மதுரம் சிந்தும் காதலே-15

மதுரா மனதில் இருப்பதைக்கூட சரியாகச் சொல்லும் ஒரே ஜீவன் தனா மட்டும்தான் என்பதும் அவளுக்குப் புரிந்திருந்தது. ஆனால், அவன் மனதில் இருப்பது மட்டும் ஏன் புரியவில்லை? இல்லை, அவள் மூர்க்கம் அவளது சிந்தனையைத் தடுக்கிறது.

சீறும் சிங்கமாக, வீறு கொண்டு ஜெய்யின் அறையைத் திறந்து கொண்டு உள்ளே போனவள்…

“யோவ் மாமாஆஆஆஆ….!!” என கத்த வாயைத் திறந்தவள்…

ஆறடி உயரத்தில் அம்சமான பைசெப்ஸ் கொண்ட புஜம், திண்மையான மார்புடன்… அதற்கு கீழ் பல படிக்கட்டுகளும்… பிரிஃப் மட்டும் அணிந்து காக்கப் பட்ட அவன் ஆண்மையைக் கண்டு, “சீ…” என வெட்கப்பட்டவள்… முறுக்கிய தசை நார்களை உடைய தொடை அழகை ரசிக்காமல் இல்லை…

“ஹ்ம், இந்த காட்டுப் பன்னி இவ்வளவு ஹாட் ஃபிகரா…?” என வாயை நான்கு டைனோசர்கள் போகும் அளவு திறந்து வைத்து இருக்க…

அவள் உள்ளே வந்ததை கவனித்தவன், வேண்டும் என்றே அவள் முன் சிங்கிள் பீஸில் அலையத் தொடங்கினான். முதலில் அவளை வெறுப்பேற்ற நினைத்தவன், அடித்துத் தின்னும் பார்வையில் லட்ஜையுற்று உதட்டை கடிக்க வைத்துவிட்டாள் அவன் மனைவி.

ஆண்களின் வெட்கம் அழகோ அழகு என்பதை தனஞ்ஜெயன் தலை கோதி தன்னை கட்டுப்படுத்துவதில் கண்டு கொள்ளலாம்….

“என்னை பார்த்து முடிச்சாச்சானா போய் உன் வேலையை பாக்குறியா இல்ல உள்ள வந்து எனக்கு முதுகு தேய்ச்சு விடுறியா…..!!’என பேசியபடியே துண்டை எடுத்துக்கொண்டு குளிப்பதற்கு ஆயத்தம் ஆனான்….

“இவர் பெரிய மன்மத வசம் வச்சிருக்கறதுக்கு… சிங்கிள் பீஸ்ல கூட கேவலமா தான் இருக்க மாமா… அவ்ளோ சீன் உனக்கு இல்லை போயா…!!” என சிலுப்பிவிட்டு சண்டை கோழி தப்பிக்க பார்க்க…..

சிலுப்பிய குதிரை வால் முடியை பிடித்து இழுத்து

“உள்ளவாடி ராங்கி, இந்த சிங்கிள் பீஸ் இல்லாம காட்டுறேன்…. பார்த்துட்டு பெருசா இல்லையா சொல்லு….!!” அணைத்தவாறே குளியல் அறை நோக்கி இழுத்துச் சென்றான்..….

“ஆஆஆஆ…சீ…சீ…ஆ விடுயா மாமா…. !!” இரு கைகளை வைத்து குளியல் அறை வாயிலை பிடித்துக்கொண்டு இவள் முரண்டு பண்ண….

“நீ தானடி கேட்ட…. பொண்டாட்டி கேட்டா புருஷன் நிறைவேற்றி வைக்க வேண்டிய கடமை இருக்குல்ல…. வா உள்ள வந்து சீன் பார்த்துட்டு எனக்கு எவ்ளோ மார்க் சொல்லுடி….!!!” என கழுத்து வளைவில் முகத்தை புதைத்து… அவள் பின் மேனியில் அழுத்தம் கொடுத்து தன்னோடு இணைக்க…. அதில் உயிர்த்து எழுந்த உயர் அழுத்த மின் கம்பி… மதுராவின் பட்டர் பன்னை பதம் பார்க்க….

“ஆ…மாமா…. ப்பா விடுங்க மாமா… நீங்க அழகு மன்மதன், ஒதுக்குறேன்…. குத்துது மாமா…. ப்ளீஸ் பயமா இருக்கு விடுங்களேன்…..!!” என பயந்து கெஞ்ச…

“சே பே நாயே, உனக்கு வாய் மட்டும் தான்டி சூரப்புலி போல…. இடிச்சதுக்கே கத்துற… அப்போ எப்படிடி தாங்க போற….!!” என அவள் கழுத்தில் மீசை உரசி பேச….. “ஸ்ஸ் ஹா….!!” என்று கூசி நெளிந்தாள் பாவை.

“போடி சுண்டெலி, போய் மாமாக்கு நம்ம ஊர் சாப்பாட… உரைச்சு மணக்க மணக்க சமைச்சு வச்சு வை, வந்து ஒரு பிடி பிடிக்குறேன்…!!!” என்றவன்…. கை அழுத்தத்தில் இடுப்பு உடைந்து விடுமோ என பயந்து போனாள்….

அவன் விட்டதும் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா போல…. பாய்ந்து அறைக்கு ஓடி கதவை போய் அடைத்துக்கொண்டவள்…. கதவில் கண் மூடி ஆசுவாசம் எடுக்க….

