இருவருடைய விருப்பத்துக்கும் வெறுப்புக்கும் இடம் தராமல் வாழ்வின் இறுதி நொடியில் போராடியவர்களுக்காக ஏற்றுக்கொண்ட திருமணம் அது..!!!
தையலுக்கோ தாய் தந்தை இறப்பு ஒருபுறம்… உடன் பிறந்த தங்கை சுயநினைவு இல்லாமல் இருப்பது… என இவற்றுக்கு மத்தியில் திருமணம் என மனதின் உள்ளும் புறமும் சேர்ந்து கனத்தது.
அவர்களுக்கான இறுதி காரியங்களை செய்து முடித்துவிட்டு வந்தவனுக்கும் மனம் கனத்தது… அவர்களின் திருமணப் பதிவை செய்து முடித்தவன் அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டான்…
மாதுரி கண் விழித்ததாக வந்த தகவலை அடுத்து… மருத்துவமனைக்கு சென்று பார்க்க…
“சொல்லுங்க டாக்டர்…?”
“குட்டிமா இப்போ எப்படி இருக்கா..?”
“அத பத்தி சொல்ல தான் கூப்பிட்டேன் சார்..!”
“நீங்க அட்மிட் பண்ண அந்த பொண்ணுக்கு இப்போ பழைய நினைவுகளை மறந்துட்டாங்க..!” என மின்னாமல் முழங்காமல் பெரும் இடியை இறக்கினார்…
“அப்போ எல்லாத்தையும் மறந்துட்டாளா டாக்டர்..!” என்றான்… அதிர்ச்சி விலகாமல்…
“ஆமா சார்…!”
“இப்போ என்ன டாக்டர் பண்றது.?”
நம்மால் ஒன்னும் பண்ண முடியாது ஏ. சி சார். அதுவாக ஞாபகம் வந்தா நல்லது. அப்படி இல்லாம நாம ஞாபகப்படுத்த முயற்சி பண்ணினா அது அவங்க உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம். அவங்க சொந்தக்காரங்ககிட்ட எப்படி நடந்துக்கனும்னு சொல்றேனோ அப்படியே பார்த்துக்கிட்டா சீக்கிரமே அவங்க குணமாக சான்ஸ் இருக்கு.
குட்டிமாவுக்கு அப்பா, அம்மா, சொந்தம் எல்லாம் நான் தான் டாக்டர். நீங்க சொல்ற மாதிரி பார்த்துக்குறேன். இப்போ குட்டிமாவை பார்க்கலாமா டாக்டர்?
கண்டிப்பா வாங்க… என அழைத்துச் சென்றார்.
ஹலோ மிஸ்…!
ஹலோ டாக்டர்..! என சோர்வாக சொன்னவளுக்கு ராவணனை அறிமுகப்படுத்த, புருவம் சுருக்கி ‘யாரென்று’ யோசிக்க தலையின் நரம்புகள் விண் விண் என தெரித்து வலி எடுத்தது.
அவள் அருகில் சென்று அவள் தலை கோதியவன், அவள் காயம்பட்ட கையை நோகாமல் எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டே…
குட்டிமா… என கூப்பிட்டதும், எதையோ யோசிக்க மீண்டும் வலி எடுக்க…
ரொம்ப வருத்திக்காதிங்க மது குட்டி.. ஹான்… உங்க பேரு மாதுரி… அத சுருக்கி மது குட்டி.. குட்டிமா கூப்பிடுவேன்.. நான் உங்க அக்கா கணவர்.. எஸ் உங்களுக்கு ஒரு அக்கா மட்டும் தான்.. அவங்க இப்போ என் கூட வரல வீட்ல ஒரு குட்டி பாப்பா கூட இருக்காங்க…. உங்களுக்கு என் கூட வர நம்பிக்கை இருந்தா வாங்க நானே கூட்டிட்டு போறேன்… இல்லனா உங்க அக்காவை கூட்டிட்டு வரேன்.. என அவள் மனநிலை அறிந்து பேச.. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் மது மௌனம் காக்க…
சரி அப்போ.. நான் கிளம்புறேன்…
என ராவணன் முடிப்பதற்குள்…
என்ன இங்க இருந்து கூட்டிட்டு போறீங்களா ப்ளீஸ்.. எனக்கு இந்த மருந்து ஸ்மெல் பிடிக்கல..!
என அவன் கைகளை எட்டி பிடித்து கேட்க…
ஓகேடா.. என்ன நம்பி இப்போவே எனக்கூட வரீங்களா..?
என அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல் மறுபடியும் அமைதி ஆகி விட..
ஏன்..!
என ராவணன் மீண்டும் கேட்க…
தெரியாதவங்க கூட போகாதன்னு மூளை சொல்லுது… ஆனா உங்க கூட போக சொல்லி மனசு சொல்லுது..!”என பதில் அளித்தவளின் தலையை கோதி விட்டவன், அதற்கு மேல் அவளை கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி அவளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.
தன்னை விட்டு சிறிதும் விலகாமல் சுற்றி வரும் செல்ல தங்கை, இப்போது தன்னை அந்நியனாக பார்ப்பதை தாங்க மாட்டாமல் அழுது தீர்த்தாள் மகிழினி.
சில நாட்கள் கழித்து மகிழினி தனது கடைசி தேர்வுகளை முடித்து விட்டு வீட்டில் அபியுடனும் மாதுரியுடனும் இருந்த சமயம்..
