அவள் அப்பாவி பார்வையில் பீறிட்டு வந்த சிரிப்பை நிரஞ்சன் கை வைத்து மறைத்துக்கொள்ள… அவனைப் பார்த்து அம்மா மற்றும் மகள்கள் இருவரும் முறைத்தனர்… அவர்களால் அதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாதே….
பின்பு அவனே…. “அங்கிள் பாவம், இந்த ஒரு தடவை எனக்காக மன்னிச்சுடுங்க அங்கிள்… தப்பை உணர்ந்தவங்களுக்கு அதைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கணும்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்வார்… அங்கிள்…. அது உங்களுக்குச் சரின்னு பட்டா மட்டும் மன்னிச்சு விடுங்க… நீங்க பெரியவங்க, என்ன செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும்…!!” எனப் பெரிய பிட்டைப் போட்டுவிட்டுச் சமத்தாக அமர்ந்து கொள்ள….
“இந்த ஒரு தடவை இந்தத் தம்பி சொன்னதற்காக மன்னிச்சு விடுறேன், இனி ஒரு தடவை பண்ண யார் சொன்னாலும் உனக்குத் தண்டனை நிச்சயம்..!!” என்றவரைப் பார்த்து…
சரிப்பா… சாரிப்பா… என்று அவள் அமர்ந்து சாப்பிடப் போக…
“பாத்தியா அக்கா, நம்ம வீட்ல நீ சாப்பிடறதுக்கு அப்பா அந்த கரடி கிட்ட கேக்குறாரு… இதெல்லாம் ரொம்ப ஓவர்கா….!!” என அம்மு புகைய…
ஷ்! அமைதியா சாப்பிடு..!! பார்த்துக்கலாம்.
“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள், எனக்காக உங்களுடைய கோபத்தை விட்டுத் தந்ததற்கு…!!” என நல்ல பிள்ளையாகப் பேசியவனை மெச்சித் கொண்டவர்… யாழினி இடம் திரும்பி…
“இதுதான் நாங்க உனக்குச் சொல்லிக்கொடுத்த மேனர்ஸ்ஸ்! உனக்காகப் பேசின அவருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லு…!!”
சரிப்பா என்றவள்…
நிரஞ்சனை பார்த்து, “ஈ ஈ தேங்க்யூ அங்கிள்…!” எனப் பல்லை கடித்துக் கொண்டு சொல்ல,
“அடிப்பாவி… அங்கிள்அஅஅ… இருடி… இதே வாயால மாமா கூப்பிட வைக்கிறேன்…!” என நினைத்தவன்… யோசனையில் இருக்க…
“அப்புறம் தம்பி, நீங்க எந்த காலேஜ்ல, என்ன டிபார்ட்மென்ட்ல சேர்ந்து இருக்கீங்கனு எதுவுமே சொல்லல, சொல்லுங்க கேட்போம்…!” என ஹரிச்சந்திரன் எடுத்துக்கொடுக்க…
“நான் இந்த காலேஜ்ல பிசினஸ் டிபார்ட்மென்ட்ல ஜாயின் பண்ணி இருக்கிறேன் அங்கிள்…”
“அடடே! நம்ம யாழினி கூட அதே காலேஜ், அதே டிபார்ட்மென்ட் தான் தம்பி. நல்லதா போச்சு… இனி நீங்களே யாழினியைப் பார்த்துக்கோங்க. உங்க கூட சேர்ந்தால் ஆவது நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்கிறாளா பார்ப்போம்…!” என்றவரை அதிர்ந்து மகள்கள் பார்க்க…
“எஸ் எஸ்…!” எனத் துள்ளிக்குதிக்கச் சொல்லிய மனதைக் கடினப்படுத்தி அடக்கிக் கொண்டு அமர்ந்தான் உத்தமபுத்திரன்…
நியூயார்க்….
தட் தட் என கதவு உடைக்கப்படும் சத்தத்தில்…
சோம்பிக் கொண்டு எழுந்து சென்று கதவைத் திறந்த மதுராவின் முகத்தில் ஜெய் தெரியாமல் தட்டிவிட….
“ஏ…. என்னயா உன் பிரச்சினை எதுக்கு காலங்காத்தால வந்து உயிரை எடுக்குறா…!!” என கொட்டாவி விட்டபடி கேட்க…
“மகாராணி இந்த நேரத்துக்கு எழுந்தா… எனக்கு யாரு காபி போட்டுக் கொடுக்கிறது…. எப்போ பிரேக்ஃபாஸ்ட் பண்ணி கொடுக்கிறது….???” என நக்கலாக தனஞ்செயன் கேட்க…
“ஹெலோ…. நான் உங்க டெனன்ட் அவ்ளோதான்…. என்னமோ பொண்டாட்டி மாதிரி உரிமையா வந்து கேக்குறீங்க…!!!” என அவளும் அதே நக்கலாக கேட்க… (அடியே அவன் ஆல்ரெடி தாலி கட்டுன பொண்டாட்டி தான்மா நீ…)
“உனக்கு அது ஒன்னு தான் குறைச்சல்….!!” (நீயுமாடா)
“ஏன் எனக்கு என்ன குறைச்சல்…!!” என அவள் அங்கத்தை குலுக்கி கேட்க….
ஆடி காற்றில் ஆடி நின்ற பப்பாளியைப் பார்த்தவன்….