மூடிய கண்களுக்குள் அவன் பிம்பம்…. கழுத்து வளைவில் அவன் அனல் மூச்சு காற்று….. அவன் தழுவிச் சென்ற உடலில் அவன் வாசனை…. இருந்து இளையவளை இம்சிக்க…..

“உஃப்! ஆனாலும் இந்த மாமா இம்புட்டு அழகுனு தெரியாம போச்சே…!!” என நினைக்க….

“ஏன் தெரிஞ்சா ஓடி வராம இருந்து இருப்பியா….??” என அவள் மனம் காலை வார….

“நோ…சே.. இவன் எனக்கு வில்லங்கிறத மறந்துட்டு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம வெறிக்க வெறிக்க பார்த்து இருக்கேன்…. அடியே மது, இவ்ளோ தான் உன் கெத்தா… இவ்ளோ தானா நீ…. கண்டதையும் காட்டி கன்னிப் பொண்ணு மனசை கெடுக்க… பார்க்குறான்…. கவுந்துடாத மது….!!” என தறிகெட்டு அலைபாயும் மனதை அடக்க…. முயன்றாள்….

முடியுமா…?? இல்லை அவன் தான் விடுவானா…!!

அதன் பின் கண்டதை யோசிக்காமல் குளித்து கிளம்பி வந்து உணவைத் தயாரித்து உணவு மேஜையில் வைக்கவும், தனா தயாராகி வரவும் சரியாக இருந்தது…

உணவு மேஜையில் அமர்ந்தவனைப் பார்க்கத் தவிர்த்தவள்… உணவைப் பரிமாறிவிட்டு ‘எனக்கு என்ன?’ என்பது போல் நின்றவளைப் பார்த்துக்கொண்டே… சாப்பிட்டான்… சந்தேகமில்லாமல் அவளையும் தான்….

வாயிறு நிறைய மட்டும் சாப்பிட்டவன்….

“சைக்கு என்னடி செஞ்சு வச்சிருக்க? உப்பு இல்லை, உரைப்பு இல்லை… மனுஷன் தின்பானா??” என கத்த… திடுகிட்டவள்….

“இல்லையே, எல்லாம் சரியாத்தானே இருந்துச்சு…!!!” என சந்தேகமாகச் கூற….

“அப்போ நான் பொய் சொல்றேனாடி? எருமை வா, வந்து நீயே சாப்பிட்டுப் பார்??” என அவளை இழுக்க… அவனிடம் வந்து குனிந்து நின்றவள் வாயைத் திறக்க… அவள் கையில் வாங்குவாள் என நினைத்தவன்… வாயைத் திறக்கவும் மறுமுறை சிந்திக்காமல் அள்ளி ஊட்ட….

வாங்கி உண்டவள் அடுத்த கவலத்திற்காக வாயைத் திறக்க… ஊட்டிக்கொண்டே அவள் அறியாமல் மடியில் அமர வைக்க… இலகுவாக உட்கார்ந்தவள்….

அவள் உண்ணும் வேகத்தைக் கண்டு, அவளது பசியை விட அவள் உறவுகளுக்காக ஏங்கியது தெரிந்து… அவள் மீது இரக்கம் கொண்டான்….

திருப்தியாக உண்டு முடித்தவள்… அப்போதுதான் கவனித்தது போல் அவனிடம் இருந்து துள்ளிக்குதித்தவள்…..

“இங்க பாரு மாமா… என்கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காதே…!!” எனச் சீறிவிட்டுச் செல்ல…

“அடி என் ராங்கி, இவ்வளவு என் மடில உக்காந்து சொகுசுப் பூனை கணக்கா… நல்லா மூக்கு பிடிச்சு தின்னுட்டு சிலிர்த்துட்டுப் போறியா… கொழுப்பு புடிச்சவளே… வாடி, அந்த கொழுப்பை வேலை வாங்கியே கரைக்கிறேன்…!!” என நினைத்தவன், அது என்ன வேலை என்ற கற்பனையில்… அடிவயிற்றில் முட்டி கொண்டு நிற்க…

“நீ வேற சும்மா இருடா… அவளை விட உன்னைச் சமளிப்பது தான் பெரிய விஷயமா இருக்கு…!!” எனத் தட்டி அமுக்கி ஆறுதல்படுத்தினான்.

இருவரும் ஒன்றாகக் கிளம்பி வெளியே வர…

காரை எடுத்து கிளப்பியதனா… மதுராவை அருகில் அழைக்க…

“ஹப்பா! இன்னைக்கு நடக்கத் தேவை இல்லை…!!” என்ற நிம்மதியில் அருகில் சென்று கதவைத் திறக்க…

“ம்ஹும்…” திறக்கவில்லை… அவனைப் பார்க்க ஜன்னலைத் திறந்து அவளிடம் இருந்த தன் கோர்ட் மற்றும் பைலை வாங்கியவன்…

“நீ செஞ்ச கேவலமான டிபன்னுக்கு உன்னை கார்ல வேற கூட்டிட்டுப் போகனுமா…?!!! நடந்து வாடி… கொழுப்பாவது குறையும்…!!!” என அவள் குனிந்து நின்ற போது தெரிந்த மலைச் சரிவைப் பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட…

“போடா பன்னி, காட்டான், குரங்கு… எரிச்சல் கிளப்பிட்டுப் போறான்…!!” என காலை உதைத்துவிட்டு நடந்து வந்து சேர்ந்தாள்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top