ஹையோ… இப்போ எப்படி அவர நேரா பார்ப்பேன்… அடியே மகிழு கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..அதுக்கெல்லாம் சேர்த்து வச்சி கதற கதற அட்வைஸ் பண்ணுவாரே..!!”(அட்வைஸ் மட்டுமே..)
சாம்பவி மாதிரி மூஞ்ச பாவமா வச்சி அழுதுடுவோமா இல்லை அத்தை மாதிரி கால்ல விழுந்துடுவோமா…ரைட் பேசாம இந்த ரெண்டுத்தையும் செய்து பார்த்துட வேண்டியது தான்..!!!” என ராவணனை கவிழ்க்க அதி பயங்கர திட்டங்களை போட்டவளுக்கு எங்கே தெரியும் அவள் மன்னவன் அதை எல்லாம் நொடியில் தவிடு பொடி ஆக்குவான் என்று…
மெல்ல தலையை மட்டும் உள்ளே விட்டு ராவணன் எங்கே என தேட..அதிர்ச்சியுற்றாள்..
அங்கே ராவணன் ஒரு நாற்காலியில் அமர்ந்து அவளை தான் தீர்க்கமாக பார்த்து கொண்டு இருக்க..அவனை பார்த்து அசடு வழிய… உள்ளே வந்தவளை விட்டு இம்மியும் அவன் பார்வை நகர்த்தவில்லை…
“போச்சு போச்சு இன்னைக்கு வசமா மாட்டுனேன்..!!!” என கைகளை பிசைந்தவாறே நின்றவள்…. “முதல் ஆயுதத்தை செஞ்சு பார்த்துட வேண்டியது தான்…!!” என முடிவு எடுத்தவள்.. முகத்தை அத்தனை பாவமாக வைத்துக்கொண்டு…
“சாரி… அத்தான்…!!”
…
“என்ன மன்னிச்சிடுங்க அத்தான் நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்… ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க..!!!” என்றவளை ஆழமாக பார்த்தானே தவிர பதில் ஏதும் அளிக்கவில்லை…
அச்சச்சோ… இதுவும் வேலைக்கு ஆகலையே பேசாம கால்ல விழுந்துடுவோமா..!! என நினைத்தவள் அவன் அருகில் செல்ல…
திடுமென எழுந்த ராவணன்… அறைக்குள்ளாகவே நடை பயில…
ஐயோ ஒரு இடத்துல நிக்காம இப்படி நடந்துட்டே இருந்தா எப்படி கால்ல விழறது… என அவன் பின்னே அவளும் செல்ல…
அவன் நின்றுவிட… ராவணன் மீது முட்டி கொண்டு நிற்க…
ஆ… அத்தான்…!
என்ன…? கடிந்து வந்தன சொற்கள்…
அதான் சாரி சொல்றேன்ல… ப்ளீஸ்… நான்… என அவளைத் தொடர விடாமல்… வந்தன ராவணன் வார்த்தைகள்…
என்னடி சாரி… ஹான் எப்படி எப்படி… ஊரைக் கெடுக்குற அவனை மாதிரி பொறுக்கியை நம்புவீங்க.. ஒருத்தன் உங்களை உண்மையா காதலிச்சு உங்களுக்காக உருகுனா அவனை ஈஸியா கெட்டவன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்க அதான…!!
ஐயோ அத்தான் அப்படி எல்லாம் இல்ல அவனை எனக்குப் பிடிக்காது…!!
ஓ பிடிக்காம தான் அன்னைக்கு நடு ரோட்ல வச்சு கொஞ்சிட்டு இருந்தியா.. உனக்குப் பிடிக்காம தான் அவன் மகி மகின்னு பின்னாடியே வந்தானா.. அது மட்டுமில்ல இன்னைக்குக் கூட யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லியும் அவனை உள்ள விட்டு இருக்க.. அப்படின்னா நான் சொல்றத கேட்கக் கூடாதுன்னு திமிரா…??
இப்படிப் பேசினால் எப்படிங்க.. அவனைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது.. காலேஜ்ல படிக்கும்போது இருந்தே அப்படித்தான் கூப்பிடுவான்.. அப்புறம் உங்களை தப்பா புரிஞ்சிட்டு இருந்தப்போ உங்ககிட்ட இருந்து தப்பிக்க அவன்கிட்ட உதவி கேட்கத்தான் அன்னைக்கு பேசினேன்… அ.. அதுவும் தப்புன்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன்.. ப்ளீஸ்…நான் தப்பு பண்ணேன்னு ஒத்துக்கிறேன் மன்னிச்சிடுங்க…!!