பின்னால் கை விட்டுப் பிடித்து இழுத்தவன், தன்னோடு இடிக்கும் படி நிறுத்தியவன்… “எல்லாமே கூடி தான்டி போய் இருக்கு…!!” என்றவன்…. கைகள் பின் சதையை கசக்க…
“ஹக்…!!” என எக்களித்த அவள், பப்பாளி மூக்கு அவன் நெஞ்சில் பட்டு இடித்தே அவனுக்குக் காயம் கொடுக்க…
தன் நெஞ்சு வரை அளவே இருந்தவளைக் குனிந்து பார்த்தவன்….
பிடித்து இழுக்கும் கருவண்டு விழியில் விரும்பித் தொலைந்து போக ஆசை… விடைத்துச் சுருங்கும் நீள நாசி… பல்லைப் பதியக் கடிக்க ஆசை… பதிலுக்குப் பதில் பேசும் செவ்வதரங்களை… கடித்துத் தின்னும் ஆசை கொண்டு பார்த்தவன்… ஏதோ ஒன்று தடுக்க… அவளைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டு….
“இந்த மூஞ்சியக் கட்டிட்டாலும்…. அப்படியே…. குளுகுளுனு வச்சி வாழ்ந்துடுவ போடி…. போய் காபி போட்டு எடுத்துட்டு வா…!!” என அவள் பின்னால் தட்டிவிட்டுச் செல்ல….
“யோவ்… என்ன..?? சும்மா சும்மா என்ன வேலை வாங்குற? ஆபீஸ்ல மட்டும் தான் நீ என் முதலாளி… வீட்ல இல்லை…. போயா…!!” என்றுவிட்டு….
“கொஞ்சம் பொறுமையா போனா என்ன நினைச்சுட்டான் என்னைய நான் மதுரா…. மதுரைகாரி…. இனி சீண்டிப் பார்க்கட்டும் நான் யாருன்னு முழுசா பார்ப்பது எப்படி என்று….” என வசை பாடிக்கொண்டே அவள் அறைக்குள் சென்று குளிப்பதற்கு ஆடையைக் கழட்ட முயன்றவள்….
“அதான் நேத்தே காட்டினியே முழுசா…. நல்லா பெருசா…!!” என உள்ளே வந்தவன் அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டு கூற….
“யோவ் உனக்கு அவ்ளோதான் மரியாதை…. ஒழுங்கா வெளியா போய்டு இல்லை…??”
“இல்லனா என்னடி பண்ணுவ…. நீ என் செக்கரட்டரி தான… நான் இங்க தான்டி இருப்பேன், என்ன பண்ணுவ….!!”
“போயா உன் வேலையும் நீயும்… எனக்கு எதுவும் தேவை இல்லை…. இந்த வீட்டை விட்டுப் போனா… உனக்கு பெனால்டி கட்டணும், அவ்ளோதானா? நான் கட்டிடுறேன், விடு….!!!” என்றவள்…
திருமணத்தின் போது சிவகாமி கொடுத்த நகையை இவள்…
“எனக்குக் கொடுத்தது எனக்குத் தான்…!!” என கையோடு கொண்டு வந்து இருந்தாள்… அதை விற்றாவது கட்டி விடலாம் என இரவே முடிவு செய்துவிட்டு, இப்பொழுது கர்வமாகக் கூறினாள்…. (அடிபாவி…)
அவள் பணம் தருகிறேன் என்றதும்… ஜெய் தன்னிடம் தோற்றுப் போன வருத்தத்தில் முகம் இருண்டு போய் இருப்பான் என ஆசையாக அவன் முகத்தைப் பார்க்க..
அவனோ படு எள்ளலாக அவளைப் பார்த்து சிரித்தவன்… அவளிடம் சில காகிதங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னவன்…..
படிக்கப் படிக்க அவள் முக மாற்றத்தைக் கண்டு அறை அதிர நகைத்தவன்…..
“ஹாஹா…. இந்த ட்விஸ்ட் நீ எதிர்பாக்கலையே…. மது பேபி…. அது தான் எனக்கும் வேணும் சரி சரி…. ஷாக் ஆகி முடிச்சிட்டனா… சீக்கிரம் போய் எனக்கு பிரேக்பாஸ்ட் பண்ணிடு…. இன்றிலிருந்து சமைக்கிறது, பாத்திரங்கள் கழுவுறது, வீடு கூட்டுவது, துடைக்கிறது, முக்கியமா என்னோட ரூம் பெட்ஷீட், பில்லோ கவர், டிரஸ், இன்னர் வேர் கூட… இது எல்லாத்தையும் அழுக்கு போக உன் கையால துவைச்சு போடு…. ஆன் இதெல்லாம் நான் கிளம்புறதுக்குள்ள செஞ்சு முடிச்சு இருக்கணும்… என்ன என் முகத்தைப் பாக்குறா போ… எனக்கு டைம் வேஸ்ட் பண்ணுறது பிடிக்காது… யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்….!!’என்று விட்டு வெளியே போய் விட….
முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டவள்…. “விட்டா முதுகு தேய்ச்சு விடச் சொல்வான் போல..!!” என மனதுக்குள் நினைக்க…..
“அதுவும் லிஸ்ட்ல இருக்கு…. செஞ்சுதான் ஆகணும்….!!” என வெளியே இருந்து குரல் வர….
“ஹான்…!!” என அதிர்ந்து போனாள்…
“அடபாவி… மாமா நீயே தானா… இரு உன்னை….!!” என அவனைக்கண்டு கொண்டவள்…. வீறு கொண்டு அவனை உண்டு இல்லை எனப் பண்ணப் போனாள்… (ஒருவழியா பல்பு எறிஞ்சிடுச்சி..)
இனி பதில் தாக்குதல்… நடக்கும், ஆனால் அது காதல் போராக இருக்கும்… மக்களே…



