காதல் செய்யாதே இராவணா-24

வெண்பொலிவுடன் ஜொலிக்கும் மகிழின் மதி முகம் வாடிப்போய் அமர்ந்திருக்க “ஏன் மகிழ் இப்படி மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு இருக்க..?” எனக் கேட்டார் தந்தை.

“இங்க யாரு நான் சொல்றத கேக்குறா? எல்லாம் உங்க இஷ்டம் இல்ல அந்த ஆள் இஷ்டத்துக்கு தான நடந்துக்குறீங்க… எப்படியோ போங்க.. நான் கிளம்புறேன்..!” என சலுகையாகச் சலித்துக்கொண்டு அமர்ந்த பெரிய மகளை வாஞ்சையுடன் பார்த்தவர், அவளருகில் அமர்ந்து,

“இங்க பாருடா கண்ணா, நீ அந்தத் தம்பி மேல உள்ள கோபத்துல பேசுற. நம்ம அஞ்சு பாப்பாவை யோசிச்சு பாரு. அந்தப் பொண்ணு இல்லாம அவங்க அப்பா, அம்மா இருக்குற சொத்து எல்லாத்தையும் வித்துட்டு எங்கேயோ காணாம போய்ட்டாங்க. அது மாதிரி நாளைக்கு நமக்கு நடக்காதுன்னு என்னடா நிச்சயம்…?”

“அப்பா..?!”

“என்னங்க..?!”

“அப்படி சொல்லாதீங்க..!” என எண்ணுகையில் பதறியது பேதையின் மனம்.

“நெருப்புனு சொன்னா வாய் சுட்டுடுமா மா…?” என மனைவியின் மனநிலை அறிந்து சமாதானம் அளித்தவர், திரும்பி, “அப்பா எடுத்துக்காட்டுக்குச் சொன்னேன் கண்ணா..!”

“சாரிபா புரிஞ்சிது.. நான்தான் அவசரப்பட்டு பேசிட்டேன்.. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்கப்பா.. நான் பத்திரமா இருந்துப்பேன்..!” என அவர் தோளில் தலை சாய்த்த செல்ல மகளின் தோளில் ஆறுதலாகத் தட்டியவர்.. அறியவில்லை இதுதான் மகள்களுடனான சந்தோஷமான நிறைவான நிமிடங்கள் என்று..

“சார்..!” என வெளியே இருந்து அழைத்தான் ராவணன்.

“வாங்க தம்பி ஏன் அங்கேயே நின்னுட்டீங்க.. உள்ள வாங்க…!!” வரவேற்றனர் மூத்தவர்கள்…

“இதோ வந்துடுச்சுல ‘மை டியர் பூதம்’.. இனி இவர் சொல்தான் இவங்களுக்கு வேதம்.. ம். ஹும் என்ன சொக்குப் பொடி போட்டானோ தெரியல..!” என வாய்க்குள்ளே முனகிக் கொண்டவள் அவன் முன் இருக்க விரும்பாமல் தப்பிக்க பார்க்க

“மகிழ் தம்பிய உள்ள கூப்பிடு..” என அவளின் அன்னை விருந்தோம்பல் பழக்கம்…

“வாங்க..” என தன் பல்வரிசையை காட்டி வரவேற்றாள்.. (அம்மாடி ரீடர்ஸ் பயந்திட போறாங்க பார்த்து..)

அதை ஒரு தலை அசைப்புடன் ஏற்று உள்ளே வந்தவன்..

“இப்போதான் அந்த எம்.எல்.ஏ-வ ரிமாண்ட்ல வச்சி விசாரிக்க உத்தரவு வந்து இருக்கு.. கோர்ட்டுக்கு விசாரணை வரும் வரை எந்த ஆபத்து எங்க இருந்து வரும்னு தெரியாது…அதனால தான் உங்கள ஊருக்கு அனுப்புறேன்… விசாரணை நடக்கும்போது நானே உங்கள தகுந்த பாதுகாப்புடன் திரும்ப கூட்டிட்டு வரேன்.. சார்..!” என அவர்களின் நலனில் அக்கறை கொண்ட பாதுகாவலனாக…

“கிளம்பிட்டீங்கன்னா சொல்லுங்க சார்…போகலாம்..!” என கடமையாக சொன்னவன் வெளியே செல்ல எத்தணிக்க…

“தம்பி..?”

“சொல்லுங்க சார்..!!”

