“இப்போ எதுக்குடா புது பொண்ண முறைச்சு பார்க்குற மாதிரி என்னை பார்க்குற…?” என்ற வளவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்துக்கொண்டே வாகனத்தை ஓட்டி வந்தான் ராவணன்…
“தங்கச்சி புருஷன்னு பார்க்குறேன்.. இல்லனா ஓடுற வண்டியில இருந்து உன்ன தள்ளி விடற அளவுக்கு வெறியா இருக்கேன்டா…!!!” என கடிந்தவனைப் பார்த்து
“ஏன் மச்சான்..!!” என ஒன்றும் தெரியாத பாவனையில் அப்பாவியாக கேட்டவனை…
“அடிங்க.. எத்து விட்டேனா.. ஏன்டா நாம என்ன வேலையா போறோம்.. அங்க எதுக்குடா இவள மடியில கட்டுன பூனை கணக்கா கூட்டிட்டு வர..!!!” என அவர்கள் பின்னால் அமர்ந்து அவர்களின் விவாதத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் மும்பையை ஆச்சரியித்து பார்த்து கொண்டு வந்த மகிழை கண்டு ஏகத்துக்கும் அதிகரித்தது ராவணனின் ரத்த அழுத்தம்…
அவன் காட்டிய திசையில் குழந்தையின் குதூகலத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவளைப் பார்த்து பெருமூச்செறிந்த வளவன்…
“ஏன் கூட்டிட்டு வந்தேன்னு இவன் திட்டுறான்.. கூட்டிட்டு போகலைன்னா திண்ணையில்தான் படுக்கைன்னு இவன் தங்கச்சி மிரட்டுறா…இதுங்களுக்கு மத்தியில உசுர வாழுறதே பெரிய டாஸ்க்கா இருக்கே…!!!” என நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.
பின்னே அவர்கள் மனோவை பிடிக்க மும்பை செல்வதாக கூற என்னையும் கூட்டிட்டு போங்க அத்தான் என கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி பார்த்த மகிழுக்கு அவளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டவனின் பதில் ‘முடியாது’ என்பதாகவே இருந்தது…
ஏனோ அவனை பிரியமுடியாமல் தவித்து போனவள், புளியங்கொம்பாக சாம்பவியின் சிபாரிசைப் பிடித்தாள்…
முதலில் மறுத்த கணவனை அதட்டி, மிரட்டி, உருட்டி சம்மதிக்க வைக்க, அவனும் “என்னைய மட்டும்தான்டி எல்லாம் ஈஸியா அட்டாக் பண்ணிடுறீங்க…!!!” என தனக்குள்ளாகவே புலம்பியபடி மகிழை அழைத்து வந்தவனுக்கு, மத்தளத்தில் ரெண்டு பக்கமும் அடி விழுந்தது போல அவனுக்கு விழுந்தால், அவனும் என்னதான் செய்யவான்…
ஒரு வழியாக மும்பையில் அவர்கள் தங்கும் விடுதிக்கு வந்த சேரன்…
அவர்கள் வந்து இருக்கும் விடுதியின் அழகில் மயங்கி ரசனையாக பார்த்துக்கொண்டே வந்தவளை, கையை பிடித்து இழுத்து சென்றான் ராவணன்…
ஆஆ.. அத்தான் மெல்ல பிடிங்க…!!” என கத்தியவளை… தன் கூர் விழிகளால் அடக்கியவன்… வளவனுக்கு தனி அறை திறவுகோலை தந்தவன்… “உனக்கு ஒரு மணி நேரம் தான் டைம் சீக்கிரம் ரெடி ஆகி கீழ வந்து நில்லு நான் வந்ததும் போலாம்..!!!” என்றவன் எதிரில் இருந்தவனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட…
“நான் கிளம்புறதுக்கு எதுக்குடா ஒரு மணி நேரம்…??? அது சரி ஏன்டா கூட கூட்டிட்டு வந்தன்னு என்ன கடிச்சு துப்பிட்டு.. இவன் ஏதோ ஹனிமூன்க்கு வந்த மாதிரி இல்ல ரூம் போட்டு இருக்கான் படுபாவி தெரிஞ்சி இருந்தா என் பவியையும் கூட்டிட்டு வந்து இருப்பேன்.. ம்ம்ம்ஹும் இந்த ரைட்டர் எப்பவும் ஓரவஞ்சனை பண்ணுது எதோ ஆரம்பத்துல கொஞ்சூண்டு வச்சிட்டு இப்படி அம்போனு விட்ருச்சே…!!” சலித்து கொண்டே…. தன் அறைக்கு சென்று தயாரானான்..
