எங்கு காணினும் பச்சை நிற மை பூசிய பசுமை.. காணும் கண்களுக்கும் மனதிற்கும் இனிமை சேர்க்கும் அவ்வூர், அதுவே தேனி மாவட்டம்…
எண்ணற்ற அருவிகளையும், அணைகளையும் தன் சிரசுக்கு அழகு சேர்க்கும் மாணிக்கமாக அவ்வூரின் சிறப்புகள் சொல்லில் அடங்காதவை…
அத்தகைய எழில் கொஞ்சும் ஊரான உத்தமபாளையத்தில் இருக்கும் இந்திர பவனத்தில்…
இன்று திருவிழா…
மணி விழா காணும் மூத்த தம்பதிகளுக்கு சஷ்டியப்தபூர்த்தி…
ஊரே திருவிழா கோலம் பூண்டது…
ஊரின் எல்லை முதலே வரவேற்கும் தோரணம், அவ்வூரின் இளந்தாரிகள் அவர்களின் காதலனுக்காக வைத்திருக்கும் பேனர்கள் என அனைத்துமே புதிதாக வருவோரையும் அழைத்துச் செல்லும் இந்திர பவனம் வரை.
உச்சி கோபுரம் முதல் தளர தொங்கப் போட்டிருக்கும் பூ தோரணங்கள் தான் என்ன… மாவிலை தோரணம், தென்னங்கிற்று தோரணம் என சாதாரணமாகவே ஜொலிக்கும் அம்மாளிகை இன்று சர்வ அலங்காரத்தில் கம்பீரமாக எழுந்து நின்று வரவேற்றது…
ஏலே வேலா… என்னவே அங்க பராக்கு பார்த்துட்டு இருக்கவ.. போ போய் புறத்தால சமையல் ஆச்ச பாரு.. அப்படி அன்னலட்சுமி அத்தைக்கு ரூம்ல ஹீட்டர் வேலை செய்யலையாம் அது என்னன்னு பாரு.. அப்படியே டவுன்ல இருந்து வரவங்களுக்கு வண்டி அனுப்ப சொன்னேனே அனுப்பிட்டியா… அது என்னனு பாரு… என கட்டளை இட்ட படியே போனவர்…
ஹான் வேலா கல்யாண பொண்ணுங்களுக்கு பெரிய ஆத்தா ஏதோ பரம்பரை நகை தரணும் சொல்லிட்டு இருந்துச்சு. போய் அதை அவங்க கிட்ட சொல்லிடு. அப்புறம்…!! என தொடர்ந்து கொண்டே போக…
சப்பா கேட்ட எனக்கே இப்ப கண்ண கட்டுதே. இந்த மனுஷன் எப்படி மூச்சு விடாம பேசுறாரு..!! என வீர பாண்டியனின் வாயை பார்க்க…
ஏலே கூறு கெட்ட குப்பா என்னடே என் வாயை பார்த்துட்டு நிக்கிறவன்.. சீக்கிரம் போய் அம்புட்டையும் செய்யல. பராக்கு பாக்க முழி இருக்காதுடியே.. போவே வெரசா..!! என வேலனை விரட்டி விட…
இப்படி எல்லா வேலையும் என் ஒருத்தன் கிட்டயே சொன்னா எப்படி.. இப்ப அவர் சொன்னதுல பாதிதான் நியாபகம் இருக்கு.. ஒரு வாய் சோத்துக்கு ஆசைப்பட்டு இந்த குடும்பத்துல வந்து மாட்டிகிட்டேனே..!! என புலம்பிக் கொண்டு போனவனை…
என்னடா அங்க சத்தம்…!
ஹிஹி ஒண்ணுமில்லீங்கய்யா, வாய்க்குள்ள கொசு போயிடுச்சு..!! என சமாளிக்க..
பார்த்துடே, அப்புறம் சோறு திங்க வாய் இல்லாம போய்டப் போகுது..!! என்றது..
ஆத்தி, இதோ வந்துட்டேனுங்க பெரியம்மா.. என அழைக்காத குரலைக் கேட்டு ஓடிப் போன வேலைக்காரனுக்கு ஜஸ்ட் மிஸ், இல்லை முதலுக்கே மோசம் ஆகிப் போயிருக்கும்..!! என கல்யாண வேலைகளை பம்பரமாக சுழன்று பார்த்தார்…
பின்னே பெரிய வீட்டுத் திருமணம் என்றால் சும்மாவா, அதுவும் ஒரே நாளில் மூன்று திருமணம் என்றால்..