“இந்த சார் மட்டும் வேண்டாமே… மாமான்னு கூப்பிடலாமே..!” என அவர்களுக்கான உறவை உறுதிப்படுத்த…

“சரிங்க மாமா..!” என அவனும் அந்த உறவை அங்கீகரிக்க…

பாய் அங்கிள்…! பாய்.. மகிழ்..! என இனிமையாகத் தொடங்கியது அவர்கள் பயணம்.

அவர்கள் சென்றதும்.. மகிழிடம் வந்தவன்… அவள் அவனைப் பார்க்காமல் கழுத்தைத் திருப்பி கொண்டு போக…

இத்தனை உதாசீனமா ஆகாதடி பெண்ணே என நினைத்தவன் அவள் மெல்லிடையில் “நறுக்கு “என கிள்ள துள்ளினாள்.. பிணை மான்.

“ஹா.. ஆவ்.. எதுக்கு இப்போ இடுப்பைக் கிள்ளினீங்க..?” என வலித்த இடத்தை தடவியபடி,

“நான் எது சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு இருக்கியே அதுக்கு தான்..” என அவன் ஆதங்கமாகப் பேச,

“என்ன…இப்போ.. நீங்க சொல்றத கேட்கனுமா…???” என அலட்சியம் துள்ளிவிளையாடியது அவள் வார்த்தைகளில்..

“அப்போ நான் எது சொன்னாலும் கேட்க மாட்ட அப்படித்தான..!” என வில்லாக வளைந்த புருவத்தை ஏற்றி அவன் கேட்ட தோரணையே காட்டியது ‘கேட்காமல் இருந்து தான் பாரேன்..’ என்று.

இதுதான் பைனல் எக்ஸாம்.. இத எழுதலேன்னா… படிச்சதெல்லாம் வீணாகி போய்டும்..!! என்றாள் சமாதானம் ஆகும் நோக்கில்..

விரல் நுனியில் துணியை சுற்றிக்கொண்டே.. ஒரு காலை தரையில் உதைத்துக்கொண்டே.. சிணுங்கலாக சொன்னவளை கண்டு.. ஆதங்கம் போய் காதல் மேலிட அணு அணுவாய் தன் காதலியை ரசித்தவனை இடையிட்டது அவன் கைபேசி…

ஹெலோ.. எப்போ??? மத்தவங்களுக்கு என்னாச்சு???….. ஓகே… எல்லாரையும் பார்த்தோங்க நான் இப்போவே வரேன்…என உரைத்தவன்… “ஹான்.. விஷயம் கன்பார்ம் தானா” என தனக்கு வந்த செய்தியை மீண்டும் உறுதி செய்தவன்…

மகிழை இழுத்துக்கொண்டு விரைந்தான்…

“ஏ… எங்க இவ்ளோ அவசரமா கூட்டிட்டு போறீங்க..? “என கேட்டாலும் அவன் இழுப்பு விசைக்கு உடன்பணிந்து அவன் கூடவே சென்றாள்…

ஜீப்பில் ஏறி அதிவேகமாக செலுத்தியவாறே… “அந்த எம். எல். ஏ..இறந்துட்டார்… யாரோ.. அவர கூட்டிட்டு போன வண்டி மேல லாரி விட்டு ஏத்தி இருக்காங்க… நமக்கு இப்போ நேரம் இல்ல.. உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்கனு தெரிஞ்சாகனும்…” என பதில் அளித்தவன்…அவர்கள் பயணிக்கும் காரின் ஓட்டுநருக்கு அழைப்பு விடுக்க…

அழைப்பு போகவில்லை…

“அஆ..!!! மகிழ் அந்த டிரைவர் போன் எடுக்கவே இல்ல…!! நீ உங்க அப்பா அம்மாக்கு ட்ரை பண்ணு… நான் கண்ட்ரோல் ரூம்க்கு கால் பண்ணி அவங்கள ட்ராக் பண்றேன்…” என துரிதமாக செயல்பட்டான்…

“ஹலோ.. கண்ட்ரோல் ரூம், இந்த வண்டி எங்க போய்ட்டு இருக்குன்னு பார்த்து அந்த வண்டியை மடக்குங்க…நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன்..!!” என உத்தரவிட்ட படியே விரைந்தான்..

“போன் எடுத்தாங்களா..?” என அருகில் போனில் போராடிக் கொண்டு இருந்தவளை கேட்க…

“இல்ல.. ரிங் போகுது எடுக்க மாட்டேன்றாங்க… ” என ஆதங்கத்துடன் சொன்னவள் விடாது அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தாள்…..