பற்றிய கையை விடாமல் இழுத்து வந்தவன் அறைக்குள் வந்து அவளைத் தள்ளி விட்டு கதவைப் பூட்டியவன், விட்ட இடத்தில் மகிழியைப் பார்க்க…
அவள் அங்கே ஜன்னல் திரையை நீக்கி, வெளி அழகை ரசித்த வண்ணம் நிற்க, அவளருகே எட்டிச் சென்றவன், பின்னால் இருந்து கையிட்டு இடையோடு அவளை அணைத்தவாறே அவனும் மும்பையின் அழகை ரசிக்க, அந்த ரம்மியமான சூழலை மௌனமாக ரசித்தனர் காதல் ஜோடிகள். (அப்போ உண்மையாவே ஹனிமூனுக்கு தான் வந்து இருக்கான் போலயே…)
“சிட்டு… ஏன்டி இப்படி அடம் பிடிக்கிற.. சொல் பேச்சை கேட்கவே மாட்டியா..?” என அவள் கழுத்து வளைவில் புதைந்து கொண்டே திட்டுகிறானாம்..! அவ்வளவு குழைவான குரலில்..
“அப்போ திரும்பி போயிடவா அத்தான்..…!!!” என மிடுக்காக கேட்க நினைத்தவள் குரல் அவளுக்கே வேறாக கேட்டதோ…
“ம்ம்.. ரொம்ப பண்ணாத போடி…. மனோவை பிடித்ததுக்கு அப்புறம் இங்கேயே ஹனிமூன் கொண்டாடலாம் சரியா…!!!!” என மேலும் தன்னோடு நெருக்கிக் கொண்டு அவள் காது மடலில் தன் மீசை உரசியதால், செவ்வானம் கொண்டாள் பெண்மேகமும்..!!!
பின் தயாராகி வந்தவன், ஆயிரம் பத்திரங்களை அவளுக்கு சொல்லி மென் உச்சியில் முத்தமிட்டு விலகியவன், ஒரு உத்வேகத்துடன் கிளம்பி சென்றான்.
மும்பையில் ஹார்பர் எல்லைக்கு உட்பட்ட காவல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியவன், தடையாக வந்த அத்தனை சவால்களையும் தகர்த்து எரிந்து, இந்திய கப்பல் படையின் உதவியுடன் நடுகடலில் பதுங்கி இருக்கும் மனோவை பிடிக்க தயாரானார்கள்.
விசைப்படகு மூலம் சரியான இடத்தை அடைந்தவர்கள், கையில் ஏந்திய துப்பாக்கியுடன் அதிரடியாக உள்ளே நுழைந்த காவலர்கள் மீது பதுங்கி தாக்கினர் கயவர்கள்.
எதிர்பாராத தாக்குதலில் முதலில் நிலை குலைந்த காவலர்கள் சமனடைந்து எதிர் தாக்குதல் நடத்தினர்.
இருப்பாக்கம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அநேக நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாக…
எதிரிகளை படகின் வலப்புறமிருந்து துப்பாக்கியில் குறிப்பார்த்துக்கொண்டிருந்த வளவனின் பின்புறம் இருந்த இரும்பு கம்பியால் தாக்க முயல…
நொடியில் அவன் நெற்றிப் பொட்டில் சுட்டு அந்த முயற்சியைத் தவிடுபொடி ஆக்கினான்… தோட்டாக்களின் நாயகன்…
தன் பின்னால் கேட்ட சத்தத்தில் ராவணனைப் பார்க்க… அவன் மேல் நோக்கி கையை காட்ட… இருவரும் பதுங்கி மேலே சென்றனர்…
படிகளில் முன்னால் சென்ற ராவணனை விடுத்து அவனைத் தொடர்ந்து வந்த வளவனை கயவர்கள் சிறைப்பிடித்திட… அதை அறியாமல் உயரே சென்றான் ராவணன்…
மேல்தளத்தை அடைந்தவனை…
“வா ராவணா வா… ஃபைட் சீனே இல்லன்னு வருத்தப்பட்டியே… இப்போ திருப்தியா…??? இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டியேடா…!!!!” என போலியாக வரவேற்றவனை அலட்சியமாகப் பார்த்தான் எதற்கும் அஞ்சாத ராவணன்.
“ஓ அவ்வளவு அலட்சியமா… மோதிப் பார்த்துடலாமா… யார் பலசாலினு..!!”