என்னது மூன்று திருமணமா..?? எப்படி..? யாருக்கு..?? என்கிற கேள்வி அவ்வூரின் மக்களுக்கும் இருந்தது…
அதிவீரராம பாண்டியனின் பேரன் பேத்திகளுக்குத் திருமணம், அதுவும் ஒரு நாள் இரவில் முடிவு செய்யப்பட்ட திருமணம்…
அப்படி என்ன ஆச்சு ஒரே நாளில் அவர்களின் திருமணத்திற்கு என்று ஊரார் கேட்ட கேள்விக்குப் பதிலாய் அவர்கள் சொன்னது…
பேரனுக்கு இப்போ தான் கல்யாண நேரம் கூடி வந்து இருக்கு, இதை விட்டால் அவனுக்கு திருமண யோகம் அடுத்த ஐந்து வருடத்துக்கு இல்லைனு ஜோசியர் சொன்னதாகவும் கூற…
மீண்டும் ஓர் கேள்விக் கணையைத் தூக்கி வீசியது வம்பர் கூட்டம்.
“ஏன்யா பெரிய வீட்டுக்காரரே.. பெரியவ இருக்கும் போது எதுக்கு சின்னவளைப் பேசி முடிச்சீரு..!!” என விடாக்கண்டனாகக் கேட்டவருக்கு…
பதில் சொன்னார்.. அதிவீரராம பாண்டியரின் சக தர்ம பத்தினி சிவகாமி.
“அது அவ ஜாதகம் நம்ம பெரியவனோட பொருத்தம் சேரலைன்னு நம்ம சிம்மனூர் ஜோசியர் சொல்லிபுட்டாக.. அதான் அடுத்து இருந்த சின்னவளைப் பேசி முடிச்சிட்டோம்.. பெரியவ இருக்கும் போது சின்னவளுக்கு எப்படி கல்யாணம் பண்ண..!!”
ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மறு கண்ணிற்கு வெண்ணெயையும் வைக்க முடியுமா..?? இரண்டுமே என் பேத்திங்கதானே… அதான் அவளுக்கு ஏற்கனவே பொண்ணு கேட்டு வந்தவங்களை அருமையான மாப்பிள்ளையா என் பேத்திக்கு குணத்துக்கு ஏத்த மாதிரி பேசி முடிச்சிட்டோம்…. அருமை பேரப் புள்ளைங்க கல்யாணம் ஆனா உக்காந்து பார்க்க நேரம் இல்லை அண்ணே… தலைக்கு மேல வேலை கெடக்கு. நாங்க வாரோம் அண்ணே..!!
ஏலே முத்தா அண்ணாவுக்கு அந்த காபி தண்ணிய கொண்டாந்து கொடு….!! என கையோடு கணவரை சாதுரியமாக அழைத்துக்கொண்டு போனவரை பார்த்தவர்..
ஏதோ பெரிய வீட்டு விவகாரம் போல நமக்கு எதுக்கு…? என அருகில் இருந்தவரிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டார்…
கிடைத்தது சொற்ப நேரமே என்றாலும் அவர்கள் செய்யும் ஏற்பாடுகளில் தெரிந்தது அவர்களின் செல்வ செழிப்பும், ஆளுமையும் என்ன என்று பறைசாற்றியது..
பறந்து பறந்து வேலை செய்துகொண்டு இருந்தார் சகுந்தலா. பின்னே இருக்காதா அவரின் அரும்பெரும் மைந்தன் திருமணம்..
பிள்ளைகளின் திருமணத்தை விட பேராசை பெற்றவர்களுக்கு இருந்து விட போகிறது.
“ஆத்தா பெரிய ஆத்தா மணப் பொண்ணுங்களை கூட்டிட்டு பூஜை அறைக்கு வர சொல்லுச்சு….!!’என வேலன் கூறி விட்டு போக..