எப்படிடி மன்னிக்க சொல்ற, அன்னைக்கு அவ்ளோ குற்றச்சாட்டு வச்ச என் மேல இன்னைக்கு அது எல்லாம் எங்க போச்சு… நேத்து கூட பவளத்துக்கிட்ட வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு போன… இப்போ மட்டும் என்ன புரிஞ்சுகிட்டேன்னு சொன்னா எப்படி நம்புறது…????
அடியே மகிழு.. என்னடி பண்ணி வச்சிருக்க.. ஐயோ இவர் வேற வல்லாரை கீரையை நிறைய சாப்பிட்டு இருப்பாரு போலயே, இப்படி ஞாபகம் வச்சு கேக்குறாரே… என்ன பண்ணாலும் மசிய மாட்டேங்குறாரே… வேற வழி இல்ல கடைசியா அதையும் செஞ்சு பார்த்துட வேண்டியது தான்..!! என தனக்கு தானே பேசி ஒரு முடிவுக்கு வந்தவள்…
தாவிச் சென்று ராவணனைக் கட்டிக் கொண்டாள்.
“ஏய்.. பேசிட்டு இருக்கேன்ல தள்ளு..!!”
“ம்ம்ம்ஹும் மாட்டேன்..!!”
“அடிங்க ஒழுங்கா தள்ளி நின்னு எனக்கு பதில் சொல்லு…!!” என அவளைத் தன்னிடம் இருந்து நகர்த்த முனைய….
ம்ஹும் ம்ஹ்ம்.. போங்க அத்தான் சிட்டு பாவம்ல… அதான் நான் தப்பு பண்ணிட்டேன்னு மன்னிப்பு கேக்குறேன்ல.. கொஞ்சம் மன்னிச்சா தான் என்னவாம்.. உங்க சிட்டு தான..!!” என குழைவாக கூறிக்கொண்டே அவனை மேலும் இறுக அணைத்துக்கொள்ள.. அதில் தடுமாறினாலும் தன்னை மீட்டுக்கொண்டு…
“போடி… நாளைக்கே என் கேஸ் விஷயமா அந்த மாதிரி இடத்துக்கு போக வேண்டி வரும் இல்ல அந்த மாதிரி பொண்ணுங்க கூட பேச வேண்டி வரும்.. அத எவனாவது போட்டு குடுக்கலாம் இல்லை நீயே பார்க்கலாம்… அப்படி பார்த்துட்டு என்ன ஏதுனு கூட கேட்காம மேடம் ஈஸியா எனக்கு பொறுக்கி முத்திரை குத்திட்டு.. ஹ்ம்ம்ம்ம்..!!” என்று அவன் முடிக்கும் முன்னே அவன் தடித்த அதரங்களை தன் கோவ்வை இதழ் கொண்டு கொய்து இருந்தாள்.. அவனின் சிங்கார சிட்டு… எதிர்பாராத முத்தம் என்றாலும் அவளுக்கு வாகாக தன்னை வளைத்து கொடுத்தவன் அவளுடன் இசைந்து நிற்க..
ம்ம்ம்ம்.ஹூம்..ம்ம்ம்…!! என நீண்ட முத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவள், களைத்து அவன் மார்பிலே இளைப்பாற…
இங்க பாருங்க இனிமே.. ஹா..ஹு இப்படி பேசாதீங்க.. அப்போ இருந்த மகிழ் உங்களையும் உங்க காதலையும் புரிஞ்சிக்காம பேசிட்டா.. இப்போ இருக்கிறது உங்க பொண்டாட்டி மகிழினி ராவணன்.. அவளுக்கு அவ புருஷன் மேல முழு நம்பிக்கை மட்டும் இல்ல உயிரையும் வச்சிருக்கா.. அதனால இனி இப்படி பேசக்கூடாது சரியா..!! என முத்தக் களைப்பில் மூச்சு வாங்க பேசியவளை மையலாக பார்க்க…
மேலும் அவன் மீது ஒன்றி நிற்க…
“ம்ம்ம்.. சரி சிட்டு.. இனி பேசல. இப்போ கொஞ்சம் தள்ளி நிக்கிறியா…
“ம்ஹும்.. மாட்டேன். இப்படி தான் ஒட்டிக்கிட்டு நிப்பேன்..!!!”
“ஆ.. மனுஷன சோதிக்காதடி.. இப்படியே நின்னு உசுப்பேத்திட்டு இருந்தன்னா அடுத்து நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல..!!”
