம் உங்க வேலைய மட்டும் பாருங்க….!!” என கத்தரித்துப் பேச

என்ன தம்பி இப்படி பேசுற உனக்காக தானே நாங்க எல்லாம் பேசுறோம்…..!! என வேதா குதித்தார்.

அதைத்தான் சொல்றேன் எல்லாரும் எனக்காகவே பேசினீங்க… அவளுக்காக யாருமே பேசலன்னு..???

அதான் அவளை அவளே பார்த்துக்கத் தெரியும்னு போயிட்டா…!!

ஏன் அத்தை, அவ உங்க பொண்ணு தான? அவளை எல்லாரும் இப்படி பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க…!! என கவிதாவிடம் கேட்க…

இல்லை தனா அவ உன்னை..! என தடுமாறினார்….

அண்ணன் புள்ளை மேல வச்ச பாசம் பெத்த பொண்ணு மேல இல்லாம போயிடுச்சா அத்தை…!!

என்ன வார்த்தை சொல்ற தனா…. உங்க எல்லாரையும் விட எனக்கு அவளதான்டா ரொம்ப பிடிக்கும். என்ன திட்டினாலும் சரி, என்ன பேசினாலும் சரி, அடுத்த நிமிஷம் அம்மானு என்கிட்ட தான் ஓடி வருவா…. ஆனா இப்போ அவ தப்பு பண்ணிட்டு தலை குனிய வச்சிட்டு போய்ட்டாளே.. அப்போ எப்படி என்னால அவளுக்கு ஆதரவா பேச முடியும்…!! என பரிதவித்தார்…

யார் என்ன சொல்லி இருந்தாலும் நீங்க பேசியிருக்கணும் அத்தை… அவளுக்காக நீங்க பேசியிருக்கணும். இதை நான் சொல்லல, அவ அப்படித்தான் நினைச்சுட்டு நம்மளை வெறுத்துட்டு போயிருப்பா..!! மதுராவை முற்றிலும் அறிந்தவனாகக் கூறினான்…

“இங்க பாருங்க இது என்னோட தனிப்பட்ட விஷயம். இதில் யாரும் தலையிட வேண்டாம். அவ மனசை மதிக்காம போனதுக்கு தண்டனையா இத நான் எடுத்துக்குறேன். இப்போதைக்கு இதைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம். எல்லாரும் அவங்கவங்க வேலைய எப்பவும் போல பாருங்க போங்க!” என அனைவரையும் சமாளித்தவன்.

அவன் அறைக்குள் சென்று கட்டிலில் கையால் முகம் மறைத்தபடி படுத்துக்கொண்டான்….

அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார்….அதிவீரராம பாண்டியன்…..

“தனா….??”

“வாங்க தாத்தா….!!” என முகத்தை அழுத்தித் தேய்த்துக்கொண்டு குரலை மாற்றிக்கொண்டு இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டான்…..

“என் மேல ஏதாவது வருத்தமாயா….??”

“ஐயோ அப்படியெல்லாம் எதுவும் இல்லை தாத்தா…!!”

“அப்புறம் ஏன்ப்பா உன் சோகத்தை எனக்குக் காட்ட மறுக்குற….!!” என்றதும் அவர் தோள்களில் முகம் புதைத்தவனின் உடல் குலுங்கியது…..

“என்னால தானப்பா உனக்கு இப்படி அவமானமாகிப் போச்சு…!!” என்றவர் குரல் உடைந்து அழத் தொடங்கிவிட்டார்…

“ஐயோ தாத்தா… எனக்கு சமாதானம் சொல்ல வந்துட்டு நீங்க இப்படி அழுறீங்க….!!”

அவ கடைசி வரை என்ன மன்னிக்கவே மாட்டாளாப்பா…?? என்ன தாத்தான்னு கூப்பிட மாட்டாளா தனா…??

என ஏங்கினார்…

உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா கூடவாது இருப்பாளேன்னுதான்ப்பா உங்க அப்பன் வந்து உன் கல்யாணம் பத்தி சொன்னதும்… உன்கிட்ட வந்து வந்து அவளை கட்டிக்க சொல்லி கேட்டேன்… இப்படி மொத்தமா விட்டுட்டு போவாள்ன்னு நினைக்கவே இல்லைப்பா…!!