சக்கரம் கட்டிய கால்களை தரையில் படாமல் பறந்து ஓடினார்…
சாத்வீகமான முகத்துடன் முழு அலங்காரத்தில் கலை மகளாக ஜொலித்தாள் மூத்தவள் சந்தியா…
கன்றி சிவந்த முகத்தில் கோபத்தையும் வெறுப்பையும் கொட்டி, “எதாவது பண்ணிக்கோங்க” என தேமேவென அமர்ந்து அவர்கள் ஒப்பனைக்கு தன்னை கொடுத்து விட்டு இருந்தாள் கடைக்குட்டி. அறுந்த வாலு, கோட்டி சிறுக்கி என இத்யாதி பட்டாங்களை இளையவள் கொண்ட மதுரா.
“அம்மாடி என் மருமகளுங்க எம்புட்டு அழகு..” என திருஷ்டி முறிக்க பூவாக மலர்ந்தாள் ஒருத்தி, தட்டி கழித்தாள் ஒருத்தி. “வாங்க வாங்க பெரியாத்தா, உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க….!!” அழைத்து போக…
நேர்ந்து விட்ட ஆடாக கிளம்பி சென்றாள்.
பூஜை அறையில் ஆசீர்வாதம் வாங்க பணிந்த இருவரையும் தூக்கி சென்னியில் மொத்தமிட்டு…
“மகராசியா உங்க குடும்பம் தழைக்க நல்லா இருங்க..!!” என்றவர் இருவருக்கும் சமமாக ஐந்து கிலோ தங்க நகைகளை கொடுத்தார்…
வேண்டா வெறுப்பாக கையில் வாங்கினாள் மதுரா.
அவளுக்குக் கொடுக்கப்பட்ட நகைகளையும் சந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட நகைகளையும் கூர்ந்து பார்த்தவள்…
“இந்தத் தாய்க் கிழவிக்கு எவ்வளவு வெறுப்பு என் மேல இருந்திருந்தா எனக்குப் பழைய நகையைக் கொடுத்திருப்பாங்க..!!”
“இது அக்காவுக்கு மட்டும் புது டிசைன் உள்ள அழகான நகைங்க.. சே..” என மனதால் சுணங்கிப் போனாள்..!!
அவளும் என்னதான் செய்வாள்? அவள் மறுக்க மறுக்க ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். அவளுடைய மறுப்புகளை யாரும் பொருட்டாகவே மதிக்காமல் செய்வதில் அவள் கொள்ளும் கோபம் நியாயமாகத் தெரிந்தது
ஆனால் அவள் அறியாதது ஒன்று, சிவகாமி மதுராவுக்கு தந்தது பரம்பரை நகைகள். அவை பார்க்க புது மாடலாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதன் மதிப்பு தெரிந்தே சேர்க்க வேண்டியதை அதன் இடத்தில் சேர்த்துள்ளார் என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
தனி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டவள் மனம் வேதனையில் தத்தளித்தது.
சிறுவயது தொட்டு அவளுக்கு இந்த குடும்பம் பிடிக்காமல் போக காரணம் இருவர். ஒன்று அவளை எப்பொழுதும் மட்டம் தட்டும் அதிவீரராம பாண்டியன், மற்றொன்று அவள் இக்குடும்பத்தை பிரிந்து ஹாஸ்டல் போக காரணமாக இருந்த தனஞ்ஜெயன்.
யாரை வாழ்வில் அதிகமாக வெறுத்தாளோ அவனுடன் வாழ்க்கையை சேர்த்து வைத்ததுதான் விதியோ…
கண்களில் கண்ணீர் துளிகளுடன் கைபேசியை எடுத்து அழைப்பு விடுத்தவள்…
“எல்லாம் தயார் தானா.. நான் சொன்ன மாதிரி வந்துடுங்க.. எந்த பிளானிலும் மாற்றமில்லை.. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்..!!” என பிடிவாதமாக சொன்னவள்.. கண்ணீரை சுண்டி விட்டபடி “பை பாய் மிஸ்டர் ஹிட்லர்.. அண்ட் பேமிலி…!!” என சொல்லிக் கொண்டவள் தப்பிச் செல்வதற்கு தேவையானவைகளை எடுத்து வைக்கலானாள்.
விருப்புக்கும் வெறுப்புக்கும் நூலிழைதான் அளவு, எல்லை கடந்தால் எதுவும் மாறலாம்.. ஆனால் எல்லை கடக்க அவள் இருப்பாளா..??”
க