அவன் கூற்றில் கன்னம் சிவந்தவள், அவளுக்கும் அவன் அணைப்பு தேவைப்பட, மெல்ல கால் கட்டை விரலால் எக்கி அவன் காதில் தன் சம்மதம் வழங்க…
அவ்வளவுதான், ஒற்றை கையால் தன் மனையாளை தூக்கி சென்று கட்டிலில் விட்டவன், அவளை பார்வையால் பருகி கொண்டே சட்டை பொத்தான்களை கழட்டுவதை பார்க்க, வெட்கம் மேலிட கவிழ்ந்து படுத்து கொள்ள…
வெட்டி வைத்த வெண்ணை பந்துகளை ரசித்தவாறே, அவள் பின் அழகை பிசைந்தவாறே, அவள் மீது தன் முழு பாரத்தையும் அழுத்த…
ம்ம்ம்.. ஹா…!!”என ஸ்ருங்காரம் சிணுங்க.. அது மன்னவனுக்கு கள் வெறி கூட்ட….அவள் கிரக்கிக்கும் முன்னரே அவளை திருப்பி போட்டவன்..நெற்றி, கன்னம் என முத்த ஊர்வலம் நடத்த..மயங்கினாள் மாது…
முற்றுமாக அவளை அறிய தடையாக இருந்த மேலாடையை நீக்க மாசு மாறுவற்ற பாலாடை மேனி பித்தம் கொள்ள செய்ய… அவளுடன் சொர்க்கபுரி செல்ல முனைந்தவனை… இம்சித்தது தொலைபேசி…
“ஆ..எனக்குனே வருவீங்களா டா சைக்கு… நான் கொஞ்ச ரெமோ மூடுக்கு வர கூடாதே…மூக்கு வேர்த்துடுமே இந்த ரைட்டர்க்கு.. (ஆயா சத்தியமா நான் இல்லடா..)
“ஹலோ…..!!”
“சார்… நீங்க புடிச்சி கொடுத்த கைதிங்க தப்பிச்சு போய்ட்டாங்க சார்…!!”
“என்ன…??எப்போ..??”
அவங்கள தொரத்திட்டு போகும் போது.. பெரியவரை விட்டுட்டு மனோ மட்டும் தப்பிச்சு போய்ட்டான் சார்… பெரியவரை பிடிச்சாச்சு.. சார்… உங்ககிட்ட தகவல சொல்ல சொன்னாங்க சார்…!
ம்ம்ம் நான் வரேன்…!! என்றவன் அவனை ஏக்கமாகப் பார்த்த மகிழின் நெற்றியில் முத்தம் வைத்தவன்…
ஹும் கடைசி வரை எனக்கு ஃபுல் மீல்ஸ் திண்ண விடமாட்டாங்க போலடி.. வெறும் ஆக்ஷன் சீன் வச்சே ஸ்வாகா பண்ணிடுவாங்க போல.. நீ வேற இப்படி பார்த்து வைக்காதடி போகவே மனசு வரமாட்டேங்குது…!!
ச்சீ போங்க…!!
வேற வழி… போகத்தான் வேணும்… சிட்டு..!!
ம்ம்ம்…?
சிட்டு அந்த மனோ தப்பிச்சிட்டானாம்டி..!!
என்ன அத்தான் சொல்றீங்க…எப்படி..!
வந்து சொல்றேன் அதுவரை தாங்குற மாதிரி கிஸ் கொடுடி..!!
உங்களுக்கு இல்லாததா..!! என்றவள்..
அவன் கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்து அவன் தடித்த இதழ்களை எட்டிப் பிடித்து கவ்விக்கொள்ள… மீண்டும் மூண்டது முத்த யுத்தம்… இதுவே அவன் கடைசி முத்தம் என்பதை அறிந்திருந்தால்…!!
கடமை உணர்ந்து தன்னை மீட்டுக் கொண்டு விடைபெற்றுச் செல்ல, இனம் புரியாத பதைபதைப்பு வந்து ஒட்டிக்கொள்ள போகும் ராவணனை இமை மூடாமல் கண்களுக்குள் நிரப்பி கொண்டாள்.
அடுத்து நடக்க வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்ட ராவணனுக்கு, மனோ மும்பைக்கு தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்து அடுத்த சில நாட்களிலே பிரேசிலுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவனும் வளவனும் மும்பைக்குச் சென்றனர்.
மும்பை சென்றவர்களுக்கு எதிர்பாராமல் நடக்கப் போவது என்ன…??? அதை முறியடித்து இந்த முறையும் மனோ கைது செய்யப்படுவாரா…???