என்றவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தார்…

தாத்தா… ஒன்னுமில்ல… இருங்க நான் மாத்திரை எடுத்துட்டு வரேன்…!! என்றவன் நிற்காமல் மின்னலாக சென்று மருந்தை கொண்டு வந்து கொடுத்து ஆசுவாசப்படுத்தியவனின்…

கையை பிடித்து கொண்டு…”என் பேத்தி மேல கோவப்படாத ராசா…!!” என்றார்…

“நான் எதுவும் நினைக்கல தாத்தா…!!” என சொன்னவனை கூர்ந்து பார்த்தவர்…

“நீ பார்த்துக்குவேன்னு சொன்ன அப்போவே புரிஞ்சு போச்சு பா… பாவம்யா சின்ன பிள்ளைல இருந்தே ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்…அவளுக்கு பதில் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்….!!” என கை எடுத்து கும்பிட…

“ஐயோ தாத்தா அவ இந்த ஊரிலேயே இல்ல. ஏன் இந்த நாட்டிலேயே இல்ல… அதுவும் இல்லாம அவளை நான் என்ன பண்ண போறேன்…நான் எதுவும் பண்ணல நீங்க வருத்தப்படாதீங்க…!!” என சொன்னவனை அமைதியாக பார்க்க…

அவர் கைகளை எடுத்து தட்டிக்கொடுத்து “உங்க பேத்தி மேல உள்ள பாசத்துல என் மேல நம்பிக்கையா வைங்க தாத்தா…!!” என சிரித்து விட்டு வெளியே போனவன் முகம் பாறையை தத்து எடுத்தது போல் இருந்தது…


வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு புல்லட் வண்டியை மிதித்து ஸ்டார்ட் செய்து எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றான்…
அங்கு ஒருவனை கட்டி வைத்து அடித்துக் கொண்டு இருந்தனர்…


“என்னடா ஏதாவது வாயை திறந்தானா இல்லையா…!!” எனக் கேட்டவாறே ஒரு கையால் தங்க காப்பை இறுக்கி விட்டவாறே நடந்து வந்தவனைப் பார்க்க… ஏதோ எமன் பட்டு வேட்டி சட்டையில் வந்தது போல் இருக்க…கைகளை எடுத்து தட்டி கொடுத்து “உங்க பேத்தி மேல உள்ள பாசத்துல என் மேல நம்பிக்கையா வைங்க தாத்தா…!!” என சிரித்து விட்டு வெளியே போனவன்…

பயந்து நடுங்கினான் ஏற்கனவே… அவர்கள் அடித்ததில் குறை உயிராக இருந்தவன்…. இவர் அடித்தால்.. டெத் கன்ஃபார்ம் என மிடறு விளங்க முயல விட்டால் தானே…

தனஞ்ஜெயன் அவனை ஓங்கி விட்ட அறையில் வாயில் வழிந்த ரத்தத்தோடு வந்தது…

மீண்டும் அடிப்பதற்காக தனா கையை ஓங்க…

“ப்ரோ.. ப்ரோ.. அடிக்காதீங்க ப்ரோ சொல்லிடுறேன்… ப்ரோ… அவள் நியூயார்க்கிற்குப் போயிருக்கிறாள்!”

“அங்கு.. எங்கு.. எதற்கு…?” கர்ஜனையாகக் கேட்க…

“தெரியாது ப்ரோ…!!” வாயில் வழிந்த ரத்தத்தோடு.. மயக்கத்தில்.

“சொன்னா கேட்க மாட்ட..” என்றபடி கையை மீண்டும் ஓங்க.

“ப்ரோ மதர் பிராமிஸ் ப்ரோ… என்கிட்ட நியூயார்க் போறேன் மட்டும் தான் சொன்னா ப்ரோ வேற எதுவும் சொல்லல ப்ளீஸ் ப்ரோ நம்புங்க ப்ரோ…!!” எனக் கெஞ்சினான்…. ஸ்ரீ… மதுராவின் நண்பன்…

“டேய் இவனைக் கழட்டி விடுங்கடா… !!” என்றதும்…

உயிர் தப்பித்தால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட்டான்.

“வாடி என் அத்த பெத்த ரத்தினமே… மேடம் நியூயார்க்ல இருக்கியா…. என்னைய அவமானம் படுத்திட்டு போன உன்னை விட்ருவேனா ராங்கி….!!”

என அரக்கத்தனமாக சிரிக்க…

அவை

இரும்புப் பறவைக்குள் அமர்ந்து இருந்தவளுக்கு கேட்டதோ என்னவோ தூக்கிப் போட… சுற்றிப் பார்த்தவள்… பின்பு அவள் இருப்பது நியூயார்க் செல்லும் விமானம் என்றதும் பெரும் நிம்மதி கொண்டாள்.

எத்தனை நாளைக்கு அவள் நிம்மதி என கைகட்டி சிரித்தபடி வேடிக்கை பார்த்தது… விதி…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top