மாதுரியை வீட்டுக்கு அழைத்து வந்த முதல்..தயக்கத்துடனே உறவுகளை ஏற்று கொண்டவள்.. பின் மெல்ல மெல்ல அவர்களுடன் ஒன்றாகி போனாள்..
மகிழ் கல்லூரி செல்லும் சமயம்.. வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அபியுடனும் அபியை பார்த்து கொள்ளவென ராவணன் நியமித்த பெண்ணுடன் பொழுதை கழிப்பாள்.. அது அவளுக்கு பிடித்தமான ஒன்றே..
ஆனால் மகிழ் கல்லூரி விட்டு வந்ததும் தங்கையுடன் நேரத்தை செலவழிப்பவள் ராவணன் வருவதற்குள் பணியாள் சமைத்த உணவை உண்டு முடித்து விட்டு தனி அறைக்குள் சென்று முடங்கிகொள்வாள்…ராவணனும் அவள் மனம் அறிந்து தொந்திரவு செய்யாமல் விட்டு விடுவான்..
பின்னர் பரீட்சை முடிந்து வீட்டில் இருந்த சமயம்….அபியுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தவளிடம் பந்து உருண்டு வந்து விழ, தயக்கத்துடன் எடுத்து மதுவிடம் கொடுக்கப் போக, அதற்குள் அபி தவழ்ந்து மகிழிடம் பந்தைக் கேட்க, அவள் குழந்தையிடம் தள்ளிவிட, அபியும் மீண்டும் மகிழிடம் பந்தை உருட்டிவிட்டு தன் பொக்கை வாய் அழகைக் காட்டி சிரிக்க…
கல் நெஞ்சக்காரனும் கரைந்து விடுவான் அதன் அழகில் எனும் போது மகிழ் எம்மாத்திரம்? அவளும் விரும்பி தன்னை தொலைத்தாள் அந்த தெய்வீக சிரிப்பில்…..(இஇஇஇ… சும்மா நானும் சிரிச்சு பார்த்தேன்.. வேணாம் கத்தி எல்லாம் தூக்கப்படாது..)
அது முதல் அபி மகிழுடன் ஒட்டிக்கொள்வாள். அபிக்கு உணவு ஊட்டுவது, குளிக்க வைப்பது போன்ற வேலைகளை அந்த அம்மா பார்த்துக்கொண்டால், மற்ற நேரம் மகிழின் மடியிலே கழியும் அபிக்கு. அப்படி ஒரு சமயம் மகிழினி மார் மீது ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு மதுவுடன் விளையாடிக்கொண்டு இருக்க, விடாமல் இடையிட்டது வீட்டின் லேண்ட்லைன்.
ஓடி சென்று எடுத்த வேலைக்கார பெண்மணி, போன் மகிழுக்கு வந்திருப்பதாக கூறினாள்.
யோசனையுடன் சென்று அழைப்பை ஏற்றவள் பேசி முடிந்ததும் பேய் அறைந்தது போல் நின்றாள்.
அப்படி என்ன பேசினார்கள் என்று கேட்கிறீர்கள், இதோ…
ஹலோ.. ஹெட் கான்ஸ்டேபிள் பொண்ணு தான.. என்ன உங்க அப்பா அம்மா செத்தது போதாதா.. இப்போ உங்களையும் பலி கொடுக்க அந்த ராவணனுக்கு ஆசையோ… திரும்பவும் எங்க விஷயத்துல தலையிடுறான்… புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன் நான் சொல்ல வரேன்னு… உன்னையும் உன் தங்கச்சியையும் முடிஞ்சா காப்பாத்திக்கோ…!! என மிரட்டினான்…
வெறும் போலி மிரட்டல் என மகிழால் ஒதுக்க முடியவில்லை.. அதன் விளைவே யாருக்கும் சொல்லாமல் மகிழினி மாதுரியை அழைத்து சென்றது…
எங்கு செல்வது எனத் தெரியாமல் விழித்தவளுக்கு உதவியாக வந்தார் பவளம் பாட்டி. மகிழை சிறு வயதிலிருந்து தெரிந்தவர் என்பதால் அவருடன் செல்ல முடிவெடுத்தவள், அவருடன் சென்றவள் மதுவை ஊட்டி போர்டிங் ஸ்கூலில் சேர்த்தது முதல் அவள் வங்கியில் பணிபுரிவது வரை எல்லாம் பவளம் பாட்டியின் தயவால் மட்டுமே என அவள் நினைத்திருக்க, உண்மையில் அவள் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் இருந்து இயக்கும் சக்தியாக இருந்து ஆட்டிவைப்பது ராவணன் என்பதை அறியாமல்…
அமைச்சரை லாரி ஏற்றி கொன்றது தொடர்பாக அவரின் கார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்ததில், அமைச்சர் கொலை வழக்கில் அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவர, அமைச்சரின் மகனிடம் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் தெரிய வந்த தகவலை அடுத்து திருநெல்வேலிக்கு தானே மாற்றல் வாங்கி சென்றான்.
மாற்றல் வாங்கி வந்தவன் மகிழின் மனதை கவருவானா..? ஏதே கவருவானாவா…?? இதுக்கு மேலயும் அதுவா இதுவா போட்டு எங்களை கொலை காண்டாக்கினா, உன்னை கொன்னே புடுவேன் அதான மக்களே…
ஹிஹி.. புரியுது… இருந்தாலும் ராவணன் அதிரடிகள் ஆரம்பம் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு…