தொடர் முயற்சிக்கு பின் ஒருவழியாக அவர்கள் அழைப்பை எடுக்க..

“ஹலோ ஹலோ… அப்பா… எங்க இருக்கீங்க..?? எப்படி இருக்கீங்க…????” என படபடப்பாக கேட்க..

“என்ன ஆச்சுடா மகிழ்… வண்டில தான்டா போய்ட்டு இருக்கோம்… ஏன்டா.. பதட்டமா பேசுற…”

“அப்பா…அது.. அப்பா.. எம்.. எல்.. ஏ.. ஆக்சிடென்ட்…!!” என பயத்தில் வார்த்தை வராமல் திக்கியவள் நிலையை புரிந்து கொண்டு.. மகிழிடம் இருந்து கைபேசியை வாங்கியவன்…

“நான் ராவணன் பேசுறேன்..நீங்க எங்க இருக்கீங்க…?”

அவர் இடத்தை சொன்னதும்…

“குட் அங்கேயே இருங்க.. நாங்க வந்துட்டே இருக்கோம்…!!” என கூறியவனிடம்…

“எம். எல். ஏ வ கொன்னுட்டாங்களா தம்பி..?” என்றவருள் இருந்த போலீஸ் நுண்ணறிவை கண்டு மெச்சினான்…

ம்ம். ஆமா.. அதனால நீங்க ஒன்னும் பயப்பட வேணாம்… நாங்க அங்க தான் வந்துட்டு இருக்கோம்…!” என தைரியம் அளித்தவனுக்குள் சிறு நெருடல் இருக்க தான் செய்தது..

ராவணனும், மகிழும்… தயாநிதி சொன்ன இடத்திற்கு விரையும் போதே.. பொது மக்கள் கூட்டமும் அதை தொடர்ந்து ஆம்புலன்ஸ்களும் துரிதமாக செயல் பட்ட வண்ணம் இருந்தன…

ராவணனை பார்த்த நெடுஞ்சாலை காவல் பணியாளர்… அவனிடம் சொன்ன தகவலில் செயலாற்று நின்ற மகிழ்.. “ஓ”வென கதறி அழுதாள்…

அப்படி அவர் கூறிய தகவல் இதுவே..

தயாநிதி ராவணனிடம் பேசிய பின் பெரும் சிந்தனையில் இருந்தவர், வெளியே பார்க்க, அப்போது தான் கவனித்தார், அவர்கள் காரினை இரு லாரிகள் அதிவேகமாக தொடர்ந்து வருவதை… திரும்பி மனைவி மகளையும் பார்த்தவர், மனைவியின் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டே, காரின் பக்கவாட்டு கதவை குனிந்து திறந்தவர், அவர்கள் சுதாரிக்கும் முன்னே இருவரையும் தள்ளிவிட பார்க்க கணவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவரின் சரிபாதி அவரை அழுத்தமாக பார்த்துக்கொண்டே திரும்பி பார்த்தவர்க்கு நடக்க போவது புரிய, மகளுக்கு இறுதியாக நெத்தியில் முத்தமிட்டவர் மகளை மட்டும் அதிகம் அடிபடாதவாறு நேக்காக வெளியே தள்ளி விட்டவர், லாரி அவர்கள் வண்டி மீது மோதும் இறுதி நிமிடத்திலும் தன் கணவரின் தோளில் சாய்ந்து மரணத்தை எதிர்கொண்டனர்.

நொடிகளில் தன்னை மீட்டவன், மகிழை அழைத்து கொண்டு ஆம்புலன்ஸை பின்னே தொடர்ந்தான்.

மருத்துவமனையில் இறுதி நிமிடங்களை போராட்டத்துடன் எதிர் கொண்ட தம்பதியினர், ராவணன் வரவை எதிர்நோக்கி இருந்தனர்.

ராவணன் வந்ததும் தங்களின் கடைசி ஆசையாக ராவணனை மகிழினி திருமணம் செய்து கொள்ள யாசிக்க…

ஏற்கனவே மகிழினியை மனைவியாகவே நினைத்தவனுக்கு, இந்த நிலைமையில் அவளை மணம் புரியும் தருணத்தை எண்ணி மனம் வருந்தியவன், அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மாலையிட்டு தாலி அணிவித்து மகிழினியை தன் மனைவியாக மாற்றினான்.

திரு மற்றும் திருமதி ராவணனுக்கு உங்கள் வாழ்த்துகளை சொல்லிட்டு போங்க மக்களே. அப்போ தான் அடுத்த எபி வரும்.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top