ஹா. ஹா உன் சாவை நீயே கேட்டு வாங்குற.. நான் தயார் என்றதும்…!! ராவணன் மீது பாய்ந்து வந்து தலையால் முட்ட.. அதை ஒரு கையால் தடுத்தவன்.. அவன் முதுகில் பலம் கொண்ட மட்டும் தன் கை மூட்டினால் ஓங்கி குத்த.. கதி கலங்கிப் போனான் மனோ.
ஒருவாறு ராவணன் பிடியில் இருந்து தப்பியவன்.. எதிர் தாக்குதல் நடத்த.. தன் பலத்தை ஒன்று திரட்டி எதிர்கொண்ட ராவணன்.. வெற்றி பெறும் தருவாயில்..
சூட்சுமமாக தப்பியவன் ராவணனை தாக்க அருகில் இருந்த துப்பாக்கியை எடுக்க முயல அதை தன் காலால் தடுத்து அவனை பந்தாட…
வெறிகொண்ட ஓநாய்… ராவணனை சரித்து தள்ளிவிட்டு அடைத்து வைத்திருந்த மகிழை வெளியே இழுத்து அவள் கழுத்தில் துருப்பிடித்த கத்தியை வைத்து…
“இத எதிர்பார்க்கல இல்ல.. ஹாஹா.. நான் மனோடா எனக்கு தோல்வியே கிடையாது… இப்போ அடி பார்க்கலாம்..!!” என அவன் வாயில் வழிந்த ரத்தத்தை உமிழ்ந்தவன் கண்கள் சொருக கைகள் தள்ளாட மகிழினியின் கழுத்தில் சிறு கீறல் பட அவளின் குருதி வெளிப்பட “ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ..!!” வலியால் வெண்மதி முகம் சுணங்கிட
ஏய் அவளை விட்ரு டா…!! என துடித்து போனான் காதல் தலைவன்.
கெஞ்சுறியா ராவணா கெஞ்சு…ஹாஹா.. நல்லா இருக்கு..!! என நேருக்கு நேர் மோத திராணி அற்று பெண்ணை பகடையாக வைத்து மிரட்டினான் கோழை…
சொன்னா கேளுடா அவளை விட்டுடு.. உன்னை ஒன்னும் செய்யமாட்டேன்.!! என நயமாக பேசி திசை திருப்ப முயல.
எனக்கு நீ பிச்சை போடுறியா… உன்ன கொல்லாம விடமாட்டேன்..!! என குரோதத்தில் கண்கள் சிவக்க கூறியவன்… அருகில் இருந்த துப்பாக்கியை எடுக்க எண்ணி மகிழை இழுத்து கொண்டே வர…
அவன் செய்ய போவதை அவதானித்தவன்… கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ள.
“சிட்டு கீழ உக்கார்டீ….!!” என கத்திக்கொண்டே வந்தவன், குண்டுகள் மனோவின் தோள்பட்டையை தாக்க, அதில் கத்தியை தவறவிட, அவனிடமிருந்து தப்பி ராவணனை நோக்கி சென்றவளை அருகில் கிடைத்த துப்பாக்கியை எடுத்து குறிவைத்து சுட…
குண்டு அவளை துளைக்காமல் இருக்க வாரி தனக்குள் அணைத்துக்கொண்டவன், தன் காதல் வெண்புறாவை காக்க நினைத்து தோட்டாக்களை தன்மீது தாங்கினான் தனஞ்செயன்…
வீரன் உடல் மண்ணில் சரியும் முன், ராவணனின் தோட்டாக்கள் எதிரியின் உடலை சல்லடையாக்கியது…
தன்னை தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு வந்த வளவன், கண்ணுற்றது தோட்டாவை தாங்கி மகிழை அணைத்துக்கொண்டு விழுந்த ராவணனை தான்…
ராவணா ஆஆஆஆ…… என மடிந்து அமர்ந்தான், உற்ற நண்பனை இழந்த மித்ரனாக…
அத்தான் ஆஆஆஆ… என்னை விட்டுஉஉஉஉ போகாதீங்க அத்தான்ஆஆஆ…!! என ரத்தம் தோய்ந்த ராவணன் உடலை கட்டிக்கொண்டு கதறி அழுதவளை ஆற்றவோ தேற்றவோ ராவணன் அங்கு இல்லை…. அவன் தந்து விட்டு சென்ற வலிகள் மட்டுமே…
நீ தந்த காதலும்,
காயமாகும் எனில் என்னை,
காதல் செய்யாதே ராவணா…
உன் கரம் கோர்த்து அந்திமம்,
செல்ல முடியாதெனில்,
காதல் செய்யாதே ராவணா